Friday 22 August 2014

அடிமேல்அடி:வளவ.துரையன்

அடிமேல்அடி

வளவ.துரையன்
அடிமேல்அடிஅடித்தால்அம்மியும்நகரும்என்பார்கள். அந்தஅடியும்ஒரேஇடத்தில்சரியாகவிழுந்தால்தான்பலன்கிடைக்கும்
அம்மியும் நகரும்.
அடிப்பதுபெரிதன்று.
அடிக்குமுன்பலமுறையோசனைசெய்யவேண்டும். அதனால்தான்எளியாரைவலியார்அடித்தால்வலியாரைத்தெய்வம்அடிக்கும்என்றுகிராமத்தில்பழமொழிசொல்வார்கள். ஆனால்இப்போதுதெய்வம்மிகவும்தாமதமாகத்தான்வந்துஅடிக்கிறது. நாம்தான்பார்க்கிறோமே. அதற்கும்சோம்பல்வந்துவிட்டதோ?
வலியார்யார்? எளியார்யார்? என்பதற்கும்அளவுகோலாகஅடிபயன்படுகிறது.சிலநேரம்அடியால்நன்மைகளும்உண்டு. இரும்பைக்காய்ச்சிப்பழுக்கவைத்துஅடிஅடியென்றுஅடித்தால்தான்
கத்தி,சுத்தி,அரிவாள்,கடப்பாரை எல்லாம் உருவாகின்றன. நாம்அவற்றைஎப்படிப்பயன்படுத்துகிறோம்என்பதுவேறுவிஷயம்.
இந்தமீட்டர்எல்லாம்வருவதற்குமுன்அடிநீட்டளலவையில்முக்கியமான
பங்குவகித்தது.
12அங்குலம்ஒருஅடி; 3 அடிஒருகெஜம்; 220 கெஜம்ஒருபர்லாங்;
8 பர்லாங்ஒருமைல்என்பதுஅந்தக்காலத்தில்பள்ளியில்மனனம்செய்யவேண்டியவாய்பாடு.
அந்தஅடிவாய்பாட்டைக்குழப்பிச்சொன்னதால்நானும்அடிவாங்கியதுண்டு. அப்போதெல்லாம்ஆசிரியர்களுக்குமுழுசுதந்திரம்உண்டு.பிள்ளைளைப்
பள்ளியில்சேர்க்கும்போதேசரியாகப்படிக்காவிட்டால்கண்ணைமட்டும்விட்டுவிட்டுஉரித்துவிடுங்கள்என்றுசொல்வார்கள்.
இப்போதுவகுப்பறையில்பிரம்பேஇருக்கக்கூடாதுஎன்றவிதிஉண்டு. மீறிப்பையன்மேல்கைபட்டுவிட்டால்பெற்றோர்வந்துசாலைமறியல்தான்.
அடிஎன்பதுவிளிச்சொல்லாகவும்சொல்லப்படுவதுஉண்டு. 'அடியேய்’ என்பதுமனைவியைஅழைக்கும்முறையில்ஒன்றாகச்சொல்வார்கள். இப் போதெல்லாம்அதுமாதிரிக்கூப்பிட்டால்பெண்னியவாதிகள்ஆணாதிக்கம்என்றுஅடிக்கவந்துவிடுவார்கள்.இப்போதுகணவன்மனைவிஇடையேபெயர்சொல்லிக்கூப்பிட்டகாலம்கூடப்போய் இருவருமே பால்வேறுபாடுஇன்றி ‘என்னப்பா’ ’வாப்பா’ ’சரிப்பா’தான். எப்படிஅழைத்தால்என்ன?

மனஅணைப்புசரியாகஇருந்தால்சரி.
அடிஎன்பதுகாலால்நடந்துஉண்டாக்கும்அடியையும்குறிக்கும்.

”நான்வைப்பதுஒருசிறியஅடிதான்; ஆனால்இதுமனிதகுலமுன்னேற்றத்திற்குஒருமுக்கியமானஅடி” என்றுநிலவில்முதல்முதல்நடந்தபோதுநீல்ஆர்ம்ஸ்ட்ராங்சொன்னதுகுறிப்பிடத்தக்கதாகும்.

தன்சிறியகாலால்மூன்றுஅடிமண்கேட்டுவாங்கிப்பின்அளக்கும்போதுதிருவிக்ரமனாகபேருருஎடுத்துப்பெரியகாலால்அளந்ததுஎந்தவகையில்நியாயம்?புரியவில்லை.

சரிவிடுங்கள்கடவுள்என்றால்என்னவேண்டுமானாலும்செய்யலாம்!
காலடிஎன்றுஓர்ஊரேஉள்ளது. ஆதிசங்கரர்அவதாரம்செய்தஊர்.
சிலகவிதைப்போட்டிகள்பற்றியஅறிவிப்பில்இத்தனைவரிகளுக்குள்எழுதவேண்டும்என்றுசொல்வார்கள். அதுசரியன்று.

உரைநடைக்குத்தான்வரிஎன்றுசொல்லவேண்டும்கவிதை, பாடல்களுக்கெல்லாம்அடிஎன்பதேசரி.
சிலப்படித்தபேராசிரியர்களே

‘வள்ளுவர்ஒண்ணேமுக்கால்அடியில்பெரியபெரியகருத்துகளையெல்லாம்எழுதியிருக்கிறார்என்றுமேடையிலேமுழங்குகிறார்கள். திருக்குறள்இரண்டுஅடிகளேபெறக்கூடியகுறள்வெண்பாவில்எழுதப்பட்டது.
அதில்முதல்அடியில்நான்குசீரும்இரண்டாம்அடியில்மூன்றுசீர்களும்இருக்கவேண்டும். எனவேஇரண்டாம்அடிமுக்கால்அடியன்று. முழுஅடிதான்
அடிக்கிறகைதான்அணைக்கும்என்பார்கள்;

ஏன்அதுஅடிக்காமலேஅணைக்கக்கூடாதா?
 என்பதுதான்இன்றையகேள்வி.
முதலில்அடிப்பானேன்?
அப்புறம்அணைப்பானேன்?
ஆனால்சிலநேரங்களில்அடிக்கத்தான்வேண்டும்என்றுசொல்பவர்கள்
அடியாதமாடுபடியாதுஎன்பார்கள்.
ஓர்ஐயம்; அப்படியானால்ஆடுறமாட்டைஆடிக்கறக்கணும்பாடுறமாட்டைப்பாடிக்கறக்கணும்என்றபழமொழிஏன்வந்தது?
அடிக்காமல்அணைக்கப்பழகுவோம்.
அதுவேஅனைவர்க்கும்நல்லது.

No comments:

Post a Comment