Tuesday 14 October 2014

பேருந்து நாவல் 1- கண்ணாடிக்குள் ஏற்றிவைத்த சுடர்

          
                                                          பேருந்து



                                                                                  ஹரணி பற்றி 

[இயற்பெயர்   -   முனைவர் க.அன்பழகன்,  கல்வித்தகுதி -    பிஎஸ்ஸி., எம்ஏ., எம்ஃபில்.,பிஎட்.,எம்ஏ(மொழி)     பிஎச்டி. பட்டயம் சம்ஸ்கிருதம், கிரந்தம்,சான்றிதழ் – சைவ சித்தாந்தம் – அண்ணாமலைப்   பல்கலைக்கழகத்தில்.தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றும் இவரது படைப்பிலக்கியப் பயணம்    400  சிறுகதைகள, 200 கவிதைகள்,   15 குறு நாவல்கள்,  -  200 ஆய்வுக் கட்டுரைகள். 5 தொடர்கள் என நெடியதும் விரிவானதுமாகும் பல்வேறு பரிசுகளும் விருதுகளும் பெற்ற ஹரணியின்அண்ணா ஆய்வு நுர்ல் – மொரிசியஸ் நாட்டில் பார்வைநூலாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  வடஅமெரிக்காவின் தமிழ்ச்சங்க நிகழ்வில் கட்டுரை வழங்கியமைக்குச் சிறப்புச் சான்றிதழ். /2014 ]

                                                   
தமிழில் சோதனை நாவல்கள் சொற்பமாய்த் தான் உள்ளன. இருக்கிற ஒருசில நாவல்கள் அதி மேதாவித்தனமான அகந்தையோடு பிற படைப்புக்களை எள்ளி நகையாடும் போக்கினவாக அல்லது கற்பனை வானத்தில் ஒரு கனவு ஸ்தம்பம் நட்டு கழைக்கூத்தாட்டம் நடத்திக்காட்டுவனவாகக் காணப்படுகின்றன .எந்த உள்நோக்கமும் இன்றி பட்ட பாடுகளையும் நுகர்ந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்ட ப.சிங்காரம் போன்றோரின் எண்ணிக்கை மிகக் குறைவு  வாழ்க்கை

 பற்பலருக்கு பல்வேறு விதமான நடைமுறை  வாழ்க்கைக் களங்களை வழங்கியிருக்கிறது.நிஜ வாழ்வின் அந்தப் பின்னணியைத் தம் கதைப் பொருளாக்கி அந்த வட்டத்தைச் சுற்றி நாவல் அமைப்பது இன்றைய சூழலில் வாசக தளம் வேகமாக சுருங்கி வியூவர் எனப்படும் காண்பவர் தளம் சூறைக்காற்றைப் போல் சுழன்றடித்துப் பெருகி வருவது கண்ணெதிரே நடந்து வருகிறது. இந்தச்  சூழலில் ஹரணி அவர்கள் தமது அன்றாடப் பேருந்துப் பயணத்தை நாவலாக்கிக் காட்டி உள்ளார். இந்த முயற்சியை வரவேற்று என்றென்றும் புதுமையை அன்புடன்  இருகரம் நீட்டி வ ரவேற்கும் இணையவெளி ஹரணி யின் பேருந்து நாவலை  தமிழ் கூறும் நல்லுலகத்தின் முன் பணிவோடு சமர்ப்பிக்கிறது -மேன்மேலும் புதிய முயற்சிகள் வளர்ந்து புதிய படைப்புகள் உருவாக இது வழிகாட்டியாக அமைய வேண்டி ஆதரவு கோருகிறோம் 

வையவன் , நிர்வாக ஆசிரியர்.


                                                             முன்னுரை 


வணக்கம்,  நான் பதினைந்து ஆண்டுகளாகத்  தஞ்சையிலிருந்து சிதம்பரம் வரை பேருந்துகளிலும் புகைவண்டிக்ளிலும் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

    இப்படிப் பேருந்தில் பயணித்ததில் போகப்போகப் பழக்கமானவர்கள் பலபேர். அவர்களில் சிலரே மனதைக் கவர்ந்தவர்கள். அவர்களோடு பிணைந்த என்னுடைய தினசரி வாழ்வையும் இணைத்துதான் இந்த பேருந்து நாவலை யோசித்தேன்.  இந்நாவலை எழுதத்தொடங்கி ஆறுமாதங்கள் ஆகிவிட்டன. பாதிதான் முடிந்திருக்கிறது. தொடர்ந்துகொண்டிருக்கிறது.

