Thursday 4 September 2014

நாற்காலி மீது காதல்

நாற்காலி   ஜாக்கிரதை 

அலுவலகங்களில் கம்ப்யூட்டர் இன்றி எந்த வேலையும் நடப்பதில்லை. புராஜெக்டை நேரத்திற்குள் முடிக்க வேண்டும். வந்திருக்கும் மெயில்களுக்கு உடனடியாகப் பதில் தர வேண்டும். அடுத்த பணிக்கான பின்னணித் தகவல்கள் திரட்ட வேண்டும்வாடிக்கையாளர்களுக்குக் குறித்த நேரத்தில் தகவல் தர வேண்டும் எனப் பலதரப்பட்ட துறைகளில், பலதரப்பட்ட வேலைகளை நாற்காலியுடன் பின்னிப் பிணைந்த நிலையில் செய்யவேண்டியுள்ளது.
இப்பொழுதெல்லாம் பொழுது போவது  கூட வீடியோ கேம்ஸ் விளையாடுவது, பேஸ்புக் ட்விட்டர் மூலம் அளவளாவுவது என்றாகி விட்டது.
                             
வேலை நிமித்தமாக நாற்காலி மீது காதல் கொள்வது , எவ்வளவு பெரிய ஆபத்தில் முடிகிறது என்பதை உடலில் பாதிப்பு ஏற்படும்போதுதான் அனைவரும் உணர்கிறோம்.

பாதிப்பை எப்போது உணர ஆரம்பிக்கிறோம் தெரியுமா? கழுத்து முதுகு போன்ற பகுதிகளில் வலி ஏற்படும்போது தான். அப்போது கூட களிம்பு தடவி அதன் விறுவிறுப்பில் மயங்கி, சில நிமிட நேரத்திற்கு வலியை மறக்கிறோம் அவ்வளவே!

பணிக்கு இடையூறாக வலி பூதாகரமாகி நிற்கும்போது தான், மருத்துவரிடம் கேட்க வேண்டும் என்ற நினைப்பிற்கு வருகிறோம். மருத்துவரும் சில மாத்திரைகளைக் கொடுத்து வலியைத் தற்காலிகமாக நீக்க, சில ஆலோசனைகளைச் சொல்வார்வலியைத் தாங்கிக் கொள்ளக் கற்றுக் கொள்ளுங்கள் எனச் சொல்வார். முடியுமாவலியை அனுபவிப்பவர்களுக்குத் தான் தெரியும் அந்த வேதனை!

எனவே, இனி நாற்காலியோடு பின்னிப் பிணைந்து பணி செய்ய நேர்ந்தால், நாற்காலியை விட்டு, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து நடப்பது, சில உடற்பயிற்சிகளைச் செய்வது என்று வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

நான் தினமும் காலையில் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறேன். அந்த பழக்கமே என் உடலைச் சீராக வைக்கும். நீங்கள் சொல்வதை என்னால் பின்பற்ற முடியாது என்று சொல்லக் கூடியவரா நீங்கள்?

ஆனால் ஒரு மணி நேர உடற்பயிற்சியும், பத்து மணி நேர உடற்பயிற்சியும், பத்து மணி நேர நாற்காலி மீதான காதலும் உங்கள் உடலைச் சீராக வைத்துக் கொள்ளாது.

பத்து மணி நேரம் நாற்காலியில் அமர்ந்தால் காலில் நீர் கோர்க்கும்சீரான ரத்த ஓட்டத்திற்குக் கேடு உண்டாகும். நாளா வட்டத்தில் ரத்தத்தில் கெட்ட கொழுப்பு சேர்ந்து இதயப் பாதிப்பை உண்டாக்கும். உடல் பருத்து, உடல் இயக்கத்தில் மந்த நிலை ஏற்படும். நீரிழிவு பாதிப்பு ஏற்படும் முதுகு, கழுத்து வலி உண்டாகும். தசை அழற்சி ஏற்படும் ஒட்டு மொத்தத்தில் உங்கள் ஆயுசு குறையும்.

