Tuesday 14 October 2014

2. இழப்பதற்கு ஏதுமில்லாதவன் பெறுவதற்கும் தகுதி இல்லாதவனே!

கர்னல் கணேசன் 
2. இழப்பதற்கு ஏதுமில்லாதவன் பெறுவதற்கும் 
தகுதி இல்லாதவனே!
1970-71ம் ஆண்டுகளில் நடந்த புறவெளி மாற்றங்கள் காப்டன் கணேசனின் அகத்திலும் சில மாற்றங்களைத் தோற்றுவித்தன. இராணுவ வாழ்க்கை ஒரு கரடு முரடான வாழ்க்கை என்றாலும் அதில் அன்பு, பாசம், காதல் போன்றவற்றிற்கு இடமில்லை என்று ஒதுக்கிவிட முடியாது. மனித வாழ்வில் அன்பு இரக்கம் போன்றவை அடிப்படைக் குணங்கள். அவை இல்லாமல் மனிதன் வாழவே முடியாது. ஆனால் “பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை” என்பதற்கொப்ப மனிதர்களின் இந்த அடிப்படைக் குணங்கள் பொருளின் மீதுள்ள மோகத்தால் ஏற்படும்பொழுது அந்த அன்பும் பாசமும் ஒரு வெளிவேஷம்தான். இராணுவப் பொறியியற் கல்லூரிக்கு வந்து விட்டாலும் அந்த போரின் தாக்கம் அவரை விட்டு விலகவில்லை.

1964-ம் ஆண்டு இராணுவ அதிகாரியாகிய நாள் முதல் கடந்த 7-8 ஆண்டுகளில் அவரிடம் சேமிப்பு என்று ஆயிரம் ரூபாய் கூட இல்லை. அதிக செலவாளியாகவும் ஆடம்பரப் பொருள்களில் நாட்டமும் இல்லாதவர் அவர். கற்பனையான, நடைமுறைக்கு ஒவ்வாத சினிமா மற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை அவர் விரும்புவதில்லை. பின்னர் அவரது சம்பளப்பணம் எல்லாம் என்ன ஆனது என்று எண்ணிப் பார்த்தார். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த மாற்றங்களுக்கு அவரின் பங்களிப்பும் கணிசமாக இருந்திருக்கிறது. அண்ணன், தம்பி மற்றும் தங்கையின் திருமணங்கள் அவர் இராணுவ அதிகாரியான பின்பே நடந்திருந்தது. அது தவிர அக்காளின் குடும்பத்திற்கு அவ்வப்போது உதவி இருக்கிறார். இப்படித் தனக்கென ஏதும் சேர்த்து வைத்துக் கொள்ளாமல் இருந்திருக்கிறாரே என்று அவர் வருத்தப்படவில்லை. 

ஆனால் உறவு, பாசம் என்ற பிணைப்பின் காரணமாகவோ அல்லது நமக்காக உதவிகள் செய்தவர் என்றோ அந்தக் குடும்பத்தினர் ஏன் தனது நலன் நாடி ஒரு கடிதம் எழுதவில்லை என்று அவர் எண்ணிப் பார்த்தார். இது அவர்கள் குறை இல்லை. இப்படி எதிர்பார்த்தது தனது குறையே என்பதை அவர் உணரத் தொடங்கினார். “தானே தனக்கு தலைவிதியாய்” என்ற மாணிக்கவாசகரின் திருவாசகம் படிக்க ஆரம்பித்த பிறகு அவர் தன் வழி தனி வழி என்பதை புரிந்து கொள்ள ஆரம்பித்தார். இதனால் இரண்டு நாட்களுக்கொருமுறை என்று பக்கம் பக்கமாக உறவுகளுக்கு கடிதம் எழுதுவதைக் குறைத்துக் கொண்டார். ஆனால், தனது மன எழுச்சிகளை எழுத்தில் வடித்து நிறைய எழுதவும் அவைகளை சிறு சிறு தலைப்புள்ள கட்டுரைகளாக சேர்த்து வைக்கவும் ஆரம்பித்தார். 

                                       படிப்பினால் கிடைத்த மாற்றம் 

போர்க்களத்திலிருந்து நேராகப் பொறியியற் கல்லூரி வந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. காலை நேரம் கல்லூரியிலும் மாலை நேரம் விளையாட்டிலும் செலவானாலும் ஓய்வு நேரங்களில் எல்லாம் என்ன செய்வது - எங்கு போவது என்று புரியாமல் தவிக்க நேர்ந்தது. நிறைய மனோதத்துவ புத்தகங்களும் தனிமனித வாழ்க்கை வரலாறுகளும் படிக்க ஆரம்பித்தார். கதை போல ஒரு செய்தி என்ற முறையில் படிக்காமல் ஆழ்மனப் பதிவுடன் படிக்கவும் அதிலிருந்து நிறைய குறிப்புகள் எடுத்துக் கொள்ளவும் ஆரம்பித்தார். தீவிரச் சிந்தனைச் சூழலில் சிக்கித் தவிப்பதால் இரவு உறக்கம் வராமல் விழித்திருக்க நேர்ந்தது. ஆனால், அது உடல் நிலையைப் பாதிக்கக்கூடாது என்று தனக்குத் தானே அறிவுரை கூறிஆ@டா Œஜெஷன் ’ முறைகளைப் பயன்படுத்தித் தீர்வுகாண முயற்சித்தார். செய்தித் தாள்களை மிக நிதானமாக ஒவ்வொரு செய்தியின் பரிமாணத்தை உணர்ந்து படிக்க ஆரம்பித்தார்.

