Thursday 13 November 2014

எதற்கும் நேரம் வரவேண்டும் (சிறுகதை)

                                                                . மீனாட்சிசுந்தரம்
       எதற்கும் நேரம் வரவேண்டும் 
                     (சிறுகதை)
                                                                                                                
பெரியம்மாவிற்கு குழந்தையில்லை என்ற காரணத்தினால், அம்மாவை இரண்டாம் தாரமாக அப்பா திருமணம் செய்துகொண்டார். பெரியம்மாதான் இதற்கு வித்திட்டவர்கள். அம்மாவின் முழு சம்மதத்தைப் பெற்ற பின்புதான் பெரியம்மா தன் கணவனுக்கு, தங்கையை மணம் முடித்துக் கொண்டார்கள்.

      தன் வாழ்க்கையையே தியாகம் செய்தவள் என்ற காரணத்தினால், பெரியம்மா மேல் அப்பாவுக்கு கூடுதல் பிரியம். அவர் வீட்டில் இருந்தால், மூச்சுக்கு மூன்று முறையாவது ஆனந்தி, ஆனந்தி என்று கூப்பிட்டுக் கொண்டே இருப்பார். அப்பாவிற்கு தினமும் பணிவிடை செய்வதிலிருந்து, ஆலோசனை சொல்வது வரையில் எல்லாமே பெரியம்மாதான். அம்மாவிடமும் அவரது அன்பு குறையவில்லை. இருவருமே இரண்டு கண்கள்தான் அப்பாவிற்கு.

       அப்பா பெரியம்மா மேல் வைத்திருந்த பாசமிகுதியால், எனக்கு ஆனந்தன் என்று பெயர் வைத்தார்கள்எனவே    என்மேல் பெரியம்மாவுக்கு கொள்ளைப் பிரியம். ஆனந்த், ஆனந்த் என்று என்மீது அன்பைப் பொழிவார்கள். இந்த பாசத்திற்கு அவரது பெயரைச் சூட்டியதும் காரணமாக இருக்குமோ என்று நான் நினைத்ததுண்டு. நான் சிறு குழந்தையாய் இருந்தபோது எப்போதும் அவர் இடுப்பில்தான் இருப்பேனாம். பெரியம்மாவின் சம்மதம் இல்லையென்றால் நான் பிறந்திருக்கமாட்டேன்தானே! ஆகவே இயற்கையாகவே அவர்களிடம் பாசமும் மரியாதையும் அதிகமாய் இருந்ததில் வியப்பில்லைதான். அது இந்த இருபத்தைந்து வயதிலும் தொடர்கிறது.

      உடன் பிறந்த சகோதரி என்பதையும் மறந்து பெரியம்மா மேல் பாசத்திற்குப் பதிலாக வெறுப்பைத்தான் காட்டிவருகிறாள் அம்மா. எனக்கு விபரம் தெரிந்தது முதல் இதை கண்கூடாகப் பார்த்து வருகிறேன். இதுவரையில் இதற்கான காரணத்தை என்னால் யூகிக்கமுடியவில்லை. அதுவும் அப்பாவின் மறைவிற்குப் பிறகு பெரியம்மா மேல் உள்ள வெறுப்பு கூடுதலானது. பெரியம்மாதான் பெருந்தன்மையாக ஒதுங்கிக்கொண்டார்கள்.
  

பெண்களுக்குண்டான அடிப்படைக் குணமே கணவனைப் பங்குபோடுவதை விரும்பமாட்டார்கள். இந்தக் குணத்திற்கு அம்மாவும் அடிமையாகிவிட்டாளோ! இதனால்தான்  பெரியம்மா மேல் வெறுப்பைக் காட்டினாளோ! இப்படி  மனதுக்குள் எனக்கு நானே சமாதானம் செய்துகொண்டேன்
.
அப்படியானால் அப்பா இறந்த பிறகும் ஏன் பெரியம்மா மேல் வெறுப்பைக் காட்டவேண்டும் என்பதும் இதுவரையில் எனக்கு புரியாத புதிராகவே இருக்கிறது. பெரியம்மாவிடமும் இதற்கான காரணம் கேட்டும் அவர்களுக்கும் சொல்லத் தெரியவில்லை. ‘ஆறும் அது ஆழமில்ல. அது சேரும் கடலும் ஆழமில்ல. ஆழம் எது ஐயா இந்த பொம்பள மனசு தாய்யாஎன்று ஒரு கவிஞன் பாடியதுதான் நினைவுக்கு வந்தது.

பெரியம்மா தனியாகப் போய் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. வாடகை வீட்டில்தான் அவர்களின் வாசம். அப்பாவின் ஓய்வூதியத்தில்தான் அவர்களின் ஜீவனம் கழிகிறது. அவர்களுக்கு எந்தக் குறையும் இல்லைதான்- நானும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்த்துவருவது அவர்களுக்கு கூடுதல் சந்தோசம். அம்மா வெறுப்பைக் காட்டினாலும், பெரியம்மாவிற்கு தங்கைமேல் பாசம் குறையவில்லைதான். அம்மாவிற்குப் பிடித்த மைசூர்பாகை மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது செய்து கொடுத்துவிடுவார்கள். அக்கா கொடுத்து அனுப்பிய மைசூர்பாகை மட்டும் ஆசையாக சாப்பிடும் அம்மா அக்கா மேல் பாசத்தை மட்டும்  காட்டாதது ஏன் என்று புரியவில்லை. எப்படி அம்மாவால் இப்படி இருக்கமுடிகிறதுஇதற்காக அம்மாவை மனதிற்குள் திட்டிய நாட்கள்தான் என் நினைவிற்கு வருகிறது. நானும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அம்மா இதில்  மட்டும் பிடிவாதமாய் இருக்கிறாள்.
     
   ஒவ்வொரு புத்தாண்டுக்கும் இரண்டுபேருக்குமே இந்த ஐந்தாண்டுகளாக நான்தான் புடவை எடுத்துத் தருவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். அந்தப் புடவைகள் இரண்டும் ஒரே நிறமும், டிசைன் உள்ளதாக இருக்கும்படி பார்த்து எடுத்துவருவேன். இரண்டுபேருமே என்னைப் பொருத்தவரை அம்மாக்கள்தான். இதுவரையில் முதலில் பெரியம்மாவிற்குப் புடவையை கொடுத்துவிட்டுத்தான் அம்மாவிற்கு கொடுத்துவந்தேன். இந்த முறை ஞாபக மறதியில் இரண்டு புடவைகளையும் எங்களது வீட்டிற்கு எடுத்துவந்துவிட்டேன்.

     
ரெண்டு புடவையும் எனக்குத்தானாப்பாஎன்று ஆசையாகவும், “கலரும் டிசைனும் நல்லாயிருக்கு. பரவாயில்ல ரெண்டுமே இருக்கட்டும்அம்மா கேட்ட பின்புதான் தவறு செய்துவிட்டேனே? நானே என்னை கடிந்துகொண்டேன். இதேமாதிரி கலரும் டிசைனும் உள்ள இன்னொன்று கிடைப்பது சிரமம். அம்மாவிடம் உண்மையைச் சொல்லிவிட வேண்டியதுதான்.

 “அம்மா ரெண்டு புடவையில ஒண்ணு பெரியம்மாவுக்கும்மா. நாந்தான் மறந்து எடுத்துட்டுவந்துட்டேன். நாளைக்கி குடுத்துட்டு வந்துடுறேன்.“ அம்மாவிடம் மாற்றம் தெரிகிறதா என்று கவனித்தேன்.

     “ஒவ்வொரு வருசமும் இப்படித்தான் எடுத்துத்தருவியா?“ அம்மாவின் பேச்சில் மாற்றம் தெரிந்தது.

   “இந்த புதுவருசத்துக்கு பெரியம்மாவ நம்ம வீட்டுக்கு கூட்டிட்டுவாப்பா“  நம்ம எல்லாருமா சேர்ந்து கொண்டாடலாம். இந்தப் புடவையில எங்க அக்காவ நானு பாக்கணும் போல ஆசையாயிருக்குப்பா.“ குழந்தையாகிவிட்டாள் அம்மா.

      அம்மா மாறிவிட்டாளா? எனக்குள் ஆச்சரியமும், சந்தோசமும்.....

    “இந்தப் புடவையில எங்க ரெண்டு பேரையும் போட்டோ எடுக்கணும். அந்தப் போட்டோவ இந்த ஹாலில மாட்டிவைக்கணும்பா. இது என்னோட ஆசைப்பா.“ கண்களிலிருந்து கண்ணீர் பொங்கச் சொன்னாள் அம்மா.

