Sunday 7 October 2012

ஸாங்கிய யோகம். 3

அவ்யக்தோ அயமசிந்த்யோ அயமவிகார்யோ அயமுச்யதே।தஸ்மாதேவம் விதித்வைநம் நாநுஷோசிதுமர்ஹஸி॥ 2.25॥
ஆத்மா கண்ணுக்கெட்டாதது, சிந்தனைக்கப்பாற்பட்டது, மாற்ற முடியாதது. இதை இவ்வாறு  நன்கறிந்து , உடலுக்காக வருந்தாமலிருப்பாயாக.
அத சைநம் நித்யஜாதம் நித்யம் வா மந்யஸே ம்ருதம்।ததாபி த்வம் மஹாபாஹோ நைவம் ஷோசிதுமர்ஹஸி॥ 2.26 ॥
மேலும், ஆத்மா எப்போதுமே பிறந்து, இறந்து கொண்டிருப்பதாகவே நீ எண்ணினாலும், பெருந்தோள் உடையோன! அதில் கவலைப்படுதற்கு என்ன உள்ளது?
ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர்த்ருவம் ஜந்ம ம்ருதஸ்ய ச।தஸ்மாதபரிஹார்யே அர்தே ந த்வம் ஷோசிதுமர்ஹஸி॥ 2.27 ॥
பிறந்தவன் எவனுக்கும் மரணமும், மரணமடைந்தவனுக்குப் பிறப்பும் நிச்சயமே. தவிர்க்க முடியாத உன் கடமைகளைச் செயலாற்றுவதில் இதற்காகக் கவலைப்படாதே.
அவ்யக்தாதீநி பூதாநி வ்யக்தமத்யாநி பாரத।அவ்யக்தநிதநாந்யேவ தத்ர கா பரிதேவநா॥ 2.28 ॥
படைக்கப்பட்டவை எல்லாமே முதலில் தோன்றாதிருந்து, இடையிலே தோன்றி, இறுதியில் மீண்டும் மறைகின்றன. எனவே, கவலைப்பட என்ன இருக்கிறது?
ஆஷ்சர்யவத்பஷ்யதி கஷ்சிதேநம்ஆஷ்சர்யவத்வததி ததைவ சாந்ய:।ஆஷ்சர்யவச்சைநமந்ய: ஷ்ருணோதிஷ்ருத்வா அப்யேநம் வேத ந சைவ கஷ்சித்॥ 2.29 ॥
சிலர் ஆத்மாவை அதிசயமாகப்  பார்க்கின்றனர், சிலர் ஆத்மாவை அதிசயமானதாக வர்ணிக்கின்றனர், சிலர் அதிசயமாகக் கேட்பவராகவும், மற்றும் சிலர் கேட்ட பின்னும் ஆத்மாவைச் சற்றும் அறியாதவராகவும் இருக்கின்றனர்.
தேஹீ நித்யமவத்யோ அயம் தேஹே ஸர்வஸ்ய பாரத।தஸ்மாத்ஸர்வாணி பூதாநி ந த்வம் ஷோசிதுமர்ஹஸி॥ 2.30 ॥
பாரத! உடலில் உறைபவன் நித்தியன் .ஆதலால் என்றும் அழிக்கப்பட முடியாதவனாக இருக்கிறான். எனவே பிறப்புடைய எந்த ஆத்மாவுக்காகவும் நீ வருந்தவேண்டாம்.
ஸ்வதர்மமபி சாவேக்ஷ்ய ந விகம்பிதுமர்ஹஸி।தர்ம்யாத்தி யுத்தாச்ச்ரேயோ அந்யத்க்ஷத்ரியஸ்ய ந வித்யதே॥ 2.31 ॥
ஒரு க்ஷத்திரியன் என்ற முறையில் உனது சுகர்மமாகிய  கடமையைப் பற்றிக் கருதுவாயேயாயினும், நீதிக்காகப் போர் புரிவதைக் காட்டிலும் வேறு சிறந்த கடமைகள் உனக்கில்லை. எனவே தயங்கத் தேவையில்லை.
யத்ருச்சயா சோபபந்நம் ஸ்வர்கத்வாரமபாவ்ருதம்।ஸுகிந: க்ஷத்ரியா: பார்த லபந்தே யுத்தமீத்ருஷம்॥ 2.32 ॥
பார்த்தா! தானாய் வரும் போர்வாய்ப்புகள் சுவர்க்கலோகத்தின் கதவுகளைத் திறந்து விடுவதால், அவற்றைப் பெறும் மன்னர்கள்  மகிழ்கின்றனர்.
அத சேத்த்வமிமம் தர்ம்யம் ஸம்க்ராமம் ந கரிஷ்யஸி।தத: ஸ்வதர்மம் கீர்திம் ச ஹித்வா பாபமவாப்ஸ்யஸி॥ 2.33 ॥
ஆனால், இந்த அறப்போரினின்று பின்வாங்கினாலோ கடமையினின்றும் தவறியதாலான தீயவிளைவுகளை நிச்சயமாய்ப் பெறுவாய்.அததோடு, போர்வீரனெனும் பெயரை இழந்து பாவத்துக்கு ஆளாவாய் .
அகீர்திம் சாபி பூதாநி கதயிஷ்யந்தி தே அவ்யயாம்।ஸம்பாவிதஸ்ய சாகீர்திர்மரணாததிரிச்யதே॥ 2.34 ॥
மக்கள் உன்னை என்றும் அவதூறு செய்வர். புகழ் எய்திய  ஒருவன் அடையும் அவமானம் மரணத்தைவிட மோசமானதே.
பயாத்ரணாதுபரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹாரதா:।யேஷாம் ச த்வம் பஹுமதோ பூத்வா யாஸ்யஸி லாகவம்॥ 2.35 ॥
உன் பெயரையும், புகழையும் பற்றிப் பெருமதிப்புக் கொண்டுள்ள மகா ரதர்கள் , நீ பயந்துபோய் நீ போரை விட்டு நீங்கியதாக எண்ணி  , உன்னைக் கோழையாய்க் கருதுவர்.
அவாச்யவாதாம்ஷ்ச பஹூந்வதிஷ்யந்தி தவாஹிதா:।நிந்தந்தஸ்தவ ஸாமர்த்யம் ததோ து:கதரம் நு கிம்॥ 2.36 ॥
உனது எதிரிகள் கொடிய வார்த்தைகள்  கூறி உன்னைத் தூற்றுவர். இதைக் காட்டிலும் உனக்குத் துன்பம் தருவது வேறு என்ன இருக்க முடியும்?
பாராயணம் செய்ய 

