Thursday 13 November 2014

இ.தே.ஏ.6 லெப்டினெண்ட் கர்னல்

                                          



                                                







அஞ்சாநெஞ்சத்துடன் ஒரு மதிப்பீடு 
[இ.தே.ஏ.6]
தலைவர் வேறு ஒன்றும் சொல்லாமல் “நல்வாழ்த்துக்கள்” என்று கை குலுக்கக் கைநீட்டினார். அவருடன் கைகுலுக்கிய கணேசன் சற்றே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “சார் இராணுவ படைப் பிரிவில் தலைவர் தான் தனக்குக் கீழ் உள்ள அதிகாரிகளுக்கு திறனாய்வு றிக்கையை எழுதுகிறார். ஆனால், கீழ் நிலையில் உள்ள அதிகாரிகள் தங்களது தலைவனைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. உங்களுக்கு ஆட்சேபம் இல்லை என்றால் உங்களைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பதைச் சொல்லலாமா?”என்று பணிவோடு விண்ணப்பித்தார். 

படைத் தலைவருக்கு சற்றே வியப்பு!

 "உயர்மலைப் பகுதியில் பணியாற்றியதால் உனக்கு மூளை ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு விட்டதா?" என்று சற்றே அதட்டலுடன் கேட்டார். கணேசன் சற்றும் சளைக்காமல், அப்படி ஒன்றுமில்லை. 

"தாங்கள் விருப்பப்பட்டால் சொல்லுகிறேன்" என்றார். தலைவர் சற்றே புன்னகையுடன் "ஓகே சொல் ! என்ன சொல்லப் போகிறாய்? என்றார்.

கணேசன் மிகவும் நிதானமாகப் பேசலானார். “சார்! எனது மதிப்பீட்டில் நீங்கள் ஒரு படைப்பிரிவின் தலைவராக இருப்பதற்குத் தகுதியற்றவர். இது குற்றச்சாட்டு இல்லை! எனது மதிப்பீடு! அவ்வளவுதான்! எப்படி என்றால் உங்களது படைப்பிரிவில் உள்ள சுமார் 15 அதிகாரிகள் என்னைப் போன்றவர்களே! இதில் சென்ற ஆண்டு உங்களது திறனாய்வு அறிக்கையின் படி என்னை சுமார் 5 அதிகாரிகளுக்கும் கீழாக ஆறாவதாக மதிப்பீட்டிருக்கிறீர்கள். என்னிடம் என்ன குறை என்று இன்று வரை நீங்கள் குறிப்பிட்டுச் சொன்னதில்லை. இன்றளவும் என்னைவிட உடலளவிலும் மனதளவிலும் உறுதியானவர்கள் படைப் பிரிவில் யாருமே இல்லை. இளம் அதிகாரிகளுக்குத் தெய்வம் போன்றவர் படைப்பிரிவின் தலைவர். அப்படி இருக்க என்னை ஏன் குறைவாக மதிப்பீட்டீர்கள்? என்னிடம் உள்ள குறை என்ன?” என்று கேட்டு நிறுத்தினார். படைப்பிரிவின் தலைவர் சற்றுநேரம் யோசித்தார். ரகசியமான மற்ற அதிகாரிகளின் திறனாய்வு அறிக்கையை சென்ற ஆண்டு கணேசன் பார்த்திருக்கக் கூடும் என்பதால் எங்கோ தவறு நேர்ந்திருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டார். 

அவர் பின்னர் பதிலளித்தார்.“ கணேசன்! நீ ஒரு நல்ல அதிகாரி என்பதில் சந்தேகமில்லை! படைப்பிரிவின் தலைவனும் ஒரு தனி மனிதனே! அவனுக்கென்று சில விருப்பு வெறுப்புகள் உண்டு. அந்நிலையில் அவருக்குக் கீழே பணிபுரியும் அதிகாரிகளில் ஒருவரை மற்றவரைவிட உயர்வாக மதிப்பிடுவது தலைவரின் உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது. உனது மதிப்பு பாதிக்கப்படாத வரை நீ ஏன் மற்றதைப் பற்றி கவலைப்பட வேண்டும்?”

