Tuesday 30 April 2013

குழந்தை இலக்கியம்.-1(சுகுமாரன்)


 குழந்தை இலக்கியம்.-1

ஆணிவேரை ஒத்தது குழந்தை இலக்கியம். சிறுவயதிலேயே படிக்கும் பழக்கம் இருந்தால்தான் பெரியவர்களான பிறகும் படிப்பார்கள். ஆக, பெரியோர் இலக்கியத்திற்குக் கூட அடித்தளம் குழந்தை இலக்கியம்தான். அமெரிக்காவில் ஒரு ‘சர்வே’ எடுத்திருக்கிறார்கள். முப்பது வயதில் புத்தகம் படிப்பவர்கள் யாரென்று பார்க்கும் போது குழந்தையாக இருக்கும்போது படித்தவர் களாக அவர்கள் இருந்தனர் என்பது கண்டுபிடிக்கப் பட்டது.

ரஷியா, அமெரிக்கா, பிரான்சு, பிரிட்டன், எல்லாம் வளர்ந்த நாடுகள் என்றால், அந்த வளர்ச்சிக்கு, குழந்தை இலக்கியம் அங்குப் பேணப்படுவதும் ஒரு காரணம் தான். ரஷியா, அமெரிக்கா நாடுகளில் சிறுவர் நூலகங்கள் இலட்சக்கணக்கில் இருக்கின்றன. பெரியோர் நூலகங்களில் சில்ரன்ஸ் கார்னர் இருக் கின்றன. குழந்தைகளுக்குக் கதை சொல்லும் நேரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் பாருங்கள், குழந்தைகளுக்குத் தனி நூலகம் இருக்கின்றதா? சென்னை தேவநேயப் பாவாணர் நூலகத்தில் சில்ரன்ஸ் கார்னர் இருக்கிறது- அதுவும் சரியாகப் பேணப்படவில்லை. அண்ணா நூற்றாண்டு நூலகத்தைக் கணக்கில் சேர்க்கவா, தெரியவில்லை. ஒரு நூலகத்தின் கதவுகள் திறக்கப்பட்டால் ஒரு சிறைச்சாலையின் கதவுகள் மூடப்படும் என்று சொல்கிறார்கள். நம் மனதையே ‘மேஜிக்’ செய்யக்கூடிய நூலகத்தை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதை எண்ணிப் பாருங்கள். குழந்தைகளை நூலகத்திற்கு வரவழைக்க என்ன செய்திருக்கிறோம்?

குழந்தைகள் அதிகம் கேட்க விரும்புகிறார்கள்; அதிகம் பேச விரும்புகிறார்கள் . அதற்கான வாய்ப்புகளைக் குழந்தை இலக்கியமே தரமுடியும். குழந்தை இலக்கியம் சிறப்பாக உள்ள சமுதாயமே மிகச்சிறந்த சமுதாய மாக வாழ முடியும்.

டாக்டர் பூவண்ணன் எழுதிய ‘குழந்தை இலக்கிய வரலாறு’ நூலைப் படித்துப் பார்க்கும் போது தமிழில் குழந்தை இலக்கியம் பீடு நடைபோட்டதை அறிய முடிகிறது. அதெல்லாம் 50 வருடங்களுக்கும் முன்பு.

சுமார் 50 சிறுவர் இதழ்கள் தமிழில் வந்த காலம் அது. பெயர்களைப் பாருங்கள். பாலியர் நேசன், பாலவிநோதினி, பாலர் முரசு, பாப்பா மலர், அணில், சங்கு, டமாரம், டிங்-டாங், கரும்பு, பார்வதி, அம்பி, முத்து, கண்ணன், சின்னக்கண்ணன், முயல், மயில், கிளி, பூஞ்சோலை, சிறுவர் உலகம், ரேடியோ, குஞ்சு, ஜில் ஜில், வானர சேனை, மத்தாப்பு, ரத்ன பாலா, பூந்தளிர், தமிழ்ச்சிட்டு, ஜிங்லி, அம்புலி மாமா, கோகுலம், துளிர்... இன்னும் உண்டு. இவற்றில் கடைசி மூன்றும் இன்னும் வெளிவருகின்றன.

பாலியர் நேசன், அணில், டமாரம், கண்ணன், கரும்பு, அம்புலிமாமா, கோகுலம் போன்ற பத்திரி கைகள் 25 ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்பனை ஆகியிருக்கின்றன. சிறுவர்கள் காசு கொடுத்து வாங்கிப் படித்திருக்கிறார்கள். இன்றைய நிலையில் இது நம்பும்படியான செய்தியாக இருக்கிறதா? இன்று சிறுவர் பத்திரிகைகளை பிரபல தினசரிகள் இலவசமாகத் தரும் நிலையே இருக்கிறது. இலவச மாகத் தருவது எப்படி இருக்கும்? குழந்தைகளைக் கவரும் விதத்தில் வண்ணத்திலா அச்சடித்துத் தர முடியும்!

சிறுவர் பத்திரிகைகள் நிறைய வந்தபோது குழந்தைகளுக்கான கதைகள், கட்டுரைகள், பாட்டுகள், நாடகங்கள், நாவல்கள் நிறைய எழுதப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கொள்வார் இருந்ததால் கொடுப்பாரும் இருந்திருப்பார்கள். பெரியவர் களுக்கு எழுதிய ராஜாஜி, கி.வ.ஜா, கி.ரா., அகிலன், பெரியசாமி, தூரன், ஆர்.வி., தி.ஜ.ர., ரா.கி.ர., ஜெய காந்தன், கல்கி, துமிலன், போன்றோர்களும் சிறுவர் களுக்கு எழுதுவதில் பெருமைப்பட்டார்கள். 

குழந்தை இலக்கியம் படைக்க ஒரு பட்டாளமே இருந்த காரணத்தால் அவர்களை அணி திரட்டிச் செயல்பட குழந்தை எழுத்தாளர் சங்கம் 1950-இல் தோன்றியது. அதன் தலைவராக குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா தன்னலமின்றிச் செயல்பட்டார். 1975இல் வெள்ளி விழா ஆண்டில் குழந்தை எழுத்தாளர் யார்? எவர்? என்ற நூல் வெளியிடப்பட்டது. அது குழந்தை எழுத்தாளர்களை அடையாளம் காட்டியது; பெருமைப்படுத்தியது. கடந்த 35 ஆண்டுகளாக யார் இருக்கிறார்கள், யார் எழுதுகிறார்கள் என்று ஒன்றும் தெரியவில்லை. 2000-இல் பொன்விழா ஆண்டில் குழந்தை எழுத்தாளர் சங்கம் ஊத்தி மூடப் பட்டது. இங்கே எதை யார் சரியாகச் செய்திருக் கிறார்கள் - அது மட்டும் சரியாகச் செயல்பட?

சரி, விஷயத்திற்கு வருவோம். குழந்தை இலக் கியத்தைப் புறக்கணித்தால் பிற இலக்கியங்களும் வளராது என்பதைப் புரிந்துகொள்ள சாதாரண அறிவு இருந்தால் போதும். அதுகூட நமக்கு இல்லை. பெற்றோர்கள் குழந்தைகளுக்குப் புத்தகங்களை வாங்கிக் கொடுக்க வேண்டும்; சிறுவர் பத்திரிகை களை வாங்கிக் கொடுக்க வேண்டும்.

 பெற்றோர்கள் - ஆசிரியர்கள் முழு ஆதரவு இல்லாமல் ஒன்றும் நடக்காது என்பதுதான் உண்மை. குழந்தைகள் புத்தகம் படிப்பது (பாடப்புத்தகம் அல்ல) சம்பந்த மாக பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வேறு பட்ட கருத்துகள் இருப்பது தெரிகிறது. பெரியோ களே படிப்பது இல்லை. சினிமா, டி.வி, இன்டர் நெட், வந்துவிட்டது. அதெல்லாம் இல்லாத காலத்தில் படித்தார்கள்.

இந்தப் பதிலில் உண்மையில்லை. இவையெல்லாம் அதிகமிருக்கின்ற மேலைநாடுகளில் குழந்தைகள் படிக்கிறார்கள்; நவீன ஊடகங்களையும் பயன் படுத்துகிறார்கள். புத்தகத்தின் இடத்தை வேறு எந்த ஊடகமும் பிடித்து விட முடியாது என்பதை ஹாரிபாட்டர் விற்பனை நிரூபித்திருக்கிறது.

சரி, திரைப்படம், நாடகம் போன்ற காட்சி ஊடகங்களின் வலிமையை நான் குறைத்து மதிப் பிடவில்லை. 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஆக்க பூர்வமான முயற்சிகள் இன்று தமிழில் இல்லாமல் போய்விட்டதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

குழந்தைகளுக்கென்று நாடகமும் சினிமாக்களும் இருந்தன. சென்னையில் நேருவின் பெயரால் பாலர் அரங்கம் இருந்தது- அங்குக் குழந்தைகள் திரைப்படங்கள் வாரம் ஒருமுறை திரையிடப் பட்டன. பிறகு அது கலைவாணர் அரங்கமானது. கலைவாணர் அரங்கமும் போய் அந்த இடத்தில் தலைமைச் செயலகம் கட்டப்பட்டுவிட்டது. அதுவும் போகுமா இருக்குமா, தெரியவில்லை.

பிரபல இயக்குநர்கள் சாந்தாராம், சத்யஜித்ரே போன்றவர்கள் குழந்தைகள் திரைப்படம் எடுக்க ஊக்கமளித்தனர். தமிழ்நாட்டில் திரையரங்குகளில் கூடக் குழந்தைகள் திரைப்படங்கள் திரையிடப் பட்டன. அண்ணி, குழந்தைகள் கண்ட குடியரசு, அன்பின் அலைகள், ஏகலைவன், கலங்கரை விளக்கம், மீனாவின் கடிதம், சத்யமே வெல்லும், மோதி என் தோழன், பொன்மானும் தங்க மீனும் போன்ற குழந்தைகள் திரைப்படங்கள் மறக்கமுடியாதவை. இன்று பெரிய திரையானாலும் சின்னத் திரை யானாலும் குழந்தைகளுக்கென்று பிரத்தியேக படைப்புகளைத் தர யாருமில்லை. முன்பு அவசிய மாக இருந்து இப்போது அவசியமில்லாமல் போய் விட்டதோ?

குழந்தைகளுக்கு நாடகங்கள் அளப்பரிய பயனைத் தருவன. மகாத்மாகாந்தி கூட அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்து உண்மை பேசுதல் மீது பற்றுக் கொண்டார் என்றெல்லாம் கரிசனமாகப் பேசுவோம். 50 ஆண்டுகளுக்கு முன்பு டி.கே.எஸ். சகோதரர்கள் சகஸ்ரநாமம் குழுவினர் எல்லாம் வருடத்திற்கொருமுறை குழந்தைகளுக்கென்று நாடகம் நடத்தினார்கள். குழந்தைகள் நாடகத் திற்கான விழா நடத்திப் போட்டிகள் வைத்தனர். 

பூவண்ணனின் காவேரியின் அன்பு, கூத்தபிரானின் அன்னை சொல் அமிர்தம், தம்பி சீனிவாசனின் தங்கக் குழந்தைகள், டி.கே.எஸ்.-ஸின் அப்பாவின் ஆசை போன்ற மறக்க முடியாத நாடகங்கள் உருவாயின. இன்று எதுவும் இல்லை. அப்போது பள்ளிக்கூட நாடகங்களும் அதிகமிருந்தன. இப்போது வசதி யுள்ள பள்ளிக்கூடங்களில் தமிழே இல்லை. முத்தமிழில் ஒன்றான நாடகம், இயல், இசையினை விட வலிமை வாய்ந்தது என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வர். நாடகத்தில் காண்பது கல் மேல் எழுத்தாக மனதில் பதிந்து விடும். குழந்தைகள் நாடகம் புறக்கணிக்கப் பட்டுக் கிடக்கிறது என்பதைக் கவலையுடன் பதிவு செய்கிறேன்.

இன்னொரு பக்கம் குழந்தைகளுக்கும், மாணவர் களுக்கும் கூடப் பல்வேறு துறைகளைப் பற்றிய தகவல் களைத் தருவது கட்டுரை நூல்களாகும். ஆராய்ச்சி அறிஞர்கள் நா.வானமாமலை, எஸ்.தோதாத்ரி, பெரியசாமி தூரன், டாக்டர் மு.வ., கல்வி கோபால கிருஷ்ணன் உட்பட பல்வேறு அறிஞர்கள் நல்ல கட்டுரை நூல்களைத் தந்தார்கள். காகிதத்தின் கதை, ரப்பரின் கதை, இரும்பின் கதை, இரயிலின் கதை, காற்றின் கதை, மின்சாரத்தின் கதை என்று அறிவியல் உண்மைகளைக் கதை போல எழுதினார்கள். விலங்குகள், பறவைகள், மரங்கள், மலைகள், கடல் என்று பல்வேறு துறைகளிலும் சிறந்த நூல்கள் அன்று வந்தன. இன்று நிலைமை என்ன? கதை நூல்கள், நிறைய வந்திருப்பது போல் கட்டுரை நூல்கள் வரவில்லை. 

இணைய தளத்தைத் திறந்தால் ஆயிரம் செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன என் பார்கள். இணைய தளத்தின் வாசனையைக் கூட அறியாத குழந்தைகள்தான் தமிழ்நாட்டில் அதிகம். இணையத்தைப் பயன்படுத்துவது என்பது இங்கு ஆடம்பரச் செலவாகத்தான் இருக்கிறது. இருபது, முப்பது ரூபாய் விலைவில் நிறைய கட்டுரை நூல்கள் குழந்தைகளுக்காகத் தரப்பட வேண்டும். குழந்தைகள் கலைக்களஞ்சியம் தமிழில் உள்ளது. இதற்காக பெ.தூரன் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். பத்து தொகுதிகளாக வந்து ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன. எவ்வளவோ முன்னேற்றங் களும் கண்டுபிடிப்புகளும் வந்துவிட்டன. கலைக் களஞ்சியம் புதுப்பிக்கப்பட வேண்டும். பெ.தூரன் செய்த பணியை மேலும் முன்னெடுத்துச் செல்ல ஒரு முயற்சியும் இல்லை. குழந்தைகள் மேதைகளாகி விடக்கூடாது என்பதில் நாம் விழிப்புணர்ச்சியுடன் இருக்கிறோம். அப்பனுக்கே பாடம் சொன்ன சாமி உள்ள நாடல்லவா இது?

மணவை முஸ்தபா 20 ஆண்டுகளுக்கு முன் தொகுத்தளித்த கலைக்களஞ்சியத்தைப் பற்றிக் குறிப் பிட வேண்டும். தமிழ் மீதும் குழந்தை இலக்கியத்தின் மீதும் பற்றுக் கொண்ட அவர் போன்றோரின் முயற்சிகளை ஆதரிக்கத்தான் ஆளில்லை. தனிப்பட்ட மனிதரே எவ்வளவு செய்திட முடியும்? குழந்தை களுக்காக அறிவியல் நூல்கள் நிறைய உருவாக வேண்டும். அவை மொழிபெயர்ப்பாக இருந்தாலும் பரவாயில்லை. கணினி, ஈமெயில், இணையம், விண் வெளிப்பயணம் பற்றியெல்லாம் நல்ல சிறுவர் நூல்கள் வரவேண்டும். 