     இதற்கிடையில் இந்நாவலை உங்களோடு பகிர்ந்துகொள்ளலாம் என்றாலும் கொஞ்சம் தயக்கமிருந்தது. இணையத்தில் வலைப்பக்கத்தில் ஒரு நாவலை வாசிக்கிற அளவுக்கு பொறுமையிருக்குமா என்று. ஆனால் இணையவெளி நிர்வாக ஆசிரியரும், பிரபல எழுத்தாளருமான திரு. வையவன் அவர்கள் கொடுத்த ஆக்கபூர்வமான உற்சாகம்துணிவோம் என்று துணிந்து எழுதவைத்திருக்கிறது  
     வாரமொருமுறை ஒரு அத்தியாயமாக இதனை எழுதலாம் என்று உத்தேசித்துள்ளேன்..  உங்கள் கருத்துக்கள் எதுவாயினும் பகிர்ந்துகொள்ளுங்கள்அது நாவலாக முழுமைபெறும்போது தனித்துவம் அடையும்.  

                      வாசிக்கப்போகும் அனைவருக்கும் நன்றிகள்.



                                                         முதல் அத்தியாயம் 
                                               கண்ணாடிக்குள் ஏற்றிவைத்த சுடர் 



                       அன்று வெள்ளிக்கிழமை.

                       பிறந்தது முதல் 30 ஆண்டுகள் வரை நான் எந்த ஊருக்கும் தொடர் பயணம் மேற்கொண்டது இல்லை.

                       மனதிற்குள் கல்லுர்ரி ஆசிரியனாகவேண்டும் என்கிற கனவு சுடராய் எரிந்துகொண்டிருந்தது கண்ணாடிக்குள் ஏற்றிவைத்ததுபோல அசையாமல்.

                        அதன் இதமான வெப்பம் இதயத்தின் கனவுகளை உறங்கவிடாமல் செய்துகொண்டிருந்தது,

                        நினைத்ததுபோலவே ஒரு தமிழாசிரியர் பணி அமைந்தது,

                  மானிடவ்ர்க்கென்று பேச்சுப்படின் வாழ்கில்லேன் என்ற ஆண்டாளின் வைராக்கியமாய் எப்படியும் கல்லுர்ரிப் பணிக்கு சென்று தீரவேண்டும் என்கிற முனைப்பில் வெற்றிகண்டது ஒரு போரை எதிர்கொண்டு வெற்றிபெற்றதைபோல உணர்வை எனக்குள் ஏற்படுத்தியது,

              தஞ்சாவூரிலிருந்து சிதம்பரம் பேருந்தில் 4 மணிநேரப் பயணம். மிகமிக அலுப்பூட்டும் பயணம்.

               வேறு வழியில்லை. கிடைத்தது கிடைக்கவேண்டுமென்றால் சில துன்பங்களைச் சகித்துக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தத்தையும் ஏற்கத்தான் வேண்டும், ஏற்றுக்கொண்டேன்.

              காலையில் எல்லோரும் கண்உறஙகும் சுகமான பொழுதில் கண்களில் இருந்து துர்க்கத்தைப் பிய்த்து எறிந்து சடசடவென உடலில் குளிர்ந்த நீரை ஊற்றி அவசரஅவசரமாய் கிளம்பி பேருந்து நிறுத்தத்திற்கு வரவேண்டும். 6.10 க்கு அந்தப் பேருந்து வரும் என்றார்கள். பாய்ண்ட டூ பாய்ண்ட் பேருந்து அது. குறிப்பிட்ட நிறுத்தங்கள்தான். நன்றாக விரைவாக செல்லும் என்று ஏற்கெனவே பயணிக்கும் நண்பர்கள் சொல்லியிருந்தார்கள். 6.10க்கு ஏறினால் கண்டிப்பாக 9.20க்கு சிதம்பரம் பேருந்துநிலையம் சென்றுவிடும்.

