இது நிகழாதிருந்திருக்கலாம் |
புறக்கணிப்பு
நினைவுகள் போதும்
என்று தான்
நினைத்துக்கொள்கிறேன்
உன் தீண்டலுக்காக
ஏங்கும் உடலைப்
புறக்கணித்தபடி
அது கெஞ்சுகிறது
கொஞ்சுகிறது
என் புறக்கணிப்பும்
தொடர்கிறது
உடல் சிணுங்கும் போது
மூழ்கிப் போகிறேன்
ஏதோ ஒரு பணியில்
வலிந்து முனைப்போடு
மரக்கட்டையா நீ?
வினா எழுப்பும் போது
மட்டும் கசிந்து போகிறது
இதயம்
இந்தக் கட்டுப்பாடு
உலகத்திற்காக அல்ல
உனக்காக...
நம் நேசித்தலின் பொருட்டு
என் உடல் உனக்கானது
மட்டுமே என்ற
புரிதலின் கொள்கைக்காக
உடலின் பட்சத்தில்
என் புறக்கணிப்பு
தொடர்கிறது.
ஒருதலைப்பட்சமாக
No comments:
Post a Comment