Monday 5 January 2015

இ.தே.ஏ பதிவு 13 [அத்தியாயம் 7.பால்தர வந்த பழவிறல் தாயம்]

இ.தே.ஏ பதிவு 13 [அத்தியாயம் 7.பால்தர வந்த பழவிறல் தாயம்]

இராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒவ்வொரு முறை “ஆள் சேர்ப்பு” பற்றி அறிவிப்பு வந்த இடத்தில் குறிப்பிட்ட தினத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் நெரிசலில் சிக்கித் தவித்துப் போட்டி யிடுகிறார்கள். இவர்கள் எல்லாரும் நாட்டுப்பற்றின் காரணமாக இராணுவத்தில் சேர்ந்து நட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலா வருகிறார்கள்? நிச்சயமாக இல்லை. நாட்டில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம், வேலை கிடைக்கக்கூடிய இடத்தில் நிலவும் லஞ்ச ஊழல் போன்ற காரணங்களினால் இராணுவத்திலாவது சேரலாமே என்ற கடைசி முயற்சியாகத் தான் வருகிறார்கள். அப்படி எந்தவிதமான முன்னேற்பாடான திட்டங்களும் இன்றி இராணுவத்தில் சேரும் இவர்களுக்கு ஆரம்ப நாட்களில் நடக்கும் பயிற்சி காலம் முக்கியமான ஒன்றாகும். ஏனெனில், அங்குதான் அவர்களது எண்ணங்கள் மாற்றியமைக்கப் படுகின்றன. உடலாலும் மனதாலும் உரம் ஊட்டப்படும் அவர்களுக்கு முறையானப் பயிற்சி அளிக்க நல்ல நிலையில் உள்ள பயிற்சியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.
        முறையான பயிற்சியாளருக்குரிய தகுதி  @தவையா?
படைப்பிரிவுகள் எல்லைப்புறங்களில் விரிந்து பறந்து கிடக்க அவர்களது பயிற்சி மையங்கள் நல்ல நகர்ப்புறங்களில் எல்லா வசதிகளுடனும் நிர்மானிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன. இந்தப் பயிற்சி மையங்களுக்கு பணிமாற்றம் பெற்று பயிற்சியாளராக வருவதற்கு சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அப்படி வர விரும்புபவர்கள் பலவிதமான இராணுவப் பயிற்சிகளிலும் சிறப்பானப் பயிற்சி பெற்றவர்களாகவும் பயிற்சியாளராகப் போகக் கூடிய திறமை படைத்தவர்கள் என்று உறுதி செய்யப்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். படைப் பிரிவுகளில் பணியாற்றுபவர்கள் தங்களது குடும்பப் பிரச்சினை காரணமாகவும், நோய்வாய்பட்டவர்கள் நல்ல மருத்துவ வசதி பெறும் பொருட்டும் நல்ல நகர்ப்புறங்களில் பணிமாற்றம் கேட்டு விண்ணப்பிக்கும் போது அப்படிப்பட்டவர்களில் சிலர்கூட மேலே குறிப்பிட்ட பயிற்சி மையங்களுக்கு பணிமாற்றம் பெற்று வரலாம். பலவிதமான நிர்வாகச் சூழ்நிலை காரணமாக அதுபோன்று பயிற்சியாளராக இருக்க தகுதி இல்லாதவர்கள் கூட சிலசமயம் பயிற்சியளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். இது ஒரு மிகப்பெரும் இக்கட்டான சூழ்நிலை. வண்டி ஓட்டத் தெரியாதவனிடம் வண்டியை ஒப்படைப்பது போல, முறையான பயிற்சியாளருக்குக்குரிய தகுதி இல்லாதவர்கள் இராணுவ வாழ்வின் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னுதாரணமாக இருக்க முடியாது. அதனால், பயிற்சி பெற வந்திருக்கும் இளைஞர்கள் உடலாலும் மனதாலும் ஒரு தவறான பாதைக்குப் பயிற்றுவிக்கப்பட்டு விடுவார்கள். உயர் அதிகாரிகள் இதை மனதில் கொண்டு பயிற்சிக் காலத்தில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.
