Wednesday 25 June 2014

நாமக்கல் நகராட்சி தரும் காவிரி நீர் என் வீட்டுக்கு மஞ்சள் நிறத்தில்தான் வந்து கொண்டிருக்கிறது!

[சமைக்கவும் குடிக்கவும் என்ன செய்வது?எந்த நீரைத் தேடிப்போவது ]
இந்தப்  பதிவில் தொடருகிறார் காளிமைந்தன் ..

                                                                             Highlight
ஊடகங்கள்,மக்கள் நீருக்காகப் போராடுவதையும்
 சாலைமறியல் செய்வதையும் பெரிது படுத்தி
 பணம் சம்பாதிக்கத்தான் முயல்கின்றன. மக்களுக்கு  வழிகாட்ட வரவில்லை

 நானே செய்த பரிசோதனையில் கண்ட உண்மைகள்!

   நான் நாமக்கல்லில் முதலில் புறவீட்டைக்கட்டி விட்டு, தலைவீட்டை(Main house) கட்டினோம். அதில் வீடு கட்டும் முன்பு நான் ஆழ்துளைக்கிணறு தோண்டி அத்தண்ணீரில் வீடு கட்டினேன். முதலில் புறவீட்டைக்கட்டி விட்டு போர் தண்ணீரில் சோறாக்கிக் கொண்டிருந்தோம். அப்போது,சராசரி எங்களுக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர் கேஸ் செலவாயிற்று. வீடு கட்டி முடித்த பிறகு காவிரி ஆற்று நீர் வந்தது.

   அது வந்தபிறகு 10 சிலிண்டர்தான் செலவாகியது. நான் மழைத்தண்ணீர் சேமித்தபிறகு மழைத்தண்ணீரைப் பயன்படுத்தியபோது ஆண்டுக்கு ஆண்டுக்கு 8 சிலிண்டர் எரிவாயுதான் செலவாகியது.

   அற்ப மழையே பெய்யும், ஆண்டுக்கணக்கில் வறண்டே கிடக்கும்,நாமக்கல் மாவட்டம் வேலூர் வட்டத்தில் உள்ள புளியம்பட்டி என்ற பட்டிக் காட்டில் உள்ள என் சின்ன மகள் தோட்டத்திலும் அந்த மாதிரி குழிதோண்டி பூமிக் கடியில் நீர் போகச் செய்யப்பட்டது. ஆனால் மழை பெய்தால் சில செகண்டுகளில்-அந்த ஊரிலும் கூட-(எல்லா ஊரிலும் நகரங்களிலும்தான்) அந்தக் குழி நிறைந்து நீர் வெளியில் தான் ஓடுகிறது. இது தேவையில்லாதது

.  இங்கெல்லாம் குழி தோண்டி நிலத்துக்குள் நீர் விடச் சொன்னது பைப் வியாபாரிகளுக்கு அல்லாமல் யாருக்கும் எப்பயனும் இல்லை! மேலும் விவசாயிகள் வயல்களை நிரவி வைத்துள்ளனர். அந்த குறைந்த மழை வரப்பை மீறிப் போக முடியாது. போனாலும் பக்கத்துக் குட்டைகளில்தான் தங்கும். அனைத்து வயல்களும் நிரவப்பட்டு பெரிய வயல் கரைகள் உள்ளன. மழை அந்த வயல்களில் சேர்ந்தாலே அந்நீரை பூமி உடனே சில மணிநேரத்தில் உறிஞ்சி விடும். குட்டைகள் இப்போது இருபது வருடங்களில் நிரம்பி நான் கண்டதில்லை!