ஈமெயிலைக் கண்டுபிடித்த சிவா அய்யாத்துரை ஒரு தமிழர். ஆனால் ஏழு வயதிலேயே அமெரிக்காவில் படித்து அங்கு வாழ்கிறவர். அவருக்கிருந்த சூழல் தமிழ்நாட்டில் இருந்தால் எத்தனையோ சிவா அய்யாத்துரைகள் இங்கும் உருவாகி இருக்கக்கூடும். மனப்பாடக் கல்வி முறையின் தீமைகளைக் குறைக்க குழந்தை இலக்கியத்தால்தான் முடியும் என்று நான் நம்பு கிறேன். ஆனால் 50 ஆண்டுகளாகக் குழந்தை இலக்கியம் புறக்கணிக்கப்பட்டுக் கிடப்பதைப் பார்க்கும்போது எந்த நம்பிக்கையும் எனக்கில்லை.

Thanks:தமிழின் குழந்தை இலக்கியத்தின் இன்றைய நிலை
சுகுமாரன் வியாழன், 24 ஜனவரி 2013 10:33   

தூப்புக்காரி




ஒன்பதாம் வகுப்பு தாண்டாத பள்ளிக் கல்வி. மிக மிக சாதாரண குடும்பப் பின்னணி. எப்படியோ சேமித்து வாங்கியிருந்த ஒரு மெலிய தங்கச் சங்கிலியை அடகு வைத்துப் பெற்ற காசில் தொலைதூரம் போய் தாம் எழுதிய நூலுக்கு வழங்கப்படும் விருது ஒன்றினைப் போய் வாங்கும் நிலைமை. யார் இவர்? அவர் தான், இப்போது பரவலாகப் பேசப்படும் "தூப்புக்காரி" என்ற புதினத்தின் ஆசிரியர் மலர்வதி, குமரி மாவட்டத்துக்காரர். 

நடுநிலைப் பள்ளி ஒன்றில், கழிவறைகளைச் சுத்தம் செய்யும் பணியில் இருந்த தமது தாயின் கைப் பிடித்துக் கொண்டு நாற்றம் எது, மணம்  எது என்று அறியாத ஐந்து வயதில் நேரடியாகப் பார்த்த தாயின் வாழ்க்கையின் காயம் எங்கோ மனத்தில் இருந்தது. தொழிற்கூடங்களில் துப்புரவு செய்த ஒரு தொழிலாளியின் கண்ணீர் ததும்பும் கனத்த முகம் இன்னும் கண்ணில் நிற்கிறது... சாக்கடையோரம் மூக்கைப் பொத்தி, குமட்டலில் இருந்து தப்பித்தால் போதும் என்று ஓடத் தெரியும் மனிதர்களுக்கு, அசுத்தத்தை அள்ளுகிறவன் சாதியில் குறைந்தவன் என தள்ளி வைக்கவும் தெரிகிறது என்று தமது முன்னுரையில் சாடும் மலர்வதி, ஈக்களிலும், புழுக்களிலும், நாற்றத்திலும் உழைத்து வாழ்வாதாரம் தேடும் மனிதர்களுடன் ஒரு நிமிட நேரமாவது சென்று அமரும் மனித நேய உணர்வு சமூகத்தில் பிறக்கட்டும் என்ற வேகத்தில் தாம் எழுதிய கதை தான் தூப்புக்காரி என்று மனம் விட்டுச் சொல்வதில் எல்லாம் அடங்கிவிடுகிறது.

தூப்புக்காரி என்ற சொல், துப்புரவுப் பணியில் இருப்போரை விளிக்கும் ஒரு வட்டாரச் சொல். அந்த விளியே சமூகம் அவர்களை 'மதிக்கும்' தன்மையை வெளிப்படுத்திவிடுகிறது. ஏய், கக்கூசைக் கழுவிட்டியா, தீட்டுத் துணிகளைக் கழுவிட்டியா, சாக்கடை அள்ளினியா...என்பதைத் தவிர, வேறு பேச்சு மொழியே அற்றுப் போன உலகம் அவர்களது. கண்ணெதிரே அடைத்துக் கொண்டிருக்கும் சாக்கடையில் தெறிக்கும் மலம். கையருகே பருக வேண்டிய தேநீரோ, கடமைக்கு வாரி அடைத்துக் கொள்ள வேண்டிய உணவோ ஏதோ ஒன்று. இந்த முடிவற்ற துயர நடையின் கதை தான் தூப்புக்காரி. 

பூவரசி. மருத்துவமனை தூப்புக்காரி கனகத்தின் மகள். கனகம் தனது மகளுக்குக் கொஞ்சம் போலக் கிடைத்த படிப்பை வைத்து ஒரு நல்ல வாழ்க்கையைத் தேடிக் கொள்ள வேண்டும் என்ற கனவு. அதே தூப்புப் பணியில் இருக்கும் - ஆனால் சாதியில் தாழ்ந்த மாரியை அவளுக்குக் கட்டிக் கொடேன் என்று சொல்லும் வேலப்பன் அல்லது  தனது சக தூப்புக்காரி றோஸ்சிலி சொற்களை  ஏற்கவும் மாட்டாமல் வேறு திசையும் தெரியாமல் தவிக்கும் கனகம். பூவரசிக்கோ தனது தாய்க்கு உணவு கொடுக்கப் போகும் நேரம் தட்டுப்படும் குப்பை கழிவுகளையே சகிக்கப் பொறாத குமட்டல். 

பூவரசியின் நெஞ்சில் மருத்துவமனை வாகன ஓட்டுனர் மனோ மீதான காதல் காற்றில் அலைபாயும் தீபம் போல் ஆடிக் கொண்டிருக்கிறது.  அவனுக்கும் இவள் மீது ஒரு மோகம் இருக்கத் தான் செய்தது. ஆனால் சாதாரண மனிதர்களது வாழ்க்கை ஏற்கெனவே விதிக்கப்பட்ட பாட்டையில் அல்லவா இவர்களை வழி நடத்திச் செல்லும்..

அவமதிப்பும், கடுஞ்சொல்லும் தனது பயணம் நெடுக வாரி இறைக்கப் பட்டிருந்தும், எச்சில் இலை எடுக்கப் போன திருமண விருந்தொன்றில் பசியின் இரக்கமற்ற துரத்தலில் தாங்களே பந்தியில் அமர்ந்துவிடும் போது அங்கிருந்து விரட்டப்படும் கனகம் தலை சுற்றல் கண்டு நோயில் விழும் இடம் கதையில் முக்கியமானது. அது மனோ உறவினர் வீட்டுத் திருமணம். அவனோ கனகத்திற்குப் பரிந்து பேச முன் வருவதில்லை. பிறகு அதே வேலையில் தன காதலி பூவரசி தன கண்ணெதிரே தள்ளப்படும் நிலையிலும் கை கொடுப்பதில்லை. 

தாய் தொடர முடியாத எச்சில் இலைகளை அகற்றும் பணிக்கு, தற்செயலாக அங்கே போன பூவரசி நியமிக்கப்படுகிறாள். நானா....நானா என்று தடுமாறும் அவளை  றோஸ்சிலி ஆற்றுப் படுத்தி பழக்கத் தொடங்குகிறாள். இந்தப் பாதையின் அடுத்த மைல் கல், மருத்துவமனையில் கழிவறைகளை 'தூக்கும்' பணியில் ஊன்றப்படுகிறது. 'தூமத் துணி' அலசவும், மலம் மிதக்கும் சாக்கடைகளைத் 'தூக்கவும்', இரத்த வீச்சம் அடிக்கும் கழிவுப் பொருள்களோடு உறவை ஏற்படுத்திக் கொள்ளவுமான அடுத்த தூப்புக்காரியாக உரு மாறுகிறாள் பூவரசி. 

குடலைப் புரட்டும் நெடியில், பார்க்க சகிக்காத கழிவுகளில் உழலும் மனித வாழ்க்கையை மலர்வதி எந்த நளினமும், இடக்கரடக்கல் மொழியும் கைக் கொள்ளாமல் நேரடிப் பார்வைக்கு அப்படியே எடுத்து வைக்கிறார். காசு வாங்கிட்டுத் தானே வேலை செய்யுற, ஓசியிலயா என்று எகத்தாளம் செய்யும் ஒரு பெண்மணியை அதே காசை வாங்கிட்டு நீ வந்து செய்வியா இந்த வேலையை என்று கேட்கிறாள் கனகம். சம்பளம் பத்திப் பேச நீ என்ன அபீசரா என்று கேட்கும் டீக்கடைக்காரரிடம், மாரி வெகுண்டு, 'ஆபிசர் தூறிவிடிய பீயை என்னைப் போல் உள்ளவன் வாராட்டா நாறிக் கெடக்கும்...அழுக்குக்கு மூக்கப் பொத்தறீங்களே வாழ்க்கை பூரா அழுக்குல கெடக்கற எங்களுக்கு சம்பளம் வேண்டாமா ஓய்' என்று கேட்கிறான். 

மனோவிடம் தன்னை இழக்கும் பூவரசி, பிறகு, வேறு மணவாழ்வில் அவன் காலடி எடுத்துவைக்கும் நிலையில் மாரியின் ஆதரவைக் கேட்காமலே கைவரப் பெறுகிறாள். அவள் பிள்ளையுண்டாயிருப்பதை அதிர்ச்சியோடு அறியும்போது மாரி அவளை ஏற்கவும் செய்கிறான். உனது குழந்தைக்கு அப்பனா மாறவும் சம்மதம் என்கிறான். 

பொன்னீலன் தமது செறிவான அணிந்துரையில் சொல்வதுபோல் கதை இங்கே நிறைவடைந்திருக்க வேண்டியது. இருந்தாலும், மலர்வதி, மாரி ஒரு விபத்தில் இறப்பது, தனது குழந்தையை, மகப்பேறு இல்லாத ஒரு வசதிமிக்க தம்பதியினருக்குத் தத்துக் கொடுக்க மருத்துவர் சொல்வதை பூவரசி முதலில் ஏற்றுக் கொண்டு, ஆனாலும் பிறகு குழந்தையோடு தனிச்சி நின்று வாழ்க்கைப போராட்டத்தை தொடர்வது என்று முடிவெடுப்பது, கோழை மனத்தோடு மனோ வந்து பார்த்துவிட்டுக் குற்ற உணர்ச்சியோடு நகர்ந்து விடுவது என்று வேகமாக சில நகர்வுகளைச் செய்து பூவரசியின் உளத் திண்மையில் கொண்டு வந்து கதையை நிறைவு செய்கிறார். 

தகழி சிவசங்கர பிள்ளை அவர்களின் தோட்டியின் மகன் நாவலை, சுந்தர ராமசாமி அவர்களது  அற்புதமான மொழிபெயர்ப்பில் வாசித்தபோது அதன் பாதிப்பிலிருந்து மீள சில நாட்கள் ஆயிற்று. அடுத்தடுத்த தலைமுறையினர் என்ன முயற்சி செய்தாலும் தோட்டியின் மகன் தோட்டியாக ஆவதிலிருந்து விடுதலை பெற இயலாத சோகத்தை உரத்த குரலில் பேசி, மூன்றாம் தலைமுறையில் போராட்ட ஆவேசம் கொண்டு எழுவதில் நிறைவு பெறும்  நாவல் அது. தி தா நாராயணன் அவர்களது சிறுகதையை முன்வைத்து செம்மண் விஜயன் ஆக்கம் செய்த புதிய தடம் குறும்படமும் தந்தையை அடியொற்றி  பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் வேலைக்குச்  செல்ல மறுக்கும் மகனின் பரிதவிப்பைப் பேசியது. 

இருந்தபோதிலும், தான் நேரடியாக சந்தித்த வாழ்க்கையை அதன் நெடியோடு - அதன் அத்தனை வலிகளோடு - தப்பிக்க முடியாதபடி பிணைத்திருக்கும் சங்கிலிகளோடு மலர்வதி எழுதியிருக்கும் தூப்புக்காரி விளிம்பு நிலை மனிதர்கள் குறித்த முக்கிய வாசிப்பாகக் கிடைத்திருக்கிறது. ஆங்காங்கு கதையாசிரியர் குரலில் வெளிப்படும் வாழ்வின் விமர்சன வரிகளும், மிகை புனைவாக இணைக்கப்பட்டவையும் தனித்துத் தெரிந்தாலும், வலுவான உரையாடல்கள் சமூக அவலத்துக்கு எதிரான  தெறிப்புகளாக நிலை கொள்கின்றன. மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களின் உற்சாக அணிந்துரை சாதிய, வர்க்க முரண்பாடுகள் பற்றிப் பேசும் மலர்வதி எழுத்தைக் குறித்த அவரது பிரமிப்பைப் பதிவு செய்கிறது. 

குமரி மாவட்ட வட்டார வழக்கு மொழி படிக்கத் தொடங்கியதும் வாசகரைத் தம்முள் இழுத்துக் கொண்டு சகதிக் குழியில் தள்ளப்பட்டிருக்கும் மனிதர்களது பாடுகளை உணர்த்தியபடி செல்கிறது. தமது தாய்க்கு மட்டுமல்ல, அவரைப் போன்ற மனிதர்களுக்குமான சிறப்புப் பதிவைச் செய்திருக்கிறார் மலர்வதி. 

கடந்த மாதம் கவுஹாத்தி (அஸ்ஸாம்) சென்று யுவ புரஸ்கார் எனப்படும் சாகித்திய அகாதமி இளம் படைப்பாளி விருதினைப் பெற்றுத் திரும்பியிருக்கும் அவர், அனல் வெளியீடாக வந்திருக்கும் தூப்புக்காரியின் அடுத்த பதிப்பை மாநிலம் முழுக்கக் கிடைக்க முன்முயற்சி எடுப்பார் என்றே நம்புகிறேன். வாசகர்கள் காத்திருக்கின்றனர். 
நன்றி 
- எஸ்.வி.வேணுகோபால்
எழுதியவர் மா ற்று at 11:43 AM
நன்றி :- தீக்கதிர், 28-04-2013

நினைவின் நதிக்கரையில்:2-(கௌதம நீலாம்பரன்)


2

தீபத்தின் ஒளியில் நான்...

ஒரு பத்திரிகையாளனாகவோ, எழுத்தாளனாகவோ நான் ஆவேன் என்று சிறிதும் எண்ணியதில்லை.

‘தீபம்’ தந்த வெளிச்சம்தான் என் வாழ்வில் இந்த மாய மாற்றத்தை நிகழ்த்தியது.

அதுவும் இருண்டு கிடந்த கவலைக் கடலில் நான் தத்தளித்துக் கிடந்தபோது, கலங்கரை விளக்கத்தின் நம்பிக்கை ஒளியாய், தீப வெளிச்சம் என் மீது பட்டு, என்னைக் கரை சேர்த்தது.

1966, 67 களில் நான் சென்னை நகரின் தெருக்களில், குறிக்கோளின்றி சுற்றிக் கொண்டிருந்தேன். சென்னைக்கு வந்தது சினிமா ஆசையால்தான். அதற்கு வழி ஒன்றும் புலப்படாது போனதால், அந்த ஆசை நிராசையானது. தூரத்து உறவினர் வீடொன்றில் அடைக்கலம் கிடைக்குமென நம்பியிருந்தேன். முப்பது நாள் கூட அங்கு தங்க முடியவில்லை. விரட்டப்பட்ட நிலை. ஊருக்குத் திரும்பவோ மனமில்லை. வீதிகளில் தஞ்சமடைந்தேன். என் வாழ்வு தறிகெட்டு, சிதைந்து, சின்னாபின்னமாகியிருக்கும். அதிர்ஷ்டவசமாகச் சில நண்பர்கள் கிடைத்தனர்.