1975-ம் ஆண்டு ஆரம்பத்தில் மேஜர் கணேசன் பெங்களூரில் உள்ள ஒரு பொறியாளர் பயிற்சி மையத்திற்குப் பணிமாற்றம் பெற்று சுமார் 1000 பயிற்சி பெறும் இளம் இராணுவத்தினர்க்கு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். சுமார் 11 வருடப்பணி அனுபவத்துடன் லடாக், அருணாசல் பிரதேசம், ராஜஸ்தான் பாலைவனம் போன்ற இடங்களில் பணியாற்றியதுடன் 1965, மற்றும் 1971-ல் நடந்த இந்திய பாகிஸ்தானிய போரிலும் பங்கு பெற்றவர். பொறியியற் கல்லூரியில் மூன்றாண்டு கால பி.டெக் படிப்பை இராணுவப் பொறியியற் கல்லூரியில் முடித்து முதல் மாணவனாகத் தேர்வு பெற்றவர். அதுமட்டுமல்லாமல் அவரது பயிற்சிக் காலத்தில் மிகச் சிறந்த விளையாட்டு வீரர்( Best Athelete) என்ற பரிசும், பின்னர் இராணுவப் பொறியியற் கல்லூரியில் மிகச் சிறந்த நீச்Œல் வீரர் (ஆஞுண்t குதீடிட்ட்ஞுணூ) என்ற தகுதியும் பெற்றிருந்தார். இதுபோன்ற தகுதிகளுடன் அதிகாரியாக வந்த அவர் தன்னுடைய பயிற்சி இராணுவத்தினரும், அவர்களுக்கு பயிற்சி தரும் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளல்லாதோரும் எப்படி செயல்பட வேண்டும் என்று புதுப்புது வழிமுறைகளையும் அமல்படுத்தி வந்தார். சிவில் வாழ்க்கையிலிருந்து இராணுவத்திற்கு வந்துள்ள இளைஞர்களை கொஞ்சம் கொஞ்சமாக உடலளவிலும் மனதளவிலும் உறுதி படைத்தவர்களாக மாற்றும் பயிற்சி அது சுமார் 11/2 வருடம் போல் பயிற்சி பெறும் அந்த இளைஞர்களிலிருந்து தான் நாட்டுப்பற்றும், தியாக மனப்பான்மையும் உடனுள்ளோருக்கு உதவும் மனம் கொண்ட நல்லவர்களும் உருவாக வேண்டும் என்பதில் கணேசன் கவனமாக இருந்தார்.
இராணுவ வழிமுறைகளும், விளையாட்டுப் போட்டிகளும், உடற்பயிற்சிகளும் பயிற்சி மையத்தில் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். அதிகாரிகள் வெளியில் நின்று வேடிக்கை பார்ப்பதைவிட அவர்களும் பங்கு கொள்ளும் போது புதிய பயிற்சியாளர்களும் பயிற்றுவிப்பவர்களும் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவார்கள். தனிப்பட்ட முறையில் விளையாட்டில் ஆர்வம் மிகுந்த மேஜர் கணேசனுக்கு அந்தப் பணி மிகவும் பிடித்து ஆர்வமுடன் எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டு பணியாற்றி வந்தார்.
