Sunday 30 September 2012

அர்ஜுன விஷாத யோகம்' -2

குருக்ஷேத்ரம் 'அர்ஜுன விஷாத யோகம்' -2

[நேற்றைய தொடர்ச்சி (1.10.2012)]

தத: ஷங்காஷ்ச பேர்யஷ்ச பணவாநககோமுகா:।
ஸஹஸைவாப்யஹந்யந்த ஸ ஷப்தஸ்துமுலோ அபவத்॥ 1.13 ॥

அதன்பின் சங்குகள், குழல்கள், முரசுகள், பறைகள், கொம்புகள், இவை ஒரே நேரத்தில் முழங்கின அந்த ஓசை அ திர்வு கிளர்ச்சியை எழுப்புவதாக இருந்தது.

தத: ஷ்வேதைர்ஹயைர்யுக்தே மஹதி ஸ்யந்தநே ஸ்திதௌ।
மாதவ: பாண்டவஷ்சைவ திவ்யௌ ஷங்கௌ ப்ரதக்மது:॥ 1.14 ॥

எதிர்ப்புறமாக  வெண்புரவிகள்பூட்டிய மிகச் சிறந்த ரதத்தில் அமர்ந்திருந்த பகவான் ஸ்ரீகிருஷ்ணரும், அர்ஜுனனும் தங்கள் தெய்வீகமான சங்குகளை முழக்கினர்.

பாம்சஜந்யம் ஹ்ருஷீகேஷோ தேவதத்தம் தநம்ஜய:।
பௌண்ட்ரம் தத்மௌ மஹாஷங்கம் பீமகர்மா வ்ருகோதர:॥ 1.15 ॥

 பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பாஞ்ச்சஜன்யத்தை முழக்கினார். அர்ஜுனன் தனது தேவதத்தத்தையும், பெருந் தீனிக்காரனும், வீர சாகசங்களைப் புரிபவனுமான பீமன் பௌண்ட்ரமெனும் பெரும் சங்கையும் முழக்கினர்.

அநம்தவிஜயம் ராஜா குந்தீபுத்ரோ யுதிஷ்டிர:।
நகுல: ஸஹதேவஷ்ச ஸுகோஷமணிபுஷ்பகௌ॥ 1.16 ॥

காஷ்யஷ்ச பரமேஷ்வாஸ: ஷிகண்டீ ச மஹாரத:।
த்ருஷ்டத்யும்நோ விராடஷ்ச ஸாத்யகிஷ்சாபராஜித:॥ 1.17 ॥

த்ருபதோ த்ரௌபதேயாஷ்ச ஸர்வஷ: ப்ருதிவீபதே।
ஸௌபத்ரஷ்ச மஹாபாஹு: ஷங்காந்தத்மு: ப்ருதக்ப்ருதக்॥ 1.18 ॥

குந்தியின் புதல்வனான மன்னன் யுதிஷ்டிரன் அநந்தவிஜயமெனும் சங்கையும், நகுலனும் ஸஹாதேவனும் முறையே ஸுகோஷம், மணிபுஷ்பகமெனும் சங்குகளையும் ஒலித்தனர். பெரும் வில்லாளியான காசிராஜன், பெரும் போர்வீரனான சிகண்டி, த்ருஷ்டத்யும்னன், விராடன், வெல்லப்பட முடியாத  ஸாத்யகி, துருபதன், திரௌபதியின் புதல்வர்கள் மற்றும் மகாபலசாலியான , சுபத்ரை மகன்  அபிமன்யு போன்றவர்கள் தத்தம் சங்குகளை முழங்கினர்.

ஸ கோஷோ தார்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத்।
நபஷ்ச ப்ருதிவீம் சைவ துமுலோ அப்யநுநாதயந்॥ 1.19 ॥

சங்கொலிகளின் பல்வேறு முழக்கங்கள் பேரொலியாக எழுந்து பூமியும் வானமும் நடுங்குமாறு எதிரொலிக்கலாயின  திருதராஷ்டிரரின் மகன்களுடைய இதயங்கள் சிதறலாயின.

அத வ்யவஸ்திதாந்த்ருஷ்ட்வா தார்தராஷ்ட்ராந் கபித்வஜ:।
ப்ரவ்ருத்தே ஷஸ்த்ரஸம்பாதே தநுருத்யம்ய பாண்டவ:॥ 1.20 ॥

ஹ்ருஷீகேஷம் ததா வாக்யமிதமாஹ மஹீபதே।

திருதராஷ்டிர மன்னனே, அந்த நேரத்தில், ஹனுமான் கொடியை உடைய தேரிலமர்ந்திருந்த பாண்டு மகன், அர்ஜுனன், திருதராஷ்டிரரின் மகன்களை நோக்கி அம்பெய்யத் தயாராக வில்லை ஏந்தி, ரிஷிகேசனான ஸ்ரீ கிருஷ்ணரை நோக்கிப் பின்வருமாறு கூறலானான்.

அர்ஜுன உவாச।
ஸேநயோருபயோர்மத்யே ரதம் ஸ்தாபய மே அச்யுத॥ 1.21 ॥

யாவதேதாந்நிரிக்ஷே அஹம் யோத்துகாமாநவஸ்திதாந்।
கைர்மயா ஸஹ யோத்தவ்யமஸ்மிந்ரணஸமுத்யமே॥ 1.22 ॥

அர்ஜுனன் கூறினான்: அழிவற்றவரே! போர்புரியும் ஆவலுடையவராய் இங்கு அணிவகுத்துள்ளவரில், நான் எவர் எவரோடு  இந்தப் பெரும் போர் முயற்சியில் போரிட வேண்டும் என்று பார்க்கும்படியாக, எனது தேரைச் செலுத்தி இரு படையினருக்கு நடுவே நிறுத்துவீராக.

யோத்ஸ்யமாநாநவேக்ஷே அஹம் ய ஏதே அத்ர ஸமாகதா:।
தார்தராஷ்ட்ரஸ்ய துர்புத்தேர்யுத்தே ப்ரியசிகீர்ஷவ:॥ 1.23 ॥

திருதராஷ்டிரனின் துர்ப்புத்தியுடைய மகன் துரியோதனனை மகிழ்விக்கும் விருப்பத்தோடு இங்கு போர்புரிய வந்திருப்பவர்களை நான் பார்க்கட்டும்.

ஸம்ஜய உவாச।
ஏவமுக்தோ ஹ்ருஷீகேஷோ குடாகேஷேந பாரத।
ஸேநயோருபயோர்மத்யே ஸ்தாபயித்வா ரதோத்தமம்॥ 1.24 ॥

ஸஞ்ஜயன் கூறினான்: பரத குலத்தவனே, அர்ஜுனனால் இவ்வாறு கூறப்பட்ட பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவனது மிகச் சிறந்த தேரை இருதரப்புச் சேனைகளின் நடுவே செலுத்தி நிறுத்தினார்.

பாராயணம் செய்ய 

தத: ஷங்காஷ்ச பேர்யஷ்ச பணவாநககோமுகா:।
ஸஹஸைவாப்யஹந்யந்த ஸ ஷப்தஸ்துமுலோ அபவத்॥ 1.13 ॥


தத: ஷ்வேதைர்ஹயைர்யுக்தே மஹதி ஸ்யந்தநே ஸ்திதௌ।
மாதவ: பாண்டவஷ்சைவ திவ்யௌ ஷங்கௌ ப்ரதக்மது:॥ 1.14 ॥


பாம்சஜந்யம் ஹ்ருஷீகேஷோ தேவதத்தம் தநம்ஜய:।
பௌண்ட்ரம் தத்மௌ மஹாஷங்கம் பீமகர்மா வ்ருகோதர:॥ 1.15 ॥


அநம்தவிஜயம் ராஜா குந்தீபுத்ரோ யுதிஷ்டிர:।
நகுல: ஸஹதேவஷ்ச ஸுகோஷமணிபுஷ்பகௌ॥ 1.16 ॥


காஷ்யஷ்ச பரமேஷ்வாஸ: ஷிகண்டீ ச மஹாரத:।
த்ருஷ்டத்யும்நோ விராடஷ்ச ஸாத்யகிஷ்சாபராஜித:॥ 1.17 ॥

த்ருபதோ த்ரௌபதேயாஷ்ச ஸர்வஷ: ப்ருதிவீபதே।
ஸௌபத்ரஷ்ச மஹாபாஹு: ஷங்காந்தத்மு: ப்ருதக்ப்ருதக்॥ 1.18 ॥

ஸ கோஷோ தார்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத்।
நபஷ்ச ப்ருதிவீம் சைவ துமுலோ அப்யநுநாதயந்॥ 1.19 ॥

அத வ்யவஸ்திதாந்த்ருஷ்ட்வா தார்தராஷ்ட்ராந் கபித்வஜ:।
ப்ரவ்ருத்தே ஷஸ்த்ரஸம்பாதே தநுருத்யம்ய பாண்டவ:॥ 1.20 ॥

ஹ்ருஷீகேஷம் ததா வாக்யமிதமாஹ மஹீபதே।

அர்ஜுன உவாச।

ஸேநயோருபயோர்மத்யே ரதம் ஸ்தாபய மே அச்யுத॥ 1.21 ॥

யாவதேதாந்நிரிக்ஷே அஹம் யோத்துகாமாநவஸ்திதாந்।
கைர்மயா ஸஹ யோத்தவ்யமஸ்மிந்ரணஸமுத்யமே॥ 1.22 ॥


யோத்ஸ்யமாநாநவேக்ஷே அஹம் ய ஏதே அத்ர ஸமாகதா:।
தார்தராஷ்ட்ரஸ்ய துர்புத்தேர்யுத்தே ப்ரியசிகீர்ஷவ:॥ 1.23 ॥

ஸம்ஜய உவாச।
ஏவமுக்தோ ஹ்ருஷீகேஷோ குடாகேஷேந பாரத।
ஸேநயோருபயோர்மத்யே ஸ்தாபயித்வா ரதோத்தமம்॥ 1.24 ॥



அர்ஜுன விஷாத யோகம்-1



ஸ்ரீமத் பகவத்கீதை  

உலகின் எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டதும் பரம உத்தமானதும் ஆன பகவத்கீதைக்கு ஆச்சார்யர்களும் பண்டிதர்களும் மகான்களும் மகாகவிகளும்,நூற்றுக்கணக்கான வியாக்யானம் விளக்கம் விரிவுரை, பொருளுரை எழுதியிருக்கிறார்கள் பரந்த ஆகாயத்திலும் விரிந்த சமுத்ரங்களிலும் உயிர்க்குலமும் அணுக்கூறுகள் மற்றும் இயக்கங்களும் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. யார் வரவும் யார் செலவும் அங்கே தடுக்கப் படுவதில்லை.
அப்படி மகா சமுத்ரமும் விரிந்து பரந்த விண்வெளியுமான்  ஸ்ரீமத் பகவத் கீதையில் அணுவிலும் சிறு கூறாகிய அடியேன் யோகேஷ் மித்ரா ஈஸ்வரோ ரக்ஷது ! பரமாத்மனே ரக்ஷது என்று தொழுது நமஸ்கரித்து பிரவேசித்து வலம்  வருகிறேன் . முன்பு ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறுவர்களுக்காக எழுதி வெளியிட்டு  உலகெங்கிலும் பரவியுள்ள அடியேனின் உரை பலராலும் பாராட்டப்பட்டது .
அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு அண்ணா  நூலக மேம்பாட்டுத்திட்டத்தின் கீழும் கரும்பலகைத்திட்டத்தின் கீழும் தமிழக அரசினாரால் வாங்கப்பட்டு தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் ஒவ்வொரு பட்டிதொட்டிகளிலும் உள்ள நூலகங்களிலும் பள்ளிகளிலும் இடம்பெற்றுள்ளது
அதன் எளிமையும் ஆத்மார்த்த சமர்ப்பண உணர்வுமே இப்படிப் பல பெருமைகளை அந்த நூல் ஈட்டக்காரணம் ஆயிற்று என்பது என் பணிவோடு கூடிய கருத்து.
புதிய சிந்தனை , புதிய உரிமை , புதிய போர்முழக்கங்கள் என என்னென்ன எழுந்தும் கீதையின் பெருமையும் அதன் சூக்ஷ்ம ரகசியமும் தம் ஒளியை இழந்து விடவில்லை. மனிதர்கள் அதன் மீது சேற்றை வாரி இறைத்தாலும் அது தன தூய்மையை இழந்து விடவில்லை.
பக்தி என்ற மாபெரும் தத்துவத்தின் கலங்கரை விளக்கமாக இலங்கும் கீதையை மீண்டும் மீண்டும் பாராயணம் செய்து தாய்ப்பால் போல் கருதிப் பருகி வாழ்க்கையில் கடைப்பிடித்த மகானுபாவர்கள் பலர். கண்ணுக்கு பளிச்சென்று தெரிந்தவர் மகாத்மா காந்தி.
அந்த மகானுபாவர்கள் அனைவரது திருப்பாதங்களையும் நமஸ்கரித்து சிறிதேனும் அகந்தை எனும் மலம் என் மதியில் கவிந்து உண்மை ஒளியை கண்டு உணர்ந்து வெளியிட அனுக்ரகம் செய்ய வேண்டி வணங்கி தொடங்குகிறேன்
॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥
॥ அத ஸ்ரீமத் பகவத்கீதா ॥
அத ப்ரதமோத்யாய


அர்ஜுன விஷாத யோகம்

த்ருதராஷ்ட்ர உவாச
தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ:।
மாமகா: பாண்டவாஷ்சைவ கிமகுர்வத ஸம்ஜய ॥ 1.1 ॥


திருதராஷ்டிரர் கூறினார்: புண்ணிய யாத்திரைத் தலமான குருக்ஷேத்திரத்தில் போர் புரியும் ஆவல்  கொண்டு ஒன்று கூடிய பிறகு என் மகன்களும், பாண்டுவின் புதல்வரும் என்ன செய்தனர் சஞ்ஜயனே?
[விளக்கம். குருடரான திருதராஷ்டிரர் தமதுஅரண்மனையில்  அமர்ந்தபடி அமைச்சனான சஞ்சயனிடம் ஞான திருஷ்டியால் குருக்ஷேத்ரக் காட்சிகளைக் கண்டு தமக்கு விளக்கும்படி கோருகிறார் ]

ஸம்ஜய உவாச।
த்ருஷ்ட்வா து பாண்டவாநீகம் வ்யூடம் துர்யோதநஸ்ததா।
ஆசார்யமுபஸம்கம்ய ராஜா வசநமப்ரவீத்॥ 1.2 ॥

சஞ்ஜயன் கூறினார்: மன்னனே, பாண்டுவின் புதல்வரால் அணிவகுக்கப்பட்ட படையை ஒரு முறை மேற்பார்வையிட்ட பிறகு, மன்னன் துரியோதனன் தன் ஆசாரியரை  அணுகிப் பின்வருமாறு பேசலானான்.

