Tuesday 2 October 2012

நம்பிக்கைநட்சத்திரம் -சதிஷ் கிருஷ்ணன்

நம்பிக்கைநட்சத்திரம் 
 சதிஷ் கிருஷ்ணன்

நேர்காணல் என்ற பெயரில் வெளிவரும் பேட்டிகள் பெரும்பாலும் பிரமுகர்களையே  வட்டமிட்டு வருகின்றன. பல பிரமுகர்களை விட எத்தனையோ மடங்கு ஆற்றலும் அறிவுத்திறனும் அமைதியான அனுபவத்திரளும் கொண்ட பலர் உலகில் ஒரு மூலையில் தான் உண்டு தான் வேலை உண்டு என்று ஒதுங்கி இருக்கிறார்கள். அவர்களைச் சந்தித்து அவர்கள் திறனை உலகத்தோடு பகிர்ந்து கொள்ள நாம் எடுக்கும்  முதன் முயற்சி இது. 
குறிப்பாக இளைய தலைமுறை அற்புதமான திறனும் அறிவாற்றலும் ஆய்வு மனப்போக்கும் கொண்டு ஒளி  வீசுகிறது .அவர்களில் ஒருவரான திஷ் கிருஷ்ணன் .சென்ற ஆண்டு தான் பிளஸ் டூ முடித்து பொறியியல் கல்லூரியில் சேர்ந்துள்ளார் அவர்   நமது இதழின் வடிவமைப்பில் பெரும் பங்காற்றி உள்ளார். அவரைப் பேட்டி கண்ட போது ......


நீங்கள் முதலில் எங்கே கணினி யை பார்த்தீர்கள்?# அப்போது உங்களுக்கு
என்ன வயசு?# அதைப் பார்த்தும் என்ன தோன்றியது?

      நான் முதலில் ஸ்பிக் நகர்(தூத்துக்குடி மாவட்டம்)சூர்யா Computers
என்ற Computer Teaching Class-ல் தான் கணினி ப்  பார்த்தேன்.அதை முதலில்
பார்த்ததும் TV என்று நினைத்து இதில் படம் பார்க்கலாமோ என்று
நினைத்தேன்.அப்போது எனக்கு வயது 12.கோடைவிடுமுறைக்காக மாமா வீட்டிற்கு
சென்றபோது Computer Teaching Class-ல் சேர்த்துவிட்டார்கள்...

#கணினியைக்குடைய வேண்டும் என்று எப்போது தோன்றியது?
            மாமா வீட்டில் ஒரு கணினி வாங்கினார்கள்.அப்போது தான் எனது
அண்ணன் கணிணியில் Song Play பன்றது Game விளையாடுவது பற்றி
சொல்லித்தந்தான்.அப்போது தான் குடைய ஆரம்பித்தேன்..பிறகு நான் 10ம்
வகுப்பு இறுதியில் எனக்கென ஒரு கணினியை எனது சித்தப்பா
வாங்கித்தந்தார்.அதிலிருந்து தான்கணினியைப்பற்றி ஓரளவு தெரிய வந்தது.

#உங்களுக்கு நிறைய கணினி பற்றிய விஷயங்கள் தெரியுமா?
    கணினியில் எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறது.கணினியைப்பற்றி
என்னைப்பொறுத்தவரை எவராலும் முழுமையாக தெரிந்திருக்க முடியாது.எனக்கு
கணினியைப்பற்றி ஏதோ சிறிதளவு தெரியும்.

# நீங்கள் பிறந்த ஊர் எது?#அது எங்கே இருக்கிறது?
நான் பிறந்த ஊர் ஸ்பிக் நகர் .இது தூத்துகுடிமாவட்டத்தில் இருக்கிறது.இது தூத்துகுடிக்கு மிக அருகாமையில் தான்அமைந்திருக்கிறது..ஆனால் நான் வசிப்பது எனது சொந்த ஊரான(அப்பாவுடைய ஊர்)வைராவிகிணறு.இது நெல்லை மாவட்டம் கூடன்குளத்திற்கு மிக அருகில் உள்ளது.

#சொந்த வீட்டில் வசிக்கிறீர்களா?
ஆம் சொந்த வீட்டில் தான் வசிக்கிறேன்.ஆனால் இப்போது கல்லூரிப்
படிப்பிற்காக பெரம்பலூரில் உள்ள பெரியம்மா வீட்டில் தங்கி படிக்கிறேன்

#நீங்கள் ப்ளஸ் டூ வரை படித்த பள்ளி எது?

        நான் 1 மற்றும் 2ம் வகுப்பு எனது ஊரிலேயே படித்தேன்.3 முதல் 5 வரை
 கூடங்குளத்தில் உள்ள புனித அன்னம்மாள் துவக்கப்பள்ளியிலும் 6 முதல்
12ம் வகுப்புவரை புனித அன்னம்மாள் மேல்நிலைப்பள்ளியிலும் படித்தேன்

#உங்கள் மனசில் அழியா இடம் பெற்ற ஆசிரியர் யார்?#அவரிடம் உங்களுக்குப் 
பிடித்தது என்ன?
 எனது மனதில  அழியா இடம்பிடித்த ஆசிரியை எனது பள்ளியின் தமிழ்
ஆசிரியை...அவர் பெயர் ஜாஸ்மின் பிரைட். பெயரில் ஆங்கிலம் இருந்தாலும்
அவர் ஒரு தமிழ் ஆசிரியை..அவரின் தமிழ் மொழி உச்சரிப்பு எனக்கு மிகவும்
பிடிக்கும்..பாடத்தை எளிமையாக நடத்தும் விதமும் பிடிக்கும்.அவர் எனக்கு 9
மற்றும் 10ம் வகுப்புகளில் தமிழ் பாடம் எடுத்தார்.

