Tuesday, 12 August 2014

இக்காலத் தமிழ்க் கவிதை பற்றிய கலைக்களஞ்சியம்

மறைமலை இலக்குவனார்

   வணக்கம்.இக்காலத் தமிழ்க் கவிதை பற்றிய கலைக்களஞ்சியம் ஒன்றினை உருவாக்கி இணையத்தில் வெளியிட விழைகிறேன். இக்காலத் தமிழ்க்கவிஞர்களின் படைப்புகள் குறித்த தகவல்களும் கவிஞர்களின் வாழ்க்கை-வரலாறும் முழுமையாகத்  தொகுக்கப்பட வேண்டும்.வெறும் விவரப் பட்டியலாக அமைந்துவிடாமல் இக்காலத் தமிழ்க்கவிதை வளர்ச்சியைக் காட்டும் ஆவணமாக இக் களஞ்சியம் அமைய வேண்டும். .ஆயிரக்கணக்கான தமிழ்க்கவிஞர்களையும் பல்லாயிரக்கணக்கான கவிதைநூல்களையும் தொகுத்து வழங்குதல் எளிய முயற்சியன்று.

அதேநேரத்தில் அனைத்துக் கவிஞர்களும் ஒத்துழைத்தால் இப் பணியை முழுமையுற நிறைவேற்றிவிட முடியும். கீழ்க்காணும் தரவுகளை ஒருங்குறி (யூனிகோடு)அச்சுருவில் அனுப்பி உதவுக.

என் மின்னஞ்சல்: maraimalai@yahoo.comஇக்காலத் தமிழ்க் கவிதை—இணையக் களஞ்சியம்

1)வாழ்க்கைவரலாறு/தன்விவரம்

2)கவிதைப்பணி:முதலில் வெளிவந்த கவிதை-கவிதை வெளிவந்த இதழ்கள்--காலம்-கவிதைத் தொகுப்புகள் வெளிவந்த காலம்--பெற்ற விருதுகள்/பாராட்டுகள்


3)கவிதைத் தொகுப்புகள் ஒவ்வொரு நூலைப் பற்றிய தனித்தனி விவரம்-ஒவ்வொரு நூலுக்கும் ஒரு பக்கம் எடுத்துக்கொள்ளலாம்.நூலின் தலைப்பு, வெளியிட்ட ஆண்டு,பதிப்பகத்தின் பெயரும் முகவரியும்,நூலின்உள்ளடக்கம்(இயல்கள்/தலைப்புகள்) ஆகியவை வெண்டும்.அத்துடன் நூலுக்கு வழங்கப்பெற்ற அணிந்துரை/வெளிவந்த மதிப்புரையின் பகுதிகளும் தேவை.நூலை அறிமுகப்படுத்தும்வகையில் இவை அமையும்.


4)கவிதைத்தொகுப்பு, காவியம், கவிதைநாடகம்,கதைக்கவிதை, வரலாற்றுக்கவிதை எனப் பல்வேறு வகைகளில் தங்கள் நூல்கள் அமைந்துள்ளனவாயின் விவரமாகச் சுட்டிக்காட்டப்பெற வேண்டும்.


5)படங்கள்-கவிஞர்களின் படங்கள்,விருதுபெறல்,மணிவிழா போன்ற சிறப்புநிகழ்வுகளின் படங்கள்,நூல்களின் அட்டைப்படங்கள்



6இவற்றை வழங்குமாறு கவிஞர்களை வேண்டுகிறேன்.தரவுகளைச் சொல் கோப்பில்(எம்.எசு.வோர்டு) அனுப்புக.படங்களைக் (jpg./mpg) கூடுமானவரை சிறிய அளவில் அனுப்புக.—மறைமலை இலக்குவனார்-கைப்பேசி--9445407120

1 comment:

  1. நல்ல முயற்சி. இம்முயற்சி தேவையானது.ஆனால் மிகக் கடினமானது.என் வலைப்பூவில் சில கவிஞர்களைப் பறறிய தகவல்கள் உள்ளன. அவை தங்களிடமிருப்பின் தெரிவிக்கவும் தங்களிடமில்லையெனில் நான் அனுப்புகிறேன்..

    ReplyDelete