Tuesday 9 October 2012

ஸாங்கிய யோகம். 4

ஸாங்கிய யோகம். 4

ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம் ஜித்வா வா போக்ஷ்யஸே மஹீம்।
தஸ்மாதுத்திஷ்ட கௌந்தேய யுத்தாய க்ருதநிஷ்சய:॥ 2.37 ॥
குந்திமகனே! போரில் மாய்ந்து நீ மேலுலகை அடையலாம் அல்லது வெற்றிபெற்று இவ்வுலகை அரசாளலாம். எனவே எழுந்து, உறுதியுடன் போர்புரிவாயாக.
ஸுகது:கே ஸமே க்ருத்வா லாபாலாபௌ ஜயாஜயௌ।
ததோ யுத்தாய யுஜ்யஸ்வ நைவம் பாபமவாப்ஸ்யஸி॥ 2.38 ॥
இன்ப, துன்ப, லாப நஷ்டம், வெற்றி, தோல்வி இவைகளைக் கருதாது போருக்காகப் போர் புரிவாயாக. இவ்வாறு செயலாற்றினால், என்றும் நீ தீய விளைவுகளை அடையமாட்டாய்.
ஏஷா தே அபிஹிதா ஸாங்க்யே புத்திர்யோகே த்விமாம் ஷ்ருணு।
புத்த்யா யுக்தோ யயா பார்த கர்மபந்தம் ப்ரஹாஸ்யஸி॥ 2.39 ॥
ஸாங்க்ய தத்துவத்தின் ஆய்வறிவை உனக்கு இதுகாறும் விளக்கினேன். பலன் விளைவுகளுக்காயன்றி ஒருவன் செயல்படும் யோகத்தைப் பற்றிய அறிவை இப்போது கேள். ப்ருதாவின் மகனே, இவ்வாறான அறிவோடு செயல்பட்டால், செயல்களின் விளைவெனும் விலங்கினின்றும் நீ விடுதலை பெறுவாய்.
நேஹாபிக்ரமநாஷோ அஸ்தி ப்ரத்யவாயோ ந வித்யதே।
ஸ்வல்பமப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத்॥ 2.40 ॥
இம்முயற்சியில் குறைவோ இழப்போ இல்லை. இவ்வழியில் சிறிது முன்னேற்றமும், மிகப் பயங்கரமான பயத்திலிருந்து ஒருவனைக் காக்கும்.
வ்யவஸாயாத்மிகா புத்திரேகேஹ குருநந்தந।
பஹுஷாகா ஹ்யநந்தாஷ்ச புத்தயோ அவ்யவஸாயிநாம்॥ 2.41 ॥
இவ்வழியிலுள்ளோர் உறுதியான நோக்கமுடையோர். அவர்களது இலட்சியம் ஒன்றே. குருக்களின் செல்வனே, உறுதியற்றவரது அறிவோ பல கிளைகளை உடையதாக ஆகின்றது.
யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவதந்த்யவிபஷ்சித:।
வேதவாதரதா: பார்த நாந்யதஸ்தீதி வாதிந:॥ 2.42 ॥
காமாத்மாந: ஸ்வர்கபரா ஜந்மகர்மபலப்ரதாம்।
க்ரியாவிஷேஷபஹுலாம் போகைஷ்வர்யகதிம் ப்ரதி॥ 2.43 ॥
சிற்றறிவுடைய மாந்தர் வேதங்களின் மலர்ச் சொற்களால் கவரப்படுகிறார்கள். இவ்வாக்கியங்கள் உயர் கிரகங்களுக்கு ஏற்றம் பெறுதல், நற் பிறவி அடைதல், அதிகாரமடைதல் முதலான பலன் கருதிச் செய்யும் செயல்களைச் சிபாரிசு செய்கின்றன. புலன் நுகர்ச்சியையும், செல்வமிகு வாழ்வையும் விரும்புபவர் இதைவழட உயர்ந்ததேதுமில்லை என்று கூறுகின்றனர்.
போகைஷ்வர்யப்ரஸக்தாநாம் தயாபஹ்ருதசேதஸாம்।
வ்யவஸாயாத்மிகா புத்தி: ஸமாதௌ ந விதீயதே॥ 2.44 ॥
புலன்நுகர்வு, செல்வம் இவைகளை மிகவும் விரும்புவதால் மயங்கியவர்களின் மனங்களில், பரமப்பிரபுவின் பக்தித் தொண்டிற்கான நிலையான உறுதி உண்டாவதில்லை.
த்ரைகுண்யவிஷயா வேதா நிஸ்த்ரைகுண்யோ பவார்ஜுந।
நிர்த்வந்த்வோ நித்யஸத்த்வஸ்தோ நிர்யோகக்ஷேம ஆத்மவாந்॥ 2.45 ॥
வேதங்கள் பொதுவாக மூன்று பௌதிக இயற்கைக் குணங்களைப் பற்றியவை. அர்ஜுனா! இவை மூன்றிற்கும் மேற்பட்டவனாவாயாக. எல்லா இருமை நிலைகளிலிருந்தும், அடைதல் காத்தல் இவைகளுக்கான கவலைகளிலிருந்தும் விடுபட்டுத் தன்னில் நிலை பெற்றிருப்பாயாக.
யாவாநர்த உதபாநே ஸர்வத: ஸம்ப்லுதோதகே।
தாவாந்ஸர்வேஷு வேதேஷு ப்ராஹ்மணஸ்ய விஜாநத:॥ 2.46 ॥
ஒரு சிறு கிணற்றால் ப+ர்த்தி செய்யப்படும் தேவைகளெல்லாமே, ஒரு பெரும் நீர்த்தேக்கத்தால் உடன் ப+ர்த்தி செய்யப்படும். அது போலவே, வேதங்களின் நோக்கங்களெல்லாம் அவைகளுக்குப் பின் உள்ள நோக்கங்களை அறிந்தவனால் அடையப்பெறும்.
கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசந।
மா கர்மபலஹேதுர்பூர்மா தே ஸங்கோ அஸ்த்வகர்மணி॥ 2.47 ॥
உனக்கு விதிக்கப்பட்ட கடமையைச் செய்ய மட்டுமே உனக்குப் பூரண உரிமை உண்டு!செயல்களின் பலன்களில் உனக்கு அதிகாரமில்லை. உனது செயல்களின் விளைவுகளுக்கு உன்னையே காரணமாகவும் எண்ணாதே!செயலற்ற நிலையிலும் விருப்பங் கொள்ளாதே.
ஸித்த்யஸித்த்யோ: ஸமோ பூயோகஸ்த: குரு கர்மாணி ஸங்கம் த்யக்த்வா தநம்ஜய।
த்வா ஸமத்வம் யோக உச்யதே॥ 2.48 ॥
யோகத்தில் உறுதி கொள் அர்ஜுனா!வெற்றி தோல்வியின் பற்றைத் துறந்து கடமையைச் செய். இதுபோன்ற மன ஒருமையே யோகமென்றழைக்கப்படுகின்றது.