#பெற்றோர் உள்ளனரா?
ஆம் இருக்கிறார்கள்
#என்ன தொழில் செய்கிறார்கள்?
அப்பா வீட்டிற்கு அருகிலேயே மளிகை கடை வைத்துள்ளார்.அம்மா வீட்டிலேயே
சிறு சிறு துணிகளை தைப்பார்கள்(தையல் தொழில்)
#அவர்கள் செய்யும் தொழிலுக்கு நீங்கள் உதவி செய்தது உண்டா?
உதவியிருக்கிறேன்.ஆனால் பெரும்பாலும் உதவவில்லை..ஏனென்றால் எனக்கு யாரவது வேலை செய்யச்சொல்லிக் கட்டளை இட்டால் பிடிக்காது. எனவே  ஏதாவது வேலை செய்யச் சொன்னால் செய்யமாட்டேன் என்று அடிக்கடி அடம்பிடிப்பேன்

#நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் ?
     நான் படித்து முடித்து Software Engineer ஆக வேண்டும் என்று
விரும்புகிறேன்.மற்றும் HCL Company-ல் வேலை பார்க்க வேண்டும் என்று
எனக்கு ஆசை...

#இந்தியா என் தாய் நாடு என்று அடி மனசில் ஓர் எண்ணம் ஓடுவது உண்டா ? இல்லையா?
   கண்டிப்பாக  இந்தியா என் தாய் நாடு என்ற எண்ணம் இருக்கிறது.அப்படி
இல்லையென்றால் நான் இந்தியனே அல்ல

#நீங்கள் சாதிக்க விரும்புவது என்ன?#உங்கள் மனத்தைக் கவர்ந்த சாதனையாளர்கள் யார்?#அவர்கள் செய்த சாதனை என்ன?

                                                                  திரு.குற்றாலீஸ்வரன்
நான் சாதிக்க விரும்புவது  HCL Company-ல் வேலை பார்க்க வேண்டும் என்பது தான்..ஆனால் எனது மனம் கவர்ந்த சாதனையாளர் திரு.குற்றாலீஸ்வரன்.அவர் தனது 12வது வயதிலேயே ஆறு கடல்வழிகளை ஒரே வருடத்தில் கடந்து சாதனை படைத்தார்
#உங்கள் குடும்பத்தில் உள்ளோர் எத்தனை பேர்?#சகோதர சகோதரிகள்?#என்ன செய்கிறார்கள்?
#எங்கள் குடும்பத்தில் 3 பேர்.1.நான் 2.சகோதரி,3.சகோதரன்
#நீங்கள் என்ன படிக்கிறீர்கள்? எங்கே படிக்கிறீர்கள்?
நான் பெரம்பலூர் Roever Engineering College-ல் Engineering(CSE) 1styear படித்து கொண்டிருக்கிறேன்சகோதரி பெயர் நிஷா..அவள் கூடங்குளம் புனித அன்னம்மாள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கிறாள்.சகோதரர் பெயர் தினேஷ்  அவனும் அதே பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கிறான் .

#இன்று காந்தி ஜெயந்தி. காந்தியைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
       காந்திஜி-யைப்பற்றி ஏராளமாக சொல்லலாம்.அவர் நேர்மையானவர்.பொய்
சொல்லாத உத்தமர்..மக்களிடம் மிகுந்த அன்பு கொண்டவர்..எல்லாவற்றிகும்
மேலாக அவர் மிகவும் எளிமையானவர்..
#நன்றி. சதீஷ். நீங்கள் உங்கள் நண்பர்களையும் உறவினர்களையும் நமது இணையவெளி இதழை வாசிக்கச்சொல்லுங்கள். இயன்றால் பங்கேற்கவும் சொல்லுங்கள்.
மெயிலில் படைப்புகளை அனுப்பலாம் . மற்றும் அஞ்சலிலும் அனுப்பலாம். முகவரி. :-
vaiyavan.mspm@google.com.
Vaiyavan, Editor Innaiyaveli., 1,First Street, Chandrabagh Avanue, Mylapore, Chennai-600004
தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது போன்றே  பேட்டியில் பங்கேற்கும் மற்றும் பிரசுரமாகும் ஒவ்வொரு படைப்பிற்கும்   ஒவ்வொருவருக்கும் ஐக்யா டிரஸ்ட் வழங்கும் புத்தகம் ஒன்று பர்சளிக்கப்படும் . அவசியம் அவர்களது புகைப்படம் அனுப்பிவைக்க வேண்டும் .



1 comment:

  1. தனி மனிதராகப் பல்வேறு சிந்தனைகளைச் செயல்படுத்தியுள்ள நண்பர் வையவன் கண்ட பேட்டியை
    எனது கூகிள் பிளஸ் மூலம் பகிர்ந்துள்ளேன். நன்றி.

    ReplyDelete