Saturday 5 July 2014

தூங்கிக் கொண்டிருந்த தமிழ் ஆர்வம்

ISROவில் வேலை
                                                             
ISROவில் வேலை கிடைத்து எட்டு ஆண்டுகள் பணி புரிந்தேன். இந்திய ஜனாதிபதியாக இருந்த மதிப்பிற்கு உரிய அப்துல் கலாம் அவர்கள், அப்பொழுது SLV திட்டத்து தலைமை பொறியியல் அலுவலராகப் எளிய உடை அணிந்து செருப்புக் காலுடன் பணி ஆற்றிய போது , சில சமயம் அவரிடம் தமிழிலேயே பேசி இருக்கிறேன்.  
யூனிவர்சிட்டி ஆப் கெண்ட்டாக்கி

மேற்படிப்புக்காக அமேரிக்கா வந்து, லெக்சிங்டனில் உள்ள யூனிவர்சிட்டி ஆப் கெண்ட்டாக்கியில் (University of Kentucky) பொறியியலில் (Mechanical Engineering) M.S. பட்டம் பெற்று, இன்டெல் நிறுவனத்திலும், பின்னர் அரிசோனா வந்து மோட்டோரோலா நிறுவனத்திலும் பணி புரிந்தேன்.  
சங்கர ராமசாமி 
சங்கர ராமசாமி: அங்கே மீண்டும் எழுதத்தோன்றியதா?
அரிசோனா மகாதேவன் : ஆம்!தூங்கிக் கொண்டிருந்த தமிழ் மொழி ஆர்வம், விழித்துக்கொண்டு என்னை உந்தவே, 1991ல் பீனிக்ஸ் மாநகரில் எட்டு குடும்பங்களும், ஒரு மாணவரும் சேர்ந்து “அரிசோனா தமிழ் சங்கத்”தை நிறுவினோம்.  நாடகம், பாடல்கள், சிறுவர் நிகழ்ச்சிகள் என்று புலம் பெயர்ந்த தமிழர்கள் ஒன்று சேர்ந்து தமிழ் வளர்க்க, தமிழ் மொழியை மறக்காமல் இருக்க, அமெரிக்காவில் பிறந்து வளரும் தமிழ்ச் சிறார்கள் தமிழ் தேன் ஒலியைக் கேட்கவும், தமிழ் கற்கவும் உதவியது, உதவி வருகிறது, அத்தமிழ்ச் சங்கம்.

“பாலைவன ஓலை” என்ற இதழை நான்கு ஆண்டுகள் கணினியில் வடிவமைத்து, கிட்டத்தட்ட எண்பது காப்பிகள் அச்சடித்து தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்கு இலவசமாக வழங்கினோம். சரியான பங்கேற்றல் இல்லாமையாலும், தமிழ்வாணன் போல தானே எழுதி வாசகர்களைக் கவரும் திறமையோ, மனத்திண்மையோ எனக்கு இல்லாததாலும், நல்ல வரவேற்பு இருந்தும், பாலைவன ஓலையைத் தொடர்ந்து நடத்த இயலாது போய்விட்டது. சில ஆண்டுகள் சென்று, பாலைவன ஓலையை மீண்டும் உயிர்ப்பித்து வலையத்தில் மூன்று ஆண்டுகள் நடத்தியும், பங்கேற்பு இல்லாமையால் மீண்டும் கைவிட நேர்ந்தது.
இளமையில் 
                                                                 
ஆன்மிகம் என்னை இழுக்கவே, அரிசோனா மகாகணபதி ஆலய (Maha Ganapati Temple of Arizona) அமைப்புப் பணியில் என்னை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறேன். வேலையிலிருந்து ஓய்வு பெற்றதும், தமிழார்வம் என்னைத் தொடர்ந்தது. “தமிழ் இனி மெல்ல...” என்ற நாவல் உருவாகியது.  தமிழ் ஹிந்து, திண்ணை, இணையவெளி தமிழ் ஸ்பீக் போன்ற வலைப்பதிவுகள் என் கதைகளையும், கட்டுரைகளையும் வெளியிட்டு வருகின்றன.

தமிழுக்கும், எனக்கும் உள்ள உறவு வலுவடைந்துகொண்டு வருகிறது.  என் சிறுவயதுக் கனவை, தமிழ் அன்னை நிறைவேற்றிக்கொண்டு வருகிறாள்.
வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர்!
சங்கர ராமசாமி: நன்றி மகாதேவன் அவர்களே!
அரிசோனா மகாதேவன் :நன்றி

1 comment:

  1. விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பார்கள். சின்னஞ்சிறுவயதிலே இவரது மனதிலே விதைக்கப்பட்ட தமிழ்விதை இன்று ஆலமரமாய் கிளைபரப்பி வளர்ந்திருக்கிறது. பாட்டியுடனான உறவுமுறை, வளர்ப்புமுறை, தன்னைத்தானே ஊக்கப்படுத்திக்கொள்ளல்,ஆர்வம், தோல்வி கண்டு துவளாமை, தொடர்ந்து முயற்சித்தல், தோல்வி குறித்து கவலைப்படாமை, தொடர்ந்த தமிழார்வம்,விடாமுயற்சி போன்றவைதான் இவரது வெற்றிக்குக் காரணங்கள் எனக் கருதுகிறேன்.நேர்மையான பதிவு.


    ReplyDelete