 அதற்குக் கணேசன் மீண்டும் கேட்டார். “எனது மதிப்பீடு மற்ற சில அதிகாரிகளின் மதிப்பீட்டை விட தாழ்ந்தது ஏன் என்பது தான் எனது கவலை. தான் சரியாக மதிப்பிடப்பட்ட பிறகு, தனக்கு நிகரில்லாதவர்களும் தனக்கு சமமாக மதிப்பிடப்பட்டால் கவலை இல்லை. ஆனால் தான் குறைவாக மதிப்பிடப்பட்டு, தன்னைவிட திறமை இல்லாதவர்கள் உங்களது கணிப்பில் உயர்வாக மதிப்பிடப்படுவது எனக்குச் செய்யும் துரோகம் அல்லவா? உங்களது உத்தரவுகளை எப்படி நான் மனநிறைவுடன் ஏற்று பணியாற்ற முடியும்?அதனால்தான் உங்களிடம் பணியாற்றுவதில் எனக்கு விருப்பமில்லை” என்றார். 

வாக்குவாதத்தை அதிகம் வளர்த்த விரும்பாத தலைவர். “கணேசன்! நான் இப்பொழுது தான் உன்னைப் புரிந்து கொண்டேன்! இந்த உரையாடல் சென்ற வருடமே ஏற்பட்டிருந்தால் மிகவும் உபயோகமாக இருந்திருக்கும். பரவாயில்லை. Better late than never. நீ அதிக உணர்ச்சி வசப்படாமல் இருந்தால் உனக்கு நல்ல எதிர் காலம் இருக்கிறது.மீண்டும் என் நல்வாழ்த்துக்கள்.” Once again best wishes  என்று மீண்டும் கை குலுக்கினார். தனது மனக்குமுறலைக் கொட்டி விட்டோம் என்ற நிம்மதியுடன் கணேசன் “லே”வுக்குப்  பிரிந்து சென்றார்.

சுமார் 10 ஆண்டுகள் கணேசன் மற்ற படைப் பிரிவுகளில் பணியாற்றினார். எங்கு சென்றாலும் தனது சுகதுக்கங்களைப் பின்னுக்குத் தள்ளி நாட்டின் பாதுகாப்பு, படைப்பிரிவினரின் பயிற்சி, அவர்களது உடல் மனநலம் போன்றவற்றை முன்னிறுத்தியே பணியாற்றி யிருக்கிறார்.

பாரதத் திருநாடு சுமார் 200 ஆண்டுகள் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்தது. “எனது நாட்டில் பிச்சை எடுக்க வந்தவர்களிடம் நான் எப்படி அடிமைப்பட்டுக் கிடப்பேன்?” என்று எத்தனையோ பெரியோர்கள், செல்வந்தர்கள் கல்வியாளர்கள் கிளர்ந்தெழுந்திருக்கிறார்கள். செல்வத்தில் புரண்டவர்கள் எல்லாவற்றையும் இழந்து சிறையில் செக்கிழுத் திருக்கிறார்கள். அவர்களது மரணம் இந்த நாட்டின் சுயமரியாதையின் மரணம். அதைக் கண்டு வெகுண்டெழுந்த வீரகவி பாரதி பாடினான்.

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக்
கண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ
எண்ணமெல்லாம் நெய்யாக எம்முயிரினுள் வளர்ந்த
வண்ண விளக்கிஃது மடியத் திருவுளமோ?டு
ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்தபின்னர்
வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ?
தர்மமே வெல்லுமெனுஞ் சான்றோர் சொற் பொய்யாமோ?
கர்ம விளைவுகள் யாங் கண்டதெல்லாம் போதாதோ?

