Saturday 30 August 2014

யாரும் யாரையும் நம்பாமல் வாழ முடியுமா?


                                                               


கவிதாயினி ஜி.ஜே. தமிழ்ச்செல்வி 
அன்றாடம் ஒரு பார்வை 

யாரும் யாரையும் நம்பாமல் வாழ முடியுமா? 


பிள்ளைகளுக்கு வேண்டியதெல்லாம் வேடிக்கை, விளையாட்டு. 

பாசம் நேசம் என்பதெல்லாம்  பெற்றோருக்கு. 

அதைக் குழந்தைகள் வேடிக்கையாகத் தான் பார்க்கின்றனர். துள்ளி விளையாடும் இளங்கன்று களுக்கு மகிழ்ச்சி, களிப்பு, அதை ஒட்டிய சின்னஞ்சிறு சண்டை சச்சரவுகள்.  அவை போதும். வேறென்ன வேண்டும்?
எல்லாம் எதுவரை?நலமாய் இருக்கும் வரை 

அப்போது அவர்களுக்குப்பெற்றோர் தேவை இல்லை. 

உடல் நலத்தில் சற்று குறைவு ஏற்பட்டால்  குறைவு அல்லது வேறு அல்லல் எனும் போது அவர்களுக்குப் பெற்றோர் வேண்டும். தாயின் கதகதப்பான அணைப்பு வேண்டும் அப்போது தாயிடமோ தந்தையிடமோ  வந்து ஒட்டிக்கொள்ள  அவர்கள் மனம் ஏங்குகிறது.

 இது என்பது மனித இயல்பு போலும்! 

இந்த சிந்தனை வந்ததும் தாயிடம் ஒட்டிக்கொள்ளும் குரங்குக்குட்டிகள். பூனைக்குட்டிகள் என்று மனக்கண்ணில் நான் கண்ட உயிர்க்குலத்தின் காட்சிகள் விரிந்தன. 

உயிர்க்குலம் முழுவதும் பெற்றதை நாடுவது அதற்கு பிணி வந்த போதும், பிரச்சனை வரும்போதும் தான் 

என் எதிர்வீட்டில் அன்று இரவு முழுவதும் விளக்கெரிந்தது ,அந்த பெண்ணும் அவள் தாயாரை விட்டு விலகவே இல்லை. மடியில் படுத்துக்கொள்வதும்,   விட்டு விலகிப்போகாதே  என்று விழித்துப் பார்ப்பதுமாகவே இருந்தாள்.

கடுமையான காய்ச்சல், மாத்திரை மருந்து என்று நவீன வைத்தியங்களை பார்த்துக்கொண்டிருக்கும் போதே அந்த பெண்ணின் பாட்டி வந்தாள்.  63 வயது 
                       
  
"கண்டவங்க வீட்டுக்கு போறது, அவங்க கொண்டு வர்ற சாப்ப ட்ட சாப்பிறதும் தான் காரண,. யாராச்சும் மருந்து வச்சுக் கொடுத்தி ருப்பாங்க!இந்த காலத்துல யார நம்புவதற்கு இருக்கு! முதல்ல  எவனாச்சும் மருந்து எடுக்கறவனா பார்த்து மருந்து எடுக்கணும்"  என்று புலம்பத்தொடங்கி னாள் .

மருந்து வைப்பது, பில்லி சூனியம் செய்வது, ஏவல் விடுவது,குட்டிச்சாத்தான் வசியம் இப்படி எத்தனையோ அவநம்பிக்கையின் பின்னணியில் தோன்றும் நம்பிக்கைகள் நிலவும் நாடு இது 

கொசுறாக பாட்டியிடமிருந்து " யாரையும் நம்பக்  கூடாது!" என்று அறிவுறுத்தல் .

அந்தச் சொல் என் மண்டையில் அறைந்தது. நம்பிக்கை வேரோடு கிள்ளி அகழ்ந்து எடுத்துப் பிடுங்கி எரியும் நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன, அதற்காக  இந்த உலகத்தில் யாரும் யாரையும் நம்பாமல் வாழ முடியுமா?  அங்கும் இங்குமாக நடக்கும் அசம்பாவிதங்களினால் நிகழ்ந்துக்கொண்டிருக்கும் அநேக நல்ல நிகழ்வுகள் கண்ணில் படாமல் போகிறது. புகை மூட்டத்தின் காரணமாக பூமி சற்று  கண்ணுக்குத் தெரியாமல் போகலாம். அதற்காக இல்லாமலே போய்விடுவதில்லை.

இயல்பாகவே மனிதனின் கவனம் எதிர்மறையில் குவிகிறது. எதிர்மறையில் ஒரு நிச்சயத் தன்மையை மனிதன் உணர்வதும் ஒரு காரணமாக இருக்கலாம். உடன்பாட்டில் அதை ஏன் காண முடியவில்லை? ஏன்? 

தொட்டதெற்கெல்லாம் சந்தேகம் என்று வந்துவிட்டால் மகிழ்ச்சிக்கு வழியே இல்லை, வாழ்க்கை  துக்கப்பட்டுக்கொண்டே ஒப்பாரி வைத்துக்கொண்டே கழிப்பதர்காகத் தான் என்று முடிவு கட்டிவிட்டு இந்திய சமுதாயம் அழுது அழுது ஒரு மூலையில் புழுங்குகிறது. நமது டி.வி. சீரியல்கள் அந்தத் திருப்பணிக்கு தினந்தோறும் உண்டி குலுக்குகின்றன. அழுது கொண்டே இருந்தால் வாழ்வு  எப்படி வாழ்வில் . குழந்தைகளுக்கு உபதேசம் செய்யும் போது நம்பவேண்டியவர்களை நம்ப வேண்டும் என்றே கற்றுத் தர வேண்டும். நம் குழந்தைகள் விழிப்புணர்வு உடையவர்களாகவும் கவனித்து காரியம் ஆற்றுபவர்களாகவும் இருக்க வேண்டும். அது விடுத்து தொட்டதற்கெல்லாம் சந்தேகப்  படுகிறவர்களாய் உருவாகக்  கூடாது.

நல்ல வேளை ! உடல் நலம் பெற்றதும் "பாட்டி ஒரு லூசு" என்று கைகொட்டிச் சிரித்தாள். என்னாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை 

No comments:

Post a Comment