Sunday, 14 September 2014

ஏனடி தோழி கேளொரு சேதி......


டாக்டர் ஜவாஹர் பிரேமலதா 
            
மாணிக்கவாசகரின் திருவெம்பாவைப் பாடல்களில் இளம்பெண்கள் ஒருவரை ஒருவர் எழுப்பிச் செல்லும் காட்சியைக் காணும்பொழுது, ஒற்றுமை உணர்வும், கள்ளமில்லா குழந்தை மனங்களின் வெளிப்பாடும் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன. 
தமிழர்களின் வழிபாடெல்லாம் இயற்கையோடிணைந்த பொதுவழிபாடாகவும், பொதுநலன் கருதிய வழிபாடாகவும் இருந்துள்ளமையை இப்பாடல் வழிஏ  அறியமுடிகிறது. பரிபாடல் காட்டும் தை நீராடல், சிலம்பு காட்டும் வரிபாடல், குரவைப் பாடல், கானல் வரி போன்றவை அனைத்துத் தரப்பு மனிதர்களும் ஒன்றிணைந்து இயற்கை அன்னையின் பேராற்றலுக்கு முன் சிறுகுழந்தைகளாக மாறிவிடுவதையே காட்டுகின்றன. திருவெம்பாவைப் பாடலில் வரும் இளம்பெண்களின் உரையாடலில் சகதோழியரோடு கொண்டுள்ள நட்பு உரிமையும், இறை உணர்வும் சிறப்புற விளங்குதைக் காணலாம்.

                         
வன்செவியோ நின் செவிதான்?’ (திருவெ:1)
போதார் அமளிக்கே நேசம்வைத்தனையோ?’ (திருவெ:2)
என்று முதலில் கோபத்தோடு வெளிப்படும் அழைப்புகள் பின், ‘சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை’ (திருவெ:3) என்று சிந்திக்க வைத்து எழுப்ப முயல்கிறது.
                         
அப்படியும் எழாத பெண்களை,
பாலுறு தேன்வாய்ப் படீறி! கடைதிறவாய்’ (திருவெ:5)
என அன்பொழுக அழைத்துப் பார்க்கிற நிலையைக் காணலாம்.
என்னே துயிலின் பரிசு’ (திருவெ:7) என்று இகழ்ந்துரைத்தும் பார்க்கின்றனர்.
ஈதென்ன உறக்கமோ? (திருவெ:8)

இவ்வாறு தோழியரைத் துயிலெழுப்ப முயலும் முயற்சியில் சாம, தான, பேத, தண்ட முறைகளைக் கையாளுகின்றனர் இளம்பெண்கள்.

No comments:

Post a Comment