13 March 1972 அன்று கூட கூடஞுThe Morning News of Dacca என்ற பங்களாதேஷ் பத்திரிகையின் செய்தி இந்தியப் பத்திரிகைகளில் வெளிவந்தன. "Salute the Gallant Ally'' என்று அந்த தலையங்கம் பற்றி எல்லா இந்தியப் பத்திரிகைகளும் எழுதி இருந்தன. கிழக்கு வங்கப் போர் முடிந்தவுடன் இந்திய இராணுவத்தினர் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் அந்த நாட்டை விட்டு வெளியேறியது நாம் அறிந்ததே! கணேசன் ஒரு மிலிடரி ஸ்பெஷல் ரயிலில் முதல் பகுதியாகப் பங்களாதேஷிலிருந்து வெளியேறியிருந்தார். இன்று அந்த நாட்டிலிருந்து கடைசிப் பகுதியாக இந்திய இராணுவத்தினர் வெளியேறுகிறார்கள். சென்ற மூன்று மாதங்களாக சுதந்திர நாடாகப் “பங்களாதேஷ்” இயங்க ஆரம்பித்து விட்டது.ஷேக் க் முஜிபுர் ரஹ்மான் என்ற அவாமி லீக் தலைவர் பிரதமராகப் பதவி ஏற்றுக் கொண்டு ஸோ னார் பங்ளா என்ற தனது கனவை நிறைவேற்றும் பணியிலிருந்தார். பாகிஸ்தான் மறைவிடத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த அவரைக் கொன்று விடாமல் பாகிஸ்தானிய அதிகாரிகள் விடுவித்து ரகசியமாக லண்டன் கொண்டு சென்று விடுவித்தனர்.இந்திய விமானம் அவரை அழைத்துக் கொண்டு முதலில் டெல்லி வந்தது. பாரதப் பிரதமர் இந்திரா காந்திக்கு நன்றி தெரிவித்து விட்டு அவரை டாக்காவில் இறக்கி விட்டனர். போரில் மட்டுமல்லாது சென்ற மூன்று மாதங்களாக இந்திய இராணுவத்தினரின் செயல்பாடுகள் குறித்தும் பத்திரிக்கைகள் எழுதி இருந்தன.

Indeed Indian Army's conduct all through was exemplary. It further said that it had earned the sincere gratitude of the 75 million people of Bangladesh. The bonds forged in the liberation struggle will endure. The "Daily Ganga Bangla'' in a front page article said, you leave behind sweet memories. Your deeds of valour will always be gratefully remembered in our history. You laid down your lives with out any self interest which is uique in history. The Indian Armys fight against the Pakistan occupied forces in Bangladesh was a new phase in the history of liberation struggles and this aspect was high lighted by its behavior during the 90 days. 

. (போரின் வெற்றிக்குப் பிறகு இந்திய இராணுவம் பங்களாதேஷில் இருந்த நாட்கள்)

இப்படி செய்தித்தாள்களில் இந்திய இராணுவம் பற்றி வரும் செய்திகள் தனக்காகவே எழுதப்பட்டன போன்று பூ மாலைகளாகத் தன் கழுத்தில் விழுவதாகக் கணேசன் உணர்ந்தார். தனி வாழ்க்கை எப்படி இருந்தாலும் இராணுவ வாழ்க்கையில் தான் பெயரும் புகழும் கட்டாயம் பெற வேண்டும் என்று உறுதி பூண்டார். ஆகையால், வருங்கால வாழ்க்கைக்காகத் தன்னை வல்லவனாகவும் நல்லவனாகவும் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை அவர் உணர்ந்தார். இழப்பதற்கு ஏதுமில்லை என்று தாறுமாறாக வாழ முற்பட்டால் தான் ஏதும் பெறுவதற்கும் தகுதியற்றவனாக ஆகிவிடக்கூடும் என்பதை உணர்ந்தார். மாலை நேரங்களில் பெரும் பகுதி விளையாடுமிடங்களில் செலவானது.

பகல் 3 மணிக்குக் கிராஸ் கண்ட்ரி என்று சொல்லக்கூடிய நீண்ட தொலைவு ஓட்டம் சுமார் 15 கி.மீ. ஓடுவார். 1 1/2 மணி நேரத்தில் அந்த ஓட்டம் ஓடி முடிந்து விட்டு சற்று ஓய்வுக்குப் பின் சுமார் 1 மணிநேரம் பேஸ்கெட் பால் விளையாடுவார். அது முடிந்தபிறகு நீச்சல் குளம் சென்று சுமார் 5 கி.மீ. நீச்சல் மிகவும் மெதுவாக ஆனால் நிற்காமல் நீந்துவார். இப்படி சுமார் 3 மாதங்கள் சென்றன. தீவிர உடற்பயிற்சிகளினால் களைப்படைந்து இரவு மிக நன்றாகத் தூங்க ஆரம்பித்தார். 

