Wednesday 15 October 2014

நேத்ராக்னி

              நேத்ராக்னி  
                         
கவிதாயினி ஜி.ஜே. தமிழ்ச்செல்வி 


வெற்றிடம் நிலையானது. அதை சூன்யம் என்றும் அழைப்பார்கள் .அனைத்து ஜீவ ஜந்துக்களும் பிறக்கும் மரிக்கும், உதித்த சுவடே இன்றி இல்லாதும் போகும். அந்த வெற்றிடம் மட்டும்  அப்படியே அதன் வெற்றுத்தன்மையோடு இருக்கும். அந்த வெற்றிடத்தில் அதன் நடுமையத்தில் இருந்தாள் 

தான்   தோன்றி  அவள்அவளை யாரும் உருவாக்கவில்லையாருக்காகவும் அவள் படைக்கப்படவில்லை.அவளே திரிபுரசுந்தரி . இயக்கச் சக்தியை ஆளும் ஆற்றல் ஆற்றல் பெற்றவள் அவள்

அனைத்தும் அவளால் அவளுக்காகவே  உருவாக்கப்பட்டன . அந்த சிருஷ்டியின் ஆனந்தத்தை  லயித்து அனுபவிக்கவே அவள் சர்வ இயக்க சக்தியையும் கைக்குள் வைத்திருந்தாள் அவளின் நெற்றி நிலவைத திலகமாகக்  கொண்டிருந்தது. அவளிளது  செம்பவள நிறக்  கூந்தலில் பனி படர்ந்து மகுடம் சூட்டியிருந்தது, அடர் கூந்தலில் கார் மேகங்கள் பூக்களாக மலர்ந்திருந்தன . அதன் ஈரப்பதம் அவள் கூந்தலின் வாசனைத்திரவியமாகப் படர்ந்திருந்தது .
                                

அவள் கூந்தலும் விழிகளும் மட்டுமே அவளோடு பேசின . அந்தத்  தனிமை உணர்வில் வாடினாள் அவள். அவளின் விழிகள் கனற் பந்துகள். இதழ்களோ கோவைப்பழச் சிவப்பு தேகமோ இளமஞ்சள் நிறம். தனக்கு தானே ஒரு பெயரைச் சூட்டிக்கொண்டாள் நேத்ராக்னி

காலம் உணர்வுகளை அவளிடத்தில் ஏற்படுத்தியது. அந்த உணர்வுகளில் தனிமையைப்  போக்க அவள் மாற்றங்களை விரும்பினாள். அந்த மாற்றத்தை உருவாக்கவும் செய்தாள்.

தன் முகத்தில் முகடாக நின்ற பருவை நிமிண்டி, அதில் வந்த குருமுனையைக் கொண்டு பேரண்டத்தை (Universe) உருவாக்கினாள்.
                                 

பேரண்டத்தைக் குடைந்து, பல்வேறு அண்டங்களை (Galaxy) உருவாக்கினாள். அந்த அண்டங்களுக்குள் தன் வாயினால் ஊதி காற்றை எங்கும் பரவச்செய்தாள். சடமாய் கிடந்த கூந்தல் காற்றில் அலை அலையாய் அசைந்தது. கூந்தலின் மகிழ்ச்சி உணர்வு அவளைச் சிலிக்கச் செய்தது. அவள் சிலிர்ப்புணர்வை உணர்ந்தாள். உணர்வுகளில் ஏற்படும் வேறு வேறு தன்மைகளை அறிந்தாள்.

நேத்ராக்னி தன் பாதங்களில் அண்டங்கள் மிதிப்படாமல் இருக்கவும், அதனதன் போக்கில் நேர்த்தியாய் பயணிக்கவும் பால்வீதியை வடிவமைத்தாள்.

 .இந்த புதிய பொழுது போக்கு அவளுக்குப் பிடித்திருந்தது. அழகான பொம்மை வடிவமைப்பை எண்ணி தன்னையே மெச்சிக்கொண்டாள்.
                                
இருப்பினும்  அந்த பேரண்டத்தின் முழுமையற்ற நிலையும், அதன் அண்டப்பிரிவுகளின் வெறுமையையும் போக்கச் சித்தம் கொண்டாள்.

ஒரு சூரியனை தன் விழிகளின் நெருப்பினால் கருவாக்கி அந்த கருவை பலக்கோடி பிண்டங்களாக்கினாள். அந்த பிண்டத்தைக்கொண்டு அண்டங்கள் எங்கும் பல சூரியன்களைப்  பிறக்கச் செய்தாள்.

ஓர் சூரியனின் ஆரஞ்சு நிற எழிலில் மயங்கினாள் நேத்ராக்னி. அவன் மீது அளவிடாத அன்பைக் கொண்டிருந்தாள். தன் ஆற்றலின் முழுமையை அவனுக்கும் கொடுத்தாள். அவன் தன்னைத்  துதிக்க வேண்டும் என்றும் தன்னைப்போற்ற வேண்டும் என்றும் எதிர்பபார்த்தாள்.
                             


சூரியனுக்கோ தன்னைப் பற்றிய நேத்ராக்னி பற்றிய அறிவில்லை. நேத்ராக்னியால் தனக்கு கொடுக்கப்பட்ட ஆற்றலின் முழுமையினால் மதிமயங்கி தான் தான் இந்த பிரபஞ்ச ராஜன் என்று அவன் நம்பினான்.

அவன் தனக்காக ஒரு குடும்பம் உருவாக்கத் திட்டமிட்டான். தனக்கு வாழ்வில் சுவாரசியம் பிறக்கவென தனக்கு எதிர்ச் சக்தியாய் நவ கன்னிகைகளை தன் காதலியர்களாய் உருவாக்கினான்.

புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகிய வர்களே ஒன்பது கன்னிகைகள்.

                                   

ஒன்பது பேரில் புளூட்டோ இளமையை நிரந்தமாகப் பெற்றிருந்தாள். புதன் சூரியனுக்கு மிக நெருக்கமானவளாகவும், வெள்ளி பேரழகுடையவளாகவும், பூமி  உயிரினங்களுக்குத் தாயாகவும் திகழ்ந்தார்கள்.

நேத்ராக்னி சூரியன் தன்னை மதிக்கவில்லை எனக்கோபம் கொண்டாள். அவனை காமத்தினால் சபித்தாள். சூரியன் தன் காம நோயை தீர்க்கவென உடைந்த விண்கற்களால் ஆன 100க்கும் மேற்ப்பட்ட தாசிகளை உருவாக்கி, தாசிகளோடே தங்கித தன இன்பக்கேளிக் கேளிக்கைகளில் பொழுதைக் கழித்தான் 

சூரியனின் இந்தப் போக்கினால்  காதலியர்கள் வெகுண்டெழுந்தார்கள். தங்களுக்கான காலமும் காதலும் தாசியர் வீட்டில் பகிரப்படுவதை அவர்களால் பொறுக்க முடியவில்லை.

 [தொடரும் ..வாசகர் விரும்பினால்.. விரும்புவோர் பதிவிடுங்கள்]

No comments:

Post a Comment