                     சிப்பாய்களைச் சே மிக்கச் செய்த கர்னல்
இராணுவத்தில் தேர்வாகிப் பயிற்சிக்கு வரும் சிப்பாய்களுக்கு அவர்கள் பயிற்சி மையத்தில் சேர்ந்த நாள் முதல் “ரெக்ரூட்” அதாவது ஆரம்ப பயிற்சியாளர் என்ற சம்பளம் கொடுக்கப்படும். இது கிட்டத்தட்ட ரூ.2500/- இருக்கலாம். உணவும், உடையும் இலவசம் என்ற நிலையில் சிப்பாய்களுக்கு அதிக செலவு இருப்பதில்லை. மேலும் இராணுவத்தில் சேரும் ஒவ்வொரு சிப்பாய்க்கும் ஒரு சம்பளக் கணக்கு ஏற்படுத்தி விடுவார்கள்.  சிப்பாய்களது சம்பளம் ஒவ்வொரு மாதமும் அந்த கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும். ஒவ்வொரு சிப்பாயும் தனக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்ற விருப்பத்தைப் பொறுத்து சம்பளப்பட்டியல் தயார் செய்யப்பட்டு அதன்படி சிப்பாய்களுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும். உதாரணமாக தனது சம்பளத்தில் ரூ 1000/- மட்டுமே தனக்குப் போதும் என்று ஒருவன் சொன்னால் மீதமுள்ள ரூ 1500/- அவனது கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும். மூன்று மாதங்ளுக்கு ஒருமுறை ஒவ்வொரு சிப்பாய்க்கும் அவர்களது கணக்கில் உள்ள தொகை அறிவிக்கப்படும். பொதுவாக இதுதான் பயிற்சி படைப்பிரிவில் சம்பளம் வழங்கும் முறை.
மேஜர் கணேசன் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் இந்த முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தார். இராணுவம் இலவசமாக வழங்கும் உணவு, உடை, காலை - மாலை டீ, பலகாரம் போன்றவை தவிர ஒரு சிப்பாய்க்கு வேறு என்ன தேவைகள் என்று ஒரு ஆய்வு நடத்தினார். அதன்படி இராணுவப் பயிற்சி காலத்தில் ஒரு சிப்பாய்க்கு ரூ 250/-க்கு மேல் தேவை இல்லை. அதற்குமேல் அவனுக்குப் பணம்
கிடைத்தால் அவன் தேவைக்கு அதிகமாக ச்செலவு செய்ய ஆரம்பிக்கவும், சினிமாவுக்குப் போகவும், வெளி இடங்களில் சாப்பிடவும், பிறருக்கு கடன் கொடுக்கவும் முற்படுவார்கள் என்று கண்டறிந்தார். ஆனாலும், சிலருக்கு குடும்பப் பிரச்சினை காரணமாக வீட்டுக்கு மணி ஆர்டர் அனுப்ப வேண்டிய அவசியம் இருக்கலாம். இப்படிப்பட்டோர்கள் உபரிப் பணத் @தவை என்ற பட்டியலில் ஒவ்வொரு மாதமும் பெயர் கொடுத்தால் கணேசன் அவற்றைப் பரிசீலித்து, தேவைப்பட்டால் அதிக பணம் தேவைப்படுவோரை “நேர்காணல்” கண்டு ஆவன செய்வார். ஒவ்வொரு மாதமும் அதிகாரி நடத்தும் øŒனிக் Œம்@மளன் என்ற கூட்டத்தில் இந்த முறைகளை விளக்கி கணேசன் அந்த விதிகளை நடைமுறைப்படுத்தினார். தான் பெற்றுக் கொண்டது போக மீதிப்பணம் அவர்களது கணக்கில் சேர்ந்து கொண்டே வருவதால் சிப்பாய்கள் சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு ஒரு மாத விடுமுறையில் போகும்போது அவர்கள் கணக்கில் மொத்த பணத்தையும் வாங்கிக் கொண்டு ஊருக்குப் போய் நிலம், வீடு வாங்கவும், வேறு உபயோகமான வேலைக்கும் அவர்களே நேரிடையாக செலவு செய்யலாம் என்பதை சிப்பாய்களுக்கு கணேசன் விளக்கினார். என்னுடைய சம்பளம் முழுவதையும் எனக்குத் தர வேண்டும் என்று ஒரு சிப்பாய் கேட்கலாம். ஆனால், ஒரு நல்ல அதிகாரி அந்தக் கோரிக்கையை உடனடியாக ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில், இளம் வயதினராகவும், போதிய கல்வியறிவு இல்லாதவர்களாகவும் இருக்கும் சிப்பாய்களுக்கு நல்வழி காண்பிப்பது அதிகாரிகளின் கடமை. இவைகள் எழுதப்படாத சட்டங்கள் என்று சொல்லலாம்.
