Thursday 26 June 2014

காளிமைந்தன் கூறுகிறார்:



 மழை நீர் எங்கே  போகிறது?
மழைநீர் கூரைமேலிருந்து பூமியில் விழுந்த உடனே நாம் பயிர்ப் பாதுகாப்பு என்ற பெயரில் பூமியை விஷக்குப்பை மேடையாகி வைத்திருக்கிற  பூச்சிக் கொல்லி மருந்து விஷத்தோடு கலக்கிறது.

.ஃப்ளூரைட் போன்ற உப்புக்களும் இதர உப்புக்களும் கலந்து கடின நீராகிவிடுகிறது. குடிக்க ருசியில்லை

 மழைநீரில் கரைந்த ஃப்ளூரைட் உப்பால்,பல் நிரந்தரமாகக் கறை படிந்திருக்கும்.
                                                            
                   கால் கை எலும்புகள் வளைந்து போகலாம்.
                                                                             
                                                         
மூட்டுக்களில் வலி ஏற்பட்டு படு துன்பத்துக்கு ஆளாகலாம்.
மழை நின்ற மறுநிமிடம் முதல்-பூமிக்குள் சென்ற மழைநீர்,தொடர்ந்து ஆவியாகிக் காற்றில் கலந்து போய்க்கொண்டே இருப்பதால்-ஏராளமான நிலத்துக்குள் சென்ற மழை நீரை இழக்கிறோம்!
இந்த விஷம் மற்றும் உப்புக் கலந்த நீரைக் கிணற்றில் இருந்து அல்லது ஆழ்குழாய் மூலம் எடுத்துக் குடித்தால் புற்று நோய் உள்ளிட்ட பல வித தோய்கள் வருகின்றன.
அமெரிக்க விஞ்ஞானிகள் .ஃப்ளூரைட் அதிகம் கலந்த நீரினால் மத்திய நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு சிறுவர்களின் புத்தி கூர்மை குன்றுவதாகக் கண்டுபிடித்துள்ளனர்


 இந்த உப்புக்கலந்த நீரில் சோறாக்குவதால் விறகோ-எரிவாயுவோ குறைந்தது 20 சதம் அதிகமாகிறது.சமையலுக்கு நிறைய நேரம் வீணாகிறது.
குடிக்க இந்த நீர் சுவையாக இல்லை. எனவேதான் சின்தெட்டிக் கேன்களில் நீரை வாங்கிக் குடிக்கும் அல்லது வீட்டி லேயே ஆர்ஓ (R.O Reverse Osmosis) செய்து உப்பகற்றிக் குடிக்கும் பழக்கம் ஏற்படுகிறது.


 நாமக்கல் போன்ற நகரங்கள், சேந்தமங்கலம் போன்ற பேரூர்கள் மற்றும் மரூர்ப்பட்டி போன்ற சிற்றூர்களில் கூட வசதி படைத்தவர்கள் அங்கங்கே தங்களுக்குக் குடிக்க உப்புக் கலவாத குடிநீர் கிடைக்கவில்லை என்பதால்-உப்பு நீக்கிய நீரை-மினரல் வாட்டர் என்ற பெயரால்-நைலான் கேன்களில் தமிழக மெங்கும்/நாடெங்கும் வாங்கிக் குடிக்கின்றனர்.

ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்து அக்வா கார்டு, அக்வாஃபினா போன்ற மிஷின்களை வாங்கி-அரசு தரும் மான்ய விலை மின்சாரத் துஷ்பிரயோகம் பண்ணி ,ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் செய்து குடிக்கின்றனர். கேன்களில் நீர் விற்கும் நீர்வணிகர்கள் “சுத்திகரிப்பது” வீண் கண்துடைப்பு!

 ஆனால் வணிகர்கள் அப்படி நிலத்தடி நீரை அல்லது ஆற்றோர கிணற்று நீரை உறிஞ்சி அவர்கள் சுத்திகரித்து கேன்களில் விற்பதாகச் சொல்லிக் கொண்டாலும்,அண் மையில் பல கம்பெனிகளின்ஆர்வோ நீர் கேன்ககளில் அசுத்த நோய்க் கிருமிகள் மட்டுமின்றி, வண்டுகள் புழுக்கள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு,சென்னையைச் சுற்றி உள்ள பல கம்பெனிகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டன!

10 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு மினரல் வாட்டர் பாட்டிலில் ஒரு வளர்ந்த வண்டே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு நாமக்கல்லில் கண்டு பிடிக்கப் பட்டு,எனது சகோதர நுகர்வோர் சங்கத் தலைவர் ஒருவரால் வழக்கிடப் பட்டது.
                                                         

 நீர் வணிகர்கள் சங்கம் அமைத்துப் போராடுகிறார்கள். மக்கள் குடிக்க நீர் இன்றி சென்னை, மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட புறநகர் மாவட் டங்களில் அப்படி சப்ளை செய்யும் சில கம்பெனிகள்,தரும் நீர் சுத்தமாக இல்லாமல்-நோய்க்கிருமிகள் உள்ள சங்கதி தெரிந்தபின் ஒரே போராட்டமாக உள்ளது.

காவிரி, பாலாறு, தென்பெண்ணை , ஐயாறு, வைகை, தாமிரபரணி, செய்யாறு அனைத்தும் வறண்டு கிடக்கின்றன. அரசாங்கம் நல்ல குடி நீரை சப்ளை செய்யத் தவறி விட்டதாக கண்டித்து அறிக்கைகள் வெளிவருகின்றன. அவரவர் ஓட்டுப் பிடிக்க இதைச் சொல்கின்றனர்.

 கடவுளே நாட்டை ஆண்டாலும், மழை பொய்த்தால்–நீரை எப்படி மந்திரத்தில் உற்பத்தி பண்ணித் தருவாரா? 

இந்தப்பிரச்சினையைச் சமாளிக்கத்தான் நிலத்தடித் தொட்டிகளில் மழைநீர் சேமித்து வைக்கப்படவேண்டும். இரண்டாண்டு மழை இல்லை என்றாலும் சமாளித்து விடலாம்.

 பெருமுதலாளிகளுக்குத்தான் தங்கள் தொழிற்சாலை களுக்குத் தண்ணீர் உறிஞ்சுவது கடினமாகப் போகும். அவர்கள் ராட்சதப் போர் போட்டு உறிந்துவிடுவதால் விவசாயம் தான் நாசமாகிறது! விவசாயிகள்இதைக் கண்டு கொண்டு நிலத்தில் போர் போட்டு இருக்கிற நீரை உறிஞ்சிவிட  அனுமதிக்காமல் போராட வேண்டும்!

 தத்தம் கூரைமேல் விழும் மழை நீரை,நீர் கசியா நிலத்தடித்தொட்டிகளில் சேமித்து வெளிச்சம் காற்றுப்படாமல் மூடிவிட்டால், இந்த நீர் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கெடுவதில்லை. பூச்சி புழு தோன்றுவதில்லை. ஆவியாகிப்போய் குறைவதில்லை. நிலத்தடி நீரின் அனைத்துத் தீமைகளும் பறந்து போகின்றன.

நிலத்தடித் தொட்டிநீரால் விளையும் நன்மைகள் பற்றி காளிமைந்தன் கூறுகிறார்:[அடுத்த பதிவில்]

No comments:

Post a Comment