Thursday, 23 October 2014

அரிசோனா செய்திகள் :அரிசோனா ஆனைமுகன் ஆலயத்தில் அனுமன்


அரிசோனா செய்திகள் 
அரிசோனா ஆனைமுகன் ஆலயத்தில் அனுமன்
அரிசோனா மகாதேவன் 


அரிசோனா ஆனைமுகன் ஆலயத்தில் அனுமன், இராம, இலக்குவ சீதை சன்னதிகள் எழுப்பட இருக்கின்றன.  அதற்காகவேண்டி, மாமல்லபுரத்தில் வடிவமைக்கப்பட்ட ஆறு அடி உயரமுள்ள பக்த அனுமன், மற்று இராம, இலக்குவ, சீதை திரு உருவங்களுக்குப் பூசையும், ஐந்துமுக அனுமனின் வீதிஉலாத்  திருவுருவத்திற்கு 1008 வடைகள் உள்ள மாலைகளும் சூடப்பட்டன.

சிவாச்சாரியார் ஜெயந்தீஸ்வரன் பூசைகளை நல்ல முறையில் நடத்தினார்.  சிற்பிகள் சண்முகநாதன், தண்டபாணி, இளங்கோ இவர்களைப் பாராட்டி சால்வையும், சன்மானங்களும் வழங்கப்பட்டன.

கிட்டத்தட்ட 800 பேர்கள் அனுமன் காயத்திரி மந்திரத்தை 108 முறை ஜபித்து, அனுமன் சாலிசாவை ஐந்து முறை ஓதினர்.

அனைவருக்கும், மதிய உணவும், மாலைச்  சிற்றுண்டியும் தொண்டர்களால் சமைக்கப்பட் டு இலவசமாக வழங்கப்பட்டன.

$25 நன்கொடை கொடுத்த அன்பர்களுக்கு பூசையில் வைக்கப்பட்ட இரண்டங்குல உயரம் உள்ள அனுமனின் பித்தளைத் திருவுருவம் வழங்கப்பட்டது.  அனத்து அன்பர்களுக்கும் பூ, பழங்கள், தீர்த்தம் வழங்கப்பட்டன.அவ்வமயம் அனைத்து அன்பர்களும் கடவுளர் திரு உருவங்களைக் கையால் தொட்டு, தலை வைத்து வணங்கி, உணவாகக்  கோவிலில்  அளிக்கப்பட தானியங்களையும், (தான்யாதிவாசம்) துளசி இலைகளையும்  கடவுளர்கள் மீது இட்டனர்.

சன்னதிகளில் வரும் ஆண்டு மே மாதத்தில் கடவுளர்களின் திரு உருவங்கள் நிலை நிறுத்தப்பட்டு, உயிர்ப்பிப்பு மந்திரங்கள் ஓதப்பட்டு, குடமுழுக்கும் செய்யப்படும்.

சிலை அமைப்பும் வந்திருந்த பக்த கோடிகளும் கீழ்க்காணும் படங்களில் 


Inline image 1
மாமல்லபுரத்தில் வடிவமைக்கப்பட்ட ஆறு அடி உயரமுள்ள பக்த அனுமன், மற்று இராம, இலக்குவ, சீதை திரு உருவங்கள் 
Inline image 7
Add caption
Inline image 6
ஆஞ்சநேயருக்கு  வடைமாலை 
Inline image 5
பூஜைக்கு வந்திருந்தவர்கள் 
Inline image 4
பூஜைக்கு வந்திருந்தவர்கள் 2வது 
Inline image 3
ஆஞ்சநேயர் 
Inline image 2
ஆஞ்சநேயர் க்ளோஸ் அப் 

1 comment:

  1. The pictures are not visible. Please check.

    ReplyDelete