சினிமா வாய்ப்புகள் கிடைக்க வழியில்லாது போயினும், சில நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பகலில் கிடைத்த வேலைகளைச் செய்வது, மாலையானால் நாடக ரிகர்ஸல், அது முடிந்தால் தெருவோரம் தூங்குவது என்று பல நாட்கள் ஓடின. துயரம் மிகுந்த இந்த நாட்களை வர்ணிக்க ஒரு சில பக்கங்கள் போதாது. இது ஒன்றும் சுய சரிதையுமல்ல.

நண்பர்கள் சிலர் ஓய்வு நேரங்களில் கதைப் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் கொண்டிருந்தனர். நானும் அவற்றை இரவல் வாங்கிப் படிப்பேன். சிறு வயதிலேயே, ஊரில் சாண்டில்யன் கதைகள் ஒன்றிரண்டு படித்ததுண்டு. இருப்பினும் இங்கு வந்த பிறகுதான் முழுமையான ஆர்வத்துடன் கடல்புறா, யவனராணி போன்ற பல நவீனங்களை வாசித்தேன். தொடர்ந்து கல்கி, அகிலன், மு.வ., நா. பார்த்தசாரதி, விக்கிரமன், கோவி மணிசேகரன், ஜெகசிற்பியன், சோமு, கி.ரா. கோபாலன், ஜெயகாந்தன், ஜாவர் சீதாராமன் போன்றோர் கதைகளை வாசித்தேன்.

மண்ணடி பவழக்காரத்தெருவில் உள்ள கிருஷ்ணன் கோவிலருகில் இருந்தது நண்பர்கள் தங்கியிருந்த அறை. சில போதுகளில் நான் அங்கு சென்று தங்குவதுண்டு. அதன் அருகில் ஒரு பெரியவர் வாடகை நூலகம் நடத்திக் கொண்டிருந்தார். ஒரு ரூபாய் கொடுத்து மெம்பர்ஷிப் கார்டு வாங்கினேன். ஒரு புத்தகம் படிக்க நாலணா தர வேண்டும். நிரந்தர வேலையற்ற அந்த நாட்களில், நாலணா சம்பாதிக்கப் படாதபாடு படவேண்டும். 

ராஜா அண்ணாமலை மன்றத்தின் பின்னால் உள்ள வெளியூர் பஸ் நிலையத்தில் ‘மங்களா கேப்’ என்று ஒரு உணவு விடுதி உண்டு. அதில் ஒரு மணி நேரம் சப்ளையர் வேலை பார்த்தால் நாலணா சம்பளம். எப்போதுமே அங்கு கூட்டம் நிரம்பி வழியும். காலையில் இரண்டு மணி நேரம், மாலையில் இரண்டு மணி நேரம் அங்கு சென்று பணிபுரிவேன். டிபனும் சாப்பிடலாம். எட்டணா காசை வாங்கிக் கொண்டு வெளியே வந்துவிடலாம். அங்கு நிரந்தரப் பணியாளர்களைவிட, இப்படி பகுதிநேரம் வந்து செல்பவர்களுக்கே வாய்ப்பு அதிகம். இப்படி நான் வாரக்கூலி ஆளாக அம்பீஸ்கேப், மாடர்ன் கேப், கீதா கேப் போன்ற பல ஓட்டல்களிலும் பணிபுரிந்ததுண்டு. எங்கும் நிலையாக இருந்ததில்லை.

கையில் காசு கிடைத்தவுடன் நேரே மண்ணடி சென்று, நா.பா. நூல் ஒன்றை எடுத்துக் கொண்டு லோன்ஸ்குயர் பார்க்கில் வந்து உட்கார்ந்து விடுவேன். ஒரே மூச்சில் கதை முழுக்கப் படித்துவிட்டுதான் வேறு வேலை பார்ப்பேன். திரும்பத் திரும்ப ஓடி வருவதைப் பார்த்த அந்த வாடகை நூலகப் பெரியவர், “அப்பா, ஒரு முழு நாளாவது புத்தகம் உன்னிடம் இருக்கட்டும். மறுநாள் மாலையில் வா. இத்தனை சீக்கிரம் படித்தால், ஒரு விஷயமும் உன் மனத்தில் பதியாது. உனக்குப் புத்தகம் கொடுத்து எனக்குக் கட்டுப்படியாகாது போலிருக்கே...” என்பார்.

அவர் சொல்வதிலுள்ள உண்மை எனக்குப் போகப் போகப் புரிந்தது. கதையில் அடுத்து என்ன நிகழ்கிறது என்று சம்பவங்களை அறிவதில் மட்டுமே ஆர்வம் காட்டிய நான், அதுவரை மேம்போக்காக - நுனிப்புல் மேய்வது போலவே பக்கங்களைப் புரட்டியிருந்தேன். இது ஒரு வித அலட்சியமான வாசிப்பு முறை. இதைத்தான் பெரும்பாலும் பலரும் செய்வது வழக்கம்.

புத்தகத்தின் பெயரைச் சொன்னதும், “ஓ... அதை நான் வாசித்திருக்கிறேனே... ’ என்று கூறி, மேலோட்டமாக அந்தக் கதை பற்றியும் கூறி விடுவர். ‘இந்தப் பொண்ணு அந்தப் பையனைக் காதலிச்சா...எதிர்ப்பு இப்படி வந்தது. கதை இப்படி முடிந்தது. என்கிற வகையிலேயே அந்தப் பேச்சு இருக்கும். இந்த மாதிரி சொல்வது என்றால், ராமாயணத்தைக் கூட நாலே வரியில் கூறி விடலாமே...! அதன் கவித்துவம், இலக்கிய நுட்பம், தத்துவச் சிறப்பு போன்றவை எப்படிப் புரிபடும்?

அந்த வாடகை நூலகப் பெரியவரின் அறிவுறுத்தலுக்குப் பின் நான் புத்தகங்களை ஆழமாகப் படிக்கத் துவங்கினேன். குறைந்தது மூன்று நாட்களாவது ஒரு புத்தகம் என் கையில் இருக்கும். திரும்பக் கொடுக்க மனமில்லாமல் அதைக் கொடுப்பேன். ஒருவாரம் கழித்து மறுபடியும் அதையே ஒரு முறை எடுத்து வந்து, திரும்பவும் வாசிப்பேன். இப்படி நான் நா.பா. வின் குறிஞ்சிமலர், பொன் விலங்கு, மணிபல்லவம், கபாடபுரம் போன்ற நூல்களைப் பலமுறை வாசித்து, தேனுண்ட வண்டாய் அதனுள் மயங்கிக் கிடந்தேன்.

‘கல்கி’ நா.பாவின் கதைகள் வெளிவந்த போது, சில அற்புதமான வர்ணனைகளைப் பொன்மொழிகள் மாதிரி கட்டம் கட்டி, கதை நடுவே வெளியிட்டிருப்பர். அவற்றை நான் மிகவும் ரசித்து, கையில் கிடைக்கிற தாள்களில் எழுதி வைப்பேன். நண்பர்கள் வட்டத்தில் சில மலையாளிகள் இருந்தனர். அவர்கள் நல்ல படிப்பாளிகள். கையில் எப்போதும் மலையாளப் புத்தகங்கள் அல்லது ஆங்கில நூல்கள் மட்டுமே வைத்திருப்பர். பல நூல்களை, எழுத்தாளர்களைப் பற்றி மிகவும் சிலாகித்தபடி இருப்பர். தமிழ்க் கதைகள் படிக்கிற ஆசாமிகளை அவர்கள் சற்று இளப்பமாகவே பார்ப்பது வழக்கம். 

நான் அவர்களிடம் நா.பா.வின் கதை நடுவே இடம் பெற்ற பொன்மொழி போன்ற வாசகங்களைக் குறித்து வைத்திருப்பதை மேற்கோள் காட்டிப் பேசுவேன். அதைக் கேட்டு அவர்கள் வியந்து போனதுண்டு. படித்த நூல்களிலிருந்து நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்ல ஆரம்பித்ததும் என்னைச் சுற்றி நண்பர்கள் வட்டம் பெரிதானது. நாங்கள் அடிக்கடி மாலை வேளைகளில் அல்லது இரவு நேரங்களில் கடற்கரை மணலில் ஒன்றாய் அமர்ந்து நிறைய விஷயங்கள் பேசலானோம். நான் கவிதைகளும் எழுத ஆரம்பித்தேன். அசட்டுத்தனமாய் அதைப் பத்திரிகைகளில் கொண்டு போய்க் கொடுக்கும் ஆசையும் எழுந்தது.

லோன்ஸ் குயர் பார்க் எதிரேதான் ஜனசக்தி, தாமரை பத்திரிகைகளின் அலுவலகம் இருந்தது. ஒரு நாள் அங்கு நேரில் போய், ஒருவரைச் சந்தித்து என் கவிதைகளைக் கொடுத்தேன். ஒரு நோட்டத்திலேயே அவை ஒன்றுக்கும் உதவாதவை என்பதை அவர் கணித்திருக்க வேண்டும். இருப்பினும் அவர் என்னைப் பற்றி விசாரித்தார்;  தன்னைப் பற்றியும் சொன்னார். அவர்தான் அறந்தை நாராயணன். நான் உடனே தூத்துக்குடியிலிருந்து வெளிவந்த ‘சாந்தி’ பத்திரிகையில், வியட்நாம் யுத்தக் கொடுமைகள் பற்றி ‘அன்புள்ள சாந்திக்கு’ எனும் தலைப்பில் அவர் எழுதிய கட்டுரைகளை வாசித்த விவரம் சொன்னேன். மகிழ்ந்து போன அவர், “நிறைய படியுங்கள், கவிதைகளும் எழுதுங்க. நல்ல கவிதைகள் எழுத உங்களுக்கு நிச்சயம் வரும்”  என்று ஆறுதல் கூறி, எதிரே அமர்ந்திருந்த ஒரு பெரியவரை அறிமுகம் செய்து வைத்தார்

.
அந்தப் பெரியவர் - எழுத்துலக பீஷ்ம பிதாமகரான

வல்லிக் கண்ணன்!
(வளரும்)

Monday 29 April 2013

பாவ நகரம் பாங்காக்

பாவ நகரம்பா


உலக நாடுகளில் சுற்றுலா கண்ணோட்டத்தில், "மாஸ்டர் கார்டு' அளவீடுகளின்படி மூன்றாவது சிறந்த நகரம் தாய்லாந்து நாட்டின் தலைநகரமான பாங்காக். லண்டன், பாரீஸ் நகரங்களுக்கு அடுத்த இடத்தை பாங்காக் பிடித்துள்ளது. அதேபோல், லண்டன், நியூயார்க் நகரங்களுக்கு அடுத்தபடியாக அதிகமான செலவுபிடிக்கும் நகரமும் பாங்காக்தான்.

 "தாய்லாந்து சென்று வந்தேன்' என்றால் "பட்டயா'வுக்குப் போனீர்களா? என்றுதான் முதலில் கேட்கிறார்கள். பட்டயா நகரத்தின் "இரவு வாழ்க்கை' அப்படி. விடுதிகள், மசாஜ் கிளப்புகள், கேளிக்கைக் கூடங்கள் மட்டுமின்றி தெருக்களில் கூட "செக்ஸ் வியாபாரம்' தாராளமாகி வருவதே அதற்குக் காரணம். பாங்காக்கிலும் இரவு 10 மணிக்கு மேல் அதுதான் நிலைமை. எனவேதான் "பாவ நகரம்' பட்டம்.

இத்தனைக்கும் தாய்லாந்தில் "சிவப்பு விளக்கு' தொழில் சட்டவிரோதம். சுற்றுலாப் பயணிகளின் "வசதிக்காக' அரசு கண்டும் காணாமலும் இருக்கிறது போலும்.

 ஒரு நாட்டில் உள்ள இயற்கை வளத்தைப் பாதுகாப்பது மட்டுமன்றி, அதனுடன் கற்பனை வளத்தையும் இணைத்து, கடினமான உழைப்பையும் சேர்த்து அழகுபட மிளிரச் செய்து, தம்மை நாடி வருகின்ற வெளிநாட்டவர்களுக்கு அவற்றைப் படைத்து களிப்புறச் செய்து கட்டணத்தைப் பெற்று தன்னையும், நாட்டையும் வளப்படுத்திக் கொள்வது எப்படி என்பதை தாய்லாந்தை உற்று நோக்கினால் புலப்படும்.

 இதற்கு பாங்காக்கில் பல உதாரணங்கள் உண்டு. அதில் ஒன்று, அந்த நகரின் மையப் பகுதியில் ஓடும் "சாவோ பிரையா' ஆறு. தாய்லாந்தின் வட பகுதியில் உற்பத்தியாகி சுமார் 372 கிலோ மீட்டர் தூரத்திற்கு தெற்கு நோக்கிப் பாய்ந்து, இறுதியில் தாய் வளை குடாவில் கலக்கிறது. இடையில் சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாங்காக் நகரின் மையப் பகுதி வழியாகப் பாயும் இந்த நதியை அந்த மக்கள் முழுமையாகப் பயன்படுத்தி பலன் பெறுகின்றனர். நதியின் இருபுறமும் வானுயர்ந்த விடுதிகள், உணவகங்கள், கேளிக்கை மையங்கள் என நதியை மையப்படுத்தி வருமானத்தை வாரிக் குவிக்கின்றனர். எனினும், ஆறு எவ்விதத்திலும் மாசுபடவில்லை.

 "சாவோ பிரையா' நதியில் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. அந்த நதியில் பகல் நேரங்களில் சிறியதும், பெரியதுமான 40-க்கும் மேற்பட்ட படகுகள் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு வலம் வருகின்றன.

  நதியின் இக்கரையில் இருந்து அக்கரைக்குச் செல்ல விரும்புவோரை ஏற்றிச் செல்லும் படகுகளும் உண்டு. உள்ளூர் மக்கள் நகரின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு சரக்குகளையும், கட்டுமானப் பொருள்களையும் படகுகளில் ஏற்றிச் செல்கின்றனர். அந்திப் பொழுதில் படகுகள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இசைக் கச்சேரிகளுடன் இரவு நேர விருந்தளிக்கத் தயாராகி விடுகின்றன. ஆற்றில் பயணித்தபடி இரவு விருந்துண்ண சுற்றுலாப் பயணிகள் கால்கடுக்க வரிசையில் நிற்கின்றனர்.

  ஒரு நாட்டின் பொது ஒழுங்குக்கு சாலைப் போக்குவரத்தை உதாரணமாகக் கொள்ளலாம். பாங்காக் நகரச் சாலைகளில் வாகனங்களில் செல்வோர் எவரும் ஒலி எழுப்புவதில்லை. அவரவர் பாதையில் எவருக்கும் இடையூறு இல்லாமல் செல்கின்றனர். போக்குவரத்து இடையூறு ஏற்பட்டால் நிலைமை சரியாகும் வரை பொறுமையாக வாகனத்திலேயே காத்திருக்கின்றனர். பீம்...பீம்...பீம்...என செவிப்பறை கிழிய ஒலி எழுப்பி சூழலைக் கெடுக்கும் பழக்கம் யாருக்கும் இல்லை. ஹாரனுக்கு தடையேதுமில்லை. ஆனாலும் ஓர் சுய கட்டுப்பாடு. அதையும் மீறி ஒருவர் வாகனத்தில் ஒலி எழுப்பினால், அவர் பொறுமை இழந்து சண்டைக்குத் தயாராகிவிட்டார் எனப் பொருள் என்கின்றனர் உள்ளூர் மக்கள்.