   அகலமான வெள்ளை நிறப் பேருந்து அது. பார்க்க அழகாக இருக்கும். நீரோடை போன்ற எழுத்துக்களில் அதன் முகப்பில் வொயிட் உறார்ஸ்  (வெள்ளைக் குதிரை) என்ற எழுத்துக்கள் அச்சிடப்பட்டிருந்தன. பெயர் வைத்தவர்கள் ரசனையுள்ள  ஆளாகத்தான்  இருக்கவேண்டும்.
வெள்ளைக் குதிரை
                காலையில் சிலீரென்ற காற்று முகத்தில் அறைய முன்புறம் வைத்தியநாதன் பேட்டை செல்கிற நகரப்பேருந்து வர துர்ரமாய் வெள்ளைக் குதிரையின் முகம் தெரிந்தது.

           நகரப்பேருந்தைக் கடக்கமுயல்கையில் ஓடிச்சென்று கைகாண்பிக்க சற்று துர்ரமாய் போய் கணேசபவன் ஹோட்டல் அருகில் சிறு சப்தமுடன் பிரேக்கை அழுத்த நின்றது. ஓடிப்போய் ஏறினேன்.

          "எங்க சார் போகணும்?"  கண்டக்டர் படியிலேயே நிறுத்திக் கேட்டார்.

                         "சிதம்பரம் போகணும்.?"  

                       "  வாங்க உள்ளே?"  

                 உள்ளே போனேன், எங்கும் இடம் இல்லை. கண்டக்டர் இருக்கையைத் தவிர. டிக்கெட்டை வாங்கிக்கொண்டதும் கண்டக்டர் சொன்னார், சார் போய் என் சீட்டுலே உக்காருங்க. கண்டக்டர் முகத்தைப் பார்த்தேன். நீண்ட நாள் பழகிய முகம்போலத் தோணியது, அவருக்கு நன்றிசொல்லிவிட்டு இருக்கையில் அமர்ந்தேன். டிரைவர் இளம் வயதினராக இருந்தார். முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்ததுபோல இறுக்கமான முகம், நேராக சாலையைப் பார்த்துக்கொண்டிருந்தது, கைகள் ஸ்டியரிங்கை அழுந்தப் பிடித்துக் கொண்டிருந்தது,

          நான் தயக்கமுடன் முகத்தை எதிரே போகும் சாலையைப் பார்த்தபடி திருப்பி வைத்துக்கொண்டேன்,

             வண்டி ஓரே சீரான வேகத்தில் அதேசமயம் குலுங்கல் இல்லாமல் அழகாக ஓடியது மனதுக்கு இதமாக இருந்தது,

             கும்பகோணம் பேருந்து நிலையத்திற்குள் புகுந்து சிதம்பரம் பேருந்துகள் செல்லும் கட்டையில் நின்றது, வண்டியை நிறுத்திவிட்டு டிரைவர் இறங்கினார், கண்டக்டரும் இறங்கினார், டிரைவர் ஒவ்வொரு டயராகத் தட்டி காற்று போதுமானதாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டு வாப்பா என்று கண்டக்டரைப் பார்த்து கூப்பிட கண்டக்ட்ர் என் பக்கம் திரும்பி சார்,,,வாங்க டீ சாப்பிடலாம், 7.25க்குத்தான் டயம்போட்டிருக்கு,
,
                            நான் இறங்கிப்போனேன்,

                           "எங்க சார் வேலை பாக்கறீங்க?"

                            சொன்னேன்

                             "நானும் தஞ்சாவூருதான், மேலவீதியில இருக்கேன் சார், நீங்க?"

                             "நான் கரந்தை" என்றேன்,

                             "தினமும் போவீங்களா?"

                            "ஆமா"

                   "  நம்ப வண்டி ரெகுலர்தான்,  நான் திங்கள் புதன் வெள்ளி வருவேன் சார், எதிர்பக்கம் டிரைவர் கண்டக்டரும் நம்ப ஆளுங்கதான், சொல்லி வச்சிடறேன்"

                            டீக்கு நான் காசு கொடுத்தேன்,

                   "சார்,, விடுங்க நான் கொடுக்கறேன்"

                     "பரவாயில்ல நான் கொடுக்கறேன்"

            ,    கொடுத்து மீதி சில்லறை வாங்கினேன்,

         டிரைவர் பேர் பாண்டியன், கண்டக்டர் பெயர்  ஜெயக்குமார் என்று அறிமுகம் நடந்தது, டிரைவரின் முகத்தில் இறுக்கம் லேசாகக் குறைந்ததுபோல இருந்தது,