இதைத்தான் எதற்கும் நேரம் வரவேண்டும் என்பார்களோ! தனக்குள் சொல்லிக்கொண்டான் ஆனந்த்

இ.தே.ஏ.6 லெப்டினெண்ட் கர்னல்

                                          



                                                







அஞ்சாநெஞ்சத்துடன் ஒரு மதிப்பீடு 
[இ.தே.ஏ.6]
தலைவர் வேறு ஒன்றும் சொல்லாமல் “நல்வாழ்த்துக்கள்” என்று கை குலுக்கக் கைநீட்டினார். அவருடன் கைகுலுக்கிய கணேசன் சற்றே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “சார் இராணுவ படைப் பிரிவில் தலைவர் தான் தனக்குக் கீழ் உள்ள அதிகாரிகளுக்கு திறனாய்வு றிக்கையை எழுதுகிறார். ஆனால், கீழ் நிலையில் உள்ள அதிகாரிகள் தங்களது தலைவனைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. உங்களுக்கு ஆட்சேபம் இல்லை என்றால் உங்களைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பதைச் சொல்லலாமா?”என்று பணிவோடு விண்ணப்பித்தார். 

படைத் தலைவருக்கு சற்றே வியப்பு!

 "உயர்மலைப் பகுதியில் பணியாற்றியதால் உனக்கு மூளை ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு விட்டதா?" என்று சற்றே அதட்டலுடன் கேட்டார். கணேசன் சற்றும் சளைக்காமல், அப்படி ஒன்றுமில்லை. 

"தாங்கள் விருப்பப்பட்டால் சொல்லுகிறேன்" என்றார். தலைவர் சற்றே புன்னகையுடன் "ஓகே சொல் ! என்ன சொல்லப் போகிறாய்? என்றார்.

கணேசன் மிகவும் நிதானமாகப் பேசலானார். “சார்! எனது மதிப்பீட்டில் நீங்கள் ஒரு படைப்பிரிவின் தலைவராக இருப்பதற்குத் தகுதியற்றவர். இது குற்றச்சாட்டு இல்லை! எனது மதிப்பீடு! அவ்வளவுதான்! எப்படி என்றால் உங்களது படைப்பிரிவில் உள்ள சுமார் 15 அதிகாரிகள் என்னைப் போன்றவர்களே! இதில் சென்ற ஆண்டு உங்களது திறனாய்வு அறிக்கையின் படி என்னை சுமார் 5 அதிகாரிகளுக்கும் கீழாக ஆறாவதாக மதிப்பீட்டிருக்கிறீர்கள். என்னிடம் என்ன குறை என்று இன்று வரை நீங்கள் குறிப்பிட்டுச் சொன்னதில்லை. இன்றளவும் என்னைவிட உடலளவிலும் மனதளவிலும் உறுதியானவர்கள் படைப் பிரிவில் யாருமே இல்லை. இளம் அதிகாரிகளுக்குத் தெய்வம் போன்றவர் படைப்பிரிவின் தலைவர். அப்படி இருக்க என்னை ஏன் குறைவாக மதிப்பீட்டீர்கள்? என்னிடம் உள்ள குறை என்ன?” என்று கேட்டு நிறுத்தினார். படைப்பிரிவின் தலைவர் சற்றுநேரம் யோசித்தார். ரகசியமான மற்ற அதிகாரிகளின் திறனாய்வு அறிக்கையை சென்ற ஆண்டு கணேசன் பார்த்திருக்கக் கூடும் என்பதால் எங்கோ தவறு நேர்ந்திருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டார். 

அவர் பின்னர் பதிலளித்தார்.“ கணேசன்! நீ ஒரு நல்ல அதிகாரி என்பதில் சந்தேகமில்லை! படைப்பிரிவின் தலைவனும் ஒரு தனி மனிதனே! அவனுக்கென்று சில விருப்பு வெறுப்புகள் உண்டு. அந்நிலையில் அவருக்குக் கீழே பணிபுரியும் அதிகாரிகளில் ஒருவரை மற்றவரைவிட உயர்வாக மதிப்பிடுவது தலைவரின் உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது. உனது மதிப்பு பாதிக்கப்படாத வரை நீ ஏன் மற்றதைப் பற்றி கவலைப்பட வேண்டும்?”

 அதற்குக் கணேசன் மீண்டும் கேட்டார். “எனது மதிப்பீடு மற்ற சில அதிகாரிகளின் மதிப்பீட்டை விட தாழ்ந்தது ஏன் என்பது தான் எனது கவலை. தான் சரியாக மதிப்பிடப்பட்ட பிறகு, தனக்கு நிகரில்லாதவர்களும் தனக்கு சமமாக மதிப்பிடப்பட்டால் கவலை இல்லை. ஆனால் தான் குறைவாக மதிப்பிடப்பட்டு, தன்னைவிட திறமை இல்லாதவர்கள் உங்களது கணிப்பில் உயர்வாக மதிப்பிடப்படுவது எனக்குச் செய்யும் துரோகம் அல்லவா? உங்களது உத்தரவுகளை எப்படி நான் மனநிறைவுடன் ஏற்று பணியாற்ற முடியும்?அதனால்தான் உங்களிடம் பணியாற்றுவதில் எனக்கு விருப்பமில்லை” என்றார். 

வாக்குவாதத்தை அதிகம் வளர்த்த விரும்பாத தலைவர். “கணேசன்! நான் இப்பொழுது தான் உன்னைப் புரிந்து கொண்டேன்! இந்த உரையாடல் சென்ற வருடமே ஏற்பட்டிருந்தால் மிகவும் உபயோகமாக இருந்திருக்கும். பரவாயில்லை. Better late than never. நீ அதிக உணர்ச்சி வசப்படாமல் இருந்தால் உனக்கு நல்ல எதிர் காலம் இருக்கிறது.மீண்டும் என் நல்வாழ்த்துக்கள்.” Once again best wishes  என்று மீண்டும் கை குலுக்கினார். தனது மனக்குமுறலைக் கொட்டி விட்டோம் என்ற நிம்மதியுடன் கணேசன் “லே”வுக்குப்  பிரிந்து சென்றார்.

சுமார் 10 ஆண்டுகள் கணேசன் மற்ற படைப் பிரிவுகளில் பணியாற்றினார். எங்கு சென்றாலும் தனது சுகதுக்கங்களைப் பின்னுக்குத் தள்ளி நாட்டின் பாதுகாப்பு, படைப்பிரிவினரின் பயிற்சி, அவர்களது உடல் மனநலம் போன்றவற்றை முன்னிறுத்தியே பணியாற்றி யிருக்கிறார்.

பாரதத் திருநாடு சுமார் 200 ஆண்டுகள் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்தது. “எனது நாட்டில் பிச்சை எடுக்க வந்தவர்களிடம் நான் எப்படி அடிமைப்பட்டுக் கிடப்பேன்?” என்று எத்தனையோ பெரியோர்கள், செல்வந்தர்கள் கல்வியாளர்கள் கிளர்ந்தெழுந்திருக்கிறார்கள். செல்வத்தில் புரண்டவர்கள் எல்லாவற்றையும் இழந்து சிறையில் செக்கிழுத் திருக்கிறார்கள். அவர்களது மரணம் இந்த நாட்டின் சுயமரியாதையின் மரணம். அதைக் கண்டு வெகுண்டெழுந்த வீரகவி பாரதி பாடினான்.

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக்
கண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ
எண்ணமெல்லாம் நெய்யாக எம்முயிரினுள் வளர்ந்த
வண்ண விளக்கிஃது மடியத் திருவுளமோ?டு
ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்தபின்னர்
வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ?
தர்மமே வெல்லுமெனுஞ் சான்றோர் சொற் பொய்யாமோ?
கர்ம விளைவுகள் யாங் கண்டதெல்லாம் போதாதோ?

இப்படி நெஞ்சம் குமுறி பாரதி  விட்ட கண்ணீருக்கு இன்றைய நிலையிலும் பதில் இல்லை. இதற்காக நாம் பெருமைப்படலாமா? நல்லவர்களும் வல்லவர்களும் தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.
“லே” இராணுவப் பிரிவில் நடந்த வாக்கு வாதத்திற்குப் பிறகு அந்த படைப்பிரிவின் தலைவர் கணேசன் படைப்பிரிவில் சேர்ந்தது முதல் அவருக்குக் கிடைத்திருக்க வேண்டிய உரிமைகளுக்கெல்லாம் பின் தேதியிட்டு அறிக்கை வெளியிட்டு தனது செயல்பாட்டின் குறைகளை நிவர்த்தி செய்து கொண்டார். ஆனால், கணேசன் அதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. தனது பணிக்காலம் முழுவதும் உண்மையும் நேர்மையும் திறமையுமுள்ள ஓர் அதிகாரி என்று முத்திரை பதிப்பதில் மும்முரமாக இருந்தார். இப்படிப்பட்ட இராணுவ அதிகாரிகள் பழிவாங்கப்படுகிறார்களா என்றால் கணேசனைப் பொறுத்தவரை நிச்சயமாக இல்லை. ஒரு மனிதனின் செயல்பாட்டை எந்த ஒரு புறக்காரணங்களாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதுதான் அவரது வாக்குவாதமாக இருக்கும். ஏனெனில் எந்த நிலையிலும் மனிதன் வளர்கிறான் என்பதையும் நேற்றுவரை நடந்த நிகழ்ச்சிகள் நாளை நாம் எடுக்கப்போகும் புதிய பிறவிக்கான அனுபவங்களே என்பதையும் ஆணித்தரமாக நம்பும் அவர், தான் உண்மை என்று எண்ணுவதை அது உண்மை இல்லை என்று யாரும் தகுந்த விளக்கத்துடன் நிரூபிக்காதவரை தனது செயல்பாடுகளில் மாற்றம் காணப் போவதில்லை.
                                         லெப்டினெண்ட் கர்னல்  