பஷ்யைதாம் பாண்டுபுத்ராணாமாசார்ய மஹதீம் சமூம்।
வ்யூடாம் த்ருபதபுத்ரேண தவ ஷிஷ்யேண தீமதா॥ 1.3 ॥

ஆச்சர்யரே  துருபதகுமாரனான உங்கள் சீடனால் மிகத் திறமையாக அணிவகுக்கப்பட்ட, பாண்டுபுத்திரரின் சிறந்த சேனையைப் பாருங்கள்.

அத்ர ஷூரா மஹேஷ்வாஸா பீமார்ஜுநஸமா யுதி।
யுயுதாநோ விராடஷ்ச த்ருபதஷ்ச மஹாரத:॥ 1.4 ॥

இதோ இந்த சேனையில் பீமனுக்கும் அர்ஜுனனுக்கும் சமமான வீரமிகு வில்லாளிகள் பலரும் இருக்கின்றனர். யுயுதானன், விராடன், துருபதன் போன்ற சிறந்த மகாரதர்களும் இருக்கின்றனர்.

த்ருஷ்டகேதுஷ்சேகிதாந: காஷிராஜஷ்ச வீர்யவாந்।
புருஜித்குந்திபோஜஷ்ச ஷைப்யஷ்ச நரபும்கவ:॥ 1.5 ॥

த்ருஷ்டகேது, சேகிதானன், காசிராஜன், புருஜித் குந்திபோஜன், ஷைப்யன் போன்ற சிறந்த, பலமிக்க போர்நாயகர்களும் இருக்கின்றனர்.

யுதாமந்யுஷ்ச விக்ராந்த உத்தமௌஜாஷ்ச வீர்யவாந்।
ஸௌபத்ரோ த்ரௌபதேயாஷ்ச ஸர்வ ஏவ மஹாரதா:॥ 1.6 ॥

வீரனான யுதாமன்யு, பலமிக்க உத்தமௌஜன், மற்றும் சுபத்ரையின் புதல்வன், திரௌபதியின் குமாரர்கள் இவர்களும் இருக்கின்றனர். இவர்கள் எல்லோருமே சிறந்த மகாரதர்கள் .

அஸ்மாகம் து விஷிஷ்டா யே தாந்நிபோத த்விஜோத்தம।
நாயகா மம ஸைந்யஸ்ய ஸம்ஜ்ஞார்தம் தாந்ப்ரவீமி தே॥ 1.7 ॥

அந்தணரில் சிறந்தவரே, எனது சேனையை நடத்தும் தகுதி வாய்ந்த தலைவர்களை நீர் அறியும்படி கூறுகின்றேன்.

பவாந்பீஷ்மஷ்ச கர்ணஷ்ச க்ருபஷ்ச ஸமிதிம்ஜய:।
அஷ்வத்தாமா விகர்ணஷ்ச ஸௌமதத்திஸ்ததைவ ச॥ 1.8 ॥

எப்போதும் யுத்தங்களில் ஜெயம் காண்பவரான தாங்களும், பீஷ்மர், கர்ணன், கிருபர், அஸ்வத்தாமன், விகர்ணன், பரிசிரவஸ் என்ற சோமதத்தனின் குமாரன் போன்ற பெரும் வீரரும் இருக்கின்றீர்கள்.

அந்யே ச பஹவ: ஷூரா மதர்தே த்யக்தஜீவிதா:।
நாநாஷஸ்த்ரப்ரஹரணா: ஸர்வே யுத்தவிஷாரதா:॥ 1.9 ॥

எனக்காக உயிரையும் கொடுக்கக்கூடிய எண்ணற்ற வீரர்கள் பிறரும் உள்ளனர். அவர்கள் எல்லோருமே பலவிதமான ஆயுதங்களை உடையவர்களாயும், போர்க்கலையில் மிகத் தேர்ச்சி உடையவர்களாகவும்
இருக்கின்றனர்.

அபர்யாப்தம் ததஸ்மாகம் பலம் பீஷ்மாபிரக்ஷிதம்।
பர்யாப்தம் த்விதமேதேஷாம் பலம் பீமாபிரக்ஷிதம்॥ 1.10 ॥

பாட்டனார் பீஷ்மரால் பாதுகாக்கப்பட்ட நமது பலம் கணக்கிலடங்காதது. ஆனால் பீமனால் கவனமாய்ப் பாதுகாக்கப்பட்ட பாண்டவ சேனையோ அளவிடக் கூடியதாக இருக்கின்றது.

அயநேஷு ச ஸர்வேஷு யதாபாகமவஸ்திதா:।
பீஷ்மமேவாபிரக்ஷந்து பவந்த: ஸர்வ ஏவ ஹி॥ 1.11 ॥

படை அணிவகுப்பின் முக்கியமான போர்முனை நிலைகளிலிருந்து கொண்டு நீங்களெல்லோரும் பாட்டனார் பீஷ்மருக்குப் பாதுகாப்புக் கொடுப்பீர்களாக.

தஸ்ய ஸம்ஜநயந்ஹர்ஷம் குருவ்ருத்த: பிதாமஹ:।
ஸிம்ஹநாதம் விநத்யோச்சை: ஷங்கம் தத்மௌ ப்ரதாபவாந்॥ 1.12 ॥

பிறகு குருவம்சத்தின் பிதாமகரும், போர் வீரரின் பாட்டனாருமான பீஷ்மர், தனது சங்கை சிங்க கர்ஜனைபோன்று உரக்க ஊதி துரியோதனனுக்கு மகிழ்வைக் கொடுத்தார்.

[ஒவ்வொரு நாளும் பனிரெண்டு ஸ்லோகங்கள் அதன் விளக்கங்கள் என கீதையை அணுகிப் பாராயணம் செய்வது பரம புண்ணியங்களிலும் மகா உத்தமன புண்ணியம் ]
பாராயணம் செய்ய உதவும் விதத்தில் சுலோகங்களைத் தொகுத்துத்தருகிறோம் 

அர்ஜுன விஷாத யோகம்
த்ருதராஷ்ட்ர உவாச
தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ:।

மாமகா: பாண்டவாஷ்சைவ கிமகுர்வத ஸம்ஜய ॥ 1.1 ॥

ஸம்ஜய உவாச।

த்ருஷ்ட்வா து பாண்டவாநீகம் வ்யூடம் துர்யோதநஸ்ததா।
ஆசார்யமுபஸம்கம்ய ராஜா வசநமப்ரவீத்॥ 1.2 ॥


பஷ்யைதாம் பாண்டுபுத்ராணாமாசார்ய மஹதீம் சமூம்।
வ்யூடாம் த்ருபதபுத்ரேண தவ ஷிஷ்யேண தீமதா॥ 1.3 ॥

அத்ர ஷூரா மஹேஷ்வாஸா பீமார்ஜுநஸமா யுதி।

யுயுதாநோ விராடஷ்ச த்ருபதஷ்ச மஹாரத:॥ 1.4 ॥


த்ருஷ்டகேதுஷ்சேகிதாந: காஷிராஜஷ்ச வீர்யவாந்।
புருஜித்குந்திபோஜஷ்ச ஷைப்யஷ்ச நரபும்கவ:॥ 1.5 ॥


யுதாமந்யுஷ்ச விக்ராந்த உத்தமௌஜாஷ்ச வீர்யவாந்।
ஸௌபத்ரோ த்ரௌபதேயாஷ்ச ஸர்வ ஏவ மஹாரதா:॥ 1.6 ॥


அஸ்மாகம் து விஷிஷ்டா யே தாந்நிபோத த்விஜோத்தம।
நாயகா மம ஸைந்யஸ்ய ஸம்ஜ்ஞார்தம் தாந்ப்ரவீமி தே॥ 1.7 ॥


பவாந்பீஷ்மஷ்ச கர்ணஷ்ச க்ருபஷ்ச ஸமிதிம்ஜய:।
அஷ்வத்தாமா விகர்ணஷ்ச ஸௌமதத்திஸ்ததைவ ச॥ 1.8 ॥


அந்யே ச பஹவ: ஷூரா மதர்தே த்யக்தஜீவிதா:।
நாநாஷஸ்த்ரப்ரஹரணா: ஸர்வே யுத்தவிஷாரதா:॥ 1.9 ॥


அபர்யாப்தம் ததஸ்மாகம் பலம் பீஷ்மாபிரக்ஷிதம்।
பர்யாப்தம் த்விதமேதேஷாம் பலம் பீமாபிரக்ஷிதம்॥ 1.10 ॥


அயநேஷு ச ஸர்வேஷு யதாபாகமவஸ்திதா:।
பீஷ்மமேவாபிரக்ஷந்து பவந்த: ஸர்வ ஏவ ஹி॥ 1.11 ॥


தஸ்ய ஸம்ஜநயந்ஹர்ஷம் குருவ்ருத்த: பிதாமஹ:।
ஸிம்ஹநாதம் விநத்யோச்சை: ஷங்கம் தத்மௌ ப்ரதாபவாந்॥ 1.12 ॥
-யோகேஷ் மித்ரா 








Saturday 29 September 2012

காயத்ரீ தேவி மந்திரம்.


பல வித மந்திரங்கள் இருக்கின்றன, அவற்றை ஜபம் பண்ணுவதற்கு முன்பு, இன்ன இன்ன பலனை உத்தேசித்துப் பண்ணுகிறேன் என்று சொல்லுகிறோம். காயத்ரீ மந்திரத்தினுடைய பலன் சித்த சுத்தி தான்; மன மாசு அகலுவதுதான்.  மற்ற மந்திரங்களால் உண்டாகிற பலன்களெல்லாம் கடைசியில் சித்த சுத்தி உண்டாகத் தான் இருக்கின்றன. அதுவே காயத்ரீக்கு நேரான பலன்; ஒரே பலன்.
காயத்ரி மந்திரமானது 24எழுத்துக்களைக் கொண்டது. ஒவ்வொரு எழுத்தும் ஒரு கடவுளின் சக்தியினைக் கொண்டது. 
ஒவ்வொரு இஷ்டப்ரீதியான தெய்வத்திற்கும் ஒரு காயத்ரி உண்டு. அந்த  ஒவ்வொரு தெய்வமும்  ஒவ்வொரு வகையான பலன்களைக் கொடுக்கக்கூடியது. தினமும் காலை ஒரு ஜபமாலையோடோ அல்லது மானசீகமாகவோ  இந்த மந்திரங்களை ஜெபிக்க உலகின் எல்லா வகையான பலன்களும் கிடைக்கும்.
மூல காயத்ரி மந்திரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 
இவ்வாறே ஒவ்வொரு நாளும் ஒரு தெய்வத்திற்குரிய காயத்ரி வழங்கப்படும். 

காயத்ரீ தேவி மந்திரம்.

ஓம் பூர்: புவ: ஸூவ: தத்ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந ப்ரயோதயாத்.

காயத்ரீமந்திரத்தின் மகிமை குறித்து 
காஞ்சி மஹா பெரியவாள் கூறியது 

மூன்று தலைமுறையாக காயத்ரீயை விட்டு விட்டவன் பிராமணனாக மாட்டான். அப்பேர்ப்பட்டவர்கள் இருக்கிற தெரு அக்கிரஹாரம் ஆகாது. அது குடியானவர் தெருதான். ஆனால் இன்னும் மூன்று தலைமுறை ஆகவில்லையாகையால் இன்னும் பிராமணர்கள் என்று பெயராவது சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

மூன்று தலைமுறை யக்ஞம் இல்லாவிட்டால் அவன் துர்ப்பிராமணன்; கெட்டுப்போன பிராமணன். கெட்டாலும் ‘பிராமணன்‘ என்ற பேராவது இருக்கிறது. மறுபடி பிராமணனாவதற்குப் பிராயச்சித்தம் சொல்லப் பட்டிருக்கிறது. ஆனால் காயத்ரீயை மூன்று தலைமுறையாக விட்டு விட்டால் பிராமணத்துவம் அடியோடு போய்விடுகிறது. அவன் மறுபடியும் பிராமணனாக உறவுக்காரர்களாக உடையவன். அதாவது, பிராமணர்களை உறவுக் காரர்களாக உடையவன் தான் !

ஆகையால் அந்த நெருப்புப் பொறியை ஊதிப் பெரிசு பண்ண வேண்டும். சின்ன நெருப்புப்பொறி எதற்கும் உபயோகப்படாது.  ஆனால் உபயோகப்படுமாறு பெரிசாக்கப்படுவதற்கு அதில் ஆதாரம் இருக்கிறது.

ஆகையால் ஞாயிற்றுக்கிழமையாவது பூணூல் உள்ளவர்கள் ஆயிரம் காயத்ரீ பண்ண வேண்டும். கண்ட இடத்தில் கண்ட ஆஹாரத்தை உண்ணலாகாது. இதுவரைக்கும் அனாசாரம் செய்ததற்குப் பிராயச்சித்தம் பண்ணிக்கொள்ள வேண்டும். இனியாவது கண்ட ஆஹாரத்தை உண்ணாமல், மந்திர சக்தி இருப்பதற்குத் தேகத்தைப் பரிசுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

‘சஹஸ்ர பரமா தேவி சதா மத்யா தசாவரா‘ என்ற (தைத்ரீய ஆரண்யக வாக்குப்) படி ஆயிரம் ஆவிருத்தி உச்சரிப்பது உத்தமம்; 
நூறு ஜபிப்பது மத்யமம்;
 அதம பட்சம் பத்து.

காலை ஸந்தி, மத்தியான வேளை, மாலை ஸந்தி என்று ஒவ்வொரு காலத்திலும் பத்து காயத்ரீயாவது எத்தனை ஆபத்துக் காலத்திலும் ஜபம் பண்ண வேண்டும். 

இந்த மூன்று காலங்களும், சாந்தம் உண்டாகிற காலம். காலையில் பக்ஷி முதலிய பிராணிகளும் மனிதர்களும் எழுந்திருக்கும் காலம். அப்பொழுது மனது சாந்தியாக இருக்கும். சாயங்காலம் எல்லோரும் வேலையை முடித்து ஓய்ந்திருக்கும் காலம். அதுவும் சாந்தமான காலம். 

