Sunday, 10 August 2014

ஒரே ஒரு கேள்வி ; உண்மையான பதில்

கதைகள், கவிதைகள்,கட்டுரைகள், செய்திகள், சினிமா தொடர்பானவை என எத்தனையோ வருகின்றன. ஆனால் உள்ளத்தைத் தொட்டு நம் சுயத்துவத்தை நாமே கண்ணாடியில் பார்த்துக்கொள்வது போல் ஒன்றும் வரவில்லையே! இப்படி ஓர் எண்ணம் வந்தது சிலருக்கு. சரி! 

                                                             

ஒரே ஒரு கேள்வி ; உண்மையான பதில் சொல்லுங்கள் என்று கேட்டோம்,

சரி என்று ஒப்புக்கொண்டார்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------------

                                  நாம் கேட்ட கேள்வி:   


பணத்தால் வாங்க முடியாதது எது?
                                                       

                                                         வந்த பதில்கள் 

அம்மா: சொன்னவர்....... கோகுல் ஆரோஹி 

குணம்...சொன்னவர்....... இப்ராஹிம் சையத் 

உண்மையான அன்பு ....சொன்னவர் ........ராஜா ராஜநாகமுத்து

இரக்கம் ....சொன்னவர் .... ஜீவா ஈசன் 

அன்பு .....சொன்னவர்...ராஜசேகரன் மண் 

நம் மீது மற்றவர் கொண்ட நம்பிக்கை, ஒரு முறை இழந்தபின்... சொன்னவர் நசீர் காதர் 

உண்மை நட்பு .....சொன்னவர்.. அப்பு கோகுல் ஆரோஹி 

நாம் இருந்த அம்மாவின் கருவறை:...சொன்னவர்..  செபஸ்டியன் செல்வம் 

கடந்துவிட்ட வினாடி பொழுது.......சொன்னவர்.. சிவ சித்தார்த்தன் 

நிம்மதி .....சொன்னவர்.. மயில் வாஹனன் 

நேர்மை ....சொன்னவர்..கோபி கோவிந்தராஜன் 

---------------------------------------------------------------------------------------------------------------------ஆக பணத்தால் வாங்கமுடியாதவை என்று எத்தனை எத்தனையோ இருந்தாலும் கடல் கடந்து, தூரம் கடந்து மனிதர்கள் நாம் போய்க்கொண்டே இருக்கிறோம் ..மேலே நண்பர்கள் குறிப்பிட்ட எல்லாவற்றையும் துறந்து ...

எதற்கு?பணம் ..பணம் ..பணம் ..பணம் ..பணம் ..பணம் ..

 ஏன்? அதை வைத்து எல்லாவற்றையும் வாங்கிவிட முடியும் என்ற நப்பாசையால் 

என்னப்பா! ஆரம்பிச்சிட்டீங்களா  ஞானோபதேசம்?
                                                                  

இல்லை.. இல்லை .. சற்று நேரம் ஒரு சுயதரிசனம் 

தொகுத்து வழங்கியவர்:                           

கவிஞர் ஜி.ஜே. தமிழ்ச்செல்வி [ஹார்ட்பீட் டிரஸ்ட் ] செங்கம் 

ஆசிரியர்:இதயத்துடிப்பு 


No comments:

Post a Comment