“லே”யிலிருந்து பணிமாற்றம் பெற்று வந்த அவர் பெங்களூரில் மூன்று ஆண்டுகளும், இராணுவப் பொறி இயற் கல்லூரி உள்ள பூனேயில் சுமார் 21/2 ஆண்டுகளும் பணியாற்றிய பிறகு அதே பழைய படைப்பிரிவுடன் பணியாற்ற வந்தார். மீண்டும் சுமார் 21/2 ஆண்டுகள் பணியாற்றி விட்டு மற்றொரு இடம் சென்றார். இந்நிலையில் அவரது அடுத்த பதவிஉயர்வான லெப்டினெண்ட் கர்னல்  என்ற பதவிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார். உடலாலும் மனதாலும் இராணுவ படைப்பிரிவை உயிராக நேசித்த அவரை அன்றைய சூழ்நிலையில் படைப்பிரிவைத் தலைமை ஏற்கும் சில தகுதிகளின் அடிப்படையில் அவர் “தகுதியானவர் இல்லை” என்று நிராகரித்து அவரை டெல்லியில் உள்ள பொறியாளர் கட்டிடப் பிரிவுக்கு அதிகாரியாக இடமாற்றம் செய்தார்கள். ஒப்பந்தக்காரர்களுடன் நேர்மையற்ற முறையில் வாதிட்டுப் பணியாற்ற விருப்பமின்றி இராணுவத்தில் சேர்ந்த அவரை சுமார் 20 வருடப் பணி அனுபவத்துடன் அதே மாதிரியான இடத்தில் அமர்த்தியது அன்றைய சூழ்நிலை. மனதளவில் கணேசன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. 
ஏனிப்படி நடந்தது என்று தனக்குள்ளேயே கேள்வி கேட்டுக் கொண்டிருந்த அவரை விதி கைவிடவில்லை. படைப்பிரிவில், தலைவர்களின் செயல்பாட்டையும் படைப் பிரிவினரிடையே சில தகுதியற்ற தலைவர்களின் செயல்களால் உருவாகும் மனக்கசப்பையும் மிகவும் கவனமாகப் பரிசீலித்த இராணுவத் தலைமையகம் படைப் பிரிவுகளில் சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகளே அங்கு தலைமை ஏற்க முதல் தகுதி பெற்றவர்கள் என்ற புதிய கொள்கையைப் பிறப்பித்தது. 

அதன் காரணமாகப் படைப் பிரிவுத் தலைமை மறுக்கப்பட்ட கணேசன் இரண்டே மாதங்களில் திரும்பவும் பணிமாற்றம் பெற்று அருணாசல பிரதேசத்தில் உள்ள ஒரு படைப் பிரிவிற்கு தலைவராக நியமிக்கப்பட்டார்.
ஆச்சரியமான முறையில் “லே”யில் எந்த படைப் பிரிவுத் தலைவரால் தீங்கிழைக்கப்பட்டாரோ அதே படைப்பிரிவுதான். அந்த தலைவர் அமர்ந்திருந்த அதே நாற்காலியில் சரியாகப் பத்து வருட இடைவெளியில் (November 1974 - Nணிதி 1984) நவம்பர் 1984ல் வந்து அமர்ந்தார் கர்னல் கணேசன்.[வளரும்]

தமிழ் இனி மெல்ல [3.17]தொடர்கிறது

தமிழ் இனி மெல்ல [3.16] சென்ற பதிவின் இறுதியில் 
அம்மங்கையின் பகட்டும், அருள்மொழி நங்கையின் எளிமையும் ஒரு மாறுபாடாகத்தான் இருக்கும். ஆனால் அருள்மொழிநங்கையின் முகத்தில் இருக்கும் அமைதியும், நிறைவும் அம்மங்கையின் முகத்தில் ஒருபொழுதும் தென்படாது. எப்பொழுதும் ஏதோ ஒரு குறை இருப்பது போலத்தான் இருக்கும் அவளது முகம். அவள் முகத்தில் இருந்த குழந்தைத் தனமும், குறுகுறுப்பும், நரேந்திரனை மணந்து சில ஆண்டுகள் ஆனபிறகு மறைந்து வருவதையும், அதே சமயத்தில் அருள்மொழிநங்கையின் முகத்தில் அருள் களையும், நிறைவும் கூடிவருவதையும் இராஜேந்திரர் கவனிக்காமல் இல்லை.  எந்த மகள் எளிய வாழ்வு நடத்துகிறாள் என்று குறைப் பட்டுக் கொள்கிறோமோ, அவள் நிறைவுடனும், அரசியர்க்கு உரிய பகட்டுடன் இருக்கும்  இன்னொரு மகள் எதையோ பறிகொடுத்தது மாதிரி இருப்பதும் அவருக்கு ஏதோ மாதிரித்தான் இருக்கிறது. நரேந்திரனுக்கு அவளை மணம் செய்து கொடுத்தது தவறோ என்று கூட சிலசமயம் எண்ணுவதுண்டு,

ஆனால் ஒருபொழுதும் அருள்மொழிநங்கையின் திருமணத்தைப் பற்றி அப்படி நினைக்கத் தோன்றியதே இல்லை.  அவளது மகனான மறையன் அருள்மொழியும் சிறந்த வீரனாகப் புகழ் பெற்று வருவது மிகவும் மகிழ்வாகத்தான் இருக்கிறது.

ஐந்து வயது நிரம்பிய இராஜேந்திர நரேந்திரன் - அம்மங்கயை?ன் மகன் - பிறந்ததிலிருந்து கங்கைகொண்ட சோழபுரத்தில்தான் இருந்து வருகிறான். அவனது காலில் இருக்கும கோடுகளைக் கண்ட சோதிடர் அவன் ஒரு பெரிய மன்னனாக ஆட்சி செய்வான் என்று சொன்னது மகாராணி திரிபுவனமாதேவிக்கு மட்டுமல்லாது இராஜேந்திரருக்கும் பெருமையாகத்தான் இருக்கிறது. அவனாவது அவன் தந்
தை மாதிரி இல்லாமல் சிறந்த வீரனாக, கலிங்கம், வங்கம், இன்னும் நடுநாடுகளையும் தன் குடைக்கீழ் கொண்டுவந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணி மகிழ்வதும் உண்டு.

அதே சமயம், மறையன் அருள்மொழி அரசுரிமை ஏற்கக் கூடாது என்று கண்டிப்பாக பிரம்மராயரும், அருள்மொழிநங்கையும் சொல்லிவருவது இராஜேந்திரருக்கு அவ்வளவு ஏற்புடையதாகப் படவில்லை. அவன் கருநாட்டை ஆளும் பொறுப்பேற்றால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றும் எண்ணுவதுண்டு. அவன் அங்கு சென்று வந்த ஆறு திங்கள்களிலேயே கன்னட மொழியைப் பேசக் கற்றுக் கொண்டுவிட்டான் என்று அருள்மொழி நங்கை மூலம் அறிந்து கொண்ட போது அப்படிப்பட்ட எண்ணம் தோன்ற ஆரம்பித்தது.  ஆனாலும் தனது நண்பன் பிரம்மராயரின் குணம் தெரிந்ததால் அந்த எண்ணத்திற்கு அணை போட்டு வருகிறார்.

மருத்துவர் கையைப் பிடித்து நாடி பார்க்கும் போது மனதிற்குள் சிரித்துக் கொள்கிறார். பிரம்மராயரைத் தடுத்துவிட்டார். ஆனால் மருத்துவரை எப்படித் தடுக்க முடியும்? யார் விடுவார்கள்?

“அரசே! நாடியில் சிறிது தெளிவு வந்திருக்கிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படியே நிலைமை தேறினால் நீங்கள் ஓடி விளையாட ஆரம்பித்து விடுவீர்கள்!” என்று வாயெல்லாம் பல்லாகத் தெரிவிக்கிறார் அரச மருத்துவர்.
“மருத்துவரே! உமது மருந்தால் எமது நிலைமை தேறவில்லை.  எமது நண்பருடன் பேசியதுதான் அஞ்சனமாக இருந்திருக்கிறது.” என்று சிரிக்கிறார் இராஜேந்திரர்.

“அப்படியானால் இவர் உங்கள் அருகிலேயே இருக்கட்டும் தந்தையே!” என்று பரிவுடன் கூறுகிறாள் அருள்மொழிநங்கை.  மெல்லத் தலையாட்டுகிறார் இராஜேந்திரர்.