              மகன் பட்டாளத்தில்.. தந்தைக்கு ஏழு குழந்தைகள்
அதுபோன்ற சூழ்நிலையில் ஒருமுறை “Extra Money” பட்டியலில் ஒரு ஜவான் தனக்கு ஒவ்வொரு மாதமும் ரூ 1500/- வேண்டும் என்றான். ஜவானை கணேசன் நேரில் விசாரித்தார். அந்த சிப்பாயின் தந்தை மதுரை பஸ் ஸ்டாண்டில் லாட்டரி டிக்கெட் விற்கிறார். அண்ணன், தம்பி, அக்காள், தங்கை என்று ஏழு பேர்களடங்கிய குடும்பம், அம்மா கூலி வேலை செய்கிறார். ஒவ்வொரு மாதமும் ரூ 1500/- அனுப்பினால் அவர்கள் நன்றாக இருப்பார்கள் என்பது சிப்பாயின் கோரிக்கை. மேஜர் கணேசன் விளக்கமாக அந்த சிப்பாய்க்கு அறிவுரை கூறினார். எத்தனை குழந்தைகள் பெற வேண்டும்? அவர்களை எப்படி வளர்க்க வேண்டும் என்ற திட்டம் ஏதுமில்லாமல் குடும்பம் நடத்துபவர் உனது தந்தை. அதன் உதாரணமே எந்த விதமான வருமானமும் இல்லாதிருக்கும் போது 7 குழந்தைகள் பெற்றுக் கொண்டது. இதனால் உனது தாயின் உடல் நிலையிலும் மிகவும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். இப்பொழுது நீ பணம் அனுப்பினால் உனது குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும் என்பதில் எந்த உத்திரவாதமும் இல்லை. மேலும் ஒரு தம்பியோ அல்லது தங்கையோ உங்கள் குடும்பத்தில் எட்டாவதாகப் பிறக்கும் வாய்ப்புண்டு. அதற்குப் பதிலாக நீ எப்போதும் போல் ரூ.200 அல்லது 300 மட்டுமே ஊருக்கு அனுப்பி விட்டு ஆறுமாதம் சென்று ரூ 10,000/- போல் உனது சேமிப்பை எடுத்துச் சென்றால் ஒரு வீடு வாங்கவோ, கடை வைக்கவோ உபயோகமாக இருக்கும். நீ யோசித்து சொல். உனது சேமிப்பும் அதற்காக நீ படும் உடல், மனக்கஷ்க்டங்களையும் நீ தான் உணர வேண்டும். இதை உனது பெற்றோர்களோ அண்ணன் தம்பிகளோ உணர மாட்டார்கள் என்று ஒரு நீண்ட அறிவுரை நிகழ்த்தினார் கணேசன்.
இதுபோன்று காலம் நேரம் பார்த்து சரியான வழிமுறையில் நடத்திச் செல்லப்படும் சிப்பாய்கள் பிற்காலத்தில் அற்புதமான இராணுவத்தினர்களாக வருவார்கள் என்பதில்ஐயமில்லை. அதுபோலவே +2 படித்த சிப்பாய்கள் மற்றும் பட்டம் வாங்கிய ஓரிரு சிப்பாய்கள் அதிகாரிகளாவதற்கு முயற்சிக்க வேண்டும் என்று கணேசன் வற்புறுத்துவார். இராணுவத்தில் நன்றாகப் படித்து அதிகாரிகளாவதற்குரிய எல்லா தகுதிகள் இருந்தும் போதிய வழிகாட்டுதல் இல்லாததால் சிலர் சிப்பாய்களாக சேர்ந்து விடுவதுண்டு. இராணுவத்தில் சேர்வது அவரவர்களது சொந்த விருப்பதின் காரணமாக இருந்தாலும் அதிலிருந்து விலகுவது அவ்வளவு சுலபமல்ல. ஒவ்வொரு மாத ‘சைனிக்சம்மேளன்’ நேரத்திலும் சுமார் 11/2 மணி நேரம் இதுபோன்ற இராணுவ விதிமுறைகள், முன்னேறுவதற்கான வழிமுறைகள் மன, உடல்நலம் பற்றி எல்லாம் கணேசன் பேசுவார்.