 தாய்லாந்தில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் கடின உழைப்பாளிகள்தான். விடுதிகள், உணவகங்கள், மால்கள், சந்தைகள் உள்ளிட்ட சேவைத் துறைகளில் பெண்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. சுற்றுலாப் பயணிகளைச் சிரித்த முகத்துடன் வரவேற்று பொருள்களை விற்பனை செய்வதில் அவர்கள் காட்டும் சாதுரியம் அலாதியானது.

 ஐரோப்பியர்களின் ஆதிக்கம் செல்லுபடியாகாத தென் கிழக்கு ஆசிய நாடு தாய்லாந்துதான். எனவேதான் அங்கு ஆங்கிலம் கோலோச்ச முடியவில்லை. அரைகுறை ஆங்கிலத்துடன் வாடிக்கையாளர்களை வசப்படுத்தி பொருள்களை சாமர்த்தியமாக விற்பனை செய்து விடுகின்றனர். வாடிக்கையாளர் பொருளை வாங்காவிட்டால் கூட சிரித்த முகம் காட்டி திருப்பி அனுப்பி விடுகின்றனர்.

நினைவின் நதிக்கரையில்:1-(கௌதம நீலாம்பரன்)

கௌதம நீலாம்பரன்



காலத்தின் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டியவற்றைத் தேர்ந்து தெளிவதே வரலாற்று நவீனம். இந்தக் கூர்மையோடு களத்தில் இறங்கிய பெருமை, கெளதம நீலாம்பரனுக்கு உண்டு.அமரர் நா.பார்த்தசாரதி, தீபம் திங்கள் இதழின் ஆசிரியர், ஏற்றி வைத்த இலக்கிய தீபங்களில், ஒரு எழுச்சி தீபம் கெளதம நீலாம்பரன். சரித்திர நவீனங்களின் சரித்திரம்.
-கவிப்பேரரசு வைரமுத்து, ‘பல்லவ மோகினி” முன்னுரையில்,


நினைவின்  நதிக்கரையில்
                         1


“உன்னை என் நெஞ்சுக்குள்ளே வச்சுக்கிட்டிருக்கேன்... உன் நினைவை என்னால மறக்க முடியலையே... என் காதலைப் புரிஞ்சுக்க...” என்று காதலியிடம் புலம்பிய காதலன் தன் நெஞ்சில் கை வைத்துக் காண்பித்தான்.

“என் இதயத்துலயும் நீங்கதான் இருக்கீங்க. நம்ம காதலை எங்க வீட்ல ஒத்துப்பாங்களான்னுதான் புரியலை. எது நடந்தாலும் சரி, என் நெஞ்சுலேருந்து உங்க நினைவை அழிக்க யாராலும் முடியாது...” என்றாள் காதலி.

“எங்க வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கிட்டு இவங்க நல்லா வாழ்ந்துடுவாங்களா, பார்த்துடறோம்” என்றனர் பெற்றோர்.

இவர்கள் எல்லாரும் நெஞ்சுக்கும் வயிற்றுக்கும் முக்கியத்துவம் தந்து பேசினாலும், விஷயம் நினைவுகள் சம்பந்தப்பட்டது. காதலோ, பாசமோ, கோபதாபங்களோ எதுவாயினும் மனம்தான் அதன் உற்பத்தி ஸ்தானம். மனம் என்று தனியாக ஓர் உறுப்பு உடலில் எங்கும் இல்லையென்றாலும், மனம் என்பது நிச்சயமாக நெஞ்சுக்குள்ளோ, வயிற்றுள்ளோ இருக்கவியலாது. அது, மூளையோடு மட்டுமே தொடர்புடைய ஒன்று. மூளை இருப்பதோ தலைக்குள்ளே, தலைக்குக் கீழே உடலின் எந்த உறுப்பும் தனியே சிந்திக்கவியலாது. இருப்பினும் காதலர்களும், கவிஞர்களும் நெஞ்சின் மீது கை வைத்து மட்டுமே நினைவைப் போற்றிப் பாட்டுப்பாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி நெஞ்சு வேகாதென்று சபதமிடுகிற அளவு நினைவுகள் நெஞ்சுக்குழிக்குள்ளே கிடந்து காலம் காலமாக அல்லாடிக் கிடப்பதை யாராவது தவறு என்று சுட்டிக் காட்டினால் தலையில் அடித்துக் கொண்டு ‘பழிப்பு’ காட்டுவார்கள்.

ஒரு பெரியவர் இருந்தார். பஞ்சாய் நரைத்த தலைமுடி, ‘மார்பில் அலை பரப் பும் வெண் தாடி. நல்ல நல்ல தத்துவங்கள் சொல்வார். நன்றாகப் பக்தி மணம் கமழப் பாடல்கள் பாடுவார். “ஆஹா” என ரசித்து, அவரைப் பாராட்டுகிறவர்களிடம், “எல்லாம் நம்மிடம் ஒன்றுமில்லை, அவன் செயல்’ என்று மேலே கைகளை உயர்த்திக் காட்டுவார். அடுத்த கணம், வயிற்றைத் தொட்டுக்காட்டி, ‘இங்கே இசை ஊற்றெடுக்கிறது. நாபியிலிருந்து மேலெழும் அதற்கேற்ப நான் வாயசைக்கிறேன். அவ்வளவுதான், தத்துவங்களும் அப்படித்தான். உள்ளே அவன் இருந்து சொல்ல வைக்கிறான். நான் ஒரு கருவி மாத்திரமே” என்பார்.

அவருடைய அடக்கம், எல்லாம் தெய்வச் செயல் என்று எண்ணுகிற உயரிய மனோபாவம் தவறே அல்ல. ஆனால், ஓசைக்கான காற்று நாபிக்கமலத்திலிருந்து உந்தி மேலெழுந்து வந்தாலும், எண்ணங்கள் புத்தியிலிருந்து மட்டுமே உதிக்க முடியும். அதற்கு வயிற்றையோ, நெஞ்சையோ தொட்டுக் காட்டி என்ன பயன்?

ஜவஹர்லால் நேரு எழுதிய குட்டிக்கதை ஒன்று உண்டு. அதில் ஒரு சகலசாஸ்திர பண்டிதர் வருவார். அவர் தன் வயிற்றைச் சுற்றி செப்புத் தகடுகளை வைத்துக் கட்டிக் கொண்டுதான் எங்கும் புறப்படுவார்.

ஒருநாள் அப்பெரியவர் ஒரு நதிக்கரையில் பல்லக்கில் வந்து இறங்கினார். முகம், கை கால் கழுவி சந்தியாவந்தன நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பல்லக்கில் புறப்பட ஆயத்தமான பொழுது, வயிற்றில் சுற்றிலும் செப்புத் தகடுகளே வைத்துப் பட்டுத் துணியால் கட்டிக் கொண்டிருந்தார். இதை ஆடு மேய்க்கும் ஓர் இடைச்சிறுவன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனுக்கு இந்த வேடிக்கையின் பொருள் புரியவில்லை. “சாமி, எதுக்கு இப்படி வவுத்த சுத்தி செப்புத் தகடு வச்சுக்கட்டறீங்க, வவுத்து வலியா?”  என்று கேட்டான்.

அவருக்குக் கோபம் வந்துவிட்டது.

“அடேய், ஆடு மேய்க்கும் சிறு பயலே...என்னை யாரென நினைத்தாய்?  நான் சகல சாஸ்திர பண்டிதன், பல அறிவாளிகளைத் தோற்கடித்த மேதை. என்னைக் கண்டால் அரச சபையே அலறும். நீ எத்தனை அலட்சியமாக என்னைக் கேள்வி கேட்கத் துணிந்துவிட்டாய்...” என்றார்.

“அது இருக்கட்டும் சாமி...நீங்க அறிவாளியாவே இருங்க. அறிவாளிங்களுக்கு வவுத்து வலி வராதா?” என்றான் சிறுவன்.

“அடே அற்பப் பதரே! இந்த செப்புத் தகடுகளை நான் வயிற்று வலிக்காகக் கட்டவில்லை. என் சாஸ்திர ஞானம், சகல விஷயங்களிலும் உள்ள பாண்டித்யம் மிக மிக அதிகம். அதன் காரணமாக வயிறு வீங்கி வெடித்து விடக்கூடாதல்லவா? அதற்காகத்தான் இந்தப் பாதுகாப்பு. இதெல்லாம் உனக்குப் புரியாது. போ அந்தப் பக்கம்...” என்றார் பண்டிதர்.

பையன் இதைக் கேட்டு கெக்கொலி கொட்டிச் சிரித்தான்.

“ஏனடா சிரிக்கிறாய்... ?”

“பின்ன என்ன சாமி... எங்களுக்கெல்லாம் அறிவு மண்டைல இருக்குங்கறதுதான் தெரியும். வவுத்துல செரிமானக் கழிவுகளோட மலக்குடல்தான் இருக்கு. உங்களுக்கு மட்டும் வவுத்துல அறிவு நிரம்பிக் கிடக்குன்னா, உங்க மண்டைல நிச்சயம் மலம்தான் சேர்ந்து கிடக்கும். அதை நினைச்சேன், சிரிப்பு வந்துடுச்சி...” என்றான்.

    பெரியவர் கர்வம் அந்தக் கணத்தில் அகன்றது. அறிவுக்கண்கள் திறந்தன. அதுவரை ஆணவத்தால் பெரும் பிழை செய்து விட்டதை எண்ணி வெட்கித் தலை குனித்து நின்றார்.

     இந்தக் குட்டிக்கதை நமக்கு எவ்வளவு பாடம் புகட்டுகிறது பார்த்தீர்களா...?

      அது சரி, இவ்வளவு பெரிய ஆலாபனை-முன்னோட்டம் எல்லாம் எதற்கு என்கிறீர்களா? நான் பெரிய அறிவாளியோ, புகழ் பெற்ற எழுத்தாளனோ இல்லையெனினும், ஓரளவு பத்திரிகை மற்றும் எழுத்துத்துறையில் காலம் தள்ளி வருபவன் என்பதை அனைவரும் அறிவார்கள். என் நினைவுகள் சிலவற்றை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

(வளரும்)

அயரா உழைப்பு அருஞ்சாதனை:சங்கர இராமசாமி

சங்கர இராமசாமி 


1)முதன் முதலில் தாங்கள் கண்ட பிளாக் எது? அதை அறிமுகப்படுத்தியவர்  யார் ?   

2 ) அந்த பிளாக்கில் தாங்கள் வாசித்த முதல் பதிவு எது ? நினைவிருக்கிறதா ?

முதலிரு கேள்விகளுக்கும், எனது முதல் பதிவிற்கும் தொடர்பு இருப்பதால் சற்று விரிவாகவே பதில் சொல்ல வேண்டியிருக்கின்றது.  தயவு செய்து அனுமதியுங்கள்.

மின்னஞ்சலின் பயன்பாடே அறியாதவனுக்கு BLOG எப்படித் தெரியும் ?ஆனந்த விகடனில் ( தற்போது நினைவில் வாழும் ) +-VE அந்தோணி முத்து என்ற மாற்றுத் திறனாளியின் பேட்டி வெளிவந்திருந்தது. பொதிகைத் தொலைக் காட்சியில் “வெளிச்சத்தின் மறுபக்கம் “ என்ற தொடர் மூலம், சமூகத்தின் கீழ்த்தட்டு மக்களையும், இது போன்ற வித்தியாசமானவர்களையும்,  பன்முகத் திறனாளி ,மதுரா டிராவல்ஸ் நிறுவனர், வீ. கே.டி. பாலன்  ஞாயிறு தோறும் அறிமுகப் படுத்தி வந்த காலக்கட்டம் அது. அந்தோணி முத்துவைப் பற்றியும் அவரிடம் குறிப்பிட்டேன். பாலன் ஐயா, “நீ மிகவும் லேட், தற்பொழுது, அந்தோணி முத்து எனது ஊழியர் என்று சொல்லி, அவரது தொலைபேசி எண்ணையும் கொடுத்தார். இவ்வாறாக அந்தோணி முத்துவுடன் நட்பு ஏற்பட்டது. பி.எஸ்.என்.எல். நிறுவனத்திலிருந்து பணி விடை பெற்றிருந்த நேரமது. கணினியில் எப்படியாவது தமிழில் தட்டச்சு செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையின் உச்சக் கட்டத்தில் இருந்தேன். 

அந்தோணி முத்துவிற்க்கு அருணா என்னும் கல்லூரி முதல்வர் கணினியைப் பரிசளித்திருந்தார். சினிமாவில் இசையமப்பாளராக முயற்சித்துக் கொண்டிருந்த முத்து, கணினி வல்லுநரானார். ஏகலைவனாகவே எல்லாவற்றையும் புத்தகங்களின் மூலம் கற்றுக் கொண்டார். பொதிகைத் தொலைக் காட்சியில் இவரது பேட்டியையும் பாலன் ஒளி பரப்பினார்.

எங்கள் நட்பு தொலைபேசி உரையாடலிலேயே தொடர்ந்தது. அப்பொழுதுதான் வலைப்பூவைப் பற்றியும்,  விஸுவின் இலவசத் தமிழ்  அழகி மென்பொருள் பற்றியும், என்போன்றோர் போனோட்டிக் முறைமூலம், தாராளமாகத் தட்டச்சு செய்யலாம் என்றும் வழிகாட்டினார். வலைப்பூவிற்கு தலைப்பொன்று கேட்டார். புனை பெயரில் இயங்குவது நல்லதென்றார். சீராசை சேதுபாலா புனை பெயரானது. “மனித தெய்வங்களும் சில சேகரிப்புக்களும்” என்பது எனது வலைப்பூவின் தலைப்பாயிற்று.

நோக்கப்படியே, நல்ல செயல்களைச் செய்வோர் குறித்த தகவல்களத் தொகுப்பது எமது கடமையாயிற்று. பெரம்பலூர் மாவட்டத்தில் தேனூர் என்னும் கிராமத்தில், “பயிர்” என்னும் டிரஸ்டைத் துவக்கிய செந்தில் குமார் என்பவரது இணையமே நான் பார்த்த முதல் தளமும் ஆனது. எனது முதல் வலைப்பூ பதிவும் அவரது தளத்தைப் பற்றியதே ஆகும். அந்த அறக்கட்டளைக்கு ஆயிரம் ரூபாய் அன்பளிப்பும் வழங்கினேன். தொடர்ந்து வழங்க உறுதியளித்த நான், பின்னாளில் என் வாக்கைப் பல்வேறு காரணங்களால் காப்பாற்ற இயலவில்லை முதற் பதிவு பின் வருமாறு.

http://www.payir.org/aboutus.html  செந்தில் குமார் கோபாலன் என்பவர் துவக்கிய பயிர் ????? ???????? ????????????! ??????? ?????????! <http://rssairam.blogspot.in/2009/11/blog-post.html> 
Posted on 4:50 AM by Sankara RamaSamy with 2 comments <http://rssairam.blogspot.in/2009/11/blog-post.html> 
  <https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuPxacerQv-H2XpNec7BAwBKfukSQHdqPFtIgjwQXHOirWNtSnz5j88aBut1wn3cUvcibm4PR0dqrfhwIWtr5nI5emfcWuBk5BgAgaTzf2vJVBOCpZiurK0ZdoUevvIXyeucvf8ZNr9RhD/s1600-h/ATT00108.jpg>


வயது 31.அமெரிக்காவில் மாதவருமானம், 2 லட்சம்!போதும் என்கிறது,மனம்.சொந்த ஊருக்குத் திரும்புகின்றார்.சுகாதார மையம் துவக்குகின்றார்.முறைசாராக் கல்விப் பயிற்றுவிப்பு மையம் ஒன்றும் அவரால் உருவாக்கப்படுகின்றது.இதன் மூலம் 5-ஆசிரியர்கள்,உள்ளூர்ப் பள்ளி மாணாக்கருக்கு ஆங்கிலம் போதிக்கின்றனர்.நிர்வகிப்பதற்காக சேவை நிறுவனத்தையும் அமைத்துக்கொள்கின்றார்.சொந்தப் பணமே மூலதனம்.