அரிசோனா மகாதேவன் 
தமிழ் இனி மெல்ல [3.17]தொடர்கிறது 
                                                          அத்தியாயம் 12
                             திருப்பூவனம், பாண்டி நாடு
                              சுபானு, தை 19 - பிப்ரவரி 4, 1044

 “சை என்ன தொல்லை இது? ஈக்கள் தொல்லை ஒரேயடியாப் பெருகிப் போச்சு. ஏ பிள்ளே, மீனாச்சி! வீட்டைச் சுத்தம் செய்யல்லையா? மனுசி பகல்ல சோத்தைத் தின்னுப்புட்டு கொஞ்சம் உறங்கலாம்னா முடியாம போச்சே! என்று சலித்துக் கொள்கிறாள் ஐம்பது வயதை எட்டிப் பிடிக்கப் போகும் வள்ளியம்மை - பாண்டியரின் பொக்கிஷத்தைப் பாதுகாக்க மண்ணுக்கடியில் கோட்டை அமைத்து உயிரைத் துறந்த முருகேசனின் மனைவி. அவள் குறை சொல்வது, தனது மருமகள் மீனாட்சியைப் பற்றித்தான். 

“பொங்கலுக்கு வெட்டிப் போட்ட கரும்புங்க இன்னும் நிறையக் கிடக்கு, அத்தை! அதுதான் ஈயோட தொல்லைப் பெருகிப் போச்சு.  நான்தான் தினமும் ரெண்டு தபா - காலையும், மாலையும் வூட்டை நல்லாப் பெருக்கித் தொடச்சு வச்சிருக்கேனே! சும்மாக் கொறை சொல்லாதீங்க, அத்தை! ஒங்க மயன் காதுல விழுந்தா நான் வூட்டுலே வேலையே பார்க்கறது இல்லேன்னு முதுகுல ரெண்டு தப்பு தப்பிடுவாரு.” என்று தான் வேலை சரியாகச் செய்வதாகவும், தனது கணவனின் முன்கோபத்தைக் கிளறினால் தனக்கு அடி விழும் என்று தனது மாமியாருக்கு அறிவித்திருக்கிறாள். வள்ளியம்மையின் மகன் சொக்கநாதனின் மனைவியும், ஆறு குழந்தைகளுக்கு இருபத்தேழு வயதிலேயே தாயானவளும், வள்ளியம்மையின் அண்ணன் மகளும் ஆன மீனாட்சி.

“ஆமா, நீ ரொம்ப சொக்கனுக்குப் பயந்தவ யாரு! அசந்துபோனா அவனை முந்தானையிலே முடிஞ்சு வச்சுக்கிட மாட்டியா என்ன! சரியாத்தா, நான் வாயை மூடிக்கறேன். ரெண்டு நாழி கண்ணை மூடினாத்தான் உடம்பு அசதி கொறையுது.  பேரப்பசங்க எங்கே போயிருக்காங்க, கழுதை பொதி சொமக்கற வெய்யில்ல?” என்று தனது முதல் மூன்று பேரப் பிள்ளைகளைப் பற்றி பொதி சொமக்கற வெய்யில்ல?” என்று தனது முதல் மூன்று பேரப் பிள்ளைகளைப் பற்றி விசாரிக்கிறாள் வள்ளியம்மை - அடுத்த இரண்டு பேரன்களும் தரையில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பதைக் கவனித்து விட்டு.

“மழை பெஞ்சு வைகையிலே தண்ணி ஓடுதுல்ல, அதுல தொளையப் போயிருக்கானுக. தண்ணீலே இறங்கிட்டா சட்டுனா திரும்பி வரானுக!” என்று குறைந்து கொள்கிறாள் மீனாட்சி.

வாசலில் காலடிச் சத்தம் கேட்கிறது. திண்ணையில் வைத்திருந்த அண்டாவிலிருந்த தண்ணீரைச் செம்பில் எடுத்துக் காலைக் கழுவிக் கொண்டு வீட்டிற்குள் நுழைகிறான் சொக்கநாதன் என்ற சொக்கன். புசுபுசுவென்ற மீசையை நன்கு முறுக்கி விட்டுக் கொண்டிருக்கிறான். கிருதா காதுக்கும் கீழே இறங்கியிருக்கிறது.

“ஆத்தா, சோறு சாப்பிட்டியா? உடம்பு எப்படியிருக்கு? நேத்து முழுக்க ஒரேயடியா இருமிக்கிட்டு இருந்தியே!” என்று அன்னையின் உடல் நலத்தைப் பற்றி விசாரித்தபடி உள்ளே வருகிறான்.

“இப்ப அது ஒண்ணுதான் நான் ஒழுங்காச் செய்யற வேலை.  தினமும் மூணு வேளை திங்கறதும், தூங்கறதும். நீ பசியா வந்திருப்பே, ராசா. சாப்பிட உக்காரு. ஏ பிள்ளே, மீனாச்சி! உன் புருசன் வந்துட்டான்டியம்மா.  சீக்கிரம் சோத்தை எடுத்து வை . அவன் பசியாறணும்.” என்றபடி மெல்ல எழுந்து உட்காருகிறாள் வள்ளியம்மை.

விட்டத்தில் தொங்கும சீலைத் துணித் தூளியிலிருந்து குழந்தை குரல் கொடுத்து அழ ஆரம்பிக்கிறது.

“கொழந்தையை எடுத்து எங்கிட்ட கொடுத்துடிம்மா. நான் அதைச் சமாதானப் படுத்தறேன். யாராவது சாப்பிட ஒக்காந்தாப் போதும், உடனே முழுச்சுக்கிட்டு கத்த ஆரம்பிச்சுடறா. படுத்தா எந்திரிச்சு ஒக்கார முடியலை, உக்காந்தா, நிமிந்து நிக்க முடியலை. அவரும் சட்டுனு என்னையைக் கூட்டிக்க மாட்டேங்கறாரு. எத்தனை நாள்தான் இப்படி அவரையே நெனைச்சுப் பொழுதைக் கழிக்கணுமோ! என்று விதியை நொந்து கொள்கிறாள் வள்ளியம்மை. அழும் குழந்தையை அவளிடம் கொடுத்துவிட்டு, அவர்களது பரம்பரை வெள்ளித் தட்டையும், சோம்பு நிறையப் பானைத் தண்ணீரையும் எடுத்து வைத்து சோற்றையும் வெஞ்சினத்தையும் பரிமாறுகிறாள் மீனாட்சி. அமைதியாக சோற்றை அள்ளித் தின்கிறான் சொக்கன்.

“ஏம்ப்பா சொக்கா , என்னப்பா ஒண்ணுமே பேசாமச் சாப்பிடறே? மதுரை போயிட்டு வந்தியே, அங்கே என்ன நடக்குது? ரொம்ப காலமா சோழ ராசகுமாரங்களே பாண்டிய ராசா பேரை வச்சுக்கிட்டு அரசாட்டி பண்ணிக்கிட்டு வாராங்களே, இது அடுக்குமா? மதுரைக் கோவில்ல மீனாச்சியும், சொக்கநாதனும் இன்னமும் கல்லாத்தானே ஒங்காந்துக்கிட்டு இருக்காங்க! நீயும் அந்தச் சொக்கநாதன் பேரை வச்சுக்கிட்டு கல்லைப் போல ஒங்காந்துக்கிட்டு, ஒரு பேச்சும் பேசமாட்டேங்கறியே!” வள்ளியம்மை பேசுவது புலம்பலைப் போலத்தான் இருக்கிறது.

“ம்..” என்று உறுமுகிறான் சொக்கன்.

“நீ புலம்பிக்கிட்டே இரு, ஆத்தா! நாம என்ன செய்ய முடியும்? இலங்கை ராசா நமக்கு உதவியா இருந்தாருன்னு அவரையும், அவங்க பொண்டாட்டி பிள்ளைங்களையும் சிறையெடுத்து சோழநாட்டுக்குக் கொண்டு போயிட்டதும், அங்கேயே அவங்க எல்லாரும் சிறையிலேயே கிடந்து செத்துப் போனதையும் உனக்குச் சொல்லுறதா? மூணு வருசத்துக்கு முன்னாலதான் அந்த இலங்கை ராசாவோட பையனும், நம்ம விக்கிரம பாண்டிய ராசாவும், ஒரு வடக்கத்தி ராசாவோட சேர்ந்து சண்டை போட்டதும், இராசேந்திர சோழரோட மகன் - அதுதான் மதுரைலே கொஞ்ச காலம் சோழபாண்டியன்னு பேரை வச்சுக்கிட்டு ஆட்சி  செஞ்சாரே - அவர் பெரிய படையோட இலங்கைக்குப் போயி சண்டை போட்டு, நம்ம ராசாவையும் சேத்து மூணு ராசாக்களையும் கொன்னுப்புட்டதும் உனக்குத் தெரியாதா! அந்தச் சண்டையிலே பெரியப்பா மகன், அதுதான் என் அண்ணன் காளையப்பன் செத்துப் போனதையும் உனக்குச் சொல்லுறதா! விக்கிரமராசா மகனான பாண்டிய இளவரசருக்குத் துணையா நான் இருக்கணும்னு சொல்லி, மகாராசா என்னை மட்டும் இங்கே விட்டுப்புட்டு போனதைச் சொல்லுறதா! என்னத்தைச் சொல்லுவேன் நான் உனக்கு? என்ன பேச்சுப் பேசுவேன் நான்!