மத்தியான காலத்தில் சூரியன் உச்சியில் இருக்கிறான். அப்பொழுது மனத்துக்கு சாந்தமான காலம். 

இந்த மூன்று காலங்களிலும், காயத்ரீ, ஸாவித்ரீ, ஸரஸ்வதீ என்று மூன்று பிராகாரமாகத் தியானம் செய்ய வேண்டும். காலையில் பிரம்ம ரூபிணியாகவும், மத்தியான்னம் சிவ ரூபிணியாகவும், சாயங்காலம் விஷ்ணு ரூபிணியாகவும் தியானம் செய்ய வேண்டும்.

காயத்ரீயில் சகல வேத மந்திர சக்தியும் அடங்கியிருக்கிறது. 
மற்ற எல்லா மந்திரங்களுக்கும் சக்தியைக் கொடுப்பது அதுதான். அதை ஜபிக்கா விட்டால், வேறு மந்திர ஜபத்திற்குச் சக்தி இல்லை. ஹிப்னாடிசம் என்பதினால் பல காரியங்களைச் செய்கிறார்கள். மோக்ஷத்திற்குப் போக உதவும் ஹிப்னாடிசம் காயத்ரீ மந்திரம் ! ஆசையையடக்கி ஜன்மம் எடுத்ததன் பலனை அடையச் செய்கிற ஹிப்னாடிசம் காயத்ரீ ! 
லோக காரியங்களைக் குறைத்துக் கொண்டு இந்தப் பொறியை ஊதுவதை அதிகமாகச் செய்ய வேண்டும். அனாசாரத்தில் போகாமல் தேகத்தைச் சுத்தமாக வைத்துக் கொண்டால்தான் இந்த ஒரு பொறியாவது அணையாமலிருக்கும்.

சந்தியாவந்தனத்தில் அர்க்கியமும் காயத்ரீயும் முக்கியமானவை. மற்றவையெல்லாம் அதற்கு அங்கமானவை.  அசக்தர்களாயிருப்பவர்கள் அர்க்கியத்தைக் கொடுத்து விட்டுப் பத்து காயத்ரீயாவது ஜபிக்க வேண்டும். ‘அந்த இரண்டு தானே முக்கியம் ? அவற்றை மட்டும் செய்து விடலாம்’ என்றால் வரவர அவற்றுக்கும் லோபம் வந்துவிடும். 

ஆபத்திலும்,  அசக்தியிலும் பத்து காயத்ரீ போதும் என்பதால் எப்போதும் இப்படிப் பத்தே பண்ணினால், அப்படிப் பண்ணுகிறவர்களுக்கு எப்போதும் ஆபத்தும், அசக்தியுமாகத்தான் இருக்கும்’ என்று ஒரு பண்டிதர் வேடிக்கையாகச் சொன்னார். 

ஆகையால் அங்கபுஷ்களத்தோடு எதுவும் குறைவின்றிச் செய்து வந்தால்தான் முக்கியமானது நன்றாக நிற்கும். ஆபத்துக் காலத்திலும்கூட அவற்றைச் செய்து வர வேண்டும். காலம் தப்பாமல் செய்ய வேண்டும். பாரத யுத்தத்தின் போது ஜலம் அகப்படாதபோது கூடத் தூளியை (புழுதியை) வைத்துக் கொண்டு காலம் தவறாமல் சேனா வீரர்கள் அர்க்கியம் கொடுத்தார்களென்று சொல்லப்பட்டிருக்கிறது.

அஸ்தமன காலத்திலும், உதய காலத்துக்கு முன்பும், உச்சிக் காலத்திலும் அர்க்கியம் கொடுக்க வேண்டும். இடைக்காட்டுச் சித்தர் என்று ஒருவர் இருந்தார். சித்தர்கள் வினோதமான காரியங்கள் பண்ணுவார்கள்; புதிராகப் பேசுவார்கள்.  

இடைக்காட்டுச் சித்தர் ஆடு மேய்த்தார்.
 அவர், ‘காணாமல் கோணாமற் கண்டு கொடு !
 ஆடுகாண் போகுது பார் போகுது பார் !’ என்று சொல்லி இருக்கிறார்.   ‘காணாமல்‘ என்றால் காண்பதற்கு முன்பு என்று அர்த்தம்.

 அதாவது சூரியோதயத்திற்கு முன் காலை அர்க்கியம் கொடுக்க வேண்டும். ‘கோணாமல்‘ என்பதற்கு சூரியன் தலைக்கு மேலே இருக்கும்போது என்று அர்த்தம். அதாவது சூரியன் மேற்காகச் சாய்வதற்கு முன் உச்சிக் காலத்தில் மாத்யான்னிக அர்க்கியம் கொடுக்க வேண்டும்.

 ‘கண்டு‘ என்பதற்கு சூரியன் இருக்கும்போது என்று அர்த்தம். சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்பு மலைவாயிலில் இருக்கும் பொழுதே சாயங்கால அர்க்கியம் கொடுக்க வேண்டும். இந்த விஷயங்களைத் தான் அந்தச் சித்தர் லேசாகச் சொல்லியிருக்கிறார்.

 ‘ஆடு‘ என்றால் ‘நீராடு !‘ அதாவது ‘கங்கையில் ஸ்நானம் பண்ணு‘ என்பது அர்த்தம். ‘போகுது பார்‘ என்றால் ‘த்ரிகால சந்தியாவந்தனத்தாலும் கங்கா ஸ்நானத்தினாலும், சேது தரிசனத்தினாலும் நம் பாபம் தொலைந்து போகிறதைப் பார் !’ என்று அர்த்தம்.

 காசிக்குப் போய் கங்கையை எடுத்துக் கொண்டு, சேதுவான ராமேஸ்வரத்துக்குப் போய் ராமநாத சுவாமிக்குக் கங்காபிஷேகம் பண்ணும் சம்பிரதாயத்தைத் தான் சொல்லியிருக்கிறார்!

காயத்ரீயைச் சரியாகப் பண்ணினால்தான் மற்ற வேத மந்திரங்களிலும் சித்தி உண்டாகும். அர்க்கியத்தையும், காயத்ரீயையும் தவறாமல் செய்து கொண்டு வர வேண்டும். ஜன்மத்தில் ஒரு தரமாவது கங்கா ஸ்நானமும், சேது தரிசனமும் பண்ண வேண்டும்.

ஒருவனுக்கு ரொம்பவும் ஜ்வரம் வந்தால், கூட இருக்கிறவர்கள் அவனுக்காக சந்தியாவந்தனம் பண்ணித் தீர்த்தத்தை  ஜ்வரம் வந்தவன் வாயில் விட வேண்டும். இப்பொழுது நமக்கு நித்தியப்படி ஜ்வரம் வந்தது போலத்தான் இருக்கிறது.

ஜ்வரம் வந்தால் அதற்கு மருந்து அவசியம்; அதுபோல ஆத்மாவுக்கு வந்திருக்கிற பந்தம் என்ற ஜ்வரம் போகக் காயத்ரீ மருந்து அவசியமானது. அதை எந்தக் காலத்திலும் விடக் கூடாது. மருந்தை விட இதுதான் முக்கியமானது. ஒரு நாளாவாது சந்தியாவந்தனத்தை விட்டு விட்டோமென்று இருக்கக் கூடாது.

காயத்ரீ ஜபம் பண்ணுவது எல்லாராலும் ஆகிய காரியம்தான். இதிலே ஜலத்தைத் தவிர வேறு திரவியம் வேண்டாம். சரீரப் பிரயாசையும் இல்லை. லகுவாகப் பரம சிரேயஸைத் தரும் ஸாதனம். ஆயுள் இருக்கிற வரைக்கும் சந்தியாவந்தனத்துக்கு லோபம் வராமல் பண்ண வேண்டும்.

காயத்ரீயை மாத்ரு ரூபமாக (தாய் வடிவமாக) உபாசிக்க வேண்டும். பகவான் பல வித ரூபங்களில் வந்து பக்தர்களுக்குக் கிருபை செய்கிறார். நம்மிடம் எல்லாரையும் விட அன்பாக இருப்பது மாதா தான். தாயாரிடம் எதை வேண்டுமானாலும் பயம் இல்லாமல் சொல்லலாம்.

பகவான் எல்லா ரூபமாக இருந்தாலும் மாதா ரூபமாக வந்தால் ரொம்பவும் ஹிதமாக இருக்கிறது. காயத்ரீயை அப்படிப்பட்ட மாதாவென்று வேதம் சொல்லுகிறது.

பல வித மந்திரங்கள் இருக்கின்றன, அவற்றை ஜபம் பண்ணுவதற்கு முன்பு, இன்ன இன்ன பலனை உத்தேசித்துப் பண்ணுகிறேன் என்று சொல்லுகிறோம். காயத்ரீ மந்திரத்தினுடைய பலன் சித்த சுத்தி தான்; மன மாசு அகலுவதுதான்.  மற்ற மந்திரங்களால் உண்டாகிற பலன்களெல்லாம் கடைசியில் சித்த சுத்தி உண்டாகத் தான் இருக்கின்றன. அதுவே காயத்ரீக்கு நேரான பலன்; ஒரே பலன்.

இந்தக் காலத்தில் காலையிலும், சாயங்காலத்திலும் எல்லாரும் காலந் தவறாமல் சந்தியாவந்தனம் செய்யலாம். சீக்கிரம் ஆஃபீசுக்குப் போக வேண்டியவர்கள் மத்தியான வேளையில் வீட்டிலிருக்க முடியாதாகையால், பிராதஃகாலம் ஆனபின் அதாவது சூரியோதயத்திலிருந்து ஆறு நாழிகை ( 2 மணி 24 நிமிஷம்) கழித்து வரும் சங்கவ காலத்தில், அதாவது 8 .30 மணி சுமாருக்கு மாத்தியான்ஹிக அர்க்கியத்தைக் கொடுத்து ஜபிக்க வேண்டும்.

அதாவது நம்மால் அடியோடு முடியாமற் போனாலன்றித் திரிகால சந்தியோபாஸனை இல்லாமல் இருக்கவே கூடாது.அடியோடு முடியாமல் ஜுரம் வந்தால் மற்றவர்களிடம், ‘கஞ்சி கொடு, தீர்த்தம் கொடு‘ என்று சொல்லுவதைப் போல,’எனக்காக சந்தியாவந்தனம் பண்ணு‘ என்று சொல்ல வேண்டும்.

மந்திர சக்தியானது அணையாமல் விருத்தியாகக் கிருபை செய்ய வேண்டுமென்று பகவானை எல்லோரும் பிரார்த்திப்போமாக!

தலைப்புச் செய்திகள் (29-12-2012)


தலைப்புச் செய்திகள் (29-12-2012)
"உரிய பாதுகாப்பில்லாவிட்டால் அணுஉலையை மூடுவோம்" உச்சநீதிமன்றம் எச்சரிக்கிறது 
கூடங்குளம் அணுமின் நிலையத்தில், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஏற்பாடுகள் தமக்கு திருப்தியாக இல்லாவிட்டால், அதன் உரிமத்தை ரத்து செய்வதற்கும் தயங்க மாட்டோம் என்று இந்திய உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.
அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் அளித்த 17 பரிந்துரைகளில் இன்னும் 11 பரி்ந்துரைகள் அமல்படுத்தப்படவில்லை, முறையான சுற்றுச்சூழல் அனுமதியில்லை என்ற அம்சங்களின் அடிப்படையிலும், அணு உலை விபத்து ஏற்பட்டால் வழங்கப்பட வேண்டிய இழப்பீடு தொடர்பாகவும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

எல்லா இயற்கை வளங்களுக்கும் ஏலம் கட்டாயமில்லை: உச்சநீதிமன்றம் கருத்து

ஏல முறையைப் பின்பற்ற வேண்டும் என்ற தீர்ப்பு, தொலைத் தொடர்புத்துறையின் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், எல்லா இயற்கை வளங்களுக்கும் அந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இயற்கை வளங்களை விநியோகிக்கும்போது, மக்கள் நலனுக்கு எது உகந்ததாக இருக்குமோ அந்த முறையை அரசு பின்பற்றலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மிருகக் காட்சி சாலையில் புலி கொலை

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத் தலைநகர் ஈட்டா நகரில் இருக்கும் வன விலங்குக் காட்சியகம் ஒன்றில் புகுந்து, அங்கிருந்த பெண் புலி ஒன்றைக் கொன்ற ஒரு குழுவினரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

ஆண்களை விட ப்பெண்களின் சராசரி வயது அதிகம்


ஆணாகப் பிறந்தால் ஆயுள் குறைந்துவிடுமா?

மனித இனத்தில் ஆண்களை விட ப்பெண்களின் சராசரி வயது அதிகம். இதற்கு என்ன காரணம் என்று மருத்துவ உலகில் நடக்கும் தொடர் ஆய்வுகளில், ஒரு பகுதி விஞ்ஞானிகள், ஆண்களுக்கு ஆண்தன்மையை அளிக்கும் ஹார்மோன்கள், அவர்களின் ஆயுளை குறைப்பதில் முக்கிய பங்காற்றலாம் என்று சந்தேகிக்கிறார்கள்.
ஆண்களின் ஆண் தன்மைக்கு காரணமான ஹார்மோன்களே, அவர்களின் ஆயுட்காலத்தை குறைப்பதற்கான காரணியாக இருக்கக்கூடும் என்பதை குறிப்புணர்த்தும் ஆய்வின் முடிவு ஒன்று சமீபத்தில் வெளியாகியிருக்கிறது.
அதாவது ஆண்களுக்கு ஆண்தன்மையை அளிக்கும் டெஸ்டஸ்ட்ரோன் என்கிற ஆண்களின் பாலின தன்மைக்கான ஹார்மோன்கள், ஆண்களின் விதைப்பைகளில் பெருமளவு உற்பத்தியாகிறது. இந்த டெஸ்டெஸ்ட்ரோன் ஹார்மோன் ஆண்களின் நோய் எதிர்ப்புத்தன்மையை பாதிக்கக்கூடும் என்றும் ஆண்களின் இதயத்தை வலுவிழக்கச்செய்யக்கூடும் என்றும் இந்த தரப்பு ஆய்வாளர்கள் சந்தேகம் வெளியிட்டு வந்தனர்.
இவர்களின் இந்த சந்தேகம், மருத்துவ விஞ்ஞான உலகின் ஆய்வு நெறிகளுக்குட்பட்ட ஆய்வுகள் மூலம் இதுவரை முழுமையாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், இந்த கருதுகோள் கணிசமான மருத்துவ விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இவர்களின் இந்த சந்தேகம் நிரூபிக்கப்படவேண்டுமானால், விதைப்பை நீக்கப்பட்ட ஆண்களின் ஆயுட்காலம் சராசரியாக அவர்கள் வாழும் சமூகத்தின் மற்ற ஆண்களின் சராசரி ஆயுட்காலத்தை விட அதிகரிக்கிறதா என்கிற ஆய்வின் முடிவில் தான் அதை கணக்கிட முடியும். இப்படியான ஆய்வுகள் இதுவரை முழுமையாக நடக்கவில்லை என்றாலும், இதற்கு இணையான புதிய ஆய்வின் முடிவு இவர்களின் கருத்துக்கு வலு சேர்ப்பதாக இருக்கிறது.

