Saturday 23 August 2014

கிழட்டுக்காளைகளும் பசுமைப் புல் வெளியும்

   கிழட்டுக்காளைகளும் பசுமைப் புல் வெளியும்  



ஒரு பெண்ணைத் திருமண வரம்பிற்கு அப்பாற்பட்டு வைப்பாட்டியாக  வைத்திருப்பது எல்லா நாடுகளிலும் சகஜம். அதற்கு பொதுவுடைமை நாடும் கண்டிப்பான அரசும் கட்டுப்பாடுகளும் உள்ள சீனாவும் விதிவிலக்கல்ல.அது தான் மிகுந்த வேதனை தரும் விஷயம்

பண்டைய சீனாவில் பெண் ஒரு போகப்பொருள்;அடிமை தான் ஏறக்குறைய!எவ்வளவோ மாற்றங்களும் பெண்ணுரிமைப்புரட்சிகளும் ஏற்பட்டும் பொதுவுடமைச் சீனாவிலும் பெண்ணின் அந்தஸ்து பெரிதாய் மாறிவிடவில்லை.

வசதியும் அதிகாரத்திமிரும் படைத்த சீன ஆண்கள் 'சனிக்கிழமை இரவு சொந்த மனைவிக்குவெள்ளிக்கிழமை இரவுகள் சிநேகிதிகளுக்கு என்று  பழமொழியே உண்டாகும் விதத்தில் வேறு பெண்களிடம் உறவு வைத்திருக்கிறார்கள்

சிசுவானிலிருந்து வந்த க்ச்யாக்சொக், லிங்க்ளிங் என்ற இரு பெண்களும் இதை வெளிப்படையாக ஒத்துக்கொள்கிறார்கள்

க்ச்யாக்சொக் சொல்கிறாள்."உண்மையிலேயே நீ ரொம்ப அழகா இருக்கிற மாதிரி மேக்கப் பண்ணிக்கணும் ,பெரிய க்ளப் புகளுக்கு பெரிய வயசான மனுஷங்க வருவாங்க! அவங்களைப் பார்த்து "ஓ, நீங்க எவ்வளவு பெரிய புத்திசாலி! ஓ, எவ்வளவு முக்கியமான உத்த்யோகம் பாக்கிறீங்க ! 55 வயசா உங்களுக்கு நம்பவே முடியலியே ? எவ்வளவோ  ஸ்ட்ராங்கா இருக்கீங்க! " அப்படீன்னு கண்ணிமைகளைப் படபடக்க வச்சிட்டு உதடுகளைக் குவிச்சு காட்டிட்டு ஒரு போலி ஆச்சரியம் காட்டணும் ! அவங்களுக்கு இந்த முகஸ்துதியும் கூல் புகழ்ச்சியும் லுக்கும் பிடிச்சிப்போயிடும் "

உடனே லிங்க்ளிங் தொடர்ந்தாள்."நான் அப்போ சிசுவான்லே நெய்ஜியாங் இருக்கு இல்லே அங்கே  ஒரு ஆபீசரோடே இருந்தேன். அங்கே ஒரு இன்ஸ்பெகஷன். அதுக்காக அங்கே வந்திருந்த ஒரு ஆபீசர் என்னை உண்மையிலேயே விரும்பினான்.என்னை வச்சுட்டு இருந்த ஆள் கிட்டே 'இவளை எனக்குக் கொஞ்சம் கடன் கொடு ; நான் இருக்கிறவரைக்கும்" என்று கேட்டான். நான்  அந்த ஆள் நெய்ஜியாங்லே இருக்கிறவரைக்கும் அவன்கிட்டே படுத்துக்கிட்டிருந்தேன். அப்புறம் அவன் என்னை பெய்ஜிங் கூட்டி வந்தான். அங்க வந்ததும் எங்க ரெண்டுபேருக்கும் ஒத்து வரலே! நான் வேற ஆளைத் தேடிக்கிட்டேன்"    

க்ச்யாக்சொக் தொடர்ந்தாள்."நல்ல வேலை செஞ்சே! இங்கே நீ ஒரு ஆபீசரா இருந்தா உனக்கு ஒரு வைப்பாட்டி இருக்கணும்.அல்லது குறைந்தபட்சம் ஒரு கேர்ள் ப்ரெண்டாவது இருக்கணும். இல்லேன்னா நீ ஒரு சுத்தமான ஆம்பிளை இல்லே.அதோ போறானே அவன் தான் என் ஆள்" என்றாள் 

பெரும்பாலான வைப்பாட்டிகள் கிராமத்துப் பெண்கள். வேறு செக்ஸ் பணிகளுக்காக இங்கே வந்தவர்கள்; கரோகே பார்கள், மசாஜ் தொழில், நைட் கிளப்  இப்படி! சீனத்து ஆண்கள் ஒரு நெருக்க மாயையை நேசிப்பவர்கள், அவங்களுக்கு பாலுணர்வு இச்சைத் தீர்ப்போடு இந்த உணர்வுப் பாசமும் வேண்டும்.அவங்க 20 வயசிலே எந்த ஆசையோட இருந்தாங்களோ அந்தமாதிரி கேர்ள் ப்ரெண்டா நீ நடந்துக்கணும்னு விரும்புறாங்க! உனக்கு அவன் பணம் கொடுக்கலேன்னாக் கூட நீ அவனோட இருப்பேன்னு நம்ப விரும்பறான்

'அவன் வேற ஒரு பெண்ணைப் பார்த்தான்னா நீ பொறாமைப்பட்டு முகத்தைத் தூக்கி வச்சிட்டா  அவன் மன்னிப்பு கேட்டுக்கற வரைக்கும் அவனுக்கு ஒரு திருப்தி.அப்பதான் நீ அவன் மீது உண்மையான காதலோட  கவலைப்படறதா நெனைப்பான் !

ஆதாரம் : சைனீஸ் வீக்லி 


No comments:

Post a Comment