                  பாக்ஸிங் போட்டியில் பங்கேற்க மறுத்து வீட்டிற்கு ஓடியவர்
ஒருமுறைபாக்ஸிங் @பாட்டிக்காக ஆட்கள் தேர்வு செய்து பயிற்சியளித்து போட்டிகள் ஆரம்பமாயின. எடை அதிகமுள்ள பிரிவுகளுக்குப் பொதுவாக ஆட்கள் இருக்க மாட்டார்கள். ஆகையினால், ஓரிருவர் அந்த எடையில் இருந்தால் அவர்களைக் கட்டாயமாகப்பாக்ஸிங் ஆணிதுடிணஞ் போட வற்புறுத்துவார்கள். இதுபோல் ஒரு சிப்பாயைத் தயார் செய்து போட்டி நேரத்தில் அவன் பெயர் சொல்லி அழைத்த பொழுது அவனைக் காணவில்லை. பயிற்சி மைதானம் எங்கும் தேடியும் அந்த சிப்பாய் காணாததால் அவன் ஓடிப்போய் விட்டான் என்று முடிவு செய்தார்கள். அவன் பங்களூரை சேர்ந்தவன். மறுநாள் இரண்டுபேர் அவனது வீட்டிற்கு சென்று பார்த்தால் அந்த சிப்பாய் அங்கிருந்தான். அவனை அழைத்துக் கொண்டு வந்து மேஜர் கணேசன் முன் நிறுத்தினார்கள். அந்த சிப்பாய் தான் பெற்றோர்களுக்கு ஒரே மகன் என்றும் பாக்ஸிங்போடுவதற்குப் பயமாக இருப்பதாகவும் சொன்னான். பொதுவாக பாக்ஸிங் போடும்போது மூக்கின் மென்மையான பகுதி உடைபட்டு இரத்தம் வரலாம். இது ஒரு மிக மிக சாதாரண நிகழ்ச்சி. சரியாக மூச்சு விடமுடியாத இளம் வயதினர்க்கு டாக்டர்களே மூக்கின் பகுதியை சிதைத்து நன்றாக சுவாசிக்க வழி செய்வார்கள்.
                   பயந்து ஓடியவரைச் சாம்பியன் ஆக்கியவர்
 மேலும், இராணுவத்தினர்களுக்கு பாக்ஸிங் ஒரு முக்கிய பயிற்சியாகும். எதிரியுடன் போரிடும்போது எந்த நிலையிலும் அவனைத் தாக்க வேண்டும் என்ற போர்க் குணங்களை ஊக்குவிக்கும் ஒரு விளையாட்டு பாக்ஸிங். அதிகாரிகள் பயிற்சியில் ஒவ்வொரு பயிற்சி அதிகாரியும் கட்டாயமாகப் பாக்ஸிங்போட வேண்டும். இவைகளை எல்லாம் கணேசன் அந்த சிப்பாய்க்கு விளக்கிச் சொல்லி தன் எதிரிலேயே அவன் பாக்ஸிங் செய்ய ஏற்பாடு செய்தார்.ஜூனியர் @நஷனல்  பாக்ஸிங்செய்திருக்கும் மற்றொரு சிப்பாயை அழைத்து மிகவும் நளினமான முறையில் அவனிடம் சொல்லி பயந்த சுபாவமுடைய சிப்பாயின் பயத்தைப் போக்கும் விதமாகவும் அதே சமயம் அவனது மூக்குப் பகுதியில் இரத்தம் வரவழைக்கும் விதமாகவும் பாக்ஸிங் போடச் சொன்னார். சில சிப்பாய்களுக்கு மூக்கு சற்று எடுப்பாக இருந்தால் ஒன்றிரண்டு குத்துகளிலேயே அவர்கள் மூக்கு உடைந்துவிடும். அப்படித் தான் அன்று நடந்தது. தயாராக இருந்த மருத்துவ முதலுதவி அளித்தபிறகு முதலில் பயந்து நடுங்கிய அந்த சிப்பாயை ஆறுதலுடன் நலன் விசாரித்தார். அவன் மிகவும் உற்சாகமாகி தனக்கு இனி பயமில்லை என்றும் அடுத்தநாள் போட்டியில் தான் பங்கு பெறுவதாகவும் சொன்னான். அதேபோல் அடுத்த நாள் போட்டியில் அந்த ஜவான் வெற்றியும் பெற்றான். பல ஆண்டுகளுக்குப் பிறகு அவனுடைய உயர்ரகவெ#ட்  பிரிவில் அவன் @நஷனல் Œõம்பியன் ஆக விளங்கியது இராணுவத்திலேயே ஒரு மாபெரும் வெற்றியாகும்.