கொரியாவில் பதினாறாம் நூற்றாண்டில் துவங்கி, பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை உயிர்வாழ்ந்த விதைப்பை அகற்றப்பட்ட ஆண்கள், அதாவது தற்போது அரவாணிகள் என்றும் திருநங்கைகள் என்றும் அழைக்கப்படுகிறவர்களைப் போன்றவர்களின் ஆயுட்காலம் பற்றிய புள்ளி விவரங்கள் தற்போது கிடைத்திருக்கின்றன.
இந்த காலகட்டத்தில் கொரியாவில் ஆட்சியில் இருந்த கோசுன் பேரரசில் பருவ வயதுக்கு வருவதற்கு முன்னரே விதைப்பைகள் அகற்றப்பட்ட திருநங்கைகள் அரண்மனை காவலுக்கு வைக்கப்பட்டிருந்தனர். இப்படி அரண்மனையில் முக்கிய பணியில் இருந்த திருநங்கைகள் 81 பேரின் புள்ளிவிவரங்களை ஆராய்ந்த இன்ஹா பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் கியுங் ஜின் மின் அவர்கள், இவர்கள் அனைவரும் சராசரியாக எழுபது வயது வரை உயிர் வாழ்ந்திருப்பதாக கூறுகிறார். இதில் மூன்றுபேர் நூறு வயதுக்கும் மேலாக உயிர்வாழ்ந்திருக்கிறார்கள்.

அதேசமயம், இவர்களை பணியில் அமர்த்தியிருந்த அரச வம்ச ஆண்களின் சராசரி வயது வெறும் 45 என்றும், அரண்மனையில் இருந்த மற்ற ஆண் அதிகாரிகளின் சராசரி வயது 50 தாண்டவில்லை என்றும் கூறும் இந்த பேராசிரியர், இவர்களின் வாழ்க்கைச் சூழல், வசதி வாய்ப்புகள் போன்றவை கூட இவர்களின் ஆயுட்காலத்தை நிர்ணயிக்கும் காரணிகளாக இருந்திருக்கலாம் என்றாலும், அந்த காரணிகளைவிட ஆண்தன்மைக்கான டெஸ்டஸ்ட்ரோன் ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் விதைப்பைகள் நீக்கப்பட்டதே திருநங்கைகளின் ஆயுட்காலம் அதிகரிக்க முக்கிய காரணி என்று அவர் கூறுகிறார்.

ஆனால் இந்த ஆய்வின் முடிவுகள் வாதப்படிக்கு ஏற்கத்தக்கதாக இருந்தாலும் இவற்றை இறுதியானதாக கொள்ளமுடியாது என்கிறார் லான்காஸ்டர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டேவிட் கிளான்ஸி. வேறு சில ஆய்வுகளில் விதைப்பை நீக்கப்பட்ட ஆண்களின் வயதுக்கும் நீக்கப்படாத ஆண்களுக்கும் சராசரி வயதுக்கும் இடையில் பெரிய வேறுபாடு காணப்படவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

இந்த வாதப்பிரதிவாதங்கள் ஒருபுறமிருக்க, டெஸ்டெஸ்ட்ரோன் ஹார்மோன்கள் இல்லாவிட்டால் ஆண்களுக்கு பாலியல் நாட்டம் இல்லாமல் போகும் என்பதை சுட்டிக்காட்டும் பேராசிரியர் கியுங் ஜின் மின் அவர்கள், எத்தனை ஆண்கள் தங்களின் ஆண்மையை பறிகொடுத்து ஆயுட்காலத்தை நீட்டிக்க விரும்புவார்கள் என்று கேள்வியை எழுப்புகிறார்.
நன்றி:.பி.பி.சி 
ஆராய்ச்சிகளுக்கு முடிவே இல்லை 
நாம் அறிந்தவரை அதிக நாட்கள் உயிர்வாழ்ந்தவர்கள் உள்ள நாடான அஜர்பெய்ஜான், உஸ்பெகிஸ்தான்  ஆகிய நாடுகளில் அதிகநாள் உயிர்வாழ்ந்தவர்கள் ஆண்களே என்று அறிகிறோம். விவரம் அறிந்தவர் மருப்புக்கூறினால் பிரசுரிக்கலாம் -ஆசிரியர் 

இன்றைய முக்கியச் செய்திகள் (29-09-12)


இன்றைய முக்கியச் செய்திகள் (29-09-12)
அன்றாடம் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன .மறக்கப்படுகின்றன
நினைவு கூர நாம் தொகுக்கலாம் .
----------------------------------------------------------------------------------
நம் போக்கு சுருக்கமே. இனி விரைவில் படங்கள் இணைப்போம்
தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் பதவி விலகல்; காரணம் தெரியவில்லை
தமிழகத்துக்கு தண்ணீர் விடுமாறு கர்நாடகாவுக்கு உத்தரவு
சிவகாசியில் மீண்டும் பட்டாசுத் தீ விபத்து: மூவர் பலி

Thursday 27 September 2012

ஒரு தூரிகையும் மூன்று சிகரங்களும்



                               ஆ,செந்தமிழ்ச்செலவன்
நல்லாண் பிள்ளை பெற்றாள் .. என்ன ஒரு பெயர்! அப்படி ஒரு கிராமம் 
செஞ்சியிலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில்  கடலாடி குளம் என்று ஓர் ஊர் வருகிறது அங்கே  ஒரு கூட்டுச் சாலை .. அங்கிருந்து மேற்கே 
 6 கி.மீ சென்றால் வருகிற ஊர்  தான்நல்லாண் பிள்ளை பெற்றாள் .. வீட்டுக்கு வீடு ஆசிரியரகளாகவே  உள்ள அந்த ஊரில்  தமிழாசிரியரின் மகனாகப் பிறந்தவர் ஆ,செந்தமிழ்ச்செலவன் என்ற இயற்பெயர் கொண்ட பிரபல ஓவியர் தமிழ். 
இன்று தமிழகத்தில் இவர் கைவண்ணம் பெற்று வெளிவராத மாத வார மற்றும் “தின ஏடுகள இல்லை என்று கூறத்தக்க அளவில் இவர் வரையும் ஓவியங்கள் எல்லா ஏடுகளையும் அலங்கரிக்கின்றன. அடக்கம்,எதையும் புன்னகையோ டு ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம், நட்புக்கு மரியாதை தரும் பண்பு என்று, அயராமல் உழைத்துப் படிப்படியாக வளரும் இவரைச்சினிமா வாய்ப்பு தானே தேடி வந்தது 
இயக்குநர் திலகம் ஷங்கர் தயாரிக்க இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரும் இயக்குநர் இமயம் பாரதிராஜாவும் நடிக்க அதற்கு வசனம்  எழுதவும் உதவி இயக்குநராகப் பணியாற்றவும் ஒரு வாய்ப்பு இவருக்கு இரட்டைச்சுழி  படத்தை இயக்கிய தாமிராவால் கிடைத்தன இந்த நண்பர்கள் ஏற்கனவே கன்னடப் படம், சின்னத்திரை என்று இணைந்து  பணியாற்றியவர்கள் .இதுவரை சினிமா உலக வரலாற்றில் ஓர் ஓவியருக்கு இப்படி ஒரு படமும் இத்தகைய மோதிரக்கைகளால் குட்டுப்படும்  அறிமுகமும் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்  தான் . தமிழ் சினிமா மட்டுமல்ல  இந்திய சினிமா ஏன் உலக சினிமாவிலும் கூட ஓர் ஓவியருக்கு இத்தகைய பங்களிப்பு கிட்டவில்லை என்று துணிந்து கூறலாம்.  
அவரது அனுபவங்களைப் பற்றிக்கேட்டபோது 
“ நான் சந்த மாமா பப்ளிகே கஷன்ஸ் நடததிய பொம்மை மற்றும் மங்கை பத்திரிகைகளுக்கு ஓவியராகஇருந்தேன்  . அங்கே தாமிரா பணியாற்றி னான்.அவன் சின்னத்திரை டைரக்டர் ஆவான் என்று  எதிர்பார்க்கவில்லை 
பெரிய திரை டைரக்டர் ஆவான் என்று நானோ  என்னை உதவி இயக்குநராக்கி வசனம்  எழுத வைத்து சின்னத் திரையிலும் பெரிய திரையிலும் பெயர் வாங்கித்தரப் போகிறான்  என்று அவனோ  ஒரு நாளும் கனவு கண்டதில்லை
பின்னாளில் தாமிராவுக்கு அமைந்த அறிமுகங்கள் சின்னத்திரைக்கும் கன்னடத்தில் பெரிய திரைக்கும் அழைத்துச் சென்றன. வாய்ப்புக்கள் வரும்போதெல்லாம் என்னைக் கையைப் பிடித்து அழைத்துச் சென்று தனக்குக் கிடைக்கும் வாய்ப்புக்களில் என்னையும் அவன் பங்கே கற்க வைப்பான்.
ஜெயா டிவியில் தொடராக வெளிவந்த 'அண்ணி' சன் டிவியில் தொடர்ந்த மனைவி விஜய  டிவியில் காவ்யா என்ற சின்னத்திரைத் தொடர்களுக்குத் திரைக்கதை வசனம், 
அமிதாப் பச்சன் கௌரவவேடத்தில் நடித்து 100 நாட்கள் ஓடிய அமிர்த தாரை என்ற கன்னடப் படத்தில் திரைக்கதை என்று என்னை அறிமுகப்படுத்திய தாமிரா ஒரு நான் டீக்கடைச் சந்திப்பில்  இரண்டு மாபெரும் டைரக்டர்களை நடிக்க வைத்து ஒரு மாபெரும் டைரக்டர் தயாரிக்க இருக்கும் கதையைத் தான் இயக்கும் வாய்ப்புக்கான ஒரு கதையை என்னிடம் சொன்னான். கதையைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது இடையிடையே நான் சொன்ன விமர்சனங் களைக் கேட்டு  நீயே இதற்கு திரைக்கதை வசனம் எழுது என்றான் . தயக்கத்தோடு எழுதி முடித்தேன் பரீட்சை எழுதிவிட்டு பயத்தோடு  ரிஸல்ட்டுக்குக் காத்திருப்பது போலக் காத்திருந்த எனக்குக் கிடைத்தது அவரது கைகுலுக்கல்.
அடுத்த கட்டம் எப்படி காட்சி அமைப்பது என்ற விவாதம். என் ஓவியத் தொழில் எனக்குக் கை கொடுத்தது. காட்சிகளை ஸ்டோரி   போர்டு மூலம் ஓவியங்களாக வரைந்து காட்டினேன்.
(பின்னாளில் சத்யஜித் ரே  அழியாப் புகழ் பெற்ற தன் முதல் படமான பதேர் பாஞ்சாலியின்  ஒவ்வொரு காட்சிகளையும் சித்திரங்களாக வரைந்து கொண்டு செயல்பட்டார் என்பதை எழுத்தாளர் வையவன் அவர்கள் மூலம் அறிந்தேன்)மூன்று டைரக்டர்கள் கைக்குச் சென்ற என் ஓவிய வடிவ 
ஸ்டோரி போர்டு  வசனம் எழுதுவதோடு உதவி டைரக்டராகவும் இருக்கப் பணித்தது. ஏற்றுக் கொண்டே ன்.
ரெட்டைச்சுழி  மக்கள் மத்தியில் வரவேறபுப் பெறவில்லை.  ஆனால் எனக்கு  பள்ளிக்கூடமாக அமைந்தது. குண்டூசி முதற்கொண்டு படப்பிடிப்பிற்குத் 
கே .பி அவர்களின் கவனக்கூர்மை. கதைக்கும் காட்சிக்கும் தேவையான தகவலை உரிய நபரிடமிருந்து பெற்ற பிறகே காட்சிப்படுத்தும் முன் யோசனை ஒரே  இடத்தில் நாற்காலி போட்டு உட்கார்ந்து விடாமல் ஓடிக்கொண்டே இருக்கும் சுறுசுறுப்பு . அவரைக் கவனித்துக் கொண்டிருக்கிற  ஒவ்வொரு கணத்திலும் கற்க வைக்கும் மனித ஆளுமை ஆகியவை எனக்கு ஒரு வகுப்பாயின.
அடுத்துத் திண்ணையில் துண்டு விரித்துதூங்கக் கூடத்  தயங்காத பாரதி ராஜா அவர்களின் மாறாத கிராமீயப் பண்பு." நீ இந்த வேலைய்ச்செய் " என்று எவரையும் ஏவி விட்டுச் சும்மா  நிற்காமல் தா@ம களத்தில் இறங்கிக் காட்சிப் படுத்தும் அவரது இயற்கையான மேன்மை மற்றொரு வகுப்பு 
கோடிக்கணக்கில் பணம் கொட்டி எடுக்கும் படம் திறன் உழைப்பு எல்லாம் வே வண்டிய இடம் ரசிகனின் ரŒனை என்பதை ஒரு கணமும் மறவாத ஷங்கர் அவர்கள் கொஞ்சம் கூடப்  பெருமை பாராட்டாமல் உடன் பணியாற்றும் அனைவரிடமும் நேரடித் தொடர்பில்,நேசத்தோடு  கலந்து பேசுவதால் அவரது கண்காணிப்பிலும் மேற்பார்வையிலும் பணியாற்றுகிறோம் என்ற எண்ணமே ஒரு பலமாகவும் எச்சரிக்கை கலந்த பாதுகாப்பாகவும் இருக்கும் 



