கவிதாயினி ஜி.ஜே. தமிழ்ச்செல்வி |
நீயாக வருவதும்
நீயாக விலகுவதுமான
இந்த விளையாட்டில்
நீ கேட்டாய்
நான் கொடுத்தேன்
அன்பை நான் அறிந்த வரையில்
விலகுவது உன் விருப்பமெனில்
தடை சொல்வது
என் கடமை அல்ல
காட்டாற்று வெள்ளம் போல
கரை புரளும் அன்பினில்
சிறு துளி பருகக் கொடுத்தாய்.
அணைத்தாய் தேற்றினாய்
ஆறுதல் படுத்தினாய் இன்று
விடைபெறு கிறேன் என்கிறாய்.
விலகிப் போயேன்
அதை ஏன்
விளம்பிக் கொண்டிருக்கிறாய்?
சாகப்போகிறவன்
சொல்லிக்கொண்டிருப்பதில்லை
செத்துப்போகிறான்
செயலின் மூலமே
நிர்ணயிக்கப்படுகின்றன
நிகழ்வுகள்.
போ
எனக்காக நீ
பிணைப்படவில்லை
யாரும் யாருக்கும்
பிணைக்கைதிகள் அல்ல
நீ சுதந்திரவாளி!
அப்படியே நானும்
ஒன்றை மட்டும் புரிந்துகொள்
காதல் ஒரு விளையாட்டல்ல !
ஒன்றை மட்டும் புரிந்துகொள்
காதல் ஒரு விளையாட்டல்ல !
No comments:
Post a Comment