அவ்யக்தோ அயமசிந்த்யோ அயமவிகார்யோ அயமுச்யதே।தஸ்மாதேவம் விதித்வைநம் நாநுஷோசிதுமர்ஹஸி॥ 2.25 ॥
அத சைநம் நித்யஜாதம் நித்யம் வா மந்யஸே ம்ருதம்।ததாபி த்வம் மஹாபாஹோ நைவம் ஷோசிதுமர்ஹஸி॥ 2.26 ॥

ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர்த்ருவம் ஜந்ம ம்ருதஸ்ய ச।தஸ்மாதபரிஹார்யே அர்தே ந த்வம் ஷோசிதுமர்ஹஸி॥ 2.27 ॥

அவ்யக்தாதீநி பூதாநி வ்யக்தமத்யாநி பாரத।அவ்யக்தநிதநாந்யேவ தத்ர கா பரிதேவநா॥ 2.28 ॥

ஆஷ்சர்யவத்பஷ்யதி கஷ்சிதேநம்ஆஷ்சர்யவத்வததி ததைவ சாந்ய:।ஆஷ்சர்யவச்சைநமந்ய: ஷ்ருணோதிஷ்ருத்வா அப்யேநம் வேத ந சைவ கஷ்சித்॥ 2.29 ॥

தேஹீ நித்யமவத்யோ அயம் தேஹே ஸர்வஸ்ய பாரத।தஸ்மாத்ஸர்வாணி பூதாநி ந த்வம் ஷோசிதுமர்ஹஸி॥ 2.30 ॥

ஸ்வதர்மமபி சாவேக்ஷ்ய ந விகம்பிதுமர்ஹஸி।தர்ம்யாத்தி யுத்தாச்ச்ரேயோ அந்யத்க்ஷத்ரியஸ்ய ந வித்யதே॥ 2.31 ॥

யத்ருச்சயா சோபபந்நம் ஸ்வர்கத்வாரமபாவ்ருதம்।ஸுகிந: க்ஷத்ரியா: பார்த லபந்தே யுத்தமீத்ருஷம்॥ 2.32 ॥

அத சேத்த்வமிமம் தர்ம்யம் ஸம்க்ராமம் ந கரிஷ்யஸி।தத: ஸ்வதர்மம் கீர்திம் ச ஹித்வா பாபமவாப்ஸ்யஸி॥ 2.33 ॥

அகீர்திம் சாபி பூதாநி கதயிஷ்யந்தி தே அவ்யயாம்।ஸம்பாவிதஸ்ய சாகீர்திர்மரணாததிரிச்யதே॥ 2.34 ॥

பயாத்ரணாதுபரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹாரதா:।யேஷாம் ச த்வம் பஹுமதோ பூத்வா யாஸ்யஸி லாகவம்॥ 2.35 ॥

அவாச்யவாதாம்ஷ்ச பஹூந்வதிஷ்யந்தி தவாஹிதா:।நிந்தந்தஸ்தவ ஸாமர்த்யம் ததோ து:கதரம் நு கிம்॥ 2.36 ॥

No comments:

Post a Comment