தினமும் திங்கறதும், தூங்கறதும், நிறையப் பேருக்கு சண்டை சொல்லித் தருவதையும் தவிர என்ன செய்யறேன்! பாண்டிய ராசகுமாரரைக்கூட இந்த ஊருலதானே மறைச்சு வச்சுருக்கோம்! அப்பா எழுதப் படிக்கக் கத்துக்கணும்னு சொன்னாருன்னு சொன்னே! அதுனால ரொம்பச் சிரமப் பட்டு எழுதவும் கத்துக்கிட்டேன். இப்ப உம் பேரன்களும் எழுதப் படிக்கக் கத்துக்கணும்னு சொன்னதால அவங்களைத் திண்ணைப் பள்ளிக்கூடத்துக்கும் அனுப்பறேன். வேறென்ன சேதியிருக்கு, உன்கிட்ட சொல்லி சந்தோசப் படறதுக்கு! சோறுகூட நிம்மதியா திங்க விடமாட்டேங்கறியே!” என்று தன்னுடைய நிராசைகளைத் தன் தாயாரின் மேல் கொட்டிக் கொள்கிறான்.

“ஆனா ஒண்ணு மட்டும் சொல்லறேன், ஆத்தா. ஒரு நாள் இல்லாட்டா ஒருநாள் மதுரையிலே மீன் கொடி பறக்கத்தான் போகுது. அங்கே மட்டுமில்லே, சோழநாட்டுத் தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்திலும் நம்ம மீன் கொடி பறக்கத்தான் போகுது. அந்த சமயத்துல உன்னோட பரம்பரைலே வந்த ஒருத்தன், நம்ம இரத்தம் ஓடற ஒருத்தன் பாண்டிய ராசாகூட மீன் கொடியை ஏத்தத்தான் போறான். இம்புட்டுத்தான் நான் உனக்குச் சொல்ல முடியும். வேற என்ன இருக்கு!” என்று அங்கலாய்கிறான்.

இதை கேட்டதும் வள்ளியம்மையின் கண்கள் பளிச்சிடுகின்றன.

“நல்லாச் சொல்லு மகனே, நல்லாச் சொல்லு! இந்தப் பேச்சுதான் தினமும் உன் வாயிலேந்து வரணும், நான் அதைக் கேட்டு சந்தோசப் படணும் இந்தப் பேச்சைத்தான் நீ தினமும் உன் பிள்ளைகளுக்குச் சொல்லி வளர்கணும். உன் பையங்க உடம்பிலே ஓடற ஒவ்வொரு துளி ரத்தமும் நம்ம பாண்டிய ராசாக்காள் பட்ட அவமானத்துக்குப் பழி வாங்கணுங்கற வெறியோடதான் ஓடணும். நம்ம பாண்டிய ராசாக்களோட பரம்பரைச் சொத்தைக் காப்பாத்த எத்தனை சோழங்களோட உயிரைக் குடிச்சுட்டு செத்துப் போனாரு உன்னோட அப்பா - என் புருசன்! சேதி கேட்டு, என் தாலியை அறுத்து வீசினப்ப எனக்கு ஒரே ஒரு குறைதான் இருந்துச்சு. பாண்டிய ராசாக்களுக்காக உயிரைவிட ஒரே ஒரு ஆம்பிளப் பிள்ளையை மட்டும் கொடுத்துட்டுப் பொயிட்டியே மகராசான்னுதான் செத்து போன என் புருசன நெனச்சு வருத்தப்பட்டேன்.

“அதுனாலதான் என் அண்ணன் பொண்ணை அவ வயசுக்கு வந்த கையோட உனக்கு கண்ணாலம் செஞ்சு வச்சேன். காரணம், நீயும் அவளும் சேர்ந்து நிறைய ஆம்புளப் பிள்ளைகளை நம்ம பாண்டிய நாட்டுக்குப் பெத்துக் கொடுக்கணும்ன்னதான்.  இதுவரைக்கும் பொறந்த ஆறுலே அஞ்சு ஆணாப் பொறந்தது எனக்கு ரொம்பச் சந்தோசமா இருக்கு. இன்னும் பொறக்கணும். எல்லாத்தையும் நல்லா வீரமா வளர்த்துருப்பா. அதுங்க எல்லாத்துக்கும் உன் அப்பன் சொன்ன மாதிரி எழுதப் படிக்கக் கத்துக் கொடுத்துடு. இது நம்ம குடும்பத்துக்கு பாண்டிய ராசாவோட கட்டளை. அதுக்குத்தான் நிலபுலமெல்லாம் நமக்கு கொடுத்திருக்காங்க. அவங்க உப்பைத் திங்கற நாம அவங்களுக்கு விசுவாசமா இருக்ணும்.” என்று சொல்லி முடிக்கிறாள். வள்ளியம்மை. அவள் வருங்காலத்தின் மகிழ்ச்சியில் தன்னைத்தானே மறக்கிறாள்.

“அப்படியே செஞ்சுப்புடறேம்மா. நீ எதுக்கு தினமும் பொழுது விடிஞ்சா இப்படிக் கவலைப்பட்டுக்கிருக்கே! என்ற அவளைத் தேற்றுகிறான் சொக்கன்.

“நான் கவலைப் படறதுக்கும் காரணமிருக்குடா, சொக்கா. உங்க ஆத்தா வீட்டோட கெடக்கற பொட்டச்சிதானே, இவளுக்கு என்ன தெரியுமின்னு நெனச்சுடாதே!” என்று ஆரம்பிக்கிறாள் வள்ளியம்மை, “காளையப்பன் போனதுக்கப்பறம் உன் பெரியப்பன் குடும்பத்திலே ஆம்பிளப் பசங்களே இல்லை. இருந்த ஒத்தப் பொண்ணும் பேசிக் காய்ச்சல்லே போயிட்டு அவுங்க வமிசமே இல்லாம போயிடுச்சு. இனிமே பாண்டிய ராசாக்களுக்கு உயிரைக் கொடுக்க உன் பிள்ளைங்க மட்டுந்தான்டா நம்ம பரம்பரையிலே இருக்காங்க.
“நீ சொன்னியே, சோழ நாட்டுலே நம்ம மீன் கொடி பறக்கத்தான் போவுதுன்னு - உன் பிள்ளைங்க வாழையடி வாழையாத் தழைச்சுப் பெருகினாத்தான்டா அது நடக்கும். அதுனாலதான் பாண்டிய ராசா உன்னை இங்கே விட்டுட்டுப் போயிட்டாரு. அந்த நன்றியை நம்ம மறக்கப்படாதுடா.  அதுனாலதான் நான் இப்படி பினாத்திக்கிட்டு இருக்கேன்.

“இன்னும் ஒண்ணுடா. நீயும் என்னை மாதிரிதான் பேசிக்கிட்டு இருக்கே. படிச்சவங்க மாதிரித் தமிழ் பேசணும்டா. உன் அப்பன் என்னமாத் தெரியுமா பேசுவாரு. “உங்கிட்டப் பெசிப் பேசி எனக்குக் கூட நல்ல தமிழ்ல பேசறது மறந்து போயிடுது. நாளைக்கே விக்ரம ராசா வந்தா இப்படிப் பேசிப்புடுவேனோன்று பயமா இருக்குது புள்ளே! அப்படீன்னு விரட்டுவாரு. எனக்கு எவ்வளவு பெருமைத் தெரியுமாடா இருக்கும்! அவரு மனசு குளிரணும்டா. அவரு காவல் தெய்வமா இருந்து நம்ம எல்லாரையும் நல்லபடியா பார்த்துப்பாருடா!” என்று ஓய்கிறாள் வள்ளியம்மை.

அவள் சொல்லியதை மனதில் அசை போட்டவாறு உணவைச் சாப்பிட்டு முடிக்கிறான் சொக்கன்.  இவர்கள் பேசுவரை கவனமாக மனதில் வாங்கிக் கொள்கிறாள் மீனாட்சி. அவள்தானே தனது பிள்ளைகளை வீரர்களாக, தனது அத்தையின் விருப்பப்படி வளர்க்க வேண்டும்! பாண்டிய நாட்டில் பிறந்த வீராங்கனையாயிற்றே அவள்![வளரும்]

Saturday 1 November 2014

செயற்கைப் பால்


                                                            செயற்கைப் பால்

ஒன்று தான் பாக்கியிருந்தது . அதை ஏன் விட்டு வைக்க வேண்டும்?  செயற்கையாகப் பால்.  அதையும் தயாரிக்க முடியும் என்று அமெரிக்காவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஒரு நிறுவனம் அறிவித்துள்ளது.