               சில கார்டூன்கள் 
                             கோல் போஸ்டில்   ஸ்பைடர் மேன் 

நடிகர் நாகேஷ்


                      நடிகர் நாகேஷ் 
பிறந்த தினம் இன்று;
சிரிக்காவிட்டால் விடமாட்டேன் என்று சாதித்துக்காட்டிய நடிகர் . உன் பாட்டிலே பிழை என்று நக்கீரர் சுட்டிக்காட்ட எவ்வளவு பிழை இருக்கிறதோ அதற்க்குத்தக்கபடி பரிசைக் குறைக்கச் சொல்லி தர்க்கம் செய்த காட்சி திருவிளையாடலில் யார் மனசை விட்டு நீங்கும்?
நாகேஷின் இயற்பெயர் குண்டுராவ். கன்னட பிராமண குடும்பத்தில் 1933-செப்டம்பர் 27-ம் தேதி பிறந்தவர். வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும் என்ற வெறியுடன், சாதிக்காமல் வீடு திரும்ப மாட்டேன் என்று கூறி சென்னைக்கு வந்த நாகேஷ் துவக்க காலத்தில் பல்வேறு கஷ்டங்களைஅனுபவித்துள்ளார்.
சென்னையில் மேற்கு மாம்பலத்தில் ஒரே அறையில் வாலி மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோருடன் தங்கியிருந்தார
். சிறிது காலம் ரெயில்வேயில் பணியாற்றினார். ஆனால் அவருக்கு அதில் திருப்தி ஏற்படவில்லை. ரெயில்வேயில் பணியாற்றிய போது அங்கு நடைபெற்ற ஒருநாடகத்தில் வயிறு வலியால் துடிக்கும் நோயாளியாக நடித்தார். அவரது நடிப்பை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட எம்ஜிஆர் வெகுவாக பாராட்டினார்.
அதன் பின்னர் சின்ன சின்ன வேடங்களில் நாடகங்களில் நடித்து வந்தார். பின்னர் தயாரிப்பாளர் பாலாஜி உதவியுடன் அவர் சினிமாவில் நடிக்க வந்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேடங்களில் அவர் நடித்துள்ள போதிலும் இன்றும் திருவிளையாடல் படத்தில் அவர் நடித்ததருமி வேடம் எல்லோர் மனத்திலும் நீங்காத இடம்பெற்றது. பிழைப்புக்காகஅவர் ஓட்டல் ஒன்றில் சர்வராகவும் வேலை செய்துள்ளார் (பின்னாளில் இதுவே சர்வர் சுந்தரமானது).
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் அன்புக்குப் பாத்திரமாகி, அவரது பெரும்பாலான படங்களில் நடித்தவர் நாகேஷ். இடையில் சில காலம் இருவருக்கும் ஒரு பிரிவு வந்தாலும், மீண்டும் நாகேஷை அரவணைத்துக் கொண்டார் எம்ஜிஆர். மேக்கப் அறையில் எம்.ஜி.ஆர் தயாராக நேரம் தாமதமாவதால்கோபமடைந்த நாகேஷ் கிழவன் ரெடியா என்று கேட்க அது எம்.ஜி.ஆர் காதில் விழ அந்த மோதல் உருவானது. பின் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நாகேஷு க்காகவே ஒரு பாத்திரத்தை உருவாக்கினார் அப்படத்தின் இயக்குநரான எம்ஜிஆர். நாகேஷ்  குடிப் பழக்கத்துக்கு அடிமையாகி மிகவும் உடல் பாதித்த நிலையில் அவர் அதிலிருந்து மீண்டு வர உதவியவர் எம்ஜிஆர்.
அடுத்த ஏழு ஜென்மத்துக்கும் சேர்த்து இப்பவே குடிச்சேன். அதனால நான் பிழைப்பேனான்னே தெரியாத நிலை. ஆனால் மருத்துவர்களும் அண்ணன் எம்ஜிஆரும் எனக்கு புதுப்பிறவி கொடுத்துட்டாங்க என்று ஒரு முறை கூறியிருந்தார் நாகேஷ்.
எம்ஜிஆர், சிவாஜி (திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் விதிவிலக்கு!)படங்களில் காமெடியனாக நடித்துப் புகழ்பெற்றாலும், நடிகர் நாகேஷ் பட்டை தீட்டப்பட்ட வைரமாக ஜொலித்தது கே. பாலச்சந்தர் மற்றும் ஸ்ரீதர் ஆகியோரது படைப்புகளில்தான்.
காதலிக்க நேரமில்லை படம், நாகேஷ் நகைச்சுவையில் ஒரு மைல் கல். ஒரு சாதாரண காட்சியை, வெறும் பாவனைகளில்,உச்சரிப்பின் மூலம் த்ரில்லர் காட்சியாக எப்படிக் காட்டுவது என திரைப்பட இயக்குநர்களுக்கே பாடம் நடத்தியிருப்பார் நாகேஷ் (ஸ்ரீதரின் கைவண்ணம்!).
கமல் ஹாசனின் பிற்காலப் படங்கள் அனைத்திலுமே நாகேஷு க்கு மறக்க முடியாத பாத்திரங்கள். அபூர்வ சகோதரர்கள் மூலம் ஒரு விதத்தில் நாகேஷின் பைனல் இன்னிங்ஸை ஆரம்பித்து வைத்தவரே கமல்தான் என்றாலும் மிகையில்லை.
மைக்கேல் மதனகாமராஜன், நம்மவர் என அந்தப் பட்டியல் தசாவதாரம் வரை தொடர்ந்தது. குறிப்பாக மகளிர் மட்டும் படத்தில் பிணமாக அவர் ‘நடித்த’ ஒரு காட்சியைப் பார்த்து ஹாலிவுட் நடிகர்களே வியந்துபோனதாக கமல்ஹாசன் குறிப்பிட்டிருந்தார்.
நம்மவர் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய அளவில் சிறந்த துணை நடிகருக்கா விருது நாகேஷ்க்குக்கிடைத்தது. நாகேஷ் நீண்ட நாட்களாகவே சர்க்கரை வியாதி மற்றும் இதயக் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்தார்.
அவருக்கு மூன்று மகன்கள். ஆனந்தபாபு மட்டுமே திரையுலகுக்கு வந்தார். மற்றவர்கள் வேறு தொழில்கள் செய்து வருகின்றனர்.
கிழவன் ரெடியா என்று எம்.ஜி.ரை கேலி செய்து தப்பி வந்த ஒரே நடிகர் நாகேஷ் !
மனைவி மரணமடைந்தபோது மரணத்தில் ஏற்பட்ட மர்மச் சிக்கலிலும் மீண்டவர் !
மகன் ஆனந்தபாபு தன்னைவிட பெரிய குடிகாரனானதை தாங்கிச் சிரித்தவர் !
புதிய காரை எடுத்துக் கொண்டு தாய்க்குக் காட்ட ஓடியபோது அங்கு தாயின் மரணத்தைக் கண்டவர் !
கிறிஸ்தவப் பெண்ணை மணந்த காரணத்தால் குடும்பத்தால் ஒதுக்கப்பட்ட பிராமணர் !
திரையுலகில் உழைத்த பணத்தை நாசமாக்கிய நடிகர் வரிசையில் இடம் பெறுபவர் நாகேஷ் !
உலகெங்கிலும் உள்ள  தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் நாகேஷ் . வசந்தமாளிகை, திருவிளையாடல் போன்ற பிரபலமான திரைப்படங்களால் சரித்திரம் படைத்தவர் நாகேஷ்.
தமிழ் திரையுலகில் சந்திரபாபு நகைச்சுவையை உடலினால் காட்டுவதில் வெற்றி பெற்றார். அவருக்குப் பிறகு கே.ஏ.தங்கவேலு நகைச்சுவையை உரையாடலால் வெளிப்படுத்தி வெற்றி கண்டார். அதன் பின்னர் வந்த நாகேஷ் சார்லி சாப்ளின் போல உடலினாலும், வசனத்தாலும் நடித்து சரித்திரம் படைத்தார்.
நகைச்சுவை நடிகராக இருந்த நாகேஷ் கே. பாலசந்தரின் படங்களில் நடிக்க ஆரம்பித்தபோது நகைச்சுவைக்கு அப்பால் குணசித்திர வேடங்களில் பெரிய முத்திரை பதித்தார். சர்வர்சுந்தரம், ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான், தாமரை நெஞ்சம், மேஜர் சந்திரகாந்த் போன்ற படங்கள் நாகேஷின் குணசித்திர நடிப்பிற்கு நல்ல எடுத்துக்காட்டுக்களாக அமைந்தன.
நகைச்சுவை நடிகர்களில் சந்திரபாபுவிற்குப் பிறகு நடனத்தில் சாதனை படைத்தவர் நாகேஷ்தான். அவர் எடுத்த கடினமான நடனஅசைவுகளை அவருடன் நடித்த மற்றய நடிகைகளால் நெருங்கவே முடியாமல் இருந்த காரணத்தால் தனியான இவருடைய நடனங்களை படம் பிடித்தார்கள்.
நடிகர் திலகம் சிவாஜி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அதற்கு பின் வந்த ஜெய்சங்கர் – ரவிச்சந்திரன், அடுத்ததலைமுறையாக கமல் – ரஜினி பின்னர் வந்த தனுஷ் வரை பல தலைமுறை நடிகர்களோடு நடித்து 1000 திரைப்படங்களை தொட்டவர் நாகேஷ்.
அழகான முகமே திரைப்படத்தின் இலட்சணம் என்று கருதப்பட்ட காலத்தில் குன்றும் குழியுமாக இருந்த தனது முகத்தினால் சரித்திரம்படைக்க முடியுமென நிறுவினார்..!! நடிப்பிற்கு அழகு தேவையில்லை என்று உலகிற்கு நிரூபித்த மனிதர் நாகேஷ் 

Friday 21 September 2012

JP Corner


வேரோட்டமும் மேலோட்டமும் 
அ.ஜெகதலப்ரதாபன்

[இது ஜேபி  (ஜெகதலப்ரதாபன்)பகுதி . அவர் பாட்டுக்கு ஏதாவது எழுதுவார். வளவளவேன்றோ  சூடாகவோ வண்டவாளங்களைத் தண்டவாளத்தில் ஏற்றவோ என்னவாவது எழுதுவார். அனுமதிப்போம். லெவல் தாண்டினால் வணக்கம் கூறி வழியனுப்புவோம். சாவி நம் கையில் .. அதாவது உங்கள் கையில் தான் இருக்கிறது .] 
ந்த வருஷம் மழை சரி இல்லை. கவிழ்த்து விட்டது.சு ற்றுச்சூழல்  பூச்சாண்டிகளின்  கூச்சல்   காதில் விழுந்து, விட்டுத்தான் பார்ப்போம் , என்று ஸ்ட்ரைக் செய்திருக்கலாம்.  பெ#தும் கெடுக்கும்,  பெய் யாமலும் கெடுக்கும் என்று வள்ளுவப் பெருந்தகை தான் கூறியிருக்கிறாரே  மழை பெ#தால் அல்லது பெய் யாமல் போனால் ...சா க்கடைசு த்தம் செய் தால் அல்லது செய் யா மல் @பானால்... உட@ன வ.பெ. ரெபரன்ஸ் காட்டுகிறோ ம். வ.பெ  இப்படி  2012  மற்றும் அதைத் தாண்டிக் கூட , தான்   ஒரு ரெபரன்ஸ் மான்யுவல்  ஆக இருக்கிற ஐடியாவில் தான்  தி.குவை   எழுதியிருப்பாரா என்ன?. ஏதோ  அவர் பாட்டுக்கு  எழுதிவிட்டு இன்றைய இளம் எழுத்தாளர்கள்  பத்திரிகை பத்திரிகையாக அலைந்து, நொந்து ,வெந்து போ வது  போலச் சங்கம் சங்கமாக ,நாடிக் கடைசியில் எந்த ஸ்பான்சர்ஷிப்போ  பிடித்து  தி.கு. வை வெளியிட்டிருக்க வேண்டும். அது கிளிக் ஆகி கோ யில் கோ ட்டம் சிலை அரசுப்பேருந்து இப்படி  பெரிய ட்ராபிக்கில் மாட்டி   பூஸ்ட் ஆகி விட்டது. 
இதில் அடிக்கடி தலையணைக்கு உறை மாற்றுவது ஆளுக்கு ஆள்   தி.குவுக்கு உரை. ஒரு லைப்ரரியில் தடுக்கி விழுந்தால் ஒரு தி.கு.உரை மீது தான் விழ@வண்டும். தி.கு வைப்பார்த்தாலேயே எல்லோருக்கும் கை நமநமக்கும் போல  சுஜாதா கூட இதில் மாட்டி வாங்கிக் கட்டிக் கொண்டார். விதி யாரை விட்டது?நீங்கள் கூட ஒன்று எழுதலாமே!
ஒரு கை குறைகிற@த ..ஏதாவது ஐடியா உண்டுமா?
        கம்பர் பரவாயில்லை. அவருக்கு செம  ஸ்பான்சர்ஷிப் .சடையப்ப வள்ளல். பெரிய நிலச்சு வான்தாராக இருந்திருப்பாரா? இருக்கலாம்.  சடையப்பர் நிலத்தில் கூட மழை பெய்யாத பிரச்னை இருந்திருக்காதா என்ன? 
       கம்பர் அவரைச் சந்தித்து தி.கு.வில் வான் சிறப்பு அதிகாரத்தில் இருந்து இரண்டு மூன்று ஐட்டங்களை எடுத்து விட்டிருக்க மாட்டாரா என்ன ? அதில் மைந்து (வட்டார வழக்காளர்களுக்கு ஒரு டிப்ஸ் -வட ஆற்காட்டுத் தமிழ்ப் பெருங்குடி மக்கள் மசிந்து என்பதற்கு இப்படி ஒரு காயநேஜ் விடுவர்)தான் கம்பருக்குத் தேவையான சௌ கரியங்களை ஏற்பாடுசெய்திருக்கக் கூடும். கம்பர் என்றதும் சமீபகாலமாக அவரைப் பாபுலராக்கும் விவகாரத்தில்  நடிகர் சிவகுமார் ஈடுபட்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது.
கொங்கு நாட்டில் கம்பர் பிறந்திருந்தால், அவர் ரேஞ்சே வேறாக  இருந்திருக்கும். 
எப்படியோ . நட்சத்திர  மண்டலம் இலக்கியத்தின் பக்கம் தலை திருப்பி இருக்கிறதே 
ரஜினி ஒரு பேபட்டியில்  தமிழில் தமக்குப் பிடித்த நாவல் பொன்னியின் செல்வன் என்று கூறியிருக்கிறார். @மலும் எஸ்.ராமகிருஷ்ணன்  விழாவில் கலந்து கொண்டு பே சியிருக்கிறார். ராகவே வந்திரர்.. கிரிவலம்... என்று ரஜினி கண் காட்டியதும் கும்பல் கும்பலாகச் சேவிக்க ச்சென்ற  ரஜினி ரசிகர்கள்  பொன்னியின் செல்வன் மற்றும் எஸ்.ரா பக்கம் கண்களைத்  திருப்பலாம்.  உலக வரலாற்றில்  பெய்யாத மழைக்கு மொட்டை போட்டதை விட   ரஜினி உடல் நலம் பெற்றதற்குப் பழனியில்  மொட்டைகள் அதிகம். ஆயிரம். முடிநீக்கியவருக்கு  பல்க்கான வருமானம்.கின்னஸ் @மட்டர்ப்பா. மறுபடியும் மழை விஷயம். முன்பு யாகம் நடத்துவார்கள். மழைக்காகசங்கீதம் அவ்வளவாகக் காணோம் எயய்யவேண்டியவர்கள் அனைவரும் சீரியலில்  சிதைகிறார்கள்.சிவ சிவா. சிவார்ப்பணம்

