Saturday, 25 October 2014

செயலிழந்து போன இருதயத்தை உயிர்ப்பித்து சாதனை

அறிவியல் ஜூஸ் :செயலிழந்து போன இருதயத்தை உயிர்ப்பித்து சாதனை
[இனி இந்தப் பகுதி வழக்கமான தொடர்கள் மற்றும் பதிவுகளுக்கிடையே இடைவிடாது வெளிவரும்]
செயலிழந்து போன இருதயத்தை உயிர்ப்பித்து அதனை ஒரு நோயாளிக்குப் பொருத்தி வாழ்வு கொடுத்துள்ளனர் டாக்டர்கள். ஆஸ்திரேலியாவில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இப்படி  இருதயம் பொருத்தப்பட்டவரான மிஷேல் கிரிபிலாஸ் என்னும் 57 வயதான பெண்மணி பிறவியிலேயே இருதயக் கோளாறு கொண்டவர்.  “இப்போது 10 வயது குறைந்து விட்டது போல உணருகிறேன்” என்று அவர் சொன்னார். இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் அவருக்கு மாற்று இருதய ஆபரேஷன் நடந்தது.
                                                                         
                   இடதுபுறம் சிட்னி ஆஸ்பத்திரி டாக்டர் குமுத் திதாள்.
                   வலதுபுறம் புது இருதயம் பெற்ற மிஷேல் கிரிபிலாஸ்.

ஆபரேஷனுக்குப் பிறகு அவர் தினமும் 3 கிலோ மீட்டர் நடக்கிறார். 100 முதல் 120 படி ஏறுகிறார்.

ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் உள்ள செயிண்ட் வின்செண்ட் ஆஸ்பத்திரி நிபுணர்கள் தான் இதை சாதித்துள்ளனர். இது ஏதோ திடீரென்று செய்யப்பட்ட ஒன்று அல்ல.

செயலிழந்த இருதயத்தை எப்படி ஒரு நோயாளிக்குப் பொருத்துவது என்பது குறித்து அவர்கள் 20 ஆண்டுகளாகவே ஆராய்ச்சி நடத்தி வந்துள்ளனர்.

இவர்கள் குறிப்பிட்ட திரவத்தைப் பயன்படுத்துகின்றனர். இதை உருவாக்கவே 12 ஆண்டுகள் ஆகின,

ஒருவர் செத்துப் போய் இருபது நிமிஷங்கள் ஆன பிறகு அதை எடுத்து  ஒரு மெஷினில் வைத்து செயல்பட வைத்துப் பிறகு ஒரு நோயாளிக்குப் பயன்படுத்துவது  உலகில் இப்போது தான் முதல் தடவையாக நடந்துள்ளது
                                                                         
                                       இருதயப் பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ள இருதயம்
நன்றி:அறிவியல்புரம் 

2 comments:

  1. செயலிழந்து போன இருதயத்தை உயிர்ப்பித்து சாதனை !!!

    ReplyDelete
  2. இது யாருமே எதிர் பார்த்திராத கேட்டிராத நிகழ்வு!!!
    ஆஸ்திரேலிய மருத்துவக்குழுவினருக்கு எனது நன்றிகள்...

    ReplyDelete