காதல் எனது சாம்ராஜ்யம்
வையவன்
காதல் எனது சாம்ராஜ்யம்
காலம் எனது தேரோட்டம்
நாளும் கோளும்
நானும் அவளும் இணைந்த
ராஜாங்கம்
நட்சத்திரப் பிரஜைகள் குழுமிய
பேரண்டத்தில் அவள்
பெருமூச்சு சிருஷ்டித்த
ங்கள் பெயரிடக்கோரி
வலம் வருமென்னிடம்.
கவிதா தேவியைக்
கைதட்டி விளித்து
நாமகரணமிட
வாக்கு கேட்டால்
செய்தி அறிந்து
செவ்விதழ் துடிக்கச
சிற்றிடை அசைத்து
முலைகள் குலுங்க
ஊழி நாட்டிய
உன்மத்தத்தோடு
சீறி வருவாள் தேவி;
சீற்றம் தணிக்க
நான் இறுக்கும் அணைப்பில்
காலத் தேரின் குதிரைக் குளம்பொலி
சற்றே இட றி ,
இடிகள் இறங்கி,
புயல்கள் பிறந்து,
புனரபி ஜனனம்
புனரபி மரணப்
போதம் வழங்கி
நாதம் உதிக்கும்.
நன்மை தீமை
பாவம் புண்ணியமென
மனிதர் வகுத்த
நீதியும் நியாயமும்
மிச்சம் இல்லாத்
துச்சப் பொருளாய்ப்
பதறி மறையும்
தேவி நகைத்த
எதிரொலி கேட்கும்
அண்ட விதானம்
ஆடி அடங்கும்
எங்கள் போகம்
எதிர்விளைவாகி
யுகமொன்று ஜனித்து
யோகம் லயிக்கும்
|
No comments:
Post a Comment