Sunday 30 September 2012

அர்ஜுன விஷாத யோகம்-1



ஸ்ரீமத் பகவத்கீதை  

உலகின் எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டதும் பரம உத்தமானதும் ஆன பகவத்கீதைக்கு ஆச்சார்யர்களும் பண்டிதர்களும் மகான்களும் மகாகவிகளும்,நூற்றுக்கணக்கான வியாக்யானம் விளக்கம் விரிவுரை, பொருளுரை எழுதியிருக்கிறார்கள் பரந்த ஆகாயத்திலும் விரிந்த சமுத்ரங்களிலும் உயிர்க்குலமும் அணுக்கூறுகள் மற்றும் இயக்கங்களும் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. யார் வரவும் யார் செலவும் அங்கே தடுக்கப் படுவதில்லை.
அப்படி மகா சமுத்ரமும் விரிந்து பரந்த விண்வெளியுமான்  ஸ்ரீமத் பகவத் கீதையில் அணுவிலும் சிறு கூறாகிய அடியேன் யோகேஷ் மித்ரா ஈஸ்வரோ ரக்ஷது ! பரமாத்மனே ரக்ஷது என்று தொழுது நமஸ்கரித்து பிரவேசித்து வலம்  வருகிறேன் . முன்பு ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறுவர்களுக்காக எழுதி வெளியிட்டு  உலகெங்கிலும் பரவியுள்ள அடியேனின் உரை பலராலும் பாராட்டப்பட்டது .
அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு அண்ணா  நூலக மேம்பாட்டுத்திட்டத்தின் கீழும் கரும்பலகைத்திட்டத்தின் கீழும் தமிழக அரசினாரால் வாங்கப்பட்டு தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் ஒவ்வொரு பட்டிதொட்டிகளிலும் உள்ள நூலகங்களிலும் பள்ளிகளிலும் இடம்பெற்றுள்ளது
அதன் எளிமையும் ஆத்மார்த்த சமர்ப்பண உணர்வுமே இப்படிப் பல பெருமைகளை அந்த நூல் ஈட்டக்காரணம் ஆயிற்று என்பது என் பணிவோடு கூடிய கருத்து.
புதிய சிந்தனை , புதிய உரிமை , புதிய போர்முழக்கங்கள் என என்னென்ன எழுந்தும் கீதையின் பெருமையும் அதன் சூக்ஷ்ம ரகசியமும் தம் ஒளியை இழந்து விடவில்லை. மனிதர்கள் அதன் மீது சேற்றை வாரி இறைத்தாலும் அது தன தூய்மையை இழந்து விடவில்லை.
பக்தி என்ற மாபெரும் தத்துவத்தின் கலங்கரை விளக்கமாக இலங்கும் கீதையை மீண்டும் மீண்டும் பாராயணம் செய்து தாய்ப்பால் போல் கருதிப் பருகி வாழ்க்கையில் கடைப்பிடித்த மகானுபாவர்கள் பலர். கண்ணுக்கு பளிச்சென்று தெரிந்தவர் மகாத்மா காந்தி.
அந்த மகானுபாவர்கள் அனைவரது திருப்பாதங்களையும் நமஸ்கரித்து சிறிதேனும் அகந்தை எனும் மலம் என் மதியில் கவிந்து உண்மை ஒளியை கண்டு உணர்ந்து வெளியிட அனுக்ரகம் செய்ய வேண்டி வணங்கி தொடங்குகிறேன்
॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥
॥ அத ஸ்ரீமத் பகவத்கீதா ॥
அத ப்ரதமோத்யாய


அர்ஜுன விஷாத யோகம்

த்ருதராஷ்ட்ர உவாச
தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ:।
மாமகா: பாண்டவாஷ்சைவ கிமகுர்வத ஸம்ஜய ॥ 1.1 ॥


திருதராஷ்டிரர் கூறினார்: புண்ணிய யாத்திரைத் தலமான குருக்ஷேத்திரத்தில் போர் புரியும் ஆவல்  கொண்டு ஒன்று கூடிய பிறகு என் மகன்களும், பாண்டுவின் புதல்வரும் என்ன செய்தனர் சஞ்ஜயனே?
[விளக்கம். குருடரான திருதராஷ்டிரர் தமதுஅரண்மனையில்  அமர்ந்தபடி அமைச்சனான சஞ்சயனிடம் ஞான திருஷ்டியால் குருக்ஷேத்ரக் காட்சிகளைக் கண்டு தமக்கு விளக்கும்படி கோருகிறார் ]

ஸம்ஜய உவாச।
த்ருஷ்ட்வா து பாண்டவாநீகம் வ்யூடம் துர்யோதநஸ்ததா।
ஆசார்யமுபஸம்கம்ய ராஜா வசநமப்ரவீத்॥ 1.2 ॥

சஞ்ஜயன் கூறினார்: மன்னனே, பாண்டுவின் புதல்வரால் அணிவகுக்கப்பட்ட படையை ஒரு முறை மேற்பார்வையிட்ட பிறகு, மன்னன் துரியோதனன் தன் ஆசாரியரை  அணுகிப் பின்வருமாறு பேசலானான்.