        மறுபடியும் வண்டி எடுத்து சிதம்பரம் சாலையில் திரும்பியது, திருபுவனம் தாண்டி திருவிடைமருதுர்ர் வளைவில் திரும்பியபோது வெடி வெடித்தது போல ஒரு சப்தம் கேட்டது, கூடவே ம்மா,,, என்ற குரலும்,

   துர்க்கிவாரிப்போட்டது எனக்கு, பாண்டியன் வண்டியை சட்டென்று நிறுத்தினார், துர்ரத்தில் வயல்களிலிருந்து அருகிருந்த வீடுகளிலிருந்து ஆண்களும் பெண்களுமாக ஓடிவருவது மேலும் அதிர்வை உண்டாக்கியது,

                                                                                            (பேருந்து ஓடும்)
                       

3 comments:

  1. அன்புள்ள ஐயா..

    வணக்கமுடன் ஹரணி.

    பழங்காலத்தில் குரு சிஷ்யப் பரம்பரை என உண்டு. நான் இன்னாரிடத்தில் கல்வி கற்றேன் என்று மாணவர் சொல்லவும் இந்த மாணவர்கள் என் பிள்ளைகள் என்று சொல்லவுமான ஒரு புனித நிலை இருந்தது. இன்று அப்படியில்லை. தவிரவும் தன்னிடம் கல்வி கற்கும் மாணவர்களைக் கூர்ந்து கவனித்து அவர்களின் திறமைகளைக் கண்டறிந்து அவற்றை முன்னிலைப்படுத்தி அதில் சாதனைகள் புரிய துணைநிற்கும் ஆசிரியர்கள் மெழுகுவர்த்தியாய் ஒப்பிடப்படுவார்கள்.

    வாழுகிற காலத்திலேயே ஒரு படைப்பாளியை இன்னொரு படைப்பாளி மனதாரப் பாராட்டுவது என்பதிலே பல குழுக்கள் இயங்கிவருவதும் கண்கூடு.

    இதையெல்லாம் முகமறியாத காலத்திலேயே என் எழுத்துக்களை மட்டும் அடையாளப்படுத்தி நின்றவர்களில் திருமிகு வளவதுரையன் அவர்களுக்கு பங்கு உண்டு. அதற்கு அவருக்குத் தலைவணங்குகிறேன். அவரைத் தொடர்ந்து அவரின் அறிமுகத்தால் நீங்கள் அறிமுகமாகி (உங்கள் கதைகளுடன் ஏற்கெனவே பல்லாண்டுகளுக்கு முன்பு நான் பரிச்சயம்) என்னை இந்தளவிற்கு இந்த நாவலின் வழியாக முன்னிலைப்படுத்துவதைக் காணும்போது படைப்புலகில் நாம் சரியான பாதையில்தான் இயங்கிக்கொண்டிருக்கிறோம் என்கிற ஒரு மனநிறைவைத் தருகிறது. உங்களின் அன்பிற்கும் பெருந்தன்மைக்கும் நான் கடனாளியாக நிற்கிறேன் ஐயா.. எப்போது இந்தக் கடன் அடையும் என்று எனக்குத் தெரியவில்லை என்றாலம் இந்தக் கடனை வாங்கியதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உங்களின் வலைத்தளம் வலம் என்னுடைய நாவலை வாசிக்கப்போகும் அனைவருக்கும் என்னுடைய அன்பாக வணக்கங்கள். நாவல் குறித்து எதுவாயினும் உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். விமர்சனம் வையுங்கள். காத்திருக்கிறேன். இந்த வாய்ப்பின் தருணத்தில் ஐயா உங்களுக்கு மறுபடியும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

    அன்புடன்
    ஹரணி.

    ReplyDelete
  2. சின்ன திருத்தம்.

    என்றாலம் அல்ல என்றாலும்

    வலைத்தளம் வலம் அல்ல மூலம்

    ReplyDelete
  3. congratulations Sir.
    Greatest achievements start only as a casual thought at the pineal glands of the brain.If the person is fairly clear in his mind as to the path of his life then the cosmic force guides him and every forward step unfolds in front of him.A good begining is half done.
    Go ahead Sir.

    ReplyDelete