  விவசாயத்துக்கு வரும் காவிரி ஆற்று நீர் கூட நீல, மஞ்சள், சிவப்பு நிறங்களாக வருகிறது! நாமக்கல் நகராட்சி தரும் காவிரி நீர் என் வீட்டுக்கு மஞ்சள் நிறத்தில்தான் வந்து கொண்டிருக்கிறது! ஈரோடு, பவானி, பள்ளிபாளையம் சாயப்பட்டறைக் கழிவுகளால்தான் இப்படி நடக்கிறது! எனவே மழைநீரை சேமித்து குடிக்க சமைக்கப் பயன் படுத்துவது,நாட்டுமக்களின் சுகாதாரத்தைக்காக்க மிக அவசியம்!

   இந்த ஆண்டு பட்டிப் பொங்கலுக்கு என் சின்ன மகள் தோட்டத்துக்குப் போயிருந்தேன். மாட்டுப்பொங்கலை நாங்கள் பட்டிப்பொங்கல் என்பதுதான் இன்றுவரை வழக்கம். மகளும் மருமகனும் டாக்டர்கள்; கோவையில் உள்ளார்கள். என் சம்பந்திகள்-வயதானவர்கள் ஆனதால்-ஆடு மாடுகள் வைத்துக் கொள்ள முடியவில்லை. எனவே, பட்டிக் காடுகளில் காலம் காலமாக நடந்து வருவதுபோல்,பக்கத்துத் தோட்டத்தில் மாட்டுப்பட்டியில்-அவர்களோடு சேர்ந்து பொங்கல் இட்டோம்.

   அந்த பக்கத்துத் தோட்டத்துக்காரர்-L.I.C ஏஜெண்டாகப் பணியாற்றுகிறார். படித்த விவரமறிந்த மனிதர். தன்தோட்டத்துக்கு இதரரோடு சேர்ந்து கூட்டு உழவு நீர் திட்டமிட்டு, காவிரிக்கரையோரம் போர் போட்டு,காவிரி நீரை உறிஞ்சி வந்து விவசாயம் செய்கின்றனர். ஆனால் குடிக்க ஆர்வோ மெஷின் வைத்து போர் தண்ணீரைச் சுத்தம் செய்து குடிக்கிறார். கிணற்றில் நீர் கிடையாது. காவிரி ஆற்றில் இருந்து பைப் மூலம் நீர் கொண்டுவந்து, குடியானவர்கள் நூற்றுக் கணக்கான ஏக்கர்களை மேட்டில் பாய்ச்சுகிறார்கள். வரும் ஆற்றுநீர்,கலர் கலராக வருகிறது. இந்தக் கலர்-பவானி, குமாரபாளையம், பள்ளிபாளையம், ஈரோடு பகுதிகளில் இருந்து வரும் தோல் பதனிடும் - துணிகள் சாயமேற்றப்படும் ரசாயனங்களால் வருவதுதான். இது இன்னும் மோகனூர், முசிறி, குளித்தலை, திருச்சி, திருவரங்கம் போன்ற காவிரிக்கரை நகரங்கள் ஊர்கள் அனைத்தின் மலக்கழிவுகளையும், இதர கழிவுகளையும் சுமந்து செல்வதால், தஞ்சையிலும் நாகப்பட்டினத்திலும், காரைக்கால் ,பாண்டியிலும் மழைநீரைச் சேகரித்துக் குடிப்பது சமைப்பதே ஆரோக்கியத்தை உறுதி செய்யும்!

    என் சொந்த மாவட்டமான நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆறு ஓடும் இடம் எல்லாம்,மேற்படி நகரங்களின் மனிதக்கழிவுகளும் சாக்கடை நீராக காவிரியில் விடப்பட்டு மிதந்து வருவது நேரில் பார்த்தால் குடலைப் பிடுங்குகிறது. எனவே, அந்த L.I.C நண்பர்-தன் நிலத்தில் போர் போட்டு நீரை உறிஞ்சி ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் செய்து (=மெல்லிய ஜவ்வு வழியாகப் பாய்ச்சி சுத்தம் செய்தல்) குடிக்க சமைக்கப் பயன்படுத்துகிறார். மீதி நீரை ஆடு மாடுகளுக்குப் பயன்படுத்தியது போக உழவுக்குப் பயன் படுத்துகிறார்.