@மஜர் கணேசன் இவ்விதம் மூன்று ஆண்டுகள் பயிற்சி அதிகாரியாகப் பணியாற்றி பணிமாற்றம் பெற்று சென்று விட்டார். சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு கர்னல்   என்ற உயர் பதவியில் கணேசன் அதே பெங்களூர் பொறியாளர் படைப் பிரிவின் பயிற்சி மையத்திற்கு அதிகாரியாக வந்தார். 1990 ஆண்டு பெங்களூர் பொறியாளர் படைப்பிரிவின் பயிற்சி மையத்திற்கு முக்கியமான ஆண்டு. 02 மார்ச் 1990 அன்று மாண்புமிகு இந்தியக் குடியரசு தலைவர் கீ. வெங்கட்ராமன் அவர்கள் படைப் பிரிவிற்கு ஒரு வரலாற்று முக்கியத்துவமாக “கொடி வழங்கும் நாள்.” கலர்ஸ் பிரசெண்டே ஷன் அணிவகுப்பைத் தயார் செய்து பயிற்சியளித்து உபதளபதியாக அணிவகுப்பு நடத்தினார் கர்னல் கணேசன். அப்பணியில் இருக்கையில் ஒருநாள் இரவு பயிற்சி தளத்திற்குப் புதிதாக வந்துள்ள மூன்று அதிகாரிகளுக்கு வரவேற்பு விருந்து ஏற்பாடாகி இருந்தது. அவர்களை வரவேற்கும் பொருட்டு கர்னல் கணேசன் முதலிலேயே தயாராகி தமது துணைவியாருடன் “"Officers Mess”ல் நடக்கவிருக்கும் Mess Social சென்றார். குறிப்பிட்ட நேரத்தில் புதிய அதிகாரிகள் வந்தனர்.
                                  நான் எப்படி உங்களை மறக்க முடியும்?
 ஒவ்வொருவரையும் வரவேற்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட கர்னல் கணேசன் மூன்றாவதாக வந்த @கப்டன் என்.@க.ராவ்  என்ற அதிகாரியையும் கைகுலுக்கி வரவேற்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அதற்கு அந்த அதிகாரி, சார்! என்னை நீங்கள் மறந்திருக்கலாம். ஆனால், நான் எப்படி உங்களை மறக்க முடியும்? உங்களது அறிமுகம் 15 ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு நடந்து விட்டது என்று புன்சிரிப்போடு புதிர் போட்டார். கர்னல் கணேசன் அன்போடு அவர் தோள்மீது கை வைத்து என்ன! அப்படியா! எனக்கு நினைவில்லையே! நீ என்னை முன்பே சந்தித்திருக்கிறாயா? என்றார்.
