ஜி.ஜே.தமிழ்ச்செல்வி |
என்னையே பார்க்கிறாய்
வேறு பக்கம் திரும்பு என
உன் விழிகளை வேண்டுகிறேன்
உன்னை நோக்கவென
உன் ஒவ்வொரு பார்வையும்
இதழ்ச் சுழிப்பும்
கவிதையாகிறது
விழிகளுக்குள் பதுங்கி
முத்தங்கள் கொடு
முத்திரைப் பதிப்பில்
மயங்கிப் போக ஆசிக்கிறேன்
முத்தங்கள் கொடுக்காமலும் போ
அதன் வலிதரும்
சுகந்தத்தையும் யாசிக்கிறேன்
இதழ்களை ஈரப்படுத்த
அவகாசம் கொடு என்றேன்
ஒத்திகையில் ஈரமாகும்
என்கிறாய் நீ
'[இது நிகழாதிருந்திருக்கலாம்' என்ற நாடு போற்றும் கவிதைத்தொகுதியிலிருந்து
No comments:
Post a Comment