சிந்துக்கவிதைகள்; சந்தர் சுப்ரமணியன்
அறிமுகம்
[இலக்கணம் மீறிய கவிதைகள் , புதுக்கவிதைகள், வசன கவிதைகள் , ஹைக்கூ எனப் பலவகைச் சோதனைச்சூறாவ ளியில் மரபுக்கவிதையின் சந்தச்சுவையும் சொல்லடுக்கின் எழிலும் மறைந்தே போய்விட்ட இழப்பு அநேகமாகப் பலரால் உணரப்பட்டாலும் , கடைவிரித்தோம், கொள்வாரில்லை என்று சோர்ந்து போகாமல் இழப்பு முக்கியமில்லை ; மீண்டும் உயிர்த்தெழுதல் முக்கியம் என்று உணர்ந்து சந்தர் சுப்பிரமணியன் நினைவு நாரில் தம் கனவு மலர்களைத் தொகுத்துத் தந்த அரிய் முயற்சி தான் . பாராட்டப்படவேண்டிய முயற்சி என்று பல்லின் மீது நாவு படாமல் கூறிவிட்டு அகன்றுவிடுதல் எல்லோருக்கும் எளியது.ஆனால் சிலர் அதன் செவ்வி தலைப்படுவர். உதாரணம். சந்தர் சுப்பிரமணியன்.தமிழன்னை கணக்கெடுத்துக்கொண்டே தான் இருக்கிறாள் .யார் உண்மையில் தமிழுக்குப் பாடுபடுவோர் என!
'நினைவு நாரில் கனவுப்பூக்கள்' என்ற நூல்
கண்சிமிட்டும் கனவுகளைக்
காதலிக்கிறேன் - அந்தக்
காட்சிகளைக் கைப்பிடித்துக்
கருசமைக்கிறேன்!
எண்ணிறைந்த சந்தமெலாம்
எடுத்தாய்கிறேன் - அதில்
எண்ணமதை ஏற்றிநல்ல
இசைவேய்கிறேன்!
*
வார்த்தைகளை வாசலோரம்
வரவழைக்கிறேன் - அவை
வந்துநல்ல கவிவளர்க்க
வழிபடைக்கிறேன்!
சேர்த்தபல சொல்லெடுத்துத்
திறனாய்கிறேன் - நம்
செந்தமிழின் தேன்சுவையில்
தினந்தோய்கிறேன்!
*
பாட்டிசைக்கும் போதுவானம்
பாடியாகிறேன் - அந்தப்
பரவசத்தில் நாள்முழுதும்
பாடிஓய்கிறேன்!
நாட்டியத்தில் சொல்லசைத்து
நாள்கடக்கிறேன் - நினைவு
நாரெடுத்துக் கனவுகளை
நான்தொடுக்கிறேன்!
--------------
வெளியீடு-
விலை ரூ. 30.00
சிந்துக்கவிதைகள்
தாரிணி
பதிப்பகம்
சந்தர் சுப்ரமணியன்
No comments:
Post a Comment