Wednesday 19 September 2012

Vallamai Editor


சந்திப்போம் 
அமுதசு ரபி முன்னாள் ஆசிரியரும் சிறந்த தமிழ்ப்பற்றுள்ள எழுத்தாளரும் யாஹூ நிறுவனத்தில் தமிழ் எடிட்டராகப் பணியாற்றுபவருமான டாக்டர் அண்ணா கண்ணன் அவர்கள் துவக்கிய வல்லமை இணைய மின்னிதழ் ஆசிரியர்
 பவள சங்கரி  , சேலம் மாநகரில் பிறந்து, வளர்ந்தவர். சென்னை எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் இளம் அறிவியல் – குடும்பவியல் பயின்றவர். கணவரின் ஊக்கத்தால், திருமணத்திற்குப் பிறகும் கல்வி கற்றார். இந்தி பிரசார சபாவில் இந்தி பிரவீண் தேர்ச்சி, மத்திய அரசின் இந்திச் சான்றிதழ்ப் பட்டயம்,  DIP. C.R.E.W. IN ENGLISH  ஆகியவற்றையும் பயின்றார். 1991 முதல்  எழுதி வருகிறார்

வையவன்: வணக்கம்  பவளசங்கரி  
பவளசங்கரி : வணக்கம்
வையவன் : நீங்கள் இலக்கிய ஆசானாக யாரைக் கருதுகிறீர்கள் ?
பவளசங்கரி:  வெறும்  ஆசானாக அல்ல. என் ஆத்மார்த்த குருவாக மகாகவி பாரதியையே நான் போற்றுகிறேன்.
வையவன் : தமிழில் வெளிவரும் இணைய இதழ் ஒன்றிற்கு ஆசிரியராக இருக்கும் பெண்  தாங்கள் தான் என்று நினைக்கிறேன். 
பவளசங்கரி வேறு யாராவாவது இருக்கிறார்களா என்று தெரியவில்லை 
வையவன் : தங்கள் ஆழ்ந்த நம்பிக்கை எது?
பவளசங்கரி : ஒரு பெண் முழுமையான கல்வியறிவு பெற்றால் அவள் சார்ந்த குடும்பமே சுபிட்சமாகும் 
வையவன் : யாரைக் கண்டு தாங்கள் மலைத்துப் போகிறீர்கள்?
பவள சங்கரி- குடும்பமே கோவில், கொண்டவனே தெய்வம் என்று  சென்ற நூற்றாண்டுகளில் வாழ்ந்து நம் இந்தியத் திருநாட்டின் மறுமலர்ச்சிக்காக தம்முடைய வாழ்வையே அர்ப்பணித்த எண்ணற்ற பெண்டிரின் தனித்தன்மை கண்டு மலைத்துப் போய் நிற்பவள்.
வையவன் : தற்போதைய தங்களுடைய இலக்கியப் பணிகள் குறித்து...?
பவளசங்கரி : குடத்திலிட்ட விளக்காக இருக்கக்கூடிய பலரின் வாழ்க்கை வரலாறுகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் முயற்சியிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன் .என் வாழ்க்கையை 
பல வகையிலும் மேன்மைப்படுத்திய ஊக்கங்கள் அனைத்தும் மற்றவர்களுக்கும் பயன்படும் வகையில் கட்டுரைகளாக வடித்துக் கொண்டிருக்கிறேன். என் சிறுகதைகளும், கவிதைகளும் பெரும்பாலும் பெண்களின் பிரச்சனைகள் பற்றி அலசுபனவே 
வையவன்-இன்றைய பெண்ணுக்கு உங்கள் செய்தி?
பவளசங்கரி : கீழோர்க்கு அஞ்சேல்!
                 குன்றென நிமிர்ந்து நில்! 
                 கேட்டிலும் துணிந்து நில்!
                 கொடுமையை எதிர்த்து நில்1
                 கல்வியதைக் கைவிடேல்!
                 சிதையா நெஞ்சு கொள்!
                  சீறுவோர்ச்சீறு!
                 ரௌத்ரம் பழகு!
என்ற ஐயன் பாரதியின் கருத்துக்களை ஒவ்வொரு பெண்ணும் தம் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான தாரக மந்திரமாகக் கொள்ளல் வேண்டும்
வையவன்: தங்களின் ஆத்மார்த்தமான தேடல் எது? 
பவளசங்கரி : கற்றது கையளவு, கற்க வேண்டியது கடலளவு என்ற தேடல் 
வையவன் : தங்கள் இணைய இதழ் அனுபவம் பற்றி?
பவள சங்கரி : இணையம் ஒரு மாய உலகம். 
வையவன் :அப்போதுநம் இணையவெளி இதழ் கூட மாயம் என்று கருதுகிறீர்கள?
பவள சங்கரி:(சிரித்தபடி) இணையமே மாயம் என்னும்போது இணையவெளி மட்டும் மாயமாக இல்லாமல்  போகுமா?
வையவன் :; சற்று விளக்குங்கள் 
 பவள சங்கரி:பெரும்பாலும் வருடக்கணக்கில் இணையத்தில்  பழகிக் கொண்டிருக்கும் மிக நெருங்கிய நண்பர்களைக் கூட இறுதிவரை நேரில் காணும் வாய்ப்பே கிடைக்காமல் போகலாம். அதை வைத்து சொன்னேன் வையவன் :; :ஆனால் அந்த  நட்பு இலக்கியத் தொடர்பு என்ற பரிமாணம் பெற்று, பல வகையில் அவரவர் சுய வளர்ச்சிக்கு ஏற்றம் தராதா?
பவள சங்கரி: நிச்சயம் . இணைய இதழ் என்பது இலக்கியவாதிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் . பொதுவாக எழுத்தாளர்கள் அனைவரும் தனித்தீவுகளாகத்தான் செயல்படுகிறார்கள். ஆனால் இணையம்  எழுத்தாளர்கள் அனைவருக்கும் ஒரு பொது மேடையாகிறது. நல்ல ஆரோக்கியமான வாதங்களின் களமாகிறது.  நல்ல பல ஆய்வுப் பணிகளும் வெகு எளிதாக நடைபெற வழிவகுக்கிறது. 
வையவன் :இது பொதுக் கதை. உங்கள் அனுபவம் என்ன?
பவள சங்கரி:வல்லமை இதழின் ஆசிரியராக பணிபுரிவதன் மூலம் பல எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் மற்றும் வாசகர்களின் உன்னதமான நட்பைப் பெற்றுள்ளதே எம் சாதனையாகக் கொள்கிறேன். நம்முடைய  எண்ணங்களைச் சுதந்திரமாகப் பகிர்ந்து கொள்கிற ஒரே தளம் இணையதளம். நல்லவிதமாக பயன்படுத்துவோருக்கு ஒரு வரப்பிரசாதம்.
வையவன்: நன்றி 
பவள சங்கரி. நன்றி .வணக்கம் 


சென்னை மியூசிக் அகாடமியில்            
சாகித்திய அகாடமி இலக்கியச் சந்திப்பில்          
வையவன் (நான்)


ஆந்திரப் பிரதேச அரசு ஆண்டு தோறும் ஆத்ம கௌரவ புரஸ்கார் என்று ஒரு பரிசு அளிப்பதாக அண்மையில் நான் கேள்விப் பட்டேன். எதற்கு அளிக்கப் படுகிறது யாருக்கு அளிக்கப் படுகிறது என்று விவரமாக அறிய இயலவில்லை. எனினும் ஆத்ம கௌரவம் என்று ஒரு பரிசுக்கான அந்த அடைமொழி என்னை மிகவும் கவர்ந்தது. அதற்காகவே - அந்தப் பரிசை அல்ல- ஆத்ம கௌரவம் என்ற  அந்தப் பண்பைப் பெறுவதற் காகவே - என் வாழ்நாள் முழுதும் செலவழிந் திருப்பதாக எனக்கு அப்போது நினைக்கத் தோன்றியது.

