Thursday 10 July 2014

வைரமணிக்கதைகள்

வைரமணிக்கதைகள்

 டாக்டர்.சு. பாலசுப்பிரமணியன் (எழுத்தாளர் பாரதிபாலன்)தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்,பேராசிரியர் மற்றும் தலைவர் தமிழியல்  மற்றும் பண்பாட்டுப் புலம்,சைதாப்பேட்டை சென்னை -15.-
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வைரம் உருவாக பல்லாயிரம் ஆண்டுகள் பிடிக்கின்றன. தாம் உருவாகி@றாம் உருவாகி@றாம் என்று தம்பட்டமடித்துக் கொள்ளாமல் பாறைக்கற்களிடை@ய பாறையா# அடையாளம் @காராது அமைதிக்கொலுவில் இருக்கின்றன.
கலைஞனும் காத்திருக்கிறான். கவனிக்கப்படுவதைப் பற்றிக் கவலயே  படாமல் கடமையாற்றியபடியே  காத்திருக்கிறான். வெளிச்ச த்திற்கு வருவதற்கு குழு,கூட்டம்,பின்னணி எனப் பற்பல உபரித்தேவைகள் வேண்டியிருக்கிற ஒரு காலகட்டத்தில் அவை எதுவுமே  இல்லாமல் அல்லது கிட்டாமல் போன மனவெறுமை கலைஞனை ஓய வைத்துவிடும். ஆனால் வையவன் அப்படி சோர்ந்து போ னவர் அல்ல
நான் அறிந்தவரை  58 ஆண்டுகளாக எந்தத் தனிச்சிறப்பான பெருமை@யா அருமை@யா @காராது அதனால் மனமுடையாது இடைவிடாது இன்னும் பணியாற்றி வருபவர் எழுத்தாளர் திரு. வையவன் அவர்கள். என் கல்லூரிப் பருவம் காலம் தொட்டு நான் எழுத ஆரம்பித்த காலம் தொடங்கி நான் அவரது கதைகளை வாசித்து வருபவன். படா@டாப@மா வாŒகரை மயக்கும் முயற்சிக@ளா இல்லாமல் மானுட ஆழ்மனத்தின் காரிருளிடை@ய உலவி அங்கெல்லாம் ஒளி சிப்பிக்குள் முத்தாக உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டறிந்து அதனை எழுத்தி@ல வெட்டியெடுத்து மெரு@கற்றிக் கதைகளாகவும் கவிதைகளாகவும் கருத்துப் பொறிகளாகவும் ஒளிவீŒச் öŒ#துவருபவர் திரு. வையவன்.பத்திரிகை உலகிலும் வாŒகர் உலகிலும் வையவன் என்ற பெயர் அரை நூற்றாண்டு காலமாக எழுப்பி வரும் @மன்மையான உணர்வுகள் பல தரப்பட்டவை.
சொல்லாமற் சொல்லும் கலையில் அவருக்கிருக்கிற செய்நே ர்த்தி,எளிய வாழ்வினை எந்த அலங்காரமோ காட்டாது மிக எளிய சொற்களில் ளில் தீட்டிக்காட்டும் தனிப்பண்பு  கொண்ட நடை அவரது சொத்து 
--------------------------------------------------------------------------------


  டாக்டர் சு. வேங்கடராமன்பேராசிரியர் - தலைவர் - ஒருங்கிணைப்பாளர் தமிழியற் புலம் மதுரை காமராசர் பல்கலைக் கழகம் கூறுகிறார்
--------------------------------------------------------------------------------
 அழுத்தமான சமூக உணர்வும் பரந்த மனித நேயமும்கொண்டு இந்தியப் பெண்ணின் பார்வையிலிருந்து பார்க்கும் அருமையான சிறுகதைகள். கார்கில்இராணுவத்தினருக்கு மனிதநேயமும் அன்பும் உண்டு என்பதைக் காட்டும் கதை.கூரை தேடிய கோகிலம்கதை சொல்லப்படும் முறையால் சிறப்பாக உள்ளது. கதையைக் கூர்மையாகப் படிக்கும் வாசகன் ஒருவன், முடிவு இதுதான் எனச் சுலபமாக ஊகித்து விடுவான் என்றாலும் கதை அழகாகக் கூறப்பட்டுள்ளது. கொடியேற்றம்சிறுகதை மிகவும் அரிய கருப்பொருளைக் கொண்ட கதை. நாட்டுப்பற்று, சுதந்திரம் என்று அரிதாக எழுதப்படும் கருப்பொருளை வைத்து எழுதப்பட்டுள்ள சிறுகதை. இளைஞன் சிவானந்தத்தின் பொறுப்பும் நாட்டுப்பற்றும் பெரியோரை மதிக்கும் திறனும் கண்டு நாட்டின் போக்கில் நம்பிக்கை வருவதாகக் கதையை முடித்திருப்பது அற்புதமான - ஏற்ற - முடிவு. இளைஞர் அனைவர்க்கும் எடுத்துச் சொல்லப்பட வேண்டிய கதை.
பதச்சோறு காட்டுவது போல மாதிரிக்கு ஒரு சில சிறுகதைகளை மட்டுமே காட்டியுள்ளேன். வையவன் இதுபோன்ற நல்ல கதைகள் பலவற்றை அடிக்கடி படைக்க வேண்டும். நல்ல சிறுகதைத் தொகுப்பு தமிழுக்குக் கிடைத்துள்ளது மனநிறைவையும் பெருமையையும் தருகிறது.
--------------------------------------------------------------------------------


 டாக்டர் அ.பிச்சை,தமிழ்ப்பேராசிரியர்,கிராமியப் பல்கலைக் கழகம்,காந்தி-கிராமம்  கூறுகிறார்   
-----------------------------------------------------------------------
எந்த தன்னலங் காரமோ, நான் தனி ...நான் தனி என்று மார்தட்டிக் காட்டிக்கொள்ளும் செயற்கை முயற்சியோ சொற் சிலம்பமோ  அற்ற  மொழிநடை வையவனின் மிகப் பெரும் சிறப்பாகும்.
நகர்ப்புறங்களின் அனுபவச்சாயல்கள் சில இவர் கதைகளில் படிந்திருந்தாலும் வையவன் அவர்களின் கலங்களும் சார்புனர்வும் கிராமத்து மண்ணின் மீதே வேரும் விழுதும் விட்டு நிலை பெற்றுள்ளவை 
வையவனின் நடை அடித்துப்பேசி ஆரவாரம் செய்கிற நடையல்ல. பூமியின் வேர்க்கருக்களிடையே ஓடி ஈரப்பிரவாகமாகக் கசிந்து பசுமை பூத்து மலரச்செய்யும் நடை. எளிமை என்று கூறுவது அதைக் கொச்சைப்படுத்துவதாகி விடும் .
அக்கினிக்குஞ்சு எளியது தான். ஒரு சிறு மழைத்துளி கூட எளியது தான். ஆனால் அவற்றின் விளைவு? 
-து-தான். ஒரு சிறு மழைத்-துளி எளி-யது தான். ஆனால் அவற்-றின் விளைவு?




























வெளியீடு: தாரிணி பதிப்பகம். ,4ஏ, ரம்யா பிளாட்ஸ், 32/79, காந்திநகர் 4வது பிரதான சாலை, அடையார், சென்னை-600020[போன.9940120341]

ஈ-புக்காகுவும் கிடைக்கும் 

No comments:

Post a Comment