எதிர்காலத்தில் மக்கள் மாடுகளையோ மாட்டுப் பண்ணை களை யோ  நம்பிக் காத்திருக்கத் தேவையில்லை ஈஸ்ட் போதும். அதை அடிப்படையாக வைத்து  பயோ-எஞ்சினீரிங் முறையில் செயற்கைப் பால்  தயாரித்துவிடலாம் 

இந்தியாவிலிருந்து சென்று அமெரிக்காவில் ஆராய்ச்சியை மேற்கொண்ட  பெருமாள் காந்தி, ரையான் பாண்டியா,இஷா தத்தார் ஆகியசெய்ற்கைப் பால் தயாரிப்புக்காக மூபிரீ (Muufri) என்ற பெயரில் மூவர் அணியினர் அதைக் கண்டுபிடித்தார்கள். அடுத்த ஆண்டு ஜூலை வாக்கில் தங்களது பால் அறிமுகப்படுத்தப்படும்  என்று அவர்கள் கூறியுள்ளனர்.
பெருமாள் காந்தி

செயற்கைப் பால் தயாரிப்பு முறையில்  சிறிது மாற்றங்களைச் செய்வதன் மூலம் பசும் பால், எருமைப் பால், ஆட்டுப் பால் என பலவகையான பால்களைத் தயாரிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரையான் பாண்டியா
செயறகைப் பால் பார்வைக்கு அசல் பாலைப் போலவே இருக்கும். அத்துடன் அசல் பாலைப் போலவே அடர்த்தி கொண்டதாக, ருசி கொண்டதாக சத்து கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஷா தத்தார்
செயற்கைப் பாலில் சில சாதகங்களும் உள்ளன. அசல் பாலில் லாக்டோஸ் இருக்கும். இது பலருக்கும் ஒத்துக்கொள்ளாது. செயற்கைப் பாலில் லாக்டோஸ் இராது. அத்துடன் கெட்ட  கொலஸ்ட்ராலும் இராது.

செயற்கைப் பால் கெட்டுப் போகாதது. பல நாட்கள் கெடாமல் இருக்கும் என்று கூறப்படுகிறது. அசல் பால் மூலம் தயாரிப்பது போலவே செயற்கைப் பாலிலிருந்தும் பால் பொருட்களைத் தயாரிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கைப் பால் அடங்கிய பாட்டிலுடன் பெருமாள் காந்தி
இந்த மூவர் கூட்டணியில் ஒருவரான பெருமாள் காந்தி சென்னையில் உள்ள ஒரு பல்கலையில் உயிரி தொழில் நுட்பம் படித்து பட்டம் பெற்றவர். முமபையில் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி விட்டு அமெரிக்கா சென்று மேல்படிப்பு படித்து வருபவர். மற்ற இருவரும் உயிரி தொழில் நுட்பப் படிப்பு படித்தவர்களே.
நன்றி: அறிவியல்புரம் (என்.ராமதுரை)




இ.தே.ஏ . 5. தண்ணீர் விட்டோ வளர்த்தோம்?

கர்னல் கணேசன் வி.எஸ்.எம் 
         [ இ.தே.ஏ .   5ம் பதிவு]                    
                                      4. தண்ணீர் விட்டோ வளர்த்தோம்?

இந்தியத் திருநாட்டின் இராணுவ அமைப்பு நாட்டிற்குரிய பொதுச் சட்டத்தையும் இராணுவத்தினர்களுக்காகப் பிரத்தியேகமாக உருவாக்கிய இராணுவ சட்டங்களும் ஒழுங்கு முறைகளும் கொண்டது. ஒரு அமைப்பின் நிர்வாகத்திற்குத் தேவையான எல்லா விதிமுறைகளையும் எழுத்தில் கொண்டு வர வேண்டும் என்பது முடியாத காரியம். மனித மனம் எப்படியெல்லாம் செயல்படக்கூடும் என்பதை யாருமே அனுமானிக்க முடியாது.

ஒரே சூழ்நிலையில் உள்ள மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக செயல்படுகிறார்கள். இதற்குத் தனி மனிதர்களின் எண்ணப் பரிமாற்றங்களே காரணம். இராணுவ அமைப்பு முழுக்க முழுக்க மனிதர்களின் செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. ஒரு தொழிற்சாலையின் உயர்வு தாழ்விற்கு சில மனிதர்களும் ஏராளமான தொழில் நுட்பத்திறன் கொண்ட கருவிகளும் காரணமாகின்றன. ஆனால், இராணுவத்தில் உயர் அதிகாரிகளும் அவர்களுடைய வழிகாட்டுதலில் பணியாற்றும் படைப்பிரிவினரும் முழுக்க முழுக்க மனிதர்களே என்பதால் மனிதவளம் எதிர்பார்க்கும்படி உடனடியாக அமைவதில்லை. அவர்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும். பயிற்சி தருபவர்கள் சிறப்பானவர்களாக இருந்தால்தான் அவர்கள் நல்ல பயிற்சி முறையை உருவாக்கவும் பயிற்சி தரவும் முடியும்.

                                       அந்தரங்க ரகசிய அறிக்கை

1974ம் ஆண்டு ஆரம்பத்தில் கேப்டன் கணேசன் பணியாற்றிய படைப் பிரிவினர் ராஜஸ்தான் பாலைவனப் பகுதியில் இருந்தார்கள். இராணுவத்திற்களுக்கான இரண்டு மாத விடுமுறை முடிந்து அவர் படைப்பிரிவு சென்றடைந்தார். வழக்கமாக ஆண்டின் முடிவில் அதிகாரிகளுக்கும் அதிகாரிகளல்லாதவர்களுக்கும் வருடாந்திர திறனாய்வு அறிக்கை தயாரிக்கப்படும். இது படைப்பிரிவின் தலைவரது பொறுப்பாகும். படைப் பிரிவில் உள்ள சுமார் 20 அதிகாரிகளுக்கும் சுமார் 50 இளநிலை அதிகாரிகளுக்கும் மற்றும் சுமார் 250-300 Non-Commissioned Officer களுக்கும் இந்த அறிக்கை தயாரிக்க வேண்டும்.

அதிகாரிகள் ஒவ்வொருவருக்கும் படைத் தலைவரே அறிக்கை தயாரித்து ஒவ்வொரு அதிகாரிக்கும் அதைத் தெரிவித்து அந்த அதிகாரியின் குறை-நிறை என்ன என்பது தெரிவிக்கப்படும். இவற்றை ஏற்றுக் கொண்டதாக அதிகாரிகள் தங்களைப் பற்றிய அறிகையில் கையெழுத்திட வேண்டும். அதிகாரிகள் தங்கள் தலைமையின் கீழ் பணியாற்றுபவர்களுக்கு அதேபோல் திறனாய்வு அறிக்கை தயாரிக்க படைப்பிரிவின் தலைவர் அதை மேல் பரிசிலனை செய்து கையெழுத்திடுவார். தங்களைப் பற்றிய அறிக்கையை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அதற்கான வழிமுறைகள்படி முறையிடலாம். இது நடைமுறையில் உள்ள பழக்கம். இந்த திறனாய்வு அறிக்கை ஒரு அந்தரங்க ரகசிய அறிக்கை என்பதால் ஒருவரைப் பற்றிய அறிக்கையை மற்றவர் அறிய வாய்ப்பில்லை.

வருட ஆரம்பத்திலேயே காப்டன் கணேசன் விடுமுறையில் சென்று விட்டதால் அவருடைய திறனாய்வு அறிக்கை அவரது ஒப்புதல் கையெழுத்து இல்லாமலே இருந்தது. ஒருநாள் மாலை நேர விளையாட்டின் போது படைப்பிரிவு தலைவரின் செயலாளர் போல் பணியாற்றும் அதிகாரி கணேசனிடம் ஒரு காப்பகத்தின் சாவியைக் கொடுத்து அவரது திறனாய்வு அறிக்கையைப் படித்துக் கையெழுத்திட்டு விட்டு காப்பகத்தைப் பூட்டி வரும்படி கேட்டுக் கொண்டார். காப்பகத்தைத் திறந்த கணேசனுக்கு ஒரு ஆச்சரியமான செய்தியாக படைப்பிரிவின் எல்லா அதிகாரிகளின் திறனாய்வு அறிக்கையும் ஒரு கோப்பில் வரிசையாகஇருப்பதைக் கண்டார். திறந்து வைத்த கோப்பில் தனது அறிக்கையைத் தேடும் பொழுது சக அதிகாரிகளின் திறனாய்வு அறிக்கையைப் படிப்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. கணேசன் தனது அறிக்கையைப் படித்துப் பார்த்து அதில் கையெழுத்திட்டு விட்டு வந்து விட்டார்.

