Saturday 9 August 2014

ஒரு தூறலிலே சிறு சாரல்

                                          ஒரு தூறலிலே சிறு சாரல் 
                                                
பாசச்சுடர் வளவ துரையன் 


மழை


இந்த மழையைப் புரிந்துகொள்ள
நிறைய விஷயங்கள் இருக்கின்றன

வாழையிலையின் நடுப்பகுதியை
வாய்க்காலாகக் கொண்டுவரும்
நீர் அழகுதான்.

எங்கேனும்
தெருவோர இட்லி கடைக்காரி
கஷ்டப்படக் கூடும்.

நிசப்தங்கள் எல்லாம் கிழிபட்டு
நீரொலியின் ஆட்சிக்கு
வழிவிடுகின்றன.

அழகான பெண்களின்
ஆடலாக நீர்க்கோடுகள் 
அசைந்து ஆடுகின்றன.

கூரைகளின் கண்களை
அந்த மழை அரூபமாகத்தான்
ஊடுருவிப் பார்க்கிறது.

இந்த மழையைப் புரிந்துகொள்ள
இன்னும் நிறைய இருக்கிறது.

                                        பார்வை

முடமான குழந்தை
பார்த்திருப்பது போல
போகின்ற எல்லாவற்றையும்
கண்டுகொண்டிருக்கிறது.

வழியில் செல்வோரின்
ஏளனப் பார்வையும்
பாரா முகமும் விசாரிப்புகளும்
துளைத்துக் காயப்படுத்துகின்றன.

வாழ்க்கை என்பது ஓடுவதுதான்

அமர்வதோ கிடப்பதோ
இருப்பதை இல்லாததாக்கும்
என்ற நீதியின் குரலை
மௌனமாய் ஒலிக்கிறது
பழுதாகி நிற்கின்ற
அந்தப் பேருந்து

வளவ துரையன் எழுதி வெளிட்ட ஒரு சிறு தூறல் நூலிலிருந்து 
வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள் 
-----------------------------------------------------------------------------------------------------------------------
மறவாது பின்னூட்டமிடுங்கள்.
உங்களுக்கு அதனால் ஆகும் செலவு;கீபோர்டில் சில பட்டங்களை அழுத்தும் சிறிய உழைப்பு;
படைப்பாளிக்கு; அதுவே உயிர்மூச்சு.
மனித சமூகத்திற்கு: எதிர்காலத்தை உந்தி உருவாக்கும் ஊக்குவிசை  சிறுவிசை 

மலையாளி பிளாக்கர்கள் அதை நன்கு உணர்ந்து ஒவ்வொரு பதிவிற்கும் பதில் வினையாகப் பின்னூட்டம் இடுகிறார்க.

No comments:

Post a Comment