காதல் மட்டுமே வாழ்கிறது