ஆனால், அந்த அறிக்கையைப் படித்த பிறகு கணேசனின் மனநிலையில் சற்றே மாற்றம் ஏற்பட்டது. தனக்கு எழுதப்பட்ட திறனாய்வு அறிக்கை சிறப்பாக இருந்தாலும் தன்னைப்போன்ற பணி அனுபவத்துடனும் ஒரு சிலர் தன்னைவிடக் குறைவான பணி அனுபவத்துடனும் உள்ளவர்களுக்கு படைப்பிரிவு தலைவர் கணேசனை விட மிகச் சிறப்பானத் திறனாய்வு அறிக்கை தயாரித்திருந்தார். தான் எந்தவிதத்தில் அவர்களைவிட திறமையில் குறைந்தவன் என்பது கணேசனுக்கு புரியவில்லை.

இராணுவத்தில் இந்த திறனாய்வு அறிக்கை  இன்று வரை சர்ச்சைக்குள்ளானதே! இந்த அறிக்கை இராணுவ விதிமுறைகளின்படி சில சமயம் பாதிக்கப்பட்டவர்களுக்கு காண்பிக்கப்படும். சில சமயம் காண்பிக்கப்படுவதில்லை. ஏதாவது குறைகள் இருந்தால் அந்தக் குறைகள் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரிவிக்கப்படும். குறைகள் இல்லாமலிருந்தாலும் சிறப்பம்சம் இல்லாத அறிக்கைகள் உயர்வாகக் கருதப்படுவதில்லை. இதனால் ஒரு குறிப்பிட்ட பதவிக்கு அதிகாரிகளைத் தேர்வு செய்யும் போது இந்த அறிக்கைகளின் பேரில்தான் தேர்வு செய்யப்படுவார்கள். அப்பொழுது குறைகளற்ற சிறப்பான அறிக்கை மற்றும் குறைகளற்ற சிறப்பில்லாத அறிக்கை இரண்டையும் ஒப்புநோக்குகையில் குறைகளற்ற சிறப்பான அறிக்கைக்கு உரியவரே தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது வெளிப்படையான உண்மை. இதனால் கணேசன் சற்றே வருத்தமடைந்தார்.

பொதுப் பணித்துறையில் அரசாங்க அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்த கணேசன் நாட்டின் அவசர நிலையில் இராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தில் அதிகாரியானவர். ஆனால் இராணுவத்தில் கூட பாரபட்சம் காட்டப்படுகிறது என்பதை வருத்தத்துடன் புரிந்து கொண்டார். அதன்பிறகு படைப் பிரிவுத் தலைவருடன் கலகலப்பாக அவரால் உரையாட முடியவில்லை. ஆனாலும் இராணுவப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. மற்ற அதிகாரிகளை விட ஏன் தன்னைக் குறைவாக மதிப்பிட்டீர்கள் என்று அவரால் கேட்க முடியாது. தனது ஆய்வறிக்கையில் குறை ஏதுமில்லாததால் அவர் முறையீடு எதுவும் செய்ய முடியாது. இப்படியான ஒரு சூழ்நிலையில் இருந்தார் கணேசன். படைப்பிரிவினர் ராஜஸ்தான் பணி முடிந்த சில நாட்களுக்குள் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் ‘லே” என்ற இடத்திற்கு மாறினார்கள். “லே”யில் படைப்பிரிவின் தலைமை ஒரு இடமும் மற்ற சிறிய படைப் பிரிவுகள் தனித்தனி இடங்களிலும் நாட்டின் பாதுகாப்பிற்கு ஏற்ப பிரிந்து சென்றனர். 

கணேசன் மேஜர் என்ற அடுத்த பதவி உயர்வு பெற்று “கார்கில்” மலைப் பகுதியில் உள்ள பொறியாளர் படைப்பிரிவின் சிறிய பிரிவுக்குத் தலைவராகப் போக உத்தரவு இடப்பட்டார். காஷ்மீர் பகுதி நவம்பர் மாதம் முதல் சுமார் மார்ச் மாதம் வரை கடும் குளிரால் தாகப்படுவது எல்லாரும் அறிந்ததே. இந்த நிலையில் கணேசன் பணியாற்றும் படைப் பிரிவினர் நவம்பர் மாதம் தான் காஷ்மீர் பகுதிக்குச் சென்றார்கள். படைப் பிரிவினர் குளிருக்கு தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்வதற்கு முன்பாகவே குளிர் அவர்களைத் தாக்க ஆரம்பித்து விட்டது. இதனால் படைப் பிரிவினரிடையே உடல் நிலை பாதிக்கப்படுவது அதிகமானது. காஷ்மீர் பகுதியில் உயர் மலைப் பகுதியாகிய “லே’யில் பிராணவாயு குறைவு என்பதால் நல்ல உடல் நிலையில் இருப்பவர்களின் செயலாக்கத் திறமைகூட சுமார் 30 சதவீதம் குறைந்துவிடும். இதனால் சில அதிகாரிகள் கூட உடல் நிலை குன்றி அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டார்கள்.

“லே” பகுதியிலிருந்து மேலும் எல்லைப்புறம் நோக்சி செல்லும் சாலை “ச்சாங்லா” என்ற கணவாய்  வழியாகப் போகிறது. அந்த இடம் 17,350 அடி உயரத்திலிருப்பதால் குளிர்காலத்தில் பனிப்பொழிவு காரணமாக சாலை மூடப்பட்டு விடும் அபாயம் உள்ளது. பொறியாளர் படைப்பிரிவின் ஒரு சிறு பிரிவினர் ஒரு அதிகாரியின் தலைமையில் நாலைந்து பனி அகற்றும் இயந்திரங்களுடன் அந்த மலையடி வாரத்திலேயே பனிக்காலம் முழுவதும் தங்கி இருந்து சாலையைப் பராமரிப்பார்கள். இதற்கிடையில் கணேசன் அந்த படைப்பிரிவிற்கு வந்து சுமார் இரண்டாண்டுகளாகி விட்டதால், இராணுவத் தலைமையகத்திலிருந்து அவருக்குப் பெங்களூருக்கு பணிமாற்றம் வந்துவிட்டது. பொதுவாகப் படைப் பிரிவின் தலைமை அதிகாரி இதுபோன்ற அதிகாரிகளின் பணிமாற்றங்களுக்கு ஒப்புதல் அளிப்பதுண்டு. அது போன்று கணேசனது பணிமாற்றத்திற்கும் அவர் கணேசனைக் கலந்தாலோசிக்காமலேயே ஒப்புதல் தந்துவிட்டார். பணிமாற்ற உத்தரவு வந்தபிறகு கணேசனை இன்னும் ஒரு சில தினங்களில் விடுவித்து விடுவதாக சொல்லி இருந்தார். படைப்பிரிவினர் இது போன்ற உயர்மலைப் பகுதிகளில் கஷ்டமான சூழ்நிலையிலிருக்கையில் அவர்களை விட்டுப் பிரிந்து போவதற்கு கணேசனுக்கு விருப்பமே இல்லை. ஆனால், தன்னைப் பற்றி குறைவாக மதிப்பிட்ட தலைவரிடம் பணியாற்ற விருப்பமில்லாததால் விரைவில் அவரை விட்டு விலகுவதே நல்லது என்று கணேசன் நினைத்தார்.

                                     உறைபனியோடு  ஒரு சாகசப்போராட்டம் 

இந்த இடைக்காலத்தில் பனிப்பொழிவு மிக அதிக அளவு இருந்ததால் ச்சாங்லா கணவாய்   மூடிப் போய்விட்டது. பாதை சரியாக தெரியாததால் சாலைப் பராமரிப்புக்கு சென்ற ஒரு பனி அகற்றும் வண்டி மலை உச்சியிலிருந்து சரிந்து பள்ளத்தில் போய்விட்டது. அங்கு பொறுப்பேற்றிருந்த அதிகாரியும் மருத்துவமனைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் கார்கில் பகுதியில் பணியாற்றிக் கொண்திருந்த மேஜர் கணேசனை உடனடியாக   ச்சாங்லா கணவாய்ச்சாலை பராமரிப்புக்கு மாற்றி படைப்பிரிவு தலைவர் உத்தரவிட்டார். கணேசன் 17,350 அடி உயர ச்சாங்லா கணவா#க்கு தனது முகாமை மாற்றிக் கொண்டு பனி அகற்றும் வேலையில் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபட்டார்.

இளமை முதலே விளையாட்டுகளிலும் வீரதீர சாகசங்களில்   விருப்பமுள்ள கணேசனுக்கு உறைபனியில் சாலை பராமரிப்பு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கணேசன் அங்கு போய் சேர்ந்த நாள் முதல் சாலைப் போக்குவரத்து தடையின்றி இருந்தது. (சுமார் - 30டிகிரி ) குளிரில் கணேசன் சிறப்பான பனி உடைகளுடன் கொஞ்சம் கூடக்  கவலை இன்றி பணியாற்றிக் கொண்டிருந்தார். மலைச்சரிவில் உருண்டிருந்த பனி அகற்றும் வண்டி மீட்கப்பட்டது.