பஷ்யைதாம் பாண்டுபுத்ராணாமாசார்ய மஹதீம் சமூம்।
வ்யூடாம் த்ருபதபுத்ரேண தவ ஷிஷ்யேண தீமதா॥ 1.3 ॥

ஆச்சர்யரே  துருபதகுமாரனான உங்கள் சீடனால் மிகத் திறமையாக அணிவகுக்கப்பட்ட, பாண்டுபுத்திரரின் சிறந்த சேனையைப் பாருங்கள்.

அத்ர ஷூரா மஹேஷ்வாஸா பீமார்ஜுநஸமா யுதி।
யுயுதாநோ விராடஷ்ச த்ருபதஷ்ச மஹாரத:॥ 1.4 ॥

இதோ இந்த சேனையில் பீமனுக்கும் அர்ஜுனனுக்கும் சமமான வீரமிகு வில்லாளிகள் பலரும் இருக்கின்றனர். யுயுதானன், விராடன், துருபதன் போன்ற சிறந்த மகாரதர்களும் இருக்கின்றனர்.

த்ருஷ்டகேதுஷ்சேகிதாந: காஷிராஜஷ்ச வீர்யவாந்।
புருஜித்குந்திபோஜஷ்ச ஷைப்யஷ்ச நரபும்கவ:॥ 1.5 ॥

த்ருஷ்டகேது, சேகிதானன், காசிராஜன், புருஜித் குந்திபோஜன், ஷைப்யன் போன்ற சிறந்த, பலமிக்க போர்நாயகர்களும் இருக்கின்றனர்.

யுதாமந்யுஷ்ச விக்ராந்த உத்தமௌஜாஷ்ச வீர்யவாந்।
ஸௌபத்ரோ த்ரௌபதேயாஷ்ச ஸர்வ ஏவ மஹாரதா:॥ 1.6 ॥

வீரனான யுதாமன்யு, பலமிக்க உத்தமௌஜன், மற்றும் சுபத்ரையின் புதல்வன், திரௌபதியின் குமாரர்கள் இவர்களும் இருக்கின்றனர். இவர்கள் எல்லோருமே சிறந்த மகாரதர்கள் .

அஸ்மாகம் து விஷிஷ்டா யே தாந்நிபோத த்விஜோத்தம।
நாயகா மம ஸைந்யஸ்ய ஸம்ஜ்ஞார்தம் தாந்ப்ரவீமி தே॥ 1.7 ॥

அந்தணரில் சிறந்தவரே, எனது சேனையை நடத்தும் தகுதி வாய்ந்த தலைவர்களை நீர் அறியும்படி கூறுகின்றேன்.

பவாந்பீஷ்மஷ்ச கர்ணஷ்ச க்ருபஷ்ச ஸமிதிம்ஜய:।
அஷ்வத்தாமா விகர்ணஷ்ச ஸௌமதத்திஸ்ததைவ ச॥ 1.8 ॥

எப்போதும் யுத்தங்களில் ஜெயம் காண்பவரான தாங்களும், பீஷ்மர், கர்ணன், கிருபர், அஸ்வத்தாமன், விகர்ணன், பரிசிரவஸ் என்ற சோமதத்தனின் குமாரன் போன்ற பெரும் வீரரும் இருக்கின்றீர்கள்.

அந்யே ச பஹவ: ஷூரா மதர்தே த்யக்தஜீவிதா:।
நாநாஷஸ்த்ரப்ரஹரணா: ஸர்வே யுத்தவிஷாரதா:॥ 1.9 ॥

எனக்காக உயிரையும் கொடுக்கக்கூடிய எண்ணற்ற வீரர்கள் பிறரும் உள்ளனர். அவர்கள் எல்லோருமே பலவிதமான ஆயுதங்களை உடையவர்களாயும், போர்க்கலையில் மிகத் தேர்ச்சி உடையவர்களாகவும்
இருக்கின்றனர்.

அபர்யாப்தம் ததஸ்மாகம் பலம் பீஷ்மாபிரக்ஷிதம்।
பர்யாப்தம் த்விதமேதேஷாம் பலம் பீமாபிரக்ஷிதம்॥ 1.10 ॥

பாட்டனார் பீஷ்மரால் பாதுகாக்கப்பட்ட நமது பலம் கணக்கிலடங்காதது. ஆனால் பீமனால் கவனமாய்ப் பாதுகாக்கப்பட்ட பாண்டவ சேனையோ அளவிடக் கூடியதாக இருக்கின்றது.

