Wednesday 17 April 2013

ஏழே வயதில் வெப்சைட் டிசைன்


ஏழே வயதில் படித்த பள்ளியின் வெப்சைட்டை டிசைன் (Schools Website)
செய்த பெண் லக்ஷ்மி 
சாதிக்க வயது ஒரு தடையில்லை என்பது நமக்குத் தெரியும். அதிக அனுபவமுள்ளவர்கள் பல வருடங்களாக தான் நினைத்ததை சாதிக்க பயிற்சி எடுத்து ஒரு குறிப்பிட்ட காலத்தில் சாதிப்பது என்பது ஒரு வகை. 
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது மற்றொரு வகை.. ஆம் நண்பர்களே...! பலமுறை கற்றுத் தேர்ந்து, பல ஆண்டுகள் பயற்சி செய்து, யாரும் செய்யவியலாத சாதனையைப் படைக்கும் சாதனையாளர்களின் மத்தியில், குழந்தைப் பருவத்திலேயே பலவற்றைக் கற்று, அதை உள்வாங்கி, வயதிற்கும் சாதனைக்கும் ஒரு தொடர்புமே இல்லை என்று சாதிக்கும் இளம் சிறார்களின் சாதனை வியப்புக்குரிய ஒன்றுதான்.  


அவர்கள் சாதாரண குழந்தைகள் அல்ல.. இளம்வயதிலேயே சாதித்து, சாதனைக்கும் தனக்கும் ஒரு தொடர்பும் இல்லை.. என்று தோன்றும் அளவிற்கு தோற்றத்தில் மிக எளிமையாக, சாதாரணமாக இருப்பார்கள். 
அத்தகையவர்களில் ஒருவர் தான் ஸ்ரீ லஷ்மி சுரேஷ். ஏழே வயதில் தான் படித்த பள்ளியின் வெப்சைட்டை டிசைன் (Schools Website)செய்து பலரிடம் பாராட்டுப் பெற்றிருக்கிறார். 

வெப்டிசைனர் என்றால் சாதாரண வெப்டிசைனர் அல்ல.. ஒரு தொழில்ரீதியான, Professional என்பார்களே.. அதற்கீடான டிசைனிங் திறமையை பெற்றிருக்கிறார். 

எட்டாண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தனது பதினைந்தாவது வயதில் தனது தோழிகளுடன் இணைந்து தற்போது கேரளத்தில் ரூபாய் 50000 முதலீட்டில் ஒரு வெப்டிசைனிங் கம்பெனி தொடங்கியிருக்கிறார். 

சாதாரணமாக ஒரு மனிதன்,  ஒரு சிறிய தொழில் தொடங்கவே 'ஆயிரம் கேள்விகளையும், ஆயிரம் பிரச்னைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்குமே' என்று யோசிப்பான்.  

ஆனால் சாதாரண மனிதனின் மனப்பாங்கிற்கு எதிராக, தன்னுடைய நம்பிக்கையால், தனது திறமையின் மீது கொண்ட தன்னம்பிக்கையால் ஒரு வெப்டிசைனிங் நிறுவனத்தைத் தொடங்கி, அதை வெற்றிகரமாக தன்னால் நடத்த முடியும் என்று ஆணித்தரமாக நம்பி, அதை நடைமுறைப்படுத்த ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கிறாள் இச்சிறுமி. 

கேரள மாநிலத்தில் உள்ள UL CyberPark தன்னுடைய Webdesign Company -ஐத் தொடங்கியிருக்கிறாள். இந்நிறுவனத்தை தன்னுடன் கூடுதலாக ஐந்து பேரைச் சேர்த்துக்கொண்டு 6 உறுப்பினர்களுடன் ஆரம்பித்திருக்கிறாள். ஆறு உறுப்பினர்களடங்கிய நிறுவனத்திற்கு இச்சிறுமியே தலைமைப் பொறுப்பை (CEO) ஏற்றிருக்கிறாள். இளம் வயதில் தலைமைப் பொறுப்பேற்பதே உலகளாவிய சாதனைதான். 

ஜூன் மாத ஆரம்பத்தில் வெப்டிசைனிங் (Webdesign), டொமைன் ரெஜிஸ்ட்ரேசன்(Domain Registration), ஹோஸ்டிங்(Web Hosting) போன்ற வெப்சைட் டிசைனிங் தொடர்பான அனைத்து சேவைகளையும் வழங்க இருப்பதாக தன்னுடைய பேட்டியில் அறிவித்திருக்கிறாள். 

வேலை கிடைக்கவில்லை... பணமே இங்கு பிரதானமாக இருக்கிறது. இலஞ்சம் கொடுத்தால் மட்டுமே வேலை கிடைக்கும்...திறமைக்கு இங்கு மதிப்பில்லை.. என்று காலமெல்லாம் ஏதாவது ஒரு சாக்கு போக்கைச் சொல்லி, காலத்தை வீணாக கழிக்கும் இளைய தலைமுறைகளுக்கு (இளைஞர்களுக்கு) இச்சிறுமி தனது செயல்பாட்டின் மூலம் சவுக்கடி கொடுத்திருக்கிறாள். 

துணிச்சலும், திறமையும் இருந்தால் சாதிக்க வயது ஒரு தடையில்லை.. சிறுமியின் வெப்டிசைன் நிறுவனம் பல்வேறு சேவைகளை அளித்து, மிகப்பெரிய வளர்ச்சி அடைய நாமும் வாழ்த்துவோம். நன்றி நண்பர்களே..!

- தங்கம்பழனி. 

தகவல் உதவி: தட்ஸ்தமிழ். 

No comments:

Post a Comment