அளவுக்கு மீறிய உடற்பயிற்சியும் ஆம்புலன்ஸும்

ஆனால், ஒருநாள் இரவு நன்றாகத் தூங்கிவிட்டு காலையில் எழுந்திருக்க முயற்சித்தபொழுது ஒரு பக்கக் கைகால்களை அசைக்கவே முடியவில்லை. இடது கையை நகர்த்த வேண்டுமானால் வலது கையின் துணை கொண்டுதான் நகர்த்த முடிந்தது. மருத்துவமனைக்கு செய்தி தெரிவித்து அங்கிருந்து ஆம்புலன்ஸ் வந்து அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இரண்டு மூன்று மருத்துவர்கள் பரிசோதித்தனர். காப்டன் கணேசன் மருத்துவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் கேஸ் ஆகி நாலைந்து டாக்டர்கள், தலைமை மருத்துவர் எல்லாரும் வந்து எப்படி அந்த நிலைக்கு அவர் ஆளானார் என்று விசாரிக்க ஆரம்பித்தார்கள். அளவுக்கு மீறிய உடற்பயிற்சியினால் ஒரு பக்க தசைப்பகுதி சிதைக்கப்பட்டிருப்பதாக முடிவு செய்து உடல் வலிக்கான மருந்தும் ஓய்வும் தேவை என்று முடிவு செய்தார்கள். ஒரு வாரம் 10 நாட்கள் மருத்துவமனையிலிருந்தார். ஒன்றிரண்டு நண்பர்கள் வந்து பார்த்து ஆறுதல் சொல்லி விட்டுப் போனார்கள். மருத்துவமனையிலிருந்தது பற்றி அவருடைய வீட்டினர் யாருக்கும் தெரிவிக்கவில்லை. ஏனெனில் தெரிவித்தாலும் யாரும் உடனடியாக வந்து உதவப் போவதில்லை. 

இராணுவத்தில் ஒரு வசதி என்னவென்றால் பிறர் உதவியை எதிர்பார்க்க வேண்டிய அவசியமில்லை. தங்குமிடம் மிக நல்ல வசதியுடன் கூடியஸிங்கிள்ஸ் அகாமெடேஷன் எனப்படும் தனி அறை. உணவுக்கு ஆபீஸர்ஸ் மெஸ். மாதம் முடிந்தவுடன் வங்கியில் சேர்க்கப்படும் சம்பளம் என்று எல்லாமே ஒரு ஒழுங்கு முறையுடன் நடக்கும். தன்னைப் பற்றிய ஒரு அனுதாபம் கொண்டு கவலைப்படாமலிருந்தால் - தனது இராணுவப் பணியை சற்றே கவனமுடன் செய்தால் அதிகாரிகளின் வாழ்க்கை நன்றாகவே இருக்கும்.

ஆனால், கணேசன் அப்படிப்பட்ட சூழ்நிலையில் வளரவில்லை. சொந்த ஊரில் உற்றம் சுற்றத்துடன் கலந்து பழகியவர். ஒரு சிறிய பண்ணை வீடு போல வீட்டில் ஆடு, மாடு, மனிதர்கள் என்று கூட்டமுண்டு. இளமையில் நாலைந்து சகோதர சகோதரிகளுடன் ஒன்றாக வளர்ந்தவர். அவர்கள் எல்லாரும் கணவன் - மனைவி என்று தங்களுக்கான குடும்பத்தை ஏற்று அதில் ஒன்றிவிட்டனர். ஆனாலும், அவர்களுடன் கலந்துறவாடவே கணேசன் விரும்பினார். நடைமுறை வாழ்க்கையில் அது முடியாத போது அவர் வருத்தப்படவே செய்தார்.

கல்லூரியில் செமஸ்டர்  முறையிலான பாடங்கள் நடந்து கொண்டிருந்தன. ஒரு செமஸ்டர்  முடிந்தவுடன் 15 நாட்கள் விடுமுறையும், மற்றொரு செமஸ்டர்  முடிந்தவுடன் ஒரு மாத விடுமுறையும் என இராணுவத்தினர்களுக்கான இரண்டு மாத விடுமுறை பிரிக்கப்பட்டிருந்தது. மீதம் 15 நாட்கள் அவர்கள் கணக்கில் சேமிப்பாக சேர்க்கப்பட்டு விடும். இராணுவத்தினர் 240 நாட்கள் விடுமுறை சேமித்து ஓய்வு பெறும்போது 
அதற்குரிய சம்பளத்தைப்  பெற்றுக் கொள்ளலாம் என்பது விதிமுறை.

No comments:

Post a Comment