தனக்கென எதுவும் வைத்துக்கொள்ளாமல் கிராம வாழ்க்கை துவங்குகின்றது.வசிப்பதற்கு ஓர் சிறு குடில் மட்டுமே;அதுவும் அவர் பணத்தில்தான்! 3 வேட்டி-சட்டைகள்,ஓர் சாதாரண செருப்பு;இதுவே அவரது தனிஉடைமை.


தனது சொந்தக் கிராமத்திலேயே-அமைக்கின்றார்,ஓர் மென்பொருள் நிறுவனம்.உள்ளூர் இளைஞர் நால்வர் வேலைவாய்ப்புப் பெறுகின்றனர்.


தாய்-தந்தையரை மறந்து விடவில்லை.தாயின் விருப்பப்படி விரும்பிய இடத்தில் ஓர் வீடு;வங்கியில் வாழ்க்கைச் செலவிற்கென்று சிறிது வைப்புநிதி.பெற்றவர்களுக்கு மகிழ்வான வாழ்க்கை ஏற்படுத்திக்கொடுத்தபின்,பள்ளியில் படிக்கும்பொழுது உருவான எண்ணத்தைச் செயற்படுத்துகின்றார்.


திண்ணிய உள்ளம்; எண்ணியதை எய்தியது; 5-ஆண்டுகளில்!கருவியாகத் துணை செய்தது,"பயிர்" என்ற பெயரில்,இவர் உருவாக்கிய அரசு சாரா சேவை அமைப்பு.இந்த நற்செயல்களுக்குச் சொந்தக்காரர்,திரு.செந்தில்,தமிழகத்தின் சொத்து.


தமிழக மாந்தர் சுற்றுலா செல்லவேண்டிய இடம்,தேனூர் என்ற கிராமம்,பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளது. வணங்கிடவேண்டியது, செந்தில்குமார் கோபாலன் என்கிற
35 வயதுடைய மாமனிதனை!


சுதந்திர இந்தியாவில், சொத்து சேர்த்துக் குவித்த அரசியல்வாதிகள்-துணை நின்று வளம் பெற்றோர்,தம் சொத்தில் ஒரு பகுதியினை மட்டும்தமது ஊரின் வளர்ச்சிக்குச் செலவிடத்துவங்கட்டும்!தமிழகம் வளம் அடையும்; வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் சொல்லாமற் கொள்ளாமற் காணாமற் போகும்.


சமூகத்தின்பால் அக்கறை கொண்டோர் சான்றோர் துணைக்கொண்டு அந்தந்தப் பகுதிகளின் தேவைக்கேற்ற செயல்திட்டங்கள் தீட்டலாம்; நிலங்களைத் தானம் பெற்ற வினோபாவின் வழியில்,பொருள்-இடம் தானமாகப் பெற்றுத் திட்டங்களைச் செயற்படுத்தலாம்.அனைத்து மத நிறுவனங்களிடமிருந்தும் வருவாயில் ஒரு பகுதியினைப் பெற்றிடச் சட்டம் இயற்றச் செய்யலாம்.


நாமும் வறுமையற்ற- வளமான-தமிழகம்-இந்தியா குறித்துக் கனவு காணலாம்.அடுத்த தலைமுறையேனும் கல்லாமையும் இல்லாமையும் இல்லாத சமநீதிச் சமூகமாக அமையும்.


பயிர் ஆசிரமம், 
தேனூர் கிராமம், டி.களத்தூர் (வழி),குன்னம் தாலுகா,
பெரம்பலூர் மாவட்டம்-621114.
+91 4327 234644
+91 94449 12672 

இதனைத் தொடர்ந்து கோவை ஆட்டோ தொழிலாளர்களின் தோழர்கள் டிரஸ்ட். அநாதைப் பிணங்களைத் தேடிச் சென்று சட்டப்படி உரிமைகளைப்பெற்று சகல மரியாதைகளுடன் இறுதிக் கடன்களைச் செய்யும் தகவல் பதிவானது.

எழும்பூர் இரயில்வே நிலையத்தில் நேர்மையாக நடந்து கொண்ட துப்புறவுத் தொழிலாளர்கள் பற்றிய தகவல் தொடர் பதிவானது. 

3. மூன்று இலட்சம் பேர் பார்வையிட்ட தங்கள் பிளாக் குறித்து தங்களுக்கு மகிழ்ச்சி உண்டா ?

இந்த நிமிடம் வரை ( 25-04-2013 10.52 ) 3,47,696 பேர் ( 2098 பதிவுகள் ) பார்வையிட்டுள்ளனர் என்பதில் மகிழ்ச்சியே. அழகி விஸு,               ( நினைவில் வாழும் )  +VE அந்தோணிமுத்து, இணையத்தில் அறிமுகமாகி, நேரில் கூடப் பார்த்தறியா நிலையில், வடிவமைப்பை மாற்றி உதவித் தேவையான அறிவுரைகளை வழங்கிவரும் வின் (WIN ) மணி ஆகியோருக்கே இவ்வகையில் நன்றி சொல்லவேண்டும். கணினித் தமிழைக் கற்பித்துவரும் திருச்சி முனைவர், துரை மணிகண்டன் தாம் செல்லுமிடமெங்கும் எமது வலைப்பதிவுகளையும்,  65 வயதையும் எடுத்துக்கூறி பரப்புரை செய்து ஊக்குவித்து வருவதற்கும் நன்றி கூறவேண்டும். 

4 ) பிளாக் கூட சமூகத் தொண்டுதான்  என்று இணைய வெளி கருதுகிறது, தங்கள் நிலைப்பாடு என்ன ?

ஆம் ! நிச்சயமாக ! எனக்கு முற்றிலும் உடன்பாடான கருத்தே ஆகும். 
சமூக வலைத்தளங்களும் ஆபத்துகளும் 

இங்கு அறிவுரை போல எளிதாக கிடைப்பது எதுவும் இல்லை..எப்பொழுதும் கவனம்,கவனம் என்று கூறிக்கொண்டே இருக்கிறோம்..ஆனால் ஏன் எதற்கு என்று யாரும் விளக்கிக் கூறுவதில்லை…அப்படியே யாராவது கூறினாலும் நமக்கு கேட்க பொறுமையும் இல்லை.இப்படி இருக்கையில் இது விழிப்புணர்வோ ,அறிவுரையோ இல்லை ..தகவல்கள்-அவ்வளவே! . 

இன்றைய நிலையில் ஒரு நாளைக்கு இன்டர்நெட் வருபவர்கள் porn sites எனப்படும் மோசமான பக்கங்களுக்கு செல்பவர்கள் 42 % ..தினமும் இதனால் ஈர்க்கப்படும் மாணவர்கள் கோடிக்கணக்கில். இதன் மூலம் அடிமையாகி பிரிந்து போன கணவர்,மனைவியர் ..சிதைந்து போன குடும்ப உறவுகள் ஆயிரக்கணக்கில். ஆனால் வளர்ந்துவரும் டெக்னாலஜி உலகில் இவை இல்லாமல் இனி வாழ்வது கடினமே..இளைய தலைமுறை இணையத் தொடர்பு இல்லாமல் படிக்க,பள்ளிக்கு போக முடியாது என்ற நிலையில்தான் உள்ளனர். 

கிட்டத்தட்ட நிறைய வேலைகள் கம்ப்யூட்டர் மயமாகி விட்டது.அனைத்தும் இதில்தான் சேமிக்கப்படுகிறது. மொபைல், டி.வி இல்லாமல் கிராமத்தில் கூட வாழ்க்கை நடத்துவது சாத்தியம் இல்லை என்றாகி விட்டது. இன்டர்நெட் இல்லாத உலகம் இனி இல்லை என்று கூறும் காலத்தை நெருங்கி கொண்டு இருக்கிறோம். அப்படி இருக்கும் பொழுது இங்கு ஆபத்து அதிகம் பெண்களே,குழந்தைகளே இங்கு வராதீர்கள் என்றெல்லாம் கூறுவது தெருவில் நடக்காதீர்கள் ஆக்சிடென்ட் ஆகி விடும் என்று கூறுவதை போல கேலிக்கூத்து வார்த்தைகள் ஆகிவிடும்.அதே சமயம் நடு வீட்டில் குத்தாட்டம் போடும் டி.வியை அனுமதிக்கும் வீட்டில் இன்டர்நெட் என்றால் மோசமான வஸ்துவைப்போலப் பார்க்கும பெற்றோர்களும் உள்ளனர். 

சமீபத்தில் ஒரு பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து மோசமான தளங்களில் உலவ விட்டதால் சம்பந்தப்பட்ட பெண் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார்.வேறொருவர் தன் மனைவியின் புகைப்படம் மோசமான தளத்தில் இருந்ததால் விவாகரத்து செய்து விட்டார். இவை உண்மை சம்பவங்கள்..இது போன்ற எத்தனையோ வக்கிரங்கள் சமூக வலை தளங்களில் நடக்கிறது. இந்த வக்கிர உலகமும் கூட எத்தனையோ கோடிகளில் நடக்கும் வியாபாரமாகி விட்டது.. தற்பொழுது சுப்ரிம் கோர்ட் கூட தன் கவலையை தெரிவித்து இருக்கிறது. மோசமான பக்கங்கள்,வக்கிர உணர்வுகளை தூண்டும பக்கங்களை தடை செய்வது பற்றிய ஆலோசனை செய்ய வேண்டும் என்று அரசாங்கத்தை கேட்டு கொண்டு உள்ளது. அத்தனை மோசமாக ஊடுருவி இருக்கிறது இதை போன்ற வலை தளங்கள். 

பணம் கொடுத்து போட்டோக்கள் விற்பதை பற்றி நமக்கு கவலை இல்லை. அவர்களுக்கு அது தொழில் .ஆனால் சாதாரண பெண்கள் வாழ்க்கையிள் விளையாடும் பொழுதுதான் பிரச்சனை வருகிறது. பெண்கள் குனிந்தால்,திரும்பினால் ,புடவை நழுவினால் ,மால் போன்ற இடங்களில் மேலே இருந்து என்று எத்தனையோ கோணங்களில் படம் பிடித்து அதை மார்பிங் மூலம் மேலும் கவர்ச்சியாக்கி இணையதளங்களில் வெளியிடுவது அதிகமாகிக்கொண்டே போகிறது. தடுக்கப் பெண்கள் பர்தா போடுவதை தவிர வேறு வழி இல்லை.. 

அது மட்டும் இல்லாமல் நாம் எத்தனை கவனமாக போட்டோக்கள் வைத்து இருந்தாலும் சமூக வலை தள திருடர்கள் பெண்கள் பெயரில் இருக்கும் அக்கௌன்ட்களை ஹேக் செய்து நம் பெர்சனல் போட்டோக்களை திருடி மார்பிங் செய்து அதற்கென்று இருக்கும் பக்கங்களில் வெளியிட்டோ, இல்லை அதை விற்றோ பணம் சம்பாதிக்கும் போக்கு அதிகரித்துதான் வருகிறது.சாதாரண பெண்களின் படங்களை பேஸ்புக் பக்கங்களில் வெளியிட்டு அந்த பெண்ணை பற்றி மோசமான கமெண்ட்கள் மூலம் மன வக்கிரங்களை கொட்டும் அவலங்களும் அதிகமாக நடக்கிறது. 

இதற்கிடையில் ஆண்களுக்கு கூட இப்பொழுது ஆபத்தாம்..அவர்களுக்கும் இது போன்ற மோசமான பக்கங்கள் இருப்பதை கேட்டு அதிர்ச்சி ஆகிவிட்டது. இந்தியா எங்கு போய் கொண்டு இருக்கிறது என்று.அதே சமயம் குழந்தைகள் படங்களை வக்கிரமாக மாற்றும் கொடுமைதான் இதன் உச்சகட்டம்.. 

அந்த நிகழ்வுகளை கேட்டு அதிர்ந்துவிட்டேன். இப்போதெல்லாம் மூன்று,ஐந்து வயது குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யும் வக்கிரங்கள் நடைபெறும் செய்திகளை தினம் கடக்கிறோம். நாடு எங்கு போய் கொண்டு இருக்கு ? சட்டங்கள் என்ன செய்து கொண்டு இருக்கு என்பதை நினைக்கும் பொழுது வேதனையாக இருக்கு..நம் சாதரணமாக பகிரும் நம் குழந்தைகளின் படங்கள் அவர்கள் வாழ்க்கையில மிகப் பெரிய பாதிப்பும், மன உளைச்சலும் ஏற்படுத்தும் என்றால் எத்தனை பெரிய வேதனை ? 

இதற்கு அரசாங்கம் நினைத்தால் கண்டிப்பாக முற்றுபுள்ளி வைக்க முடியும். சைனாவில் நிறைய வலைத்தளங்களுக்கு தடை உண்டு..அதே போல இங்கேயும் மோசமான வலைத் தளங்களுக்கு தடையும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் இன்னும் அதிக கட்டுபாடுகளும் கொண்டு வந்தால் மேலும் உயர் இழப்புகளையும்,பெண்கள், குழந்தைகள் மேல் பாயும் வக்கிரங்களையும் தடுக்க முடியும்

நன்றி :உஷா  திருநெல்வேலி.  

எனக்கு வந்த தகவலை, உடனடியாக, தமிழ் மின் குழுமத்திற்கும், சமூக அக்கறை உள்ள பெண்களுக்கான மாத இதழைத் துணிச்சலுடன் நடத்திவரும் பாவையர் மலர் ஆசிரியர் வான்மதி அவர்களுக்கும், ம.பொ.சி. அவர்களின் பேத்தி T. பரமேசுவரி அவர்களுக்கும் இன்னும் பல சமூக ஆர்வலர்களுக்கும் அனுப்பப்பட்டுவிட்டது.

 அவசியமான தகவல்களை உலகெங்கும் பரப்புரை செய்ய வசதியாய் உள்ளது. வலைப்பூ, இணையம், இணைய தளம், இணைய இதழ் எதுவாக இருப்பினும் ஒரே சக்தியும் வலுவும் இருப்பதாகவே கருதுகின்றேன். தகவல்கள் உண்மையாய் இருக்க வேண்டும், அவ்வளவுதான். தற்பொழுது அரசாங்கமே  வலைத் தளங்களின் வலிமை கண்டு அஞ்சுகின்றது. எடுத்துக்காட்டாக, இந்திய வலைத்தளங்களை சீனாவில் பார்க்க முடியாது. ஆனால், இந்திய சீன நட்புறவிற்காக தமிழ் ஒலிபரப்பைக் கூட நடத்துகிறது. போட்டிகளையும் நடத்துகின்றது. எல்லையில் படைகளையும் குவிக்கின்றது. பதற்ற நிலையையும் ஏற்படுத்துகின்றது. இதை எல்லாம் எப்படி எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை.. இத்தனைக்கும் சீனா ஒரு பொதுவுடைமை நாடு.                                                               

4. இனிவரும் உலகம் காகித வாசிப்பை சிறுகத் சிறுகத் துறந்து கணினி இணையம் என்று மாறிவிடும் என்று ஒரு கருத்து நிலவுகிறது. அதைத் தாங்கள் ஏற்கிறீர்களா ?