13 வயதில் எழுத ஆரம்பித்த நான் வெளிச்சத்திற்கு வந்தது 1959 மே மாதம் 10 தேதியிட்ட  குமுதம் இதழில் வெளிவந்த என்  ‘வெளிச்சம் விரட்டுகிறது’ என்ற சிறுகதையின் மூலம் தான். அப்போது எனக்கு 19 வயது. அதற்குள் வாழ்க்கை என்பது என்னவென்று நன்றாகவே விளங்கி விட்டிருந்தது. கொடிது கொடிது இளமையில் வறுமை என்றார் ஔவையார். இனிது இனிது இளமையில் வறுமை என்று நான் இப்-போது கருதுகிறேன் . காரணங்கள் பலப்பல.
வறுமை வாழ்க்கையின் மதிப்பை உணர்த்துகிறது. அதைப் பற்றிய விசாலப் பார்வையை வழங்குகிறது.
வியர்வையின் அருமையை ... உழைப்பின் பெருமையை ... போராட்ட உணர்வுகளை மனிதர்களின் மதிப்பை அவர்கள் வகுத்துள்ள மதிப்பீடுகளின் நன்மையை-யும் அவற்றின் புன்மையையும் விரிவாகப் புலப்படுத்தி நேர்முகமாக அனுபவிக்க  வைக்கிறது. அதுவும் உறவினர் நண்பர்கள் என எல்லோராலும் இகழ்ச்சியாக ஒதுக்கி வைக்கப் பட்டால் ஒரு தனி பலம் பெற்ற  ஆத்ம கௌரவத்தை நம்முள் ஏற்படுத்துகிறது.
ஒரு வேளை நபருக்கு நபர் அது மாறுபடலாம். எனக்குள் ஏற்பட்ட எண்ணங்-கள் இவை.
வாய்த்த வாழ்க்கையைக் குறித்து மனம் சலித்தோ விதியைச் சபித்தோ உழல்வது வீண் என்று எப்போதுமே  என்  எண்ணம். மாற்றியமைக்கத் தான் வாழ்க்கை வழங்கப் பட்டிருக்கிறது .இது என் முடிவு.
எப்படி மாற்றியமைப்பது ?
இதுவும் நபருக்கு நபர் வேறுபடும் விஷயம்.
எஸ்.எஸ்.எல்.சியை முடித்து விட்டு என்னென்ன வேலைகள் செய்ய முடியும் என்று பரீட்சார்த்தமாக அலைந்து கொண்டிருந்த ஒரு பருவம் அது. ஏழு வயதிலேயே என் தந்தையார் வாசிப்புப் பழக்கத்தை என்னுள் ஏற்படுத்தி இருந்தார். வாசிக்கும் ஆர்வம் வளர்ந்தோங்கி கொழுந்து விட்டெரிந்தது.
இன்றைய வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் அன்று ஓரிரண்டு வாடகை நூலகங்களும் ஒரு பெரிய நூலகமும் இருந்தன. அவற்றில் விவேகானந்தர் முதல் டர்ஜனீவ் டால்ஸ்டாய் டாஸ்டாவ்ஸ்கி என  ஏராளமான புத்தகங்கள். பீரோ பீரோவாக அடுக்கி வைக்கப் பட்டிருந்த புத்தகங்கள்..அ-வை என்னை க் காந்-த-மாக ஈர்த்-தன.
வாசிக்க வாசிக்க அறிவும் ரசனையும் மன உறுதியும் வளர்ந்து வலுப்பட்டன.
அந்த நூல்களும்  நூலகங்களும்  நீ ஏழையோ கோழையோ அல்ல என்று உணர்த்தின. வாழ்க்கை என்பது பணம் சம்பாதித்துக் குவிப்பது மட்டுமல்ல. ஒரு பதவி அதைவிட்டு மற்றொரு பதவி என்று அலைவதும் அல்ல என்று அவை உணர்த்த ஆத்ம கௌரவத்தின் சம்மட்டி அடிகள் என்னை உருவாக்கத் தொ-டங்கின.
வாசித்துக் கொண்டே இருந்த நான் சிறுவயதுப் பழக்கத்தைத் தொடர விளையாட்டாகத் தான் எழுத ஆரம்பித்தேன். விளையாட்டாக எழுதி அனுப்பிய கதை பிரசுரிக்கப் பட்டு அதற்குச் சன்மானமாகப் பணமும் வந்தது. வெறும் முப்பது ருபாய் தான். ஆனால் 1959ல் அது ஒரு பெரிய தொகை. உடனே சென்னைக்கு ஓடி வந்து பத்திரிகை பத்திரிகையாகப் படையெடுத்து ஓயாமல் எழுதிப் பரபரவென்று நாடகம் சினிமா என்று அலைந்து பணம் பணமாகக் குவித்து விடவேண்டும் என்று ஏனோ தோன்றவில்லை. புகழில் வருகிற போதையின் அபாயமும்  நல்ல வேளையாக எனது இளமைப் பருவத்திலேயே எனக்குப் புலப்பட்டுவிட்டது
வசதியாக இருப்பது ஒரு வாழ்க்கை முறை என்றால் வசதி இன்றி இருப்பது கூட ஒரு வாழ்க்கை முறை தான். ஒன்றில் ஒரு சுகம். அதை ஒட்டிய பல சுகக் கேடுகள். மற்றொன்றில் ஒரு சுகம். அதை ஒட்டிய சுகக்கேடுகள். சிக்கல்கள்.
வாழ்க்கை எல்லா நிலைகளிலும் பிரச்சினகைள் கொண்டது தான் .எனவே சிந்திக்கிறவனுக்கு  பெரிய வித்தியாசம் தென்படுவதில்லை. என்ன பெரிய வித்தியாசம் என்ற வேதனைச் சிரிப்பு வரும்.
எழுதினால் பணம் வரும். சினிமா வாய்ப்பு வரும். பெரிய டைரக்டர் கூட ஆகலாம். சென்னைக்குப் போ என்று நண்பர்கள் வற்புறுத்தினார்கள். பணம் எனக்கு மயக்கம் தரவில்லை. வறுமையில் ஒரு ரசனை தெரிந்தது. எனது நண்பர்களும் உறவினர்களும் பணம் சம்பாதிக்கப் பெரும்பாடு படுவதும் பணம் வந்ததும் அதன் பாதாளச் சீர்கேடுகளில் வீழ்ந்து சிறுகச் சிறுகச் சிறுக அழிந்து வருவதும் விலகி நின்று பார்க்கும் விவேகத்தை எனக்கு வழங்கி இருந்தன.
1940 முதல் 1956வரை சென்-னை-யில்வா-ழ்ந்த நான்  தந்-தை-யின் தொ-ழில் வீழ்ச்-சி-யால் சென்னையை விட்டு1956ல் சென்று மீண்டும் 1987ல் தான் சென்னைக்கு வந்தேன் அப்போதும் வாய்ப்பு தேடியோ வசதி  நாடியோ வரவில்லை.
என் மகளும் என் மகனும் என் வச-திக்கு மீறிய சென்னைக் கல்லூரிகளில் படிக்க விதிக்கப் பட்டதால் பெற்றோருடன் இருந்து பழகிவிட்ட அவர்களின் கல்விக்கு  உறுதுணையாக இருக்கவே நான் மீண்டும் சென்னைக்கு வந்தேன்
புலவர்கள் அதுவும் காலத்தால் என்றென்றும் அழிக்க முடியாத அமரத்துவம் பெற்ற படைப்புக்களைச் செய்த திருவள்ளுவர் உள்ளிட்ட பெரும் புலவர்கள் எழுதியோ பாடியோ மட்டும் வாழ்க்கையைக் கழித்து விடாமல் சமூகத்திற்கு உடல் பூர்வமாக உழைக்க வேண்டுமென்று வாழ்ந்-து காட்டி  உணர்த்தியதாக எனக்குப் பட்டது. முழுநேர எழுத்தாளராகப் பலர் இருக்கிறார்கள். நான் அப்படி ஆகி விடவில்லை. ஆக விரும்-பி-ய-தோ முயன்றதோ இல்லை. எழுதி மட்டுமே வாழ முடியும் என்ற தைரியம் இருந்தும் கூட.இந்தச் சமூகத்திற்கும் என்னை வளர்த்து உருவாக்கிய பெற்றோருக்கும் அப்போது மொழி நாடு என்று நெஞ்சில் நிலவிய பற்றுக்களுக்கும் நான் பதில் கூறவும்  பட்ட கடனைத் திருப்பிச் செலுத்தவும்  கடமைப் பட்டிருப்பதாகவே கருதினேன். இதெல்லாம் பித்துக்குளித்தனம் என்று எல்லோரும் சிரித்தார்கள்.
கிடைக்கிற எந்தப் பணியையும் மறுக்கும் வழக்கம் எனக்கு இல்லை. த யூனிவர்ஸ் ஈஸ் ட்ரையிங் டு பெட்-டர் மீ அப் இன் ஆல் ஆஸ்பெக்ட்ஸ் என்று தோன்றும். மலேரியா ஒழிப்புத் திட்டத்தில் சர்வேலன்ஸ் இன்ஸ்பெக்டராக எந்த சிபாரிசுமின்றி தானாய் ஒரு வேலை தேடி வந்தது. கிராமம் கிராமமாக சைக்கிளில் போய் மலேரியாக் காய்ச்சல் இருக்கிறதா என்று சர்வேலன்ஸ் ஊழியர்கள் சோதித்தார்களா என்று பரிசோதிக்கிற வேலை.அந்த வேலையில் இரண்டு லாபங்கள். கிராமம் கிராமமாக மக்களைச் சந்திப்பது. சைக்கிளில் சாலை சாலையாகச் சுற்றி வரும் ஆனந்தம்.
அப்போது யூனிட் ஆபீஸர் ஆக இருந்த மலையாளி ஒருவர் நான் கதை எழுதுவதைக் கேள்விப்பட்டு இந்த இலா-கா-வில் வேலை செய்வதாக இருந்தால் கதை எல்லாம் எழுதக் கூடாது என்றார். சற்று கூட யோசிக்காமல் மடமடவென்று அவரிடமே ஒரு காகிதம் வாங்கி ராஜினாமாக் கடிதத்தை எழுதி அவரிடம் நீட்டினேன்.
என்ன இது ?என்று கேட்டார். ராஜிநாமா. கதை எழுதாமல் என்னால் இருக்க முடியாது என்று கூறிவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியேறினேன். என்ன எதிர்-கா-லம் என்ன என்ற கவ-லையே இன்றி.  உடல் நல-மற்ற பெற்-றோர்-கள் என்னை நம்-பியிருந்த போ-தும்.
வேலை செய்ய வேண்டும். படிக்கவும் வேண்டும். எழுதவும் வேண்டும். அப்படி ஒரு வேலை எது ? ஒரு தேடலும் இல்லாமல் தான் முடிவு கிட்டியது.
சுதந்திரமாகச் சிந்திக்கிற வாய்ப்பும் உள்ளபடியே நாட்டிற்கு நல்ல குடிமக்களை உருவாக்கும் வாய்ப்பும் எழுதவும் படிக்கவும் நேரமும் இருக்கிற வாய்ப்பும் உள்ள ஒரு பணி எதுவென யோசித்துத் தான் நான் ஆசிரியப் பணியைத் தேர்ந்தெடுத்தேன்.
அப்போதும் செகண்டரி கிரேடு என்று யாரும் மதிப்பாக ஏற்க முடியாத ஒரு  வேலை தான்.
யாருக்காகவும் நான் வாழவில்லை. வரலாற்றில் என் பாத்திரம் என்னவென்று நான் தீர்மானிக்கிற வாழ்க்கை தான் எனக்குச் சரி என்று
நினைத்தேன். அதில் ஒரு மன உறுதி தோன்றி ஒரு கிராமத்திலே அதே செகண்டரி கிரேடு ஆசிரியராகப் பணியாற்றியபடியே படிக்கவும் எழுதவும் தொடங்கினேன்.
வாங்கிய அரசாங்கச் சம்பளத்துக்கோ என்னிடம் ஒப்படைக்கப்பட்ட மாணவச் செல்வங்களின் எதிர்காலத்திற்கோ எந்த விதமான துரோகமும் செய்யாதவாறுபணியாற்றியவாறு ஓய்வின்றி இரவும் பகலும் எழுதினேன்.
இன்று நான் பணியாற்றிய கிராமங்களுக்குச் சென்றால் நான் அங்கு ஆற்றிய ஆசிரியப்பணிக்காக மட்டும் தான் அவர்கள் என்னை மதிக்கிறார்கள். பலருக்கு நான் எழுத்தாளன் என்பதே தெரியாது. தெரிவிக்கிற வாய்ப்பு ஏற்படும் போதெல்லாம் நான் அதை விவே-கமாக விலக்கி இருக்கிறேன். திருப்தியாக இருக்கிறது. ஒரு போர்வையில் ஒளிந்து கொண்டு வேறு சுய காரியங்களைச் சாதித்துக் கொண்ட குற்ற உணர்விலிருந்து நிம்மதியான விடுதலை கிடைக்கிறது.
எழுதி எழுதியும் படித்துப் படித்தும் மொழிகள் மொழிகளாகப் பயின்று பயின்றும் தேர்வு தேர்வுகளாக எழுத பல்கலைக் கழகங்கள் பல்கலைக் கழகங்களாக நடந்து நடந்தும் காலம் போயிற்று.
‘வாசற்படி கடந்து வாராத பிச்சைக்கு ஆசைப்படுவதில்லை அண்ணலே !’ என்ற பட்டினத்துப் பிள்ளையின் மனப் பக்குவமும் ‘ஈடின் மானிகளாய் இளைத்தவர் தம் மனக் கருத்தறிந்து உளம் இளைத்த’ வடலூர் வள்ளலின் அருளுணர்வும் எனக்குப் போதித்துக் கொண்டே வந்தன.
எழுதினேன்.
செட்டியார் மிடுக்கா சரக்கு மிடுக்கா  என்று ஒரு முதுமொழி உண்டு. எழுத்தை விட அதிகமாகப் 'பந்தா' பண்ணிக்கொள்ள வேண்டும்  என்ற அர்த்தத்தில் இதை எடுத்துக் கொள்ளலாம். என் மகள் என் பே பத்தி என என்னை அறிந்தவர் எல்லாம் கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல் பெரிய மனிதன்  தோரணை காட்டிக் கொள்ளாமல இருப்பதைக் குறை கூறினார்கள்.
 ஏதாவது வேண்டும் என்று நினைப்பவன் தான் அதற்காக ஏதாவது செய்து  கொள்ள வேண்டும். எனக்கு  வேண்டியது எழுத்து என்ற . இடைவிடாத பணி
அதற்கு ஏன் தோரணை?
நகரத்திலிருந்த பத்திரிகைகள் என் கதைகளைக் கேட்டு வாங்கிப் பிரசுரித்தன. குறுநாவல் எழுதச் சொல்லி நாவல் எழுதச் சொல்லிக் கவிதை  எழுதச் சொல்லிக் கட்டுரைகள் எழுதச் சொல்லி அழைப்புக்கள் வந்த பின் தான் எதையுமே நான் எழுதினேன்.
எனக்குக் கிடைத்த பரிசுகள் வாய்ப்புக்கள் என எல்லாமே நான் ஒன்றுக்கு இரண்டு முறை மறுத்து மறுத்து ஒதுக்கிய பன் தான்
என்னைப் பலவந்தமாக ஏற்க வைத்தன. காரணம் ஆத்ம கௌரவம் என்பது எல்லாவற்றையும் விட மேலா-னது  என்று நான் வைத்திருந்த ஒரு மதிப்பீடு தான்.
சோழா கிரியேஷன் என்ற திரைப்படக் கம்பெனியிலிருந்த  வந்த ஒரு கதை வசன வாய்ப்பை இரு முறை மறுத்து தொடர்பானவர்கள் வீடு தேடி வந்து வலியுறுத்த மனைவி வற்புறுத்த ஏற்றேன். அதற்-குப்-பின் சினி-மாத் துறை-யின் பக்-அது கிடைந்தது வந்தது. ”கமே நல்ல வேளை-”கம் பதவி பரி” என்பதன் பக்க@ம தலை வைத்-துப் படுக்-கக்-கூ-டத் தோன்-ற-வில்-லை.
எந்தக் கதையும் எந்த ஒரு படைப்பும் ஒரு தீக்குச்சி  அளவு வெளிச்சமேனும் தராவிடில் எழுதாமல் இருப்பது மேல் என்ற கொள்கை வகுத்துக் கொண்டு எழுதினேன்.
வாசகர் ஒருவர் மனசில் ஒரு சிறு ஒளி கிடைத்த பரவச வெளியீட்டின் முன்பு  உங்கள் படைப்பு என் வாழ்க்கையை மாற்றியது என்று யாரோ முகம் தெரியாத ஒருவர் சொன்னாலோ எழுதினாலோ அதில் ஒரு திருப்தி கிடைத்தது. பெருமை அல்ல. திருப்தி. எங்கோ உருப்படியாக சமுதாயத்திற்கு சிறிதளவேனும் ஒரு சின்ன நட்டோ போல்ட்டோ போன்ற அளவிலேனும் பயன்பட்டதால் கிடைக்கிற அந்த திருப்தி விலை மதிக்க முடியாதது.
அப்படி அடிக்கடி அனேகமாக ஆண்டிற்கு ஓரிருமுறை என் எழுத்திற்கு எதிரொலிகள் வருவது காலம் கடந்து கூட வருவது நான் பெற்ற அனுபவம். ஒரு பக்கம் மேலை நாட்டு இலக்கிய வார்ப்புக்களுக்கு நகல் போல எழுதியும் விமர்சித்து வருகிற பலர்.
கலா பரிபக்குவம் இல்லை. பாத்திரப் படைப்பு இல்லை .. அது இது எல்லாம் இல்லை. அதுவும் இதெல்லாம் வியாபாரப் பத்திரிகை எழுத்து மீடியாக்ரிடி என்று உத-டு பிதுக்கி தீண்டாமை அனுஷ்டித்தபடி விமர்சகப் பெரும்புலவர்கள் வாய் சப்புவதைப் பல முறை கேட்டிருக்கிறேன. பாதிக்கப் பட்டதில்லை.
 கேரளத்திலே தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைக்கப் பட்ட ஈழவர்களுக்காக அவர்கள் தொழுவதற்காகவென்று ஈழவ சமுதாயத்தின் மகானான நாராயண குரு ஒரு சிவன் கோயில் கட்டினார். உடனே உயர் ஜாதியாரிடையே பெரும் ஆட்சேபமும் கொந்தளிப்பும் கிளம்பன. நாராயண குரு அமைதியாக சிரித்து விட்டு அடடா நீங்கள் ஏன் அவஸ்தைப் படுகிறீர்கள் ? உங்கள் சிவனுக்கு இல்லை.. மக்களே! ஒரு ஈழவ சிவனுக்குத் தான் நான் கோயில் கட்டினேன் ? என்றார்.
அதைப் போலவே நான் விமர்சகப் பெருமக்களுக்காகவோ இலக்கிய உத்தாரணத் திற்காகவே எழுத வரவில்லை. வாசிக்கிறவர் மனசில் சிறிது வெளிச்சத்தையும் சிறு நெகிழ்ச்சியையும் வரவழைக்க அல்லவா எழுதுகிறேன் என்று திருப்தி அடைந்தேன்.
வந்த பாராட்டுகள் ஒரே ஒரு ஞானத்தை ஏற்படுத்தின. மெச்சிமெச்சிப் புகழ்ந்தால் புகழக் கேட்டால் மமதையே மிஞ்சுகிறது என்ற ஞானம் அது.
இதிலிருந்து விடுபட எப்போதும் முயன்று வரும் நான் தமிழக அரசு பரிசுபெற்றதற்கு நடந்த ஒரு பாராட்டு விழாவில் இப்போது ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் பரிசு பெற்றதற்குக் கூறிய அதே வாக்கியத்தை 1984ல் 15 ஆண்டுகளுக்கு முன் திருப்பத்தூரிலே  ஏற்புரையிலே அன்றே கூறினேன்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே.
எந்தக் கிரீடம் தலையில் ஏறினாலும் கழற்றி வைத்து விடுகிறீர்கள் என்று பாராட்டிப் பேசிய நண்பர் கூறினார். தலை கனத்துவிடும். தலை இருப்பது கனம் சுமப்பதற்காக அல்ல  என்று பதில் சொன்னேன்.
நான் பொதுவாக எழுதியானதும் கையெழுத்துப் பிரதியை என் மனைவியிடமும் என் மகளிடமும் வாசித்துக் காட்டும் வழக்கம் இருந்தது. நான் எழுதிய குஷ்கா என்ற சிறுகதையை அவர்களிடம் வாசித்துக் காட்டியபோது நல்ல ரசனையுள்ள அவர்கள் விம்மி விம்மி அழ ஆரம்பித்தார்கள். எனக்கும் கண்ணீர் வந்தது. என் எழுத்து உண்மையான பாதிப்பை ஏற்படுத்தியது என்ற திருப்தியும் வந்தது
என் முதலாவது ஆசிரியப் பணி ஜவ்வாது மலைக் காடுகளில் பஸ் போக்குவரத்து கூட இன்று வரை கூட இல்லாத புலியூர் என்ற ஆதிவாசி ஊரின் வனத்துறைப் பள்ளியில் ஓராசிரியப் பள்ளியில் தான் தொடங்கியது. என்னைச் சென்னைக்குப் போகச் சொன்னவர்கள் நான் வனவாசம் போனதைப் பார்த்து வருத்தப் பட்டார்கள்.அங்கு வாழ்ந்த ஓராண்டில் அந்த கானக வாசம் தந்த கற்பனை தான் இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற தமிழக அரசின் இரு ஆண்டுகளுக்குமான நாவல் பரிசினைப் பெற்றது. 1967ல் மலேசியா தமிழ் நேசன் இதழில் வெளியான அந்த நாவலுக்கு வருடா வருடம் ஒரு வாசகர் கடிதமாவது வந்து கொண்டே இருக்கும்.
எங்கள் ஊரிலே என் ஆப்த நண்பரி-ன் அண்-ணா ஒருவரின் அண்-ணன் நடத்திய ஹோட்டலில் அடிக்கடி சென்று அவரோடு காலம் கழித்த நாட்கள் ஏராளம். அந்த ஹோட்டல் ஒரு குடும்பமாக விளங்கியதையும் அந்தக் காலத்தில் மனித மதிப்பீடுகளுக்கு இருந்த மரியாதையும் என் ஜமுனா நாவலில் வடிவம் பெற்றன.
எட்டு ஆண்டுகள் பள்ளிகொண்டா என்ற பெரிய கிராமம் ஒன்றில் பணியாற்றியபோது சுற்றியிருந்த ஊர்களின் தோல் ஷாப்புகளால் ஆற்றங்கரையும் விவசாயமும் அழிந்து கொண்டு வரும் காட்சியைக் கண்டு மனம் பதறிய அனுபவம் கன்னியராகி நிலவினிலாடி என்ற நாவலாக வெளிப்பட்டது. அங்கு சந்திக்க நேர்ந்த ஒரு இன்ஸ்பெக்டர் மணல்வெளி மான்கள் நாவலில் கதாபாத்திரமானார்.
இப்படி ஒவ்வொரு படைப்புக்கும் பின்னால் ஒரு கதை உண்டு. சொல்லிக் கொண்டே போகக் கூடிய கதை  புகழ் தேடியோ பணம் தேடியோ எழுதாதே என்று எனக்கு நான் போதித்துக் கொண்டக-தை
புகழ் பொருளற்றுப் போகிறது. போட்டி பொறாமையை வளர்த்து பொல்லாங்காகி விடுகிறது. நான் கண்ட அனுபவம் இது.
பணம் அர்த்தமிழக்கிறது. அர்த்-தங்-களை மேன்மையான மதிப்பீடுகளை அழிக்கிறது. மதிப்பை இழக்கிறது. அழிக்கிறது. மனித மதிப்பீடுகளை மண்ணுக்குள் வீழ்த்தித் தேய்த்து      மாய்த்து     விடுகிறது.
இதுவும்கண்ணார நான் கண்ட அனுபவம். இதையெல்லாம் வெளியிட்டுக் கொண்டு போனால் பைத்தியக்காரன் என்றோ போலிப் பாசாங்கு  என்றோ கெட்ட பெயர் தான் மிஞ்சுகிறது.
ஆனால் என்ன ? எல்லாக் காலத்திலும் சில பைத்தியக்காரர்கள் இருந்து கொண்டு தான் வருகிறார்கள். ஒரு நஷ்டமும் இல்லை என்று காலம் ஓடிக் கொண்டே இருக்கிறது.
எனக்குத் தோன்றுவதை வெளியிட்டு மன ஈடுபாட்டோடு உழைக்க வேண்டியது தான் எனக்கு விதிக்கப்பட்ட பணி. இந்த நெடிய அனுபவங்களுக்குப் பன் எனக்கு விளங்கியது இது தான் .
வேதனைகளை வெளியேற்று.
பரவசங்களைப் பகிர்ந்து கொள்.
வெளிச்சத்தைச் சுட்டிக்காட்டு
வேலையைப் பார்த்துக் கொண்டு போ. இவை தான் எனக்கு நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட சாலைத் திருப்பங்கள்.
 ஆத்ம கௌரவம் என்ற பாதையை நோக்கியதே என் பயணம் .
ஆத்மகௌரவம் என்ற சொல் மனித மதிப்பீட்டின் உச்சிப் படிக்கட்டு.
அது தான் பதினெட்டாம் படி. அந்த பதினெட்டாம் படியைக் கடந்து மிதித்து விட்டுச் சபரிமலைக்குச் சென்று ஏறியவர்கள் காண்பது ஒரு திருவாசகம். தத்வமஸி. உங்களில் பலர் அதை அறிந்திருப்பீர்கள் நீ தான் அது. இது தான் அதன் பொருள்
வாழ்க்கைக்கு அதாவது உயிர்வாழ்வுக்கு அர்த்தம் தேடி மனித மனம் சிந்திக்கத் தொடங்கிய காலத்திலிருந்து முயன்று கொண்டே வருகிறது. சலிப்படைந்தவர்கள் அப்படி ஒரு அர்த்தமும் இல்லை என்று சொல்லி அப்படி மறுப்பது தான் அர்த்தம் என்று நிலைநாட்டித் தோற்கிறார்கள். இருக்கட்டும்
தெய்வ நிலை எய்தல் என்பது வாழ்க்கையின் முடிவாக மகான்கள் ஏற்றுக் கொண்ட அர்த்தத்தின் இறுதி . அது காளிகட்டம் போன்ற யாத்திரைக் கட்டமான ஒரு சிந்தனைப் போக்கு. அந்தச் சிந்தனைப் போக்கு தன்னைத் தன்னுள் கண்டுபிடிக்கச் செய்கிறது.
 வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும் தெய்வத்தில் வைக்கப் படும் என்று சூசகமாகச் சொன்னார் வள்ளுவப் பெருமான்.
தான் தேடிக் கொண்டிருக்கும் ஒரு பொருள் தானே தான் , என்று உறுதி செய்ய முயல்கிறது.
 அதன் ஒரு வெளிப்பாடு தான்' தத்வமஸி' என்ற மகா வாக்கியம். அது தான் முடிந்த வாக்கியம். அதற்கு மேல் ஒன்றும் இல்லை என்று நாம் முடிவு கட்டிவிடுவதற்கில்லை. அதுவும் மனித சிந்தனையிலே உதித்த வாக்கு தான். அதற்கு மேல் தேடுதல் இல்லை என்று பொருளல்ல.
மனிதன் தெய்வ நிலையை நோக்கிய இடை விடாப் பயணத்தில் ஈடுபட்டிருப்பவனாகத் தான் நம் இந்திய சிந்தனைப் போக்கு நமக்குக் கற்பத்திருக்கிறது. எவ்வளவு சீர்கேடுகளும் அவநம்பக்கைகளும் நம்மைச்சூழ்ந்து வந்தாலும் நமது பயணம் நின்று விடவில்லை. அந்த ஆத்ம கௌரவத்தை அடைவதற்கு அந்த வாக்கியம் உரைகல்லாக அமைகிறது.
அதற்கும்.... எழுத்துக்கும் ... ...50 ஆண்டுகளாக எழுதி இன்னும் கூட ... அப்படியா ...வையவனா அப்படி ஒரு எழுத்தாளரா? என்று கேள்விப்படாத பாவனையில் பார்க்கும் பலருக்கு இடையில் நிற்கும் முனைந்து முட்டி மோதி முன்ன-ணிக்கு வர விரும்-பாத எனக்கும்... என்ன சம்பந்தம் என்று கேட்கத் தோன்றும்.
எழுத்து என்பது ஆத்ம சம்பந்தம். எழுத வந்தவர்கள்.  அந்த ஆத்ம சம்பந்தத்தோடு எங்கோ ஏதோ ஒரு வகையில் சங்கிலிக் கரணையாகத் தொடர்பு கொண்டவர்கள். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அமரத்துவம் பெற்றவர்கள்.
சினிமா நாடகம் இசை நடனம் ஓவியம் என்று எத்தனையோ கலைகள் இன்புறுத்தலாம். கிரிக்கெட் போல ஒரு விளையாட்டு கோடானுகோடி மக்களைப் பித்துப் படிக்கச் செய்யலாம். அவை யாவும் புலன்களை மட்டுமே  தொட்டு வெற்றி பெறக் கூடியவை. எல்லைக்குள் நின்றுவிடுபவை.
அவை கலைகள் .
எழுத்து கலையல்ல. அது கலைக்கும் மேலே.. எல்லாவற்றுக்கும் அப்பால்
‘சரஸ்வதி நம ஸுப்யம்  வரதே காமரூபிணி. வித்யாரம்பம் கரிஷ்யாம் சித்திர் பவது மே ஸதா என்று தொடங்கி ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதம் ஆதாரம் ஸர்வ வித்யாநாம் என்று வளர்ந்து செல்வது அது
ஆத்ம விளக்கத்திற்கான சம்பந்தம் .
மகாகவி சொன்னார்.
எழுதுகோல் தெய்வம் . இந்த எழுத்தும் தெய்வம்.
இதை எழுதி எழுதிவிளங்-கிக்  கொள்வதற்குத் தான் எனக்கு 50 ஆண்டுகள் படித்தன.
திரும்பிப் பார்க்கிறேன்.  நான் மகானல்ல. ஒரு வெகு வெகு சாதாரணமான மனிதன். எளியவன். எல்லாக் குறைகளும் ஒரு சேர நிரம்பியவன்.  எனினும் ..
நான் எழுதிய எந்த எழுத்திலும் , இந்தச் சமுதாயம் எனக்கு விதித்த எந்தப் பணியிலும்
நான் என்னால் இயன்ற அளவு அந்தரங்க சுத்தியோடு முடிந்த அளவு திறனோடு உண்மையாக உழைத்திருக்கிறேன் என்று புலப்படுகிறது.  வேலையை முடித்துக் கொண்டு கை கழுவுகிற உத்தியும் எனக்கு லபித்தது.
ஆசிரியனாகவும் எழுத்தாளனாகவும் சொன்னால் எழுதினால் புரிந்து கொள்-கிற நிலையில் உள்ளவர்களுக்கும் எழுதி வந்த என்னை ஸ்டேட் ரிஸோர்ஸ் சென்டர் என்ற  தொண்டு நிறுவனத்தார்  வயது வந்தோர் கல்விக்கும் அறிவொளித் திட-டத்திற்கும் புத்தகம் எழுதக் கூப்பிட்டார்கள்.
சென்றேன். எல்லா அறிவு மற்றும்  புலமை மிடுக்கையும் மூட்டை கட்டிவைத்து விட்டு மிக மிக எளிய மொழியில் மிகமிக எளிதாகப் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுத வேண்டிய நிலை அது.
ஆக மக்களைச் சென்றடைவதே எழுத்துஎன்ற அறிவு எனக்கு அங்கே கிடைத்தது. பின்னர் ஜன் சிக்ஷன் சன்ஸ்தான் என்ற அகில இந்திய நிறுவனத்துக்கு புதிதாகக் கற்றோருக்கான  தொழிற் கல்விக்கான நூல்-கள் எழுதும் வாய்ப்பில் என் அடக்கம் மேலும் கூடியது
மக்களின் மனதில் ஒரு சிறி-ய தீபத்தை ஏற்றி வைக்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது என்று அங்கே தெளிவா-யிற்று. இந்தப் புலப்பாடு  தான் எனக்குக் கிடைத்திருக்கிற ஆத்ம கௌரவ புரஸ்கார் விருது. வேலையை முடித்துக்கொண்டு கை கழுவுகிற உத்தியும் எனக்கு அந்த ஆத்ம சம்பந்தத்தால்  லபித்தது.
அலைகள் வரும் போகும்.
ஆனால் சமுத்திரம் என்றென்றும் இருக்கும்.
அடுத்த காற்றோட்டத்தை, அடுத்த அலைவீச்சை எதிர்நோக்கியபடியே..





