Monday 1 October 2012

கீர்த்தனம்

ஸ்ரீ ராம் 
கீர்த்தனம் 

பக்தி  மார்க்கத்தில்  பல சாதனைகள் உண்டு  கீர்த்தனம் அல்லது  பஜனை என்பது அவற்றில் ஒரு வகை. 
பரமாத்மாவினுடைய புகழை பல பக்தர்கள்  ஒன்றிய ஈடுபாட்டோடு ஒருங்கிசைத்துப் பாடுவதால் பக்தர்கள் உள்ளம் தம்மையறியாது ஒன்றுபட்டு பக்திப்பெருக்கில் ஆழ்ந்து இறைவனோடு ஒன்றுகிறது . வாத்தியங்கள், தாளக்கருவிகள் மட்டுமன்றி பக்தர்களின் குரல்களும் அவற்றின் பாவமும்  ஒரு தனி அங்கம் வகிக்கின்றன.
அவ்வாறு அவை ஒன்றிக் கூட வாக்கியங்கள் இன்றியமையாத் துணை புரிகின்றன 
நான் (யோகேஷ் மித்ரா) இயற்றிய சில பஜனாவளி கீர்த்தனங்களை வழங்க பரம்பொருள் கிருபையும் ஆசிகளையும் வேண்டும் இந்த புனித கைங்கர்யத்தைத் தொடங்குகிறேன் 
ஓம் நமோ விக்நேஸ்வராய  நமோநமஹ் !


எடுத்த கைங்கர்யம் ஒளிவீசித்துலங்க பரம க்ருபாகரமூர்த்தியான விக்னேஸ்வர பிரபுவை த்யானம் செய்வோம் 


ஞானாந்தமயம் தேவம் 
நிர்மல ஸ்படிகாக்ருதம் 
ஆதாரம் சர்வவித்யானாம் 
வந்தே ஹம் ஸ்ரீஸ்ரீ ஹயக்ரீவமுபாஸ்பதே 


hayagreeva hayagreeva hayagreeveti vaadinam |
naram munchanti paapaani daridramiva yoshitah ||1||
hayagreeva hayagreeva hayagreeveti yo vadet.
tasya nihsarate vaanee jahnu kanyaapravaahavat ||2||
hayagreeva hayagreeva hayagreeveti yo dhvanih |
vishobhate cha vaikunTa kavaatodghaatanakshamaH ||3||
shloka trayamidam punyam hayagreevapadaankitam |
vaadiraaja yatiproktam pathataam sampadaam padam.||4||
Itee Shri Madvadiraja Poojya Charana Virachitha
Hayagreeva Sampada Stotram Sampurnam

சர்வ வித்யைகளுக்கும் ஆதாரமான ஸ்ரீ ஹயக்ரீவ மஹாப்ரபுவை நமஸ்கரித்து  அவரது கிருபா கடாட்சத்தை வேண்டிப் பிரார்த்திக்கிறோம் 
சகலகலாவல்லியும்  வாக்தேவியுமான அன்னை சரஸ்வதி தேவியை நமஸ்கரிக்கிறோம்
தாயே கலைவாணி உனது  பாதாரவிந்தங்களில் சாஷ்டாங்க நமஸ்காரம் !நமஸ்காரம் ! நான் மேற்கொண்டிருக்கும் திருப்பணியை சிறப்புற நடத்தித் தரவேண்டும் தாயே நமஸ்காரம் !நமஸ்காரம் !
யோகேஷ் மித்ரா 





No comments:

Post a Comment