அம்மாவின் வாசம்…
தமிழ்ச்செல்வி நிக்கோலஸ்…
கனவினில் தளிர்த்த ஒன்று; காலங்கள் தேடினாலும்
கிடைக்காத ஒன்று ;பாலைவனப் பசுமையாய்க் கைப்பிடித்து
ஒளிவெள்ளத்திற்குள் கூட்டிச்சென்றது என்னை!
சில்லென ஒரு தழுவலில் இறுகப் பிடித்த
விரல்களுடன் கிறங்கித்தான் மயங்கித்தான் கிடக்கிறேன்
கனவின் மடிமீது ,வாசம் மெல்லச் சூழ,
கைகளில் ஏந்திச் சுமந்து சென்ற அவளை..
விழி மூடாமல், மொழியறிந்து பசியூட்டும் அவளைத்
அதே வாசம் :அப்போதே மீண்டும் பிறந்தது போன்ற
உணர்வு...கிள்ளிப்பார்க்கிறேன். உண்மைதான் .இறுக்க
மூடிக்கொள்கிறேன்.வாசத்தை கைகளுக்குள்,
குழல் கோதும் விரல்களை மெல்லப் பிடித்து முகம்
காண முயல்கிறேன்..இருள் சூழ ,அங்கேயும் மின் தடை…..
டபடபவென்று அடித்துசெல்லும் இருசக்கரவாகனமாய்,
மின்விசிறி இறக்கையைச் சுழற்ற வெம்மையும்
வீசும்
அனற்காற்றும் சுழற்றிப்போடுகிறது … விழிக்கிறேன்
விடிந்த வானம் துடைத்து விட்டது போல்
பளிச்சென்று…
No comments:
Post a Comment