இப்படி நெஞ்சம் குமுறி பாரதி  விட்ட கண்ணீருக்கு இன்றைய நிலையிலும் பதில் இல்லை. இதற்காக நாம் பெருமைப்படலாமா? நல்லவர்களும் வல்லவர்களும் தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.
“லே” இராணுவப் பிரிவில் நடந்த வாக்கு வாதத்திற்குப் பிறகு அந்த படைப்பிரிவின் தலைவர் கணேசன் படைப்பிரிவில் சேர்ந்தது முதல் அவருக்குக் கிடைத்திருக்க வேண்டிய உரிமைகளுக்கெல்லாம் பின் தேதியிட்டு அறிக்கை வெளியிட்டு தனது செயல்பாட்டின் குறைகளை நிவர்த்தி செய்து கொண்டார். ஆனால், கணேசன் அதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. தனது பணிக்காலம் முழுவதும் உண்மையும் நேர்மையும் திறமையுமுள்ள ஓர் அதிகாரி என்று முத்திரை பதிப்பதில் மும்முரமாக இருந்தார். இப்படிப்பட்ட இராணுவ அதிகாரிகள் பழிவாங்கப்படுகிறார்களா என்றால் கணேசனைப் பொறுத்தவரை நிச்சயமாக இல்லை. ஒரு மனிதனின் செயல்பாட்டை எந்த ஒரு புறக்காரணங்களாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதுதான் அவரது வாக்குவாதமாக இருக்கும். ஏனெனில் எந்த நிலையிலும் மனிதன் வளர்கிறான் என்பதையும் நேற்றுவரை நடந்த நிகழ்ச்சிகள் நாளை நாம் எடுக்கப்போகும் புதிய பிறவிக்கான அனுபவங்களே என்பதையும் ஆணித்தரமாக நம்பும் அவர், தான் உண்மை என்று எண்ணுவதை அது உண்மை இல்லை என்று யாரும் தகுந்த விளக்கத்துடன் நிரூபிக்காதவரை தனது செயல்பாடுகளில் மாற்றம் காணப் போவதில்லை.
                                         லெப்டினெண்ட் கர்னல்  

“லே”யிலிருந்து பணிமாற்றம் பெற்று வந்த அவர் பெங்களூரில் மூன்று ஆண்டுகளும், இராணுவப் பொறி இயற் கல்லூரி உள்ள பூனேயில் சுமார் 21/2 ஆண்டுகளும் பணியாற்றிய பிறகு அதே பழைய படைப்பிரிவுடன் பணியாற்ற வந்தார். மீண்டும் சுமார் 21/2 ஆண்டுகள் பணியாற்றி விட்டு மற்றொரு இடம் சென்றார். இந்நிலையில் அவரது அடுத்த பதவிஉயர்வான லெப்டினெண்ட் கர்னல்  என்ற பதவிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார். உடலாலும் மனதாலும் இராணுவ படைப்பிரிவை உயிராக நேசித்த அவரை அன்றைய சூழ்நிலையில் படைப்பிரிவைத் தலைமை ஏற்கும் சில தகுதிகளின் அடிப்படையில் அவர் “தகுதியானவர் இல்லை” என்று நிராகரித்து அவரை டெல்லியில் உள்ள பொறியாளர் கட்டிடப் பிரிவுக்கு அதிகாரியாக இடமாற்றம் செய்தார்கள். ஒப்பந்தக்காரர்களுடன் நேர்மையற்ற முறையில் வாதிட்டுப் பணியாற்ற விருப்பமின்றி இராணுவத்தில் சேர்ந்த அவரை சுமார் 20 வருடப் பணி அனுபவத்துடன் அதே மாதிரியான இடத்தில் அமர்த்தியது அன்றைய சூழ்நிலை. மனதளவில் கணேசன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. 
ஏனிப்படி நடந்தது என்று தனக்குள்ளேயே கேள்வி கேட்டுக் கொண்டிருந்த அவரை விதி கைவிடவில்லை. படைப்பிரிவில், தலைவர்களின் செயல்பாட்டையும் படைப் பிரிவினரிடையே சில தகுதியற்ற தலைவர்களின் செயல்களால் உருவாகும் மனக்கசப்பையும் மிகவும் கவனமாகப் பரிசீலித்த இராணுவத் தலைமையகம் படைப் பிரிவுகளில் சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகளே அங்கு தலைமை ஏற்க முதல் தகுதி பெற்றவர்கள் என்ற புதிய கொள்கையைப் பிறப்பித்தது. 

அதன் காரணமாகப் படைப் பிரிவுத் தலைமை மறுக்கப்பட்ட கணேசன் இரண்டே மாதங்களில் திரும்பவும் பணிமாற்றம் பெற்று அருணாசல பிரதேசத்தில் உள்ள ஒரு படைப் பிரிவிற்கு தலைவராக நியமிக்கப்பட்டார்.
ஆச்சரியமான முறையில் “லே”யில் எந்த படைப் பிரிவுத் தலைவரால் தீங்கிழைக்கப்பட்டாரோ அதே படைப்பிரிவுதான். அந்த தலைவர் அமர்ந்திருந்த அதே நாற்காலியில் சரியாகப் பத்து வருட இடைவெளியில் (November 1974 - Nணிதி 1984) நவம்பர் 1984ல் வந்து அமர்ந்தார் கர்னல் கணேசன்.[வளரும்]

No comments:

Post a Comment