பனிப்பொழிவின் தாக்கத்தில் சாலை மூடப்படுவதும் மறுநாள் கணேசனின் படைப்பிரிவினர் பனி அகற்றும் வண்டி  உதவியுடன் சாலையை சீரமைப்பதும் மனிதனுக்கும் இயற்கைக்கும் நடக்கும் கண்ணாமூச்சி விளையாட்டு போல் நடந்து கொண்டிருந்தது. ஒருமுறை மிகவும் கடுமையானப் பனிப்பொழிவினால் மலை உச்சியிலிருந்து கீழ்ப்பகுதி வரை பனிமூடி சாலை அடையாளம் காணமுடியாத அளவு பனிமூடிவிட்டது.

ஆனாலும், பனி அகற்ற வேண்டிய கட்டாயமிருந்ததால் சுமார் 13 கி.மீ. நீளமுள்ள அந்த சாலையில் கணேசன் நடந்தே முன் செல்வார். அவர் பின்னால் பனி அகற்றும் வண்டி மூலம் பனி அகற்றும் வேலை நடந்து கொண்டிருந்தது. சூரியன் அஸ்தமனமாகும் வேளையில் கணேசன் கிட்டத்தட்ட மலை உச்சியில் பனி அகற்றிக் கொண்டிருந்தார். அந்நிலையில் பனியில் சிக்கி பனி அகற்றும் வண்டி நின்று போய் விட்டது. முகாமுக்குத் திரும்பி விடலாம் என்று பயணிகள் வண்டியை சாலையில் திருப்ப முயற்சித்தபொழுது அதுவும் பனியில் சிக்கி நின்று போய்விட்டது. உயிர் பிழைக்க வேண்டுமென்றால் முகாமுக்கு நடந்தே திரும்புவதைவிட வேறு வழியில்லை.

நாள் முழுவதும் பனியில் நடந்து கொண்டிருந்ததால் எல்லோரும் மிகவும் களைத்துப் போயிருந்தனர்.அந்த நீண்ட பாதையில் ஓரிரு இடங்களில் விபத்துகள் காரணமாகவோ அல்லது பனிப்பொழிவில் சிக்கியோ உயிரிழந்த ஓரிரு இராணுவத்தினர்கு நினைவுக் கல் வைத்திருந்தார்கள். இருட்டில் மிகவும் களைத்துப்போன மேஜர் கணேசன் ஒரு சமயம் தனக்கும் ஒரு நினைவுக்கல் அங்கு வைக்க நேர்ந்திடுமோ என்று எண்ணினார்.

எந்தவிதமான உணர்வுகளும் இன்றி நடைப்பிணம் போல் அவர்கள் நடந்து கொண்டிருந்தார்கள். கைரேடியோவில் முகாமுக்கு செய்தி தெரிவிக்கப்பட்டு உடனடி மருத்துவ முதலுதவிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு வழியாக அதிகாலை 2 மணி போல் அவர்கள் முகாம் வந்தடைந்தார்கள். சூடாக பானம் அருந்தி ஏதோ சாப்பிட்டு விட்டு உறங்கிப் போனார்கள். மறுநாள் கணேசனின் உதவியாளருக்கு 104 கடுமையான ஜுரம் வந்துவிட்டது. அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பதற்கும் தானும் சற்று ஓய்வெடுத்துக் கொள்ளவும் கணேசன் “லே” திரும்பிவிட்டார். உதவியாளர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுபோன்று குளிரில் அதிக நேரம் இருந்தால் கால், கை விரல் நுனிகள், மூக்கின் முனை, காது மடல் போன்ற மென்மையானப் பகுதிகள் குளிரினால் தாகப்பட்டு உணர்விழந்து ‘ஊணூணிண்t ஆடிtஞு” என்ற பனிக்கடி விபத்து காரணமாக இற்று விழுந்து விட வாய்ப்புண்டு. நல்ல வேளையாக அந்த நிலை வருமுன் அவர்கள் இறைவன் கருணையினால் திரும்ப நேர்ந்து பிழைத்து விட்டார்கள்.

                               உயர் அதிகாரியோடு  ஒரு மோதல்

தனக்குப் பணிமாற்றம் வந்த பிறகும் விடுவிக்காமல் அதிகாரி இப்படி இடமாற்றம் செய்து தனது உயிரைக் குடிக்க நினைப்பது கணேசனுக்கு மிகவும் வருத்தத்தைக் கொடுத்தது. அதுவும் திறனாய்வு அறிக்கையில் சுமாரான மதிப்பே கொடுக்கப்பட்டிருந்த கணேசனுக்கு இனியும் அந்த தலைவரிடம் பணியாற்ற விருப்பமில்லை. இந்நிலையில் மீண்டும் வேறு வேலையைப் பராமரிக்க கணேசன் உத்தரவிடப்பட்டார். அதற்கு கணேசன் திட்டவட்டமாக மறுத்து விட்டார். தரைப்பிரிவினரிடையே அன்றிருந்த மனநிலையில் கணேசன் முரட்டுத்தனமாக நடந்து கொண்டது எல்லோருக்கும் வியப்பாக இருந்தது.

கணேசன் உடனடியாகப் படைப் பிரிவின் தலைமை அதிகாரி முன் நிறுத்தப்பட்டு பணி மறுப்புக்குக் காரணம் கேட்கப்பட்டது. கணேசன், தான் சுமார் மூன்று மாதத்திற்கு முன்பே பணிமாற்றம் பெற்றிருப்பதாகவும் தன்னை விடுவிக்காமல் ஒன்று மாற்றி ஒன்றாக தனக்கு உத்தரவுகள் கொடுப்பது தனது மனநிலையை மிகவும் பாதிக்கிறது என்றும் தன்னைத்  தயவு செய்து விடுவிக்கும்படியும் கேட்டுக் கொண்டார். படைப்பிரிவின் தலைவர், அன்றைய காலகட்டத்தில் படைப்பிரிவு குளிரின் தாக்கத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கணேசனைப் போன்று உடல் உறுதியுள்ளவர்கள் உடனிருக்க வேண்டும் என்று தாம் விரும்புவதாகவும் சொன்னார்.

 மனஆழத்தில் தான் குறைவாக மதிப்பிடப்பட்டு விட்டோம் என்று வருத்தப்பட்ட கணேசன் அதை வெளிக்காட்டாமல், தனது பணி மாற்றத்தில் பிடிவாதமாக இருந்தார். படைத்தலைவர் உடனே கோபத்துடன் அன்றிரவே கணேசனுக்குப் பிரிவு உபசாரவிருந்து என்றும் மறுநாள் கணேசன் படைப் பிரிவைப் பிரிந்து போய்விடலாம் என்றும் உத்தரவிட்டார்.

அன்று இரவு பிரிவு உபசார விருந்து நடந்தது. மறுநாள் காலை மோசமான வானிலை காரணமாக அவரை ஏற்றிச் செல்லவேண்டிய விமானம்  வரவில்லை. சுமார் 4-5 மாத குளிர்கால நிலையில் இராணுவ படைப்பிரிவினர் “லே” பகுதிக்கு விமானப் படையின் விமானம் மூலம் தான் போக முடியும். உணவும் மற்ற பொருள்களும் கூடியவரை கோடைகாலத்தில் ஸ்டாக்  செய்து விடுவார்கள். காய்கறிகள் போன்றவை விமானத்தில் தான் வரும். ஆகையினால், அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு விமானம் இல்லை

. இந்நிலையில் அடுத்த ஆண்டுக்கான திறனாய்வு அறிக்கைக்கான நேரம் வந்து விட்டதால் படைப்பிரிவு தலைவர் உடனடியாகக் கணேசனுக்கான திறனாய்வு அறிக்கையைத் தயார் செய்து அதைப் பார்த்து ஒப்புதல் கையெழுத்திடுமாறு உத்தரவிட்டார். கணேசன் அந்த அறிக்கையைப் படிக்காமலேயே தான் கையெழுத்திட வேண்டிய பகுதியைத் திருப்பி உடனடியாகக் கையெழுத்திட்டார். இதைப் பார்த்த படைப் பிரிவு தலைவர், நேற்று முன்தினம் நடந்த வாக்குவாதங்களைப் பற்றி கவலைப்படாமல் தான் கணேசனுக்கு நல்ல மதிப்புள்ள திறனாய்வு அறிக்கை எழுதி இருப்பதாகவும் அதைப் படிக்கும் படியும் கேட்டுக் கொண்டார்.

 அதை மறுத்த கணேசன், “எனது திறமையைப் பற்றிய உங்களது எண்ணத்தைப் பிரதிபலிப்பது இந்த அறிக்கை. ஆனால், என்னைப் பற்றியும் எனது திறமை பற்றியும் உங்களை விட எனக்கு நன்றாகத் தெரியும் என்றும் உங்களது அனுமானம் எப்படி இருந்தாலும் என்னுடைய திறமையில் எனக்கு நம்பிக்கை உண்டு” என்றும் கணேசன் எதிர்வாதமிட்டார். [வளரும்]