Monday 13 October 2014

வைணவம் போற்றுதும்


                       வைணவம் போற்றுதும்

வைணவசமயம்மிகத்தொன்மையானது. வேத காலத்திலேயே அது நிலைபெற்று  இருந்திருக்கிறது. விஷ்ணுவை ‘உபேந்திரன்’ என்று இருக்குவேதம்கூறுகிறது. விஷ்ணு என்ற சொல்லிலிருந்துதான் வைணவம் என்ற சொல் தோன்றியது. சங்கநூல்களுக்கெல்லாம் முந்திய தொல்காப்பியத்தில் ‘மாயோன்மேயகாடுறைஉலகமும்’ என்று வருகிறது. மாயோன்என்பதுதிருமாலையேகுறிக்கும். பண்டைய தமிழகத்தின் முல்லைநில மக்கள் மாயோனைத் தெய்வமாக விளங்கினர்

 வைணவ சம்பிரதாயப்படி வைணவத்தை வளர்த்தபெருமக்களைஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் என இரு வகையாகக் கூறுவர். ஆழ்வார்கள் எனப்படுவோர் அவதார ஞானிகள்ஆவர். ஆழ்வார்கள் என்பதற்கு பகவத் குணங்களில் ஆழ்ந்து ஈடுபடுபவர்கள் என்பது பொருள். ஆச்சாரியர்கள் என்பவர்கள் ஆழ்வார்களின் நெறியைப் பின்பற்றி வைணவத்தைப்பரப்பியவர்கள். அவர்கள் மீது கொண்ட பற்றே இக்கட்டுரைகளில்பொதிந்துள்ளன.

வைணவத்தில்வழங்கி வரும் வற்றாத தமிழே என்னை ஆட்கொண்டு அதன்பால்ஈர்த்தது.  மேலும் மேலும் வைணவ நூல்களைப் படித்ததும் 
வைணவ மாநாடுகளைக் கேட்டதும் இக்கட்டுரைகள் எழுத ஆர்வமூட்டின. இக்கட்டுரைகளை வெளியிட்டசப்தகிரி, திருமால், ஆலயதரிசனம், அருள்மலர், திருக்கோயில் ஆகிய இதழ்களுக்கு என் நன்றிகள்.

இவற்றை ஒன்று சேர்த்து உரிய வரிசை ப்படி அமைத்து வெளியிட விரும்பி அவ்வப்போது யோச னைகள் வழங்கிய சிறப்பாக வெளியி ட் டுள்ள எழுத்தாள நண்பர் திரு வையவன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.என் முயற்சிகளுக் கெல்லாம் என்றும் துணை நிற்கும் என் மனைவி  அலர்மே ல் மங்கைக்கு என் நன்றிகள். என்றும் வைணவத்தைப்போ ற்றி வரும் தமிழ் கூறு நல்லுலகம் இதை ஏற்கும்.நம்புகிறே ற ன்  
                                                             

 வளவ. துரையன்

No comments:

Post a Comment