@கப்டன் என்.கே  .ராவ் என்ற அதிகாரி விளக்கம் சொன்னார். 1975-76ம் ஆண்டு வாக்கில் தான் ஒரு சிப்பயாக அன்றைய மேஜர் கணேசனிடம் இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்றதாகவும் அப்போது கணேசனுடைய தீவிர பயிற்சி, சிப்பாய்களிடம் அவர் காட்டிய அணுகுமுறை ஆகியவற்றினால் ஊக்குவிக்கப்பட்டுத் தான் எப்படியும் ஒரு அதிகாரியாகி விட வேண்டும் என்று தீவிர முயற்சியின் காரணமாக ஸ்பெஷல் லிஸ்ட் என்று சொல்லப்படுகின்ற பிரிவில் தான் சில ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரியாகி, இப்பொழுது பணிமாற்றம் பெற்று பெங்களூர் வந்ததாகவும் சொன்னார். கர்னல் கணேசனுக்கு அளவற்ற மகிழ்ச்சி! பெருமிதம்! எப்போதோ, எங்கேயோ தான் தூவிவரும் எண்ணங்கள் படைப் பிரிவினரிடையே எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகின்றன என்பதை நேரில் கண்டபொழுது மிகவும் பரவசப்பட்டார்.
பண்டைய தமிழர்களின் வீரத்தையும் செயலாக்கத் திறமையையும் பல புலவர்கள் பாடி இருக்கின்றனர். மன்னர்களே கூட கவிபாடவும் கவியரங்கத்திற்கு தலைமை ஏற்கவும் செய்திருக்கிறார்கள். தலைமைப் பொறுப்பு தகுதியானவர்களிடம் இருக்கும் போது அவர்களது அணுகுமுறையில் எண்ணற்ற வீரர்களும் கவிஞர்களும் உருவாகிறார்கள். வருங்கால சந்ததியினர்க்கு அவர்கள் முன்னுதாரணமாக இருந்திருக்கிறார்கள். சந்ததி வாயிலாக வந்திருந்தாலும் தனது திறமையால் அரசவை ஏற்றிருந்தாலும் செயலாக்கவாதிகளுக்கு அரசபாரம் ஒரு சுமையாகத் தெரிவதில்லை. சோழன் நலங்கிள்ளி என்ற மன்னனின் இந்தப் பாடல் ஒரு உதாரணம்
மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்
பால்தர வந்த பழவிறல் தாயம்
எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்பு எனக்
குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச்
சிறியோன் பெறின் அது சிறந்தன்று மன்னே!
மண்டு அமர்ப்பரிக்கும் மதனுடை நோன்தான்
விழுமியோன் பெறுகுவன் ஆயின், தாழ்நீர்
அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை
என்றூழ் வாடுவறல் போல, நன்றும்
நொய்தால் அம்ம தானே - மையற்று
விசும்பு உற ஓங்கிய வெண்குடை
முரசு கெழு வேந்தர் அரசு கெழு திருவே. (புற-75)
பாரம்பரிய உரிமை காரணமாக அரசுரிமையை ஏற்று குடிகளைக் காப்பது என்றாலும் அவரவர் மன இயல்பு படியே அரசாட்சி நடைபெறும். குடிமக்களிடம் வரி வேண்டி இரக்கும் அரசனுக்கு அது ஒரு பெரும் சுமையாக இருக்கும். பேராற்றலும் சால்பும் உடையவனுக்குக் கிடேச்சித் தக்கையைப் போல் சுமப்பதற்கு மிகவும் இலேசாகத் தோன்றும்.
இன்றைய இராணுவ அதிகாரிகளின் நிலையும் அதுபோல்தான். இராணுவப் பணிகள் பற்றிய தெளிந்த அறிவும், சட்ட நுணுக்கங்களும் தெரிந்த ஒரு அதிகாரி, தன்னளவில் உடலாலும் மனதாலும் சிறந்தவனாக வைத்துக் கொள்ளும்போது அவன் படைப் பிரிவினர்க்குப் பல விதங்களிலும் உதவிபுரிபவனாக இருக்கிறான். அவனது அணுகுமுறைகளால் நல்ல பெயர் எடுக்கும் படைப்பிரிவினர் அப்படிப்பட்ட தலைவன் பணிமாற்றம் பெற்று சென்று விட்டாலும் பல ஆண்டுகளுக்கு அவனது வழித்தடம் பற்றி அவர்கள் நடப்பார்கள் என்பதில் ஐயமில்லை.[வளரும்]

No comments:

Post a Comment