Thanks

வையவன் எழுதுகிறேன் 
நமது இணையவெளி இதழ் இன்று விநாயக சதுர்த்தி( செப்டம்பர் பத்தொன்பது 2012  அன்று தொடங்குகிறது .இதை வடிவமைப்பதிலும் விளக்கம் தந்து உதவியதிலும் இளம் நண்பர் சதீஷ் கிருஷ்ணன் மிகவும் உதவினார். அவருக்கு நம் மனப்பூர்வமான நன்றியைப் பதிவு செய்வது தான் நம் முதல் போஸ்டிங்.
நன்றி சதீஷ் நன்றி
அடுத்து எல்லா முயற்சிகளிலும் கலங்கரை விளக்காக நின்று வழிகாட்டி வரும் ஆசான் பாரதிக்கு முதல் வணக்கம் . அவர் வணங்கிய மணக்குள விநாயகருக்கும் அம்மை சக்திக்கும் அவரை வணங்கி அவர்மூலம் நம் வணக்கம் தெரிவிக்கிறோம்
அவர் துணை நின்று நம் இணையவெளியை வாழ்த்திக் காப்பாராக 

Saturday 15 September 2012

Blogger

Blogger.............

வையவன் 1

வையவன் 11111

வையவன்

புதிய தளம்

இணையவெளி

இணையவெளி என்ற புதிய தளம்.............