Friday 29 August 2014

என்று தணியும் இந்த சினிமா மோகம்?.

                                                   
                                                       
சங்கர ராமசாமி 
மூத்த பத்திரிக்கையாளரும் தனது பிளாக் மூலம் பத்து லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் கவனத்திற்கு உரியவரும் தேசியவாதியுமான திரு. சங்கர ராமசாமி அவர்கள் நடிகர் ரஜினிகாந்த் மங்களூரில் பேசிய பேச்சிற்கு ஊடகங்கள் தரும் விளம்பரம் குறித்து வேதனையுற்று சில கேள்விகளை முன் வைக்கிறார் 
ரஜினி மங்களூரில் “மக்கள் முடிவு செய்ய வேண்டும்“ என்று சொல்லி யிருப்பது அர்த்தமற்ற பேச்சு.

இயலாத சூழ்நிலகளில் எல்லாம் அரசியல்தலைவர்கள் சொல்லும் “மக்கள் கவனித்துக் கொள்வார்கள்” என்பதைப் போன்றதே அது..
மக்கள் முடிவு செய்ய ரஜினி வாக்கெடுப்பு நடத்தப்போகிறாரா ?
அப்படி நடத்தினால்,
1) அரசியலில் ஈடுபடுவதா? வேண்டாமா?
2) தனிக்கட்சி துவங்குவதா? வேண்டாமா?
3)  தனிக் கட்சி வேண்டாம் என்றால் எந்தக்கட்சியில் சேருவது ?
4) தனித்துச் செயல்படுவதா?  கூட்டணி அமைத்துச் செயல்படுவதா?
5) கூட்டணி யாருடன் ?
இந்த வினாக்களை எல்லாம் கேட்கப் போகிறாரா, ரஜினி ?
மங்களூர்ப் பேச்சு உண்மை என்றால் வாக்கெடுப்பு நடத்துவதுதானே நியாயம் ?



இன்னும் எவ்வளவு காலம்தான் தமிழக அரசியல் திரைத்துறையில் மையம் கொள்ளும் ?
வாக்கெடுப்பில் பொதுமக்கள் பங்களிப்பை எப்படிப் பெறப்போகிறார் ரஜினி ?
 மங்களூர்ப் பேச்சு “லிங்கா”-விற்காக அல்ல என்பது உண்மையானால் , ரஜினி பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்யட்டும்.
வாக்கெடுப்பை எப்படி நடத்துவது என்கிறீர்களா?
ரசிகர் மன்றங்கள் மூலம் நடத்துவது பொருட்செலவு / கால விரயம்.
நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தினாலே போதும்.
 “மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என்பது பாமரத்தனமான பேச்சு. பேசியவர் ரஜினி என்பதால் ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன என்பதே உண்மை.
குமுதமும் விட்டு வைக்கவில்லை. பயன்படுத்திக்கொண்டது.
வீட்டிலிருந்தபடியே கணினிமூலம் தீர்மானித்துக் கொள்ளலாம்.
ஆனால், ஒரு வார்த்தை. தமிழகத்தில் வாக்களிக்கும் தகுதிபெற்றோர் எண்ணிக்கையில் குறைந்தது 55% வாக்குகளுக்குமேல் பெற்றாக வேண்டும்.
 வருவாய் ஈட்டும் தொழில்களில் சினிமாவும் ஒரு பிரிவு. அதில் ரஜினிக்குத் தனியிடம் உண்டு. அவ்வளவுதான்.
சென்ற தேர்தலில் விஜகாந்த் கூட்டணியால்தான் அ.தி.மு.க. அரியணை ஏறியது.
ரஜினியுடன் கைகோர்த்தால் பா.ஜ.க கோட்டையைப் பிடிக்கிறதோ இல்லையோ பாராளுமன்றத் தேர்தலுக்கு நிச்சயமாக உதவும் என்பதுதானே பா.ஜ.க.வின் எதிர்பார்ப்பு.
கணிசமான வாக்குகளைப் பெற்றும்  தோல்வியைத் தழுவியது தி.முக.
. தோல்வி புகட்டிய பாடத்தால் “விகிதாச்சராப் பிரதிநிதித்துவத் தேர்தலை முறை “ பற்றிப் பேச ஆரம்பித்தார், கலைஞர்.
அதுவும் சரிதான். தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவந்தால் காட்சிகள் மாறும் அரசியல் கோமாளித்தனங்கள் குறையும்.
”எதிருக்கு எதிரி நண்பன்” என்ற உலக மகா தத்துவத்தில்,,
”அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா” என்ற கோட்பாட்டில்,
கூட்டணிகள் அமைத்து 25% முதல் 35% வரை கூட வாக்குகள் பெறாதோர் ஆட்சியமைக்கும் அவலத்தை மாற்றி அமைக்க வேண்டாமா?
தன்வழி தனிவழி என்று பேசும் ரஜினி
தேர்தல்  முறையில் மாற்றங்களைக் கொண்டு வந்தால்,
கொண்டுவர  வர முயற்சித்தால்
வரலாற்றில் தனி இடம் பெறுவார் என்பது திண்ணம்..
எத்தனை ஆண்டுக்காலம்தான் தொடர்ந்து “மக்கள்” ஏமாறுவது ? “மக்களை” ஏமாற்றுவது ?
மூதறிஞர் இராஜாஜிக்கு காங்கிரஸ்மீது ஏற்பட்ட  கோபமும் வெறுப்பும் ,
தி.முக. ஆட்சியில் அமரக் காரணம்,ஆனது.
அந்தத் தவற்றினை  பா.ஜ.க செய்திட வேண்டாம்.
ரஜினியை அரசியலுக்கு இழுக்கவும் வேண்டாம்.
சினிமாமோக அரசியலும் வேண்டாம்.
இதுவே நாட்டிற்கும் நல்லது. வீட்டிற்கும் நல்லது
என்று தணியும் இந்த சினிமா மோகம்?.  

No comments:

Post a Comment