அயநேஷு ச ஸர்வேஷு யதாபாகமவஸ்திதா:।
பீஷ்மமேவாபிரக்ஷந்து பவந்த: ஸர்வ ஏவ ஹி॥ 1.11 ॥

படை அணிவகுப்பின் முக்கியமான போர்முனை நிலைகளிலிருந்து கொண்டு நீங்களெல்லோரும் பாட்டனார் பீஷ்மருக்குப் பாதுகாப்புக் கொடுப்பீர்களாக.

தஸ்ய ஸம்ஜநயந்ஹர்ஷம் குருவ்ருத்த: பிதாமஹ:।
ஸிம்ஹநாதம் விநத்யோச்சை: ஷங்கம் தத்மௌ ப்ரதாபவாந்॥ 1.12 ॥

பிறகு குருவம்சத்தின் பிதாமகரும், போர் வீரரின் பாட்டனாருமான பீஷ்மர், தனது சங்கை சிங்க கர்ஜனைபோன்று உரக்க ஊதி துரியோதனனுக்கு மகிழ்வைக் கொடுத்தார்.

[ஒவ்வொரு நாளும் பனிரெண்டு ஸ்லோகங்கள் அதன் விளக்கங்கள் என கீதையை அணுகிப் பாராயணம் செய்வது பரம புண்ணியங்களிலும் மகா உத்தமன புண்ணியம் ]
பாராயணம் செய்ய உதவும் விதத்தில் சுலோகங்களைத் தொகுத்துத்தருகிறோம் 

அர்ஜுன விஷாத யோகம்
த்ருதராஷ்ட்ர உவாச
தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ:।

மாமகா: பாண்டவாஷ்சைவ கிமகுர்வத ஸம்ஜய ॥ 1.1 ॥

ஸம்ஜய உவாச।

த்ருஷ்ட்வா து பாண்டவாநீகம் வ்யூடம் துர்யோதநஸ்ததா।
ஆசார்யமுபஸம்கம்ய ராஜா வசநமப்ரவீத்॥ 1.2 ॥


பஷ்யைதாம் பாண்டுபுத்ராணாமாசார்ய மஹதீம் சமூம்।
வ்யூடாம் த்ருபதபுத்ரேண தவ ஷிஷ்யேண தீமதா॥ 1.3 ॥

அத்ர ஷூரா மஹேஷ்வாஸா பீமார்ஜுநஸமா யுதி।

யுயுதாநோ விராடஷ்ச த்ருபதஷ்ச மஹாரத:॥ 1.4 ॥


த்ருஷ்டகேதுஷ்சேகிதாந: காஷிராஜஷ்ச வீர்யவாந்।
புருஜித்குந்திபோஜஷ்ச ஷைப்யஷ்ச நரபும்கவ:॥ 1.5 ॥


யுதாமந்யுஷ்ச விக்ராந்த உத்தமௌஜாஷ்ச வீர்யவாந்।
ஸௌபத்ரோ த்ரௌபதேயாஷ்ச ஸர்வ ஏவ மஹாரதா:॥ 1.6 ॥


அஸ்மாகம் து விஷிஷ்டா யே தாந்நிபோத த்விஜோத்தம।
நாயகா மம ஸைந்யஸ்ய ஸம்ஜ்ஞார்தம் தாந்ப்ரவீமி தே॥ 1.7 ॥


பவாந்பீஷ்மஷ்ச கர்ணஷ்ச க்ருபஷ்ச ஸமிதிம்ஜய:।
அஷ்வத்தாமா விகர்ணஷ்ச ஸௌமதத்திஸ்ததைவ ச॥ 1.8 ॥


அந்யே ச பஹவ: ஷூரா மதர்தே த்யக்தஜீவிதா:।
நாநாஷஸ்த்ரப்ரஹரணா: ஸர்வே யுத்தவிஷாரதா:॥ 1.9 ॥


அபர்யாப்தம் ததஸ்மாகம் பலம் பீஷ்மாபிரக்ஷிதம்।
பர்யாப்தம் த்விதமேதேஷாம் பலம் பீமாபிரக்ஷிதம்॥ 1.10 ॥


அயநேஷு ச ஸர்வேஷு யதாபாகமவஸ்திதா:।
பீஷ்மமேவாபிரக்ஷந்து பவந்த: ஸர்வ ஏவ ஹி॥ 1.11 ॥


தஸ்ய ஸம்ஜநயந்ஹர்ஷம் குருவ்ருத்த: பிதாமஹ:।
ஸிம்ஹநாதம் விநத்யோச்சை: ஷங்கம் தத்மௌ ப்ரதாபவாந்॥ 1.12 ॥
-யோகேஷ் மித்ரா 








No comments:

Post a Comment