பயப்பட வேண்டாம்இந்த பிரச்சனைக்குத் தீர்வு உண்டு.

தேவையான உடற்பயிற்சிகள்:
நாற்காலியில் அமர்ந்தபடி செய்யக்கூடிய உடற்பயிற்சிகள் உண்டு. அதைப் பார்ப்போம்.

முதுகு நிமிர்ந்த நிலையில், நாற்காலி நுனியில் அமர வேண்டும். இடுப்பு எலும்புக்கு நேராக கால் முட்டி இருக்கும் வகையிலும், இரண்டு கால்களுக்கு இடையில் ஒரு தலையணை வைத்துக் கொள்ளும் வகையிலும் அமர வேண்டும். தோள் நிமிர்ந்த நிலையில் கைகள் தொங்க விடப்படலாம்.
கால் இடுக்கில் தலையணை வைத்து இரண்டு முட்டிகளாலும் மெதுவாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.

நாற்காலியுடன் பின்னிப் பிணைந்திருப்பது ஆபத்து

முன் பாதத்தை மட்டும் தரையில் ஊன்றி, குதிகாலை மெதுவாகத் தூக்கி, பின்னர் தரையில் வைக்க வேண்டும். இது போல் மூன்று முறை செய்ய வேண்டும்.

இப்படி செய்யும்போது இடுப்பு எலும்புக்கு உருவாகக்கூடிய அழுத்தம், தசைகளுக்குப் பரவி, எலும்பின் அதீத உழைப்பு குறையும்.

முன் சொன்னபடியே நாற்காலி நுனியில் அமர வேண்டும். கால்களின் நிலையிலும் மாற்றம் இருக்கக் கூடாது.
முதுகு நிமிர்ந்த நிலையில், இரண்டு தோள்களையும் பின்னுக்கும், முன்னுக்குமாக மெதுவாக அசைக்க வேண்டும். மேலும் கீழுமாக அசைத்து விடாதீர்கள். அது தவறு.
இது போல் மூன்று முறை செய்ய வேண்டும்.
இதைச் செய்தால், நெஞ்சுக்கூடு விரிவடைந்து இதய பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
மீண்டும் முன் சொன்னபடியே அமர்ந்த நிலை.
கால்களின் இடுக்கில் தலையணை வைத்து, அழுத்தம் கொடுத்தவாறே, கையில் கட்டை விரல் தவிர மற்ற நான்கு விரல்களையும் மடக்கி தலையில் இரண்டு பக்க பொட்டுகளின் (காதுக்கு மேலே, நெற்றியின் இரண்டு புறங்கள்) மீது வைக்க வேண்டும்.
மெதுவாக, இரண்டு கைகளின் முட்டியை ஒருங்கிணைக்கும் வகையில் கைகளை முன் கொண்டு வர வேண்டும்.
பின், மெதுவாக முட்டிகளை விலக்க வேண்டும்.
இது போல், 25 முறை செய்ய வேண்டும்இந்த பயிற்சியால் இடுப்பின் கீழ் பகுதிகளும், மேல் பகுதிகளும் சீரான உடல் அசைவைப் பெறும்.
முன் சொன்ன அதே அமர்வு நிலை.
கால்களுக்கு இடையே தலையணை வைத்து. 20 முறை அழுத்தம் கொடுது்து விலக்க வேண்டும். கால்கள் இடுக்கில் இருந்து தலையணை நடுவாத நிலையில் இதை செய்ய வேண்டும்.
இடுப்புப் பகுதியில் அசைவைத் தந்து, தசைகளுக்கு வலு சேர்க்கம் பயிற்சி இது.
(நன்றி: மஞ்சரி “விளையாட்டு களஞ்சியம்இதழிலிருந்துதொகுப்பு: தீபம் எஸ்.திருமலை)



No comments:

Post a Comment