திருமதி. க.மீனாட்சி தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் கும்பகோணத்திலிருந்து நான்கு கி.மீ தொலைவில் உள்ள சாரங்கபாணி பிள்ளையாம்பேட்டை என்னும் கிராமத்தில் மு.கருணாநிதி-க.வான்மதி தம்பதியினரின் மகளாய்ப் பிறந்த திருமதி கே. மீனாட்சி இளங்கலை முதுகலை மற்றும் எம்.பில் பட்டங்களை கும்பகோணம் அரசினர் (ஆடவர்) கல்லூரி(தன்னாட்சி)யில் பயின்றும் பி.எட் பட்டத்தினை மருதாநல்லூர் செயிண்ட் சேவியர் கல்லூரியில் பயின்றும் பெற்றவர்.
ஒப்புநோக்கில் இலக்கிய இலக்கணங்கள் எனும் கட்டுரையை தமிழ்ப் பல்கலைக்கழக வெள்ளிவிழா சிறப்புக் கருத்தரங்கிலும்-
தமிழ் இலக்கியங்களில் காணும் மனித நேயமும் மத நல்லிணக்கமும் என்ற கட்டுரையை திருச்சி தேசியக் கல்லூரியிலும்-
இலக்கிய இலக்கணங்களில் பெறப்படும் தமிழர் பண்பாடு என்ற கட்டுரையை திருவையாறு தமிழ் ஐயா வெளியீட்டகத்தின் வாயிலாகவும் வெளியிட்டுப் பாராட்டுப் பெற்றவர் அவர் எழுதிய மனிதநேய மாமணி நூல் அரிய ஆய்வுத்திறனுக்கு எடுத்துக் காட்டாய் விளங்கி தனிச் சிறப்பான கவனம் பெற்றது .
எழுத்தாளர் வையவனின் சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் என யாவற்றையும் ஆழ்ந்து ஆய்ந்தும், அவரது வாழ்க்கை குறித்து பலவகைகளில் தகவல் சேகரித்தும் முனைவர்.திருமதி.க.மீனாட்சி எழுதியுள்ள இந்நூல் ஒரு இலக்கியக் கருவூலம் என்று மதிக்கத்தது.
முனைவர்.திருமதி.க.மீனாட்சி |
---------------------------------------------------------------------
1
காற்று அங்கிருந்து பெரும் வேகத்தோடு வீசும். ஆடிக்காற்று வீசினால் மரங்கள் எல்லாம் வெறிபிடித்தது போல் தலையாட்டும். ஜன்னல்களும் கதவுகளும் படார் படாரென்று அறைந்து காற்றின் வேத்தைக் குறித்து புகார் சொல்லும்.
அன்று அது வடாற்காடு மாவட்டம். இன்று வேலூர் மாவட்டம். அதிலே உலகப்புகழ் பெற்ற இஸ்லாமியா கல்லூரி அமைந்துள்ள நகரம் வாணியம்பாடி அங்கிருந்து கிழக்கே செல்கிறது ஒரு மலைச்சாலை. ஜவ்வாது மலையோரத்து ஊரான ஆலங்காயம் செல்லும் சாலை அது.
---------------------------------------------------------------------------------------------------------
சமுதாயம், படைப்பாளன் உருவாகக் காரணமாய் அமைகிறது. படைப்பாளனும் சமுதாயமும் இணைந்ததே படைப்பிலக்கியம். அன்றாட வாழ்வில் காணும் நற்செயல்களைப் படைப்பில் கையாண்டு, மக்களுக்கு எடுத்துரைக்கிறான். அதுபோன்று தீயசெயல்களைச் சுட்டிக்காட்டுகின்றான்.
படைப்பாளி மக்களுடைய அறியாமை இருளை நீக்குபவன். சமுதாயத்தின் மாற்றம், வளர்ச்சிநிலை அக்காலக்கட்டங்களில் தோன்றும் படைப்புகளில் பிரதிபலிக்கின்றன. சமுதாயத்தை மையப்படுத்தித் தோன்றும் படைப்புகள் நாட்டின் வளர்ச்சி, பெருமையினை இயம்புகின்றன. ஒலி வடிவமாக வெளிப்படுவதைக் காட்டிலும், வரிவடிவமாகும் போது அதன் பொறுப்பு கூடுகின்றது. படைப்புகள் தனிமனித விளைவுகள், சமுதாயப் பயன்பாடுகள் ஆகியவற்றை உடனடியாக ஏற்படுத்திவிடும்.
சமுதாயத்தின் பொதுமைப் பண்பினை எடுத்துரைப்பது படைப்பாளியின் கடமையாகும். அவன் கிராமம், நகரம் என்னும் சமுதாயத்தினைப் படைத்து, அவற்றை மேம்படச் செய்பவன். இதுபோன்று சமூக அக்கறை கொண்ட படைப்பாளிகளுள் ஒருவராகத் திகழ்பவர் வையவன்.
க.மீனாட்சி
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

காற்றின் ஜன்ம பூமி அது தானா என்று ஐயப்படும் அளவில் காற்று அங்கிருந்து தாழ்ந்து இறங்கி வரும். வாணியம்பாடி நகரிலிருந்து 11 கி.மீ தூரத்தில் உள்ளது வெள்ளக்குட்டை என்ற கிராமம். கிழக்குத் தொடர்ச்சி மலையின் பல மடிப்புத் துண்டுகளாய ஒன்றுவிட்டு ஒன்றாக நிற்கும் குன்றுகளில் நாடு பார்த்தான் மலை என்று ஒரு குன்றின் அடிவாரத்தில் அமைந்தது அந்த கிராமம்.
அந்த ஊர் மண்ணின் மீது நின்று சுற்றி எல்லாத் திக்குகளையும் பார்த்தால் குன்றுகளே தென்படும். அந்தக் குன்றுகளின் தொட்டிலில் ஊஞ்சல் கட்டி அந்த கிராமத்தைத் தாலாட்டுவது போன்று ஒரு தாழ்வாரத்தில் அமைந்தது அந்த கிராமம்.
அங்கே 24 டிசம்பர் 1939ல் பிறந்தவர் வையவன். வாணியம்பாடியிலிருந்து ஆலங்காயம் செல்லும் சாலையில் வடக்கே திரும்பும் ஒரு சிறு சாலை வழியாகச் செல்லும் போது் அன்று முடிவடைகிறது ஊராக இருந்தது அது. தற்போது அந்தச் சாலை மலைப் பாதையாக சீரமைக்கப்பட்டு வளர்ந்து ஆம்பூர் நகரத்தோடு இணைகிறது.
சாலை |
அவரது பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் முருகேசன். தந்தை எம்.எஸ் பரமசிவம். தாய் டி.ஏ. அமிர்தசிகாமணி அம்மாள். அன்றைய கால வழக்கத்தின்படி மிக நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்து கொண்ட அவர்களின் மூன்றாம் குழந்தை தான் வையவன். அதற்கு முன் இரண்டு குழந்தைகள் இறந்துவிடவே மூன்றாவது குழந்தையும் இறந்துவிடும் என்று பயந்து அவரது தாய் கருக்கலைப்பு செய்தார். இருந்தும் அதை மீறிப் பிறந்தவர் தான் வையவன்.
வையவன் பிறந்த வீடு |
வையவன் பிறந்த வீடு முகப்புத் தோற்றம் |
வெள்ளக்குட்டை புகைப்படங்கள் உதவி:மா.ராஜசேகரன்.டி.சி .ஈ-இளநிலைப் பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை, திருப்பத்தூர்
No comments:
Post a Comment