Thursday 28 August 2014

அன்றாடம் ஒரு பார்வை :'கேள்வி கேட்பது தவறா?'

அன்றாடம் ஒரு பார்வை 
கவிதாயினி ஜி.ஜே.தமிழ்ச்செல்வி 
மாடி வீட்டு மதில் சுவர் மேல் குரங்கொன்று அமர்ந்திருந்தது. பக்கத்து வீட்டுக்  கூரையில் இருந்து அந்தக்  குரங்கை பார்த்துக்கொண்டிருந்தது அந்த ஆரஞ்சு நிறப்  பூனை. அதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்  கூரை வீட்டு வாசலில் நிற்கிற ஒரு குழந்தை

"போய் டிரசைக்  கழட்டிட்டு வாடி குளிக்க! "என்று அழைத்தபடி அம்மா

"நான் மூஞ்சி தான் கழுவுவேன்"

"சரி போய் கழட்டிட்டு வாடி!"

"மூஞ்சி கழுவ எதுக்கு டிரஸ் கழட்டணும்?"

அம்மாவிற்கு சுர்ரென்று கோபம் உச்சந்தலையில் ஏற "எதுத்துத்து பேசுவியா பேசுவியா?"ன்னு நாலு தப்பு முதுகில்
                                                                   

'கேள்வி கேட்பது தவறா?'

எல்லா அறிவியல் வளர்ச்சியும் சமூகப் புரட்சிகளும் கேள்விகள் கேட்டதால் தான் பிறந்திருக்கின்றன. அது அந்தத் தாய்க்குத் தெரியாது. 

முக்கியமாகக் குழந்தைகள் கற்கத் துவங்கும் போது கேள்விகள் கேட்பார்கள். அதற்கு சரியான பதிலை நாம் கூறவேண்டும். அவர்கள் உலகை நம் வழியாகத்தான் அறிகிறார்கள்.அவர்களுக்கு முதலில் அறிமுகப்படுத்த வேண்டிய உலகம் நம்முள் இருந்து தான் துவங்குகிறது 

அம்மா பதில் சொல்லியிருக்கலாம். 'டிரஸ் ஈரமாயிடும்'ன்னு

அவள் சொல்லத் தவறிய அந்தப் பதிலும், தொடர்ந்து குழந்தையின் முதுகில் விழுந்த அறைகளும் அதன் மன மூலையில் இருக்கும் வெளிச்சத்தைத் துடைத்துவிடக்கூடாதே என்று ஏனோ என் மனதில் ஓர் ஆதங்கம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
[கவிதாயினி ஜி.ஜே.தமிழ்ச்செல்வி அவர்கள் தமது இடைவெளியற்ற பணிகளுக்கிடையில் நம் இணையவெளி இதழுக்கு அன்றாடம் ஒரு பார்வை வழங்க ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு நமது நன்றி [ஆசிரியர்]

1 comment:

  1. பணிச்சுமையும்,மனச்சோர்வும் இருக்கும் ஒரு பெண்,தன் இயலாமையை அந்த குழந்தையிடம் காட்டிவிட்டாள்.அந்த குழந்தையின் மனோநிலை பரிதாபத்திற்கு உரியதே.அதே சமயம், ஒரு குழந்தையை வளர்க்கும் தாய்க்கு நல்ல சூழ்நிலையும் மன அமைதியும் மிக அவசியம்.அதை உருவாக்கித்தருவது குடும்பத் தலைவரின் கடமை.

    ReplyDelete