ஏற்கவில்லை.  கணினி வந்துவிட்டதால் நோட்டுப் புத்தகங்களின் உபயோகங்கள் பள்ளிக்கூடங்களில் இல்லாமற் போய்விட்டதா ? பெரிய திரை வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வந்துவிட்டதால் திரையரங்குகள் முற்றிலுமாக இல்லாமற் போய்விட்டதா ? இலவச கருப்பு-வெள்ளைத் தொலைக்காட்சிப் பெட்டிகளைத்தானே இன்னும் பலர் பயன்படுத்துகின்றனர். ஆகாய விமானங்கள் வந்துவிட்டன என்று எல்லோராலும் அதைப் பயன்படுத்த முடிகின்றதா ? பஸ், டிரெயின் ஏன்..மாட்டுவண்டிப் பயணங்கள் கூடத் தொடரத்தானே செய்கின்றன. காகித வாசிப்பிற்காக வருகின்ற வார மாத இதழ்கள் இணையத்தையும் பயன்படுத்துகின்றனவே தவிர, காகித வாசிப்பிற்காக இதழ்களை வெளியிட முடியாதவர்கள்தான் இணைய இதழ்களை நடத்துகின்றனர். அவர்களும் ஒரு கட்டத்தில் நூல் வெளியீட்டு விழாக்களை நடத்தத்தானே செய்கின்றனர். “கிண்டில் செயலி” கிழக்கு பதிப்பகம் செயல்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. முழுமையாகச் செயல் முறைக்கு வந்துவிட்டால்கூட, அவற்றைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை விமானத்தில் பயணிப்போருக்குச் சமமானதாகவே இருக்கக்கூடும். அண்மையில் படித்ததோர் செய்தி. 

விருத்தாசலம், மே 31: விருத்தாசலத்தை அடுத்த சாத்துக்கூடல் கிராமத்தில் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 திருமுதுகுன்றம் மணிமுத்தாறு இலக்கிய வட்டம் சார்பில், கவிஞர் சாத்துக்கூடல் கா. இளையராஜா எழுதிய "கடவுளும் வறுமையும்" எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் மருத்துவர் செல்வம் கவிதை நூலை வெளியிட ராஜேந்திரன் பெற்றுக்கொண்டார். கவிஞர் இளையராஜா ஏற்புரை வழங்கினார்.

 விழாவில் தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்க மாநில ஒருங்கிணைப்பாளர் கவிஞர் த. பழமலய், கவிஞர் பட்டி சு. செங்குட்டுவன், கவிஞர் ஆறு. இளங்கோவன், கவிஞர் சி. சுந்தரபாண்டியன், கவிஞர் அரங்கநாதன், கவிஞர் மு. புதூர்சாமி, கவிஞர் ராம. அசோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். 

கெளதம நீலாம்பரன் என்ற எழுத்தாளரைத் தமிழுலகிற்குத்தந்த சிற்றூர் “சாத்துக்கூடல்”. இந்த இலக்கிய நிகழ்ச்சியை நடத்திய அனைவருக்கும் இந்தச் செய்தி தெரிந்திருக்குமா இல்லையா என்பதல்ல இப்பொழுது பிரச்சினை. அந்தச் சிற்றூரில்கூட  காகிதத்தில் அச்சேறிய நூல் ஒன்று வெளியிடப்பட்டிருக்கின்றது. தங்கள் வினாவிற்கு, விடையாக இது ஒன்றே போதும். மேலும் பொள்ளாச்சி நஜன் என்கிற தமிழ்க்கனலை அணுகினால் எத்தனை புதிய வார மாதச் சிற்றிதழ்கள் வருகின்றன ? இடையில் நின்றுபோனாலும் புதிது புதிதாக வந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதைப் பட்டியலிட்டுக் காட்டுவார். எனவே, காகித வாசிப்பு என்பது மானுடம் உள்ளம் வரை தொடரும்.

5. தாங்கள் இணையத்தின் மூலம் வாசகர் எண்ணிக்கை பெருக எந்த உத்தியைக் கையாண்டிருக்கிறீர்கள்? அதில் வெற்றி கண்டதுண்டா?

அதற்கென தனியாக எந்த உத்தியையும் கையாளவில்லை. வலைப்பூவில் பதிவிடுவேன். பின் டிவிட்டருக்குக் கொண்டு செல்ல  உள்ள வசதியைப் பயன்படுத்துவேன். பின்னர் கூகிள் + க்கும் செல்ல முடியும். மனித தெய்வங்களும் சில சேகரிப்புகளும்,என்று துவங்கி, செய்திச் சுரங்கமாகவும், தற்பொழுது தமிழ்ச் செய்திகளாகவும். தொடர்கிறது. முன்பெல்லாம் நாள்தோறும் சுமார் ஆயிரம்பேர் பார்வையிடுவர். தமிழ்ச் செய்திகளாக்கியபின் 200 பேர்தான் வருகின்றனர். அதிகமாக வரும்பொழுது மகிழவும் இல்லை. குறைந்தபோது வருத்தமும் இல்லை. பதிவிடப்படும் தகவலின் தரம் எப்பொழுதுமே குறைந்ததில்லை என்பதே மகிழ்ச்சி. பதிவிடாத நாட்களிலும் கூட பார்ப்போர் வந்துகொண்டுதான் இருக்கின்றனர்.

6. இந்தத் தலைமுறை வாசகர்கள் பொதுவாகவே மேலெழுந்த வாரியாகவே படிக்கிறார்கள். அதை மாற்ற முடியுமா ?

மேலெழுந்தவாரியாக என்று சொல்ல முடியாது. செல்லும் பாதையைத் தீர்மானித்து விடுவதால் தங்களுக்குத் தேவையானவற்றை முழுமையாகப் படிக்கின்றார்கள். பொதுவாக ஒன்றைச் சொல்லலாம்; நமக்குத் தெரிந்தவை எல்லாம், பழசு. தெரியாதவை எல்லாம் புதுசு.இது எல்லோருக்குமே பொருந்தும். ”குறிக்கோளிலாது கெட்டேன்” என்பது சமயக் குரவர் நால்வருள் ஒருவர் கூற்று. நாம் எந்த மூலைக்கு ? மூத்தோர், பொறுப்பில் உள்ளோர், தமது சந்ததிக்கு, இளையவர்களுக்கு தக்க வழிதனைக் காட்ட வேண்டும். இல்லாது போயின் அவர்கள் செல்லும் பாதையில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டினால் மட்டும் போதும். பல சமயங்களில் மெளனம் கூட நல்லதுதான். ஏனெனில், இன்றைய இளைஞர்களுக்கு நல்லதும் / அல்லதும் தெரிகின்றது. மதிப்பெண்கள் அடிப்படையில் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முறையை மாற்றிவிட்டால் எல்லாமே சரியாகப் போய்விடும்.

7. இதுவரை தாங்கள் போட்ட பதிவுகளில் அப்பாடா நாம் உருப்படியான பதிவு ஒன்றைப் பதிந்திருக்கிறோம் என்ற திருப்தி தங்களுக்கு நிச்சயம் வந்திருக்கக்கூடும். அது எது ?
http://rssairam.blogspot.in/2009/12/250.html

இராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் 250/-ரூபாயில் முழு உடல் பரிசோதனை!
Posted on 4:19 AM by Sankara RamaSamy with No comments

வருமுன் காக்க நினக்கும் அன்பர்கள். நம் உடல்நிலை எவ்வாறு உள்ளது எனத் தெரிந்துகொள்ள விரும்பும் அன்பர்கள், 250ரூபாய் செலவில், முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளலாம். பெரிய தனியார் மருத்துவ மனைகளில் உள்ள ஜோடனைகள் கிடையாது, அவ்வளவுதான்.

முழு உடல் பரிசோதனக்குக் காத்திருக்கும் அறை தனியார் மருத்துவ மனைகளப்போன்றே தூய்மையாகவும் உள்ளது.பிற இடங்களிலும் இந்த்க் கவனத்தைச் செலுத்தினால் இன்னும் நன்றாக இருக்கும்.

நீங்கள் ஒருமுறை இராயப்பேட்டை அரசு மருத்துவ மனை, முழு உடல் பரிசோதனக்குச் சென்றுவந்தால், அரசு மருத்துவ மனைகளின்மீது உள்ள வெறுப்புக்கள் நீங்கிவிடும். அவ்வளவு அன்பான-கனிவான-இனிமையான பாரபட்சமற்ற வரவேற்பு..
ஓரிரு அசௌகரியங்கள் இருப்பது போல் சிலருக்குத் தோன்றக்கூடும். அதற்குக் காரணம், ஆங்கே இருக்கும் இடவசதிக்குறைவே தவிர, ஊழியர்கள் அல்ல. இருப்பன கொண்டு சிறப்புறக் கனிவுடன் பணியாற்றி வருகின்றனர்.

40-வயதைத் தொட்டவரா ? உத்தரவின்றி உள்ளே செல்லலாம். தினமும் காலை 8.00 மணி முதல் 12.00 மணிக்குள் உரிய பிரிவிற்குச் சென்று பணம் செலுத்தி் முன்பதிவு செய்து கொள்ளவேண்டும். அடுத்த ஒரு வாரத்தி்ற்குள் ஏதெனும் ஒருநாள் தேதி கிடைத்துவிடும்.

குறிப்பிட்ட நாளில் காலை 7.30/8.00 மணிக்குள் வெறும் வயிற்றுடன்-எதுவும் சாப்பிடாமல்-தாண்ணீர், காப்பி,டீ் போன்றவை கூட அருந்தாமல் செல்லவேண்டும். சோதனைக்காகச் சிறிதளவு மலத்தினை எடுத்துச் செல்லவேண்டும். குடிப்பதற்காக 2 லிட்டர் சுத்தமான தண்ணீரும் கொண்டு செல்தல் அவசியம்.

சிறுநீர்,ரத்தம் சோதனைக்குக் கொடுத்தபின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் குடித்துக் கொண்டெ இருக்கலாம். ஆனால்,ஸ்கேன் எடுத்து முடிக்கும் வரை சிறுநீர் கழிக்கக் கூடாது.

COMPLETE GENERAL EXAMINATION :- 1. HAEMOGRAM-HAEMOGLOBIN,TOTAL COUNT,DIFFERENT COUNT,BLOOD PICTURE. 2.BIOCHEMICAL TESTS:- SUGAR(F), UREA,CREATININE,CHOLESTEROL,TOTAL PROTEINS, ALBUMIN, GLOBULIN 3.GENERAL TESTS:- BLOOD GROUPING,RH.TYPING.COMPLETE URINE ANALYSIS,STOOL ANALYSIS 4.OTHERS:- ECG RESULTS,X-RAY CHEST,ULTRA SONOGRAM-WHOLE ABDOMEN, MANTOUX (FOR CHILDREN)

பரிசோதனை செய்த மறுநாள் காலை 10 மணிக்கு மருத்துவ அறிக்கையும், மருத்துவரின் ஆலோசனையும் கிடைக்கும்.தினமும் 15-பேருக்குக்கு முழு உடல் பரிசோதனை நடக்கின்றது.ஏற்பட்டுள்ள் விழிப்புணர்வால் ஒருவாரம்வரை காத்திருக்கும் அளவிற்கு மக்கள் இராயப்பேட்டை அரசு மருத்துவ மனயைப் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். இதற்கு யாருடைய சிபாரிசும் தேவையில்லை.


ஆனால், எனது ஆசையோ அதிகமானது. ஊருக்கு ஊர் அரசு பிரசவ ஹாஸ்பிடல் உள்ள இடங்களில் எல்லாம், சாமன்யனுக்கும், இலவசமாக, முழு உடல் பரிசோதனை செய்திடும் வசதி வேண்டும். அந்த நிலைமை எய்தும் வரை, அழைக்கு்ம் ஊர்களுக்கெல்லாம் சென்று முழு உடல் பரிசோதனை செய்திட ஊர்ந்து திரியும் மருத்துவப் பரிசோதனைக்கூட வசதிகள் கொண்ட வேன்கள் தயார் நிலையில் வ்ட்டங்கள் (taluk levels) தோறும் இருந்திடல் வேண்டும். உயிரின் மதிப்பு அரசனுக்கும் ஆண்டிக்கும் ஒன்றுதானே?

ஆங்காங்கே இலவச மருத்துவ முகாம்களை நடத்தும் அன்பு உள்ளங்கள், அதற்குப் பதிலாக, நாள்தோறும் அரசு மருத்துவ மனைகளில் முழு உடல் பரிசோதனை செய்திட சிலருக்குப் பணம் செலுத்தலாம். உங்கள் பகுதியில் உள்ள ஏழை/பாழைகளுக்கு உதவலாம். உங்கள் செலவில் பலர் பயனடைவர்.உங்களுக்குச் சிரமமும் குறையும்.

அண்மையில் நெல்லூரில் நிகழ்ந்த முகாமின்போது ஏற்பட்ட கண்பார்வை பறிபோனது போன்ற சிக்கல்களையும் எதிர் கொள்ள வேண்டாம்.

நோயில்லா உடலிருந்தால் நூறுவரை காதல் வரும்" என்பதுதானே,நமது, கண்ணதாசனும் நமக்குக் கூறிச் சென்றது. உயிர் உள்ளவரை வாழ்க்கையைக் காதலித்திட ஆண்டிற்கொருமுறை
முழு உடல் பரிசோதனயைச் செய்துகொள்வது நல்லதுதானே நண்பர்களே? 

2. http://rssairam.blogspot.in/2011/01/blog-post_17.html 


இரத்த சரித்திரங்களான தியாகிகள் தினங்கள்! இந்தியா, ஈரான், அல்பேனியா, மியான்மர், ஆர்மேனியா, வியட்நாம், பனாமா, பங்ளாதேஷ், லெபனான்-சிரியா.
Posted on 4:18 AM by Sankara RamaSamy with 2 comments


இந்தியா

30-01-2011-சர்வோதய தினம்! துப்பாக்கிக் குண்டுக்கு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பலியான நாள். இந்தியாவில் தியாகிகள் தினமாக நடைமுறையில் உள்ளது. மறந்துவிட்ட ம்ஹாத்மாவை தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செய்யும் நாள்.

சுதேசி என்ற ஸ்வதேஷி, சுய ஆளுமை என்ற ஸ்வராஜ், எல்லோருக்கும் நன்மை என்ற சர்வோதயா, ஆத்ம வலிமை என்ற சத்யாகிரகம் இவையே காந்திஜியின் அஹிம்சைக் கோட்பாட்டின் அடிப்படைத் தத்துவங்கள்.

மலர்த் தூவலுடன் நின்று விடாமல், இன்றையச் சூழலில் காந்தியப் பாதையின் அவசியத்தையும், பயன்படுத்திடும் புதிய வழி முறைகளையும் சிந்தித்துச் செயல்பட்டால் இந்தியாவின் சுய ஆளுமை நிலைக்கும்.