பாராயணம்  செய்ய 

ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம் ஜித்வா வா போக்ஷ்யஸே மஹீம்।
தஸ்மாதுத்திஷ்ட கௌந்தேய யுத்தாய க்ருதநிஷ்சய:॥ 2.37 ॥

ஸுகது:கே ஸமே க்ருத்வா லாபாலாபௌ ஜயாஜயௌ।
ததோ யுத்தாய யுஜ்யஸ்வ நைவம் பாபமவாப்ஸ்யஸி॥ 2.38 ॥

ஏஷா தே அபிஹிதா ஸாங்க்யே புத்திர்யோகே த்விமாம் ஷ்ருணு।
புத்த்யா யுக்தோ யயா பார்த கர்மபந்தம் ப்ரஹாஸ்யஸி॥ 2.39 ॥

ஏஷா தே அபிஹிதா ஸாங்க்யே புத்திர்யோகே த்விமாம் ஷ்ருணு।
புத்த்யா யுக்தோ யயா பார்த கர்மபந்தம் ப்ரஹாஸ்யஸி॥ 2.39 ॥

நேஹாபிக்ரமநாஷோ அஸ்தி ப்ரத்யவாயோ ந வித்யதே।
ஸ்வல்பமப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத்॥ 2.40 ॥

வ்யவஸாயாத்மிகா புத்திரேகேஹ குருநந்தந।
பஹுஷாகா ஹ்யநந்தாஷ்ச புத்தயோ அவ்யவஸாயிநாம்॥ 2.41 ॥

யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவதந்த்யவிபஷ்சித:।
வேதவாதரதா: பார்த நாந்யதஸ்தீதி வாதிந:॥ 2.42 ॥

காமாத்மாந: ஸ்வர்கபரா ஜந்மகர்மபலப்ரதாம்।
க்ரியாவிஷேஷபஹுலாம் போகைஷ்வர்யகதிம் ப்ரதி॥ 2.43 ॥

போகைஷ்வர்யப்ரஸக்தாநாம் தயாபஹ்ருதசேதஸாம்।
வ்யவஸாயாத்மிகா புத்தி: ஸமாதௌ ந விதீயதே॥ 2.44 ॥

த்ரைகுண்யவிஷயா வேதா நிஸ்த்ரைகுண்யோ பவார்ஜுந।
நிர்த்வந்த்வோ நித்யஸத்த்வஸ்தோ நிர்யோகக்ஷேம ஆத்மவாந்॥ 2.45 ॥

யாவாநர்த உதபாநே ஸர்வத: ஸம்ப்லுதோதகே।
தாவாந்ஸர்வேஷு வேதேஷு ப்ராஹ்மணஸ்ய விஜாநத:॥ 2.46 ॥

கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசந।
மா கர்மபலஹேதுர்பூர்மா தே ஸங்கோ அஸ்த்வகர்மணி॥ 2.47 ॥

ஸித்த்யஸித்த்யோ: ஸமோ பூயோகஸ்த: குரு கர்மாணி ஸங்கம் த்யக்த்வா தநம்ஜய।
த்வா ஸமத்வம் யோக உச்யதே॥ 2.48 ॥

No comments:

Post a Comment