  மக்கள் வரிப் பணத்தில் இலவச கரண்ட் கிடைப்பதால் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்! ஆனால் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது! என்ன செய்தாலும் போர் மூலம் எடுக்கும் நிலத்தடி நீரில் உள்ள பூச்சிக் கொல்லி மருந்தையும் சாயப்பட்டறை ரசாயனங்களையும், இதர உப்புக்களையும் 100 சதமானம் நீக்க முடியாது என்பது அவருக்குத் தெரியாது! மழைநீரை அறுவடை செய்து உணவு சமைக்க குடிக்க ஆடுமாடுகளுக்குக் குடிக்கப் பயன்படுத்தலாம் என்பது அவருக்குத் தெரியாது.

  அவரது குடியிருப்பு வீடு உள்ளிட்ட ஆடுமாட்டுக் கொட்டகைகள் வணிகத்துக்காக முட்டைக் கோழிகளை முன்பு வளர்த்த கூரைகள் அனைத்தும் கான்கிரீட் மற்றும் சிமெண்ட் அட்டைகளால் ஆனவை. அவற்றின் பரப்பளவு சுமார் 7000 சதுர அடி இருக்கும். பல ஆயிரக்கணக்கான் அடிகள் கொண்ட கோழிக்கொட்டகைகளை-ஒன்றும் விளையாத வரட்டு நிலத்தில் இருந்து அவர் அகற்றி விட்டார். அது மாடு மேயப்பயன்படுகிறது!

. நிற்க. அவர் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள நீர் கசியா நிலத்தடித் தொட்டிகட்டி வெளிச்சம் காற்றுப்படாமல் மூடி- நன்கு மழை பெய்யும் வருடத்தில் மழை அறுவடை செய்தால்,நான்கு நாளில் தொட்டி நிறைய மழை நீரை அறுவரை செய்து விடலாம். அது அவருக்கு குடிக்க சமைக்க 5 ஆண்டுகூட வரும்!

  சென்ற ஆண்டுபோல மழை மிகக் குறைவான ஆண்டில்கூட ஒரு முப்பது நாற்பதாயிரம் லிட்டர் நீரை அறுவடை செய்து விடலாம்! ஆனால் அப்படி செய்து வைக்க அவருக்குத் தோன்றவில்லை. அரசோ தன்னார்வ இயக்கங்களோ ஊடகங்களோ அதை வலியுறுத்திச் சொல்லவில்லை என்பதுதான் காரணம்! ஊடகங்கள்,மக்கள் நீருக்காகப் போராடுவதையும் சாலைமறியல் செய்வதையும் பெரிது படுத்தி பணம் சம்பாதிக்கத்தான் முயல்கின்றன. மக்களுக்கு வழிகாட்ட வரவில்லை! நான் கஷ்டப்பட்டு விளக்கிச் சொன்னேன். அவர் அதைக்காதில் வாங்கினார். காற்றில் விட்டாரோ வைத்துள்ளாரா, நடை முறைப்படுத்துவாரா மாட்டாரோ தெரியவில்லை! ஆண்டவனுக்கே வெளிச்சம்!

 கூரைகளில் இருந்து கொட்டி பூமிக்குள் சென்ற மழைநீரால் நன்மையின்றிப்போவதும்-பூமிக்குள் நுழைய விடாமல்- நீர்கசியா நிலத்தடித் தொட்டிகளில் சேமித்துக் காக்கப்படும் மழை நீரால் விளையும் நன்மைகளும்!
(ஆற்று நீருக்கும் இதற்கும் சம்பந்தமில்லை! ஆறுகளில் சாயப்பட்டறைக் கழிவுகளும் தோல் பதனிடு கழிவுகளும், சாக்கடை நீரும் கலப்பது தனி விஷயம்!)

பூமிக்குள் செலுத்தப்படும்/சென்றுவிடும் மழை நீர் என்ன ஆகிறது?

No comments:

Post a Comment