ஈரான்

KHORRAMSHAJHR ஈரான் நாட்டின் ஓர் துறைமுக நகரம். ஈராக் நாட்டவரால் அபகரிக்கப்பட்ட நகரம். இதனை மீண்டும் தன்வசப்படுத்திய நிகழ்வு. (26-10-1980) ஆண்டுதோறும் அக்டோபர்,26- ஈரானியரது தியாகிகள் தினம்!

அல்பேனியா

QEMAL STAFA- அல்பேனியாவின் செண்பகராமன் பிள்ளை/ நேதாஜி என்று அழைக்கலாம்.அல்பேனிய இளைஞர் தலைவர். அல்பேனியாவில் பொதுவுடைமைக் கட்சியினை நிறுவியவர். அல்பேனிய தேசிய விடுதலை இயக்கப் போராளி. இத்தாலிய பாஸிச இயக்கத்தினரால் கொல்லப்பட்டவர். அல்பேனியத் தலைநகர் TIRANA-வில் ஓர் வீட்டில் கொலை நிகழ்வு.05-05-1942. அல்பேனிய நாட்டின் தியாகிகள் தினம் மே, 5.

மியான்மர்(பர்மா)

பர்மிய சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் எழுவர் உட்படப் பலர் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியான நாள், 19-07-1947. மியான்மர் நாட்டின் தியாகிகள் தினம் ஜூலை,17.

BANGALATHESH-பங்ளாதேஷ்

DHAKA மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையிலிருந்து புறப்பட்டது, ஓர் ஊர்வலம், 21-02-1952-ல்! பெங்காலி தேசிய மொழியாக்கிடுவ்தே அவர்களது குறிக்கோள். வழக்கம்போல் காவலரின் துப்பாக்கிச் சூடு. ABDVS SALAM, RAFIQ UBBIN AHAMED, SOFIUR RAHMAN, ABDUL BARKAT, ABDUL JABBAR -உள்ளிட்ட பலர் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலி. தாய் மொழிப் போராட்டம் துவக்கப்பட்ட நாள். பங்க்ளாதேஷின் தியாகிகள் தினம், பிப்ரவரி,2. மொழிப்போர் நாளாகவும் நினைக்கப் படுகின்றது.

UNESCO- ஐக்கிய நாடுகள் அமைப்பு, அனைத்துலக தாய்மொழி நாளாக பிப்ரவரி 21-ஐ, அமுல்படுத்தியது. 17-11-1999-ல் யுனெஸ்கோ இதற்கான தீர்மனத்தை ,பங்களாதேஷ் உட்பட 28 நாடுகள் ஆதரவுடன் எதிப்பு எதுவுமின்றி நிறைவேற்றியது.

அர்மேனியா (ARMENIA)

OTTOMAN EMPIRE TURKEY 1915-1923 காலக் கட்டத்தில் அர்மேனியர் மீது இனப்படு கொலைத் தாக்குதலை நிகழ்த்தியது. இன்றைய இலங்கைத் தமிழர்களின் நிலைமையில் ,அன்றைய் ஆர்மேனியர்கள் உலகம் முழுவதும் அடைக்கலம் தேடிச் சென்றுள்ளனர். பலியானோர் எண்னிக்கை இரண்டு மில்லியனுக்கும் மேல் என்பது தகவல்.ஒட்டோமன் தலைநகர் கான்ஸ்டாண்டிநோபிளிலிருந்து அர்மேனிய அறிவுஜீவிகள் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட நாள், 24-04-1915. வரலாறு ரெட் சண்டே என்று கட்டியம் கூறுகின்றது ஆர்மேனியர்களது தியாகிகள் தினம், ஏப்ரல்,24.

இலங்கைத் தமிழர்களைப்போல் உலகம் முழுவதும் அர்மேனியர் பரவி உள்ளனர். அர்மேனிய இனப்படுகொலை நிகழ்வுகள் அவர்களின் நெஞ்சில் அழிக்க முடியாத வடுக்களாகத் தலைமுறைக்கும் தொடர்கின்றன.

இன்றளவும் 21-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் அருங்க்காட்சியகங்கள், நினைவுத்தூண்கள், கட்டிடங்கள் உருவாக்கிக் கொண்டு வருகின்றனர்.(1938-2010 வரை.) கடைசியாக 2010-ல் நிர்மாணிக்கப்பட்ட நினைவுச் சின்னம் கீழே உள்ளது.



In 2010 was erected in Mislata (Valencia) in Spain the first monument commemorating the Armenian genocide. The sculpture, three meters high, is in the gardens of the Garden of Sendra, in the old town.


வியட்நாம்

ஹோஸிமின் நாடு என்று போற்றப் படுவது. அமெரிக்காவின் நீண்ட கால ராணுவ நேரடித் தாக்குதலால் சீரழிக்கப்பட்ட நாடு. அமெரிக்காவின் போரினைத் தனது கொரில்லா யுத்த தந்திரத்தால் எதிர் கொண்ட நாடு.

புலியை முறத்தால் விரட்டியடித்த வீரத் தமிழ் மங்கை அந்தக் காலத்தில் நிச்சயம் வாழ்ந்திருக்கக்கூடும் என்ற எண்ணத்தை வலுவாக்கிய மகளிரைக் கொண்ட நாடு.

அமெரிக்காவைப் புறந்தள்ளிய நாடு. வீர வியட்நாமின் போர்த்தியாகிகள் தினம், ஜுலை,27. ஜூலயைத் தேர்ந்தெடுத்தற்கான காரணம் தெரியவில்லை.

ஒர் திரைப்படத்திற்கு வியட்னாம் வீடு என்று பெயர்வைத்ததன் மூலம், வீரத்தின் விளைநிலமாம் வியட்னாமியரின் வாழ்வாதாரத் தற்காப்புப் போர் கொச்சைப்படுத்தப் பட்டது. வியட்நாம் யுத்த பூமியாக்கப்பட்டதே அன்றி, வியட்நாமியர் கலவரம் எதுவும் செய்யவில்லை.

தமிழகத்தில் சிலர் வியட்நாம் வீடு திரைப்படத்தின் பெயரை மாற்ற முயன்றும் வெற்றிபெற முடியவில்லை.


இந்திரா அரசின் அவசரகாலப் பிரகடனத்தை ஆதரித்துச் சேர்ந்தும் செயலாற்றிவிட்டுப் பல ஆண்டுகளுக்குப்பின் எமர்ஜென்சியை ஆதரித்தது தவறு என்று நேஷனல் கவுன்சிலில் தீர்மானம் போட்டது, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி.

அதே போன்று, வியட்நாம் வீடு படத்தின் பெயரை இப்பொழுது கூட மாற்றிக் கொண்டு அதன் தயாரிப்பாளர்கள் பிராயச்சித்தம் தேடிக்கொள்ளலாம்.

வியட்னாம் வீடு சிவாஜி நடித்த வெற்றிப் படமும் கூட.

தலைமுறையையே நாசமாக்கித் தமிழ்ப் பண்பாட்டையே சீரழித்துக் கொண்டிருக்கும் சாராய சுனாமிக்கே அடிமையாகிவிட்ட தமிழன், திரைப்படப் பெயரிலா அக்கறை காட்டுவான்? டெலிவிஷப் பெட்டிகள் முன்னால் அமர்ந்து வேடிக்கை பார்க்கவே அவனுக்கு நேரம் போதவில்லையே ?

பனாமா-PANAMA

மத்திய அமெரிக்காவின் தென்கோடியில் உள்ள குடியரசு நாடு. பனாமா கால்வாய் 1904-1914 காலத்தில் அமெரிக்க ராணுவப் பொறியாளர்களால் கட்டப்பட்டது. 1979-வரை panama canel zone அமெரிக்காவின் நிர்வாகத்தில் இருந்தது. அதன் பின்னர் 1999 வரை அமெரிக்க-பனாமா கூட்டு நிர்வாகம். 1964 ஜனவரி 9-லிருந்து பனாமா குடியரசின் நேரடி நிர்வாகம். என்ணற்ற போராட்டங்கள். சிக்கல்கள்.உடன்பாடுகள் இறுதியில் இறையாண்மை உறுதிப்பாடு. இவர்களது தியாகிகள் தினம், ஜனவரி,9.

லெபனான், சிரியா


டெமாஸ்கஸ் பெருநகரத்தில் சிரியாவின் தேசியவாதிகள் பலருக்கு நிறைவேற்றப்பட்டது மரண தண்டனை. ஒட்டோமன் ஆக்கிரமிப்பாளர்களால்! 06-05-1916. இவ்ர்களது தியாகிகள் தினம் , மே, 5.


இந்து மதவெறியன் கோட்சேவின் குண்டுக்குப் மகாத்மா பலியான நாள், ஜனவரி,30. தியாகிகள் தினமாகவும், சர்வோதய தினமாகவும் சிந்திக்கப்படுகின்றது. இதே போன்று பிற நாடுகளில் ...தேடியதன் விளைவே இந்தப் பதிவு.

அர்மேனியர்கள் இனப்படுகொலைக்கு ஆளானது இலங்கைத் தமிழர்களை நினைவூட்டுகின்றது.

முள்ளி வாய்க்கால் உலகத் தமிழர்களிடம் ஏற்படுத்திய கொதிப்புணர்வின் குறியீடு என்று முழங்குகின்றது, தென் ஆசிய செய்தி மடல். அவர்களுக்காக உயிர்த் தியாகம் செய்த 19 தியாக தீபங்களுக்கு தஞ்சைத் தரணியில் வருகின்ற மே மாதம் 17- திகதி நினைவுச் சின்னம் அமைக்கின்றது, பழ.நெடுமாறனைத் தலைவராகக் கொண்ட உலகத் தமிழர் பேரமைப்பு.(17-05-2011).

அர்மேனியர்களைப் பின்பற்றி நெஞ்சங்களை ஆற்றுப்படுத்திட உலகம் எங்கும் எழுப்பப்போகும் நினைவுச் சின்னங்களின் ஆரம்பம்தான் தஞ்சை என்ற எண்ணமே இதயத்தில் தோன்றுகின்றது.

என் வலைப்தகவலைப்பூ வழிகாட்டி மறைந்த பாசிட்டிவ் அந்தோணி முத்து இருந்திருந்தால், இந்தப் பதிவினை நிச்சயம் மாஸ்டர் பீஸ் என்று பாராட்டியிருப்பார்.

அதிகாலை இரண்டு மணியிலிருந்து நெட்டில் சேகரித்த தகவல்கள் இவை. இப்பொழுது நேரம் காலை 09.03 நிமிடங்கள். எனது ஆறு மணி நேர உழைப்பின் வெளிப்பாடு இந்தப் பதிவு. சிறப்புத் தகவல்கள்
Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook
This entry was posted in : சிறப்புத் தகவல்கள்
Newer Post Older Post Home
2 comments:

    மு.சிவலிங்கம்January 19, 2011 at 12:16 PM

    அன்புத் தோழருக்கு,

    ஆறு மணி நேரத்தில் நீங்கள் தொகுத்துத் தந்த விவரங்களைக் கொண்டு அறுநூறு பக்கங்களில் ஒரு வரலாற்று நூலே எழுதி விடலாம். பலரும் அறிந்திராத வரலாற்று நிகழ்ச்சிகள். பல நாடுகளில் உன்னத லட்சியங்களுக்காக இன்னுயிர் ஈந்தவர்களின் வரலாற்றைத் தொகுத்துப் படிக்கும்போது நெஞ்சு நிறைகிறது. இணையமும் வலைப்பதிவுகளும் குப்பை கூளங்களாய் ஆகிவரும் இந்நாளில் அதில் புதைந்து கிடக்கும் மாணிக்கங்களைத் தோண்டியெடுத்து வலைவாசிகளுக்கு காணிக்கையாக்கிவரும் உங்கள் முயற்சிகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

    தோழமையுடன் மு.சிவலிங்கம்.
    Reply
    சீராசை சேதுபாலாJanuary 19, 2011 at 12:28 PM
(Continued)
Interview: Innaiyaveli

    








Saturday 27 April 2013

விக்ரமாதித்யன் கவிதைகள்



விக்ரமாதித்யன்
தமிழில் கவிதை எழுதுபவர்களில் மிக அதிகமாக எழுதுபவரும் மிகச் சரளமாக எழுதுபவரும் மிக இயல்பெழுச்சியோடு எழுதுபவரும் விக்ரமாதித்யன் என்பது இந்த எண்ணிக்கைப் பெருக்கத்திலிருந்து கண்டடைந்த முதல் செய்தி. கவிஞனாகவன்றி தனக்கு வேறொரு பொது அடையாளமில்லை என்பதை இருப்பின் வாயிலாகவும் எழுத்தின் வாயிலாகவும் நிறுவுவது மட்டுமல்லாமல் அதைத் தொடர்ந்து நினைவுபடுத்திக் கொண்டுமிருக்கிறார்

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் விக்ரமாதித்யன் நவீன தமிழ்க்கவிதையில் புறக்கணிக்க முடியாத ஆளுமை. கவிதையின் பாடுபொருட்கள் பற்றிய கருத்தை ஒதுக்கிவைத்துப் பார்த்தால் இவரளவுக்கு இயல்பெழுச்சியுடன் எழுதியவர்கள் குறைவு. விக்ரமாதித்யனின் கவி ஆளுமையின் முதன்மையான கூறு இந்த இயல்பெழுச்சி. இதிலிருந்தே சரளமும் எண்ணிக்கையும் உருவாகின்றன. இதன் விளைவாக நவீன காளமேகமாக இவரை உருவகிக்கலாம் என்ற குதர்க்கமான யோசனையும் எழுகிறது.

வாழ்க்கை, இலக்கியம் இரண்டும் வேறுவேறு. ஆனால் ஒன்று. இந்த புதிரான சமன்பாட்டை தன் இருப்பிலும் எழுத்திலும் ஒரே சமயம் தீர்த்துக்கொள்ள முயல்கிறவர் இவர். இரண்டும் ஒன்றையொன்று முரண்பட்டும் ஒன்றையொன்று வழிநடத்தியும் நகர்கிற அபாயகரமான விளையாட்டாகத் தொடர்கின்றன. விளையாட்டில் அடையும் வெற்றிகள் பற்றி விக்ரமாதித்யன் தம்பட்டமடித்துக் கொள்வதில்லை; தோல்விகள் குறித்துப் புலம்பாமலுமில்லை. வாழ்வின் அவலங்களைக் கவிதையிலும் கவிஞனாக இருப்பதன் சிக்கல்களை வாழ்வின் தருணங்களிலும் உணர்கிற ஆகத்தொகை இவரது இருப்பு. இதுவே தனது விதி என்றும் ஏற்றுக்கொள்கிறார். அவரவர் குணாம்சம்தானே அவரவர் விதி.

தமிழிலக்கிய மரபில் நாடோடி மனத்துடன் அலைந்த பாணர்களின் வாழ்க்கையோடு தான் ஒப்பு நோக்கிப் பேசப்பட விக்ரமாதித்யன் உள்ளூற ஆசைகொண்டிருப்பாரோ என்றும் சமயங்களில் தோன்றுவதுண்டு. தமிழ்க் கவிதை மரபின் இடையறாத தொடர்ச்சியாகத் தன்னை நிறுவிக்கொள்ளும் நியாயமான உரிமைகோரல் இதற்குக் காரணமாக இருக்கலாம். நவீன தமிழ்க் கவிதை மேற்கத்திய பாதிப்பின் விளைவு என்று குறிப்பிடப்பட்டாலும் அது தமிழ்மனமும் வாழ்வும் சார்ந்தது என்று எழுதத் தொடங்கிய காலம் முதல் வாதாடி வருபவரான விக்ரமாதித்யன் அவ்வாறு ஆசைகொள்வதும் இயல்பானது.

நவீன கவிஞர்களில் மிகுந்த இயல்பெழுச்சியுடன் எழுதக்கூடிய சிலரில் விக்ரமாதித்யன் ஒருவர். அதை நிறுவும் வகையில் எழுதியிருப்பவரும் எழுதிவருபவரும் கூட. இந்த இயல்பெழுச்சியை தனக்கே குந்தகமாக ஆக்கிக் கொண்டிருப்பவரும் அவர்தாம். கவிதைக்கான உந்துதலின் பொறியெழுந்ததும் அது அனுபவமாகக் கனன்று சுடர் கொள்வதற்குள் ஊதி எரித்துத் தீர்க்கிறார்; அல்லது புகைந்து கரையச் செய்கிறார். இது அவரது கவிதை மனநிலையில் தவிர்க்கவியலாத ஒன்று என்பதை அவரது கவியுலகை உணரும் சீரிய வாசகன் அறிய முடியும். கூறியது கூறலும் மிகைபடக் கூறலுமாக அவர் கவிதைகள் தென்படுவதன் காரணமும் இதுவாக இருக்கலாம். இதைக் கடந்தும் அவரால் எழுத முடியும் என்பதற்கான சான்றுகளாக உள்ள கவிதைகளும் அதிகம். இவைதாம் விக்ரமாதித்யனை தமிழில் பொருட்படுத்தத் தகுந்த கவிஞராக நிலைநிறுத்துகின்றன.


சமகாலத் தமிழ் வாழ்வின் சிக்கல்களும் அதில் அகப்பட்டுத் திணறும் மனசின் கோலங்களும் விக்ரமாதித்யனின் பாடுபொருட்கள். அதை வெளிப்படுத்தும் முதன்மையான தொனி கழிவிரக்கம் சார்ந்தது. அவரது மொழியில் வரையறுத்தால் நொய்மை'யானது. ‘இவனும் கவிதையில் புலம்புவதாக / எல்லோரும் சொல்கிறார்கள் / புலம்புகிறாற் போலத்தான் / இருக்கிறதோ இருப்பு?' என்ற கேள்வியின் வெவ்வேறு சஞ்சாரங்களை அவரது கவியுலகின் எல்லா இடங்களிலும் காணலாம். இந்த நொய்மையின் மறுபக்கமான சினம், சஞ்சார பாவங்களை மாற்றுவதும் புரியும். இவையெல்லாம் விக்ரமாதித்யனின் கவியுலகை அணுகும்போது தென்படும் ஆரம்ப அடையாளங்கள். இந்த அடையாளங்களைக் கடந்தே அவரது கவியுலகை நெருங்க முடிகிறது.

எதார்த்தமானது, சமகாலத்தன்மையுடையது என்ற இரண்டு வரையறைகளால் விக்ரமாதித்யனின் கவியுலகை அடைந்துவிடலாம். இவ்விரு வரையறைகளும் பல சந்தர்ப்பங்களில் ஒன்றாக இணைந்திருப்பதையும் குறிப்பிட வேண்டும்.

விக்ரமாதித்யனின் கவிதைகளை மூன்று பெரும் பிரிவுகளாகப் பகுக்கலாம்

தனி வாழ்க்கை சார்ந்தவை,

 சமூகம் அரசியல் சார்ந்தவை, 

கவிஞர் புழங்கும் இலக்கிய உலகம் சார்ந்தவை. 

இவை தனித்தும் ஒன்றுக்குள் ஒன்று கலந்தும் சார்ந்தும் முரண்பட்டும் இயங்குகின்றன.இதனால் உருவாகும் நிலைகுலைவும் தத்தளிப்பும் இதிலிருந்து விடுபட மேற்கொள்ளும் தொடர்முயற்சிகளுந்தாம் விக்ரமாதித்யனின் இருப்பும் இயக்கமும்.

இதை வேறொரு கோணத்திலும் பார்க்கலாம்.

‘நான்' என்ற தன்மைக்கூற்றுடன் கவிதைகளில் அறிமுகமாகும் நபர் தனக்கு முன்னுள்ள பெரும் மரபில் தன்னைத் தேடிக்கொண்டிருப்பவன்; மொழியின் பாய்ச்சலுக்கு இசைய நகர விரும்புகிறவன்; லெளகீக வாழ்வின் சாதாரண, அசாதாரண நடவடிக்கைகளை ஒரே கண்ணோட்டத்துடன் அணுகுபவன்; காலத்தின் ஏதோ ஓரிடத்தில் நின்றுவிட்ட சரித்திரம் அங்கே முடிவதில்லை அதற்கப்பாலும் தொடர்கிறது என்று அறிந்திருப்பவன்; இந்த குணாம்சங்கள் அவனை அதிருப்தியுள்ளவனாக்குகின்றன. இந்த குணாம்சங்களை பொருட்படுத்தத் தேவையில்லாதவை என்று நம்பும் சமூக உறவுகளில் அவன் விலக்கப்பட்டவனாகிறான். தனியனாகிறான். இதை உள்ளுணர்ந்திருப்பவர் விக்ரமாதித்யன். ‘எதற்கும் விசுவாசமாக இருக்கக் / கடமைப்படவில்லை கலைஞன் / யாரிடமும் நன்றியுணர்வு கொண்டிருக்க வேண்டிய / கட்டாயம் எதுவுமில்லை கவிஞன்' என்று சொல்லவும் துணிவிருக்கிறது அவருக்கு. அதே சமயம் கலைஞனுக்கோ கவிஞனுக்கோ பிரத்தியேக சலுகை எதையும் வழங்க அவன் புழங்கும் உலகுக்கு அவசியமுமில்லை. இந்த முரண்நிலையே விக்ரமாதியனிடம் கழிவிரக்கத் தொனியாகிறது. முன்சொன்ன மூன்று பிரதேசங்களிலிருந்தும் அவர் பெறுவது கசப்புக் கனிகள் மட்டுமே.

எதார்த்த தளத்திலேயே உழலும் கவிமனம் விக்ரமாதித்யனுடையது. பேச்சு மொழிக்கு மிக நெருக்கமான கூறல்முறை அவருக்கு வாய்த்திருப்பதுபோல பிற நவீன கவிஞர்களுக்கு அரிதாகவே கைகூடுகிறது. ஒருசொல், ஓர் ஒலிக்குறிப்பு, ஒரு படிமம் அல்லது ஓர் உருவகம் - இவற்றை மையமாகக் கொண்டு அதிர்வலைகளை உண்டாக்கிக் கவிதை வடிவத்தை எட்டி விடுகிறார். அந்த மையம் அனுபவம் சார்ந்ததாக அமையும்போது கவிதையும் அல்லாதபோது வெறும் கூற்றாகவும் ஆகிவிடுகிறது.

விக்ரமாதித்யன் கவிதைகளின் சிறப்பியல்புகளாக சிலவற்றை பின்வருமாறு தொகுக்கலாம்.

முற்றிலும் நிகழ்காலத் தமிழ் வாழ்க்கையின் நடுத்தட்டு மனநிலையைச் சார்ந்தது விக்ரமாதித்யனின் உணர்ச்சி மண்டலம். மதிப்பீடுகளை எதிர்க்கும். அதே சமயம் அவற்றைக் கைவிட முடியாமல் தடுமாறும். புதுமையை தழுவிக்கொள்ளும். அதைச் சந்தேகத்துடன் விசாரித்துக்கொண்டிருக்கும். உறவுகளின் வெறுமையைக் குறித்துத் தெளிவுகொண்டிருக்கும். வெறுமையை இட்டு நிரப்ப அர்த்தங்கள் தேடிக் கொண்டிருக்கும். இந்த பின்னப்பட்ட மனசை முழுமையாகக் கவிதையில் சித்தரித்திருப்பவர் விக்ரமாதித்யன்.

எளியதும் சீரியதுமான தமிழ்ச் சொற்களால் கவிதையாக்கம் சாத்தியமாகிறது. அபூர்வமாகவே அவரது மொழியில் முடிச்சுகளும் திரிபுகளும் இடம்பெறுகின்றன. பேச்சு வழக்கிலிருந்தும் இலக்கியவழக்கிலிருந்தும் சொற்களைத் தேர்ந்தெடுக்கிறார். கலாச்சார அடையாளங்கள் சார்ந்ததாகக் கவிதை அமையும்போது அவருடைய மொழிக்கு மெருகு கூடுகிறது. தேரைப் பற்றியோ திருநாளைப் பற்றியோ பிடித்த இலக்கியப் பாத்திரம் பற்றியோ பேசக் கிடைக்கிற சந்தர்ப்பங்களில் மேலும் மெருகேறுகிறது.

நவீன கவிதை கலாச்சார அடையாளங்களைத் துறந்து மரங்களையோ நதியையோ இடத்தையோ வருணிக்கும்போது விக்ரமாதித்யன் அவற்றின் பிரத்தியேகத்தன்மையுடனேயே பேச விரும்புகிறார். குற்றால அருவியும் தென்காசியும் திருப்புன்கூரும் பிறவும் அவற்றின் கலாச்சாரப் பின்னணி விலகாமல் கவிதைக்குள் வருகின்றன. நவீன சாதனங்களும்கூட அவரது இந்தப் போக்கில் பிரத்தியேகத் தன்மை தொலையாமல்தான் இடம்பெறுகின்றன. ‘வட்டப்பானைக் கடையில் மார்கோ சோப் கேட்டால் ஹமாம் எடுத்துக் கொடுப்பார்' என்று வரும் வரிகள் இதற்கு உதாரணம்.

விக்ரமாதித்யன் கவிதை சமகாலத்தியது என்கிறபோதே அவருக்கு இயல்பான ஒரு சுதந்திரம் வசமாகிறது. நிகழ்கால அரசியல், கலாச்சாரம், கலை, இலக்கியம் எல்லாத் துறைகளிலும் நடப்பு எதார்த்தங்களை எடுத்தாளத் தோதாகிறது. சிற்றிதழ் இலக்கியச்சூழல் உட்பட எதுவும் கவிதையில் விலக்கப்படுவதில்லை. நவீன கவிதையில் இடக்கரடக்கலுக்கு அவசியமற்ற வெளிப்படையான போக்குக்கு கலாப்ரியாவும் விக்ரமாதித்யனும் முன்னுதாரணங்கள் என்று எண்ணுகிறேன். மன விகாரங்கள், காமம் ஆகியவற்றை மேற்பூச்சுகளில்லாமல் சொல்லலாம் என்று தைரியமளித்தவர்கள் இவ்விருவரும். போதையின் உற்சவத்தையும் வீழ்ச்சியையும் விக்ரமாதித்யன் கூடுதல் இணைப்பாக்கினார். இரந்து கெடும் தனது சுயம் பற்றி எழுதுவதிலும் அவருக்குத் தயக்கம் இருப்பதில்லை.

விக்ரமாதித்யனின் கவிதையுலகை அணுகி அறிந்தவை இவை. இவற்றின் சில அடிப்படைகள் மீதான மாற்று அபிப்பிராயங்களும் எனக்கு உண்டு. கவிதையின் பாடுபொருட்களில் அவரது தேர்வு பெரும்பாலும் ஏமாற்றம் அளிப்பவை. அதிகமான எண்ணிக்கை கொண்டது அவரது கவிதையுலகம் என்பதால் இந்த பெரும்பான்மை குவியலில் கிடக்கும் கூழாங்கல்போல சாதாரணமாகத் தென்படுகிறது. ஆனால் நெருக்கமான பார்வையில் அதே கூழாங்கல் மற்றவற்றைக் காட்சியிலிருந்து மறைத்துவிடுகிறது. எப்போதும் கவிஞன் என்ற அகங்காரத்துடனேயே அவரது பார்வை. அது அவருக்கு உள்ளேயிருக்கும் பாமர வியப்புகளையோ குழந்தைமைப் பரவசத்தையோ ஞானியின் அமைதியையோ முட்டாளின் மகிழ்ச்சியையோ வெளிப்படுத்தத் தடையாகவே இருப்பதாகப்படுகிறது. போதைநிலையில் கூட ‘நான் கவிஞன் குடித்திருக்கிறேன்' என்று சலுகை கோருபவராகவே இருக்கிறார்.

மொழிசார்ந்தும் உணர்வு சார்ந்தும் நவீனமானவர். எனினும் அவரது கவிதையாக்க முறையில் மரபான மதிப்பீடுகளுக்கு அழுத்தமான இடமுண்டு என்று தோன்றுகிறது. உறவுகள், குடும்பம், சமூகம், மதம், கலாச்சாரம் ஆகியவை பற்றி பழைய மதிப்பீடுகளின் மறுபரிசீலனையற்ற தொடர்ச்சியைக் கவிதைகளில் காணக்கூடும். ஆண்டாளையோ காரைக்கால் அம்மையாரையோ திருநாவுக்கரசு சுவாமிகளையோ எடுத்தாளும்போது அவர்களது மொழியின் வீச்சினாலோ கவிதைச் செறிவினாலோ ஈர்க்கப்படுவதைக் காட்டிலும் அவர்கள் மீதான பக்திக்கே ஆட்படுகிறார். இலக்கிய அரசியல் பற்றி அவர் எழுதியுள்ள கவிதைகளிலும் பழைய மதிப்பீடுகளின் எச்சம்.

எனினும் இந்த மனப்பாங்கு வேறு சில சமகால எதார்த்தங்களைக் கேள்வியின் கூர்முனைகளில் நிறுத்தியிருக்கிறது. அங்கயற்கண்ணி மீனாட்சியானதும் கொற்றவை துர்க்கையானதும் ஆதிசிவன் பரமேஸ்வரனானதும் எவ்விதம் என்ற கேள்விகள் பண்பாட்டு அரசியலை அம்பலப்படுத்துபவை. நகர நாகரிகத்தோடுள்ள ஒவ்வாமையும் இதே கூர்மை கொண்டது.

பெண்கள் குறித்த விக்ரமாதித்யன் கவிதைகளிலும் மரபான அகங்காரமே தென்படுகிறது. தேவி ஸ்துதி - கணிகையர் ஒழுக்கம் என்ற இரண்டு எல்லைகளுக்குள் ஒடுங்கிவிடுகின்றன மோகமும் காமமும், பெண்ணுறுப்புகள் ஆணின் வேட்கையை நிறைவு செய்யும் உபகரணங்களாகவே சித்தரிப்புப் பெறுகின்றன. காமத்தின் புனிதப் பெருவெளியில் இரு உயிர்கள் கலந்து பரஸ்பரம் இனம் காணும் ஒரு கவிதைக்கணம் கூட இல்லாத உலகம்.

விக்ரமாதித்யனின் கவிதையுலகில் நான் வேறுபடும் திசைகள் இவை. எனினும் சக கவிஞனாக விக்ரமாதித்யன் எனக்குத் தவிர்க்கப்படக் கூடாதவர். எனக்குள் எங்கோ அவரது கவிதையின் சாரமான கூறு உயிர்த் தன்மையோடு இயங்கக் கூடும். இல்லையெனில் ஒரே மொழியில் பொதுத்தளத்தில் எப்படிச் செயல்பட முடியும்? இல்லையெனில் அவரெப்படி "போய்ச் சேர்ந்தான் புதுமைப்பித்தன் வந்து நிற்கிறான் விக்ரமாதித்யன்' என்று உரிமை பாராட்டிக்கொள்ள முடியும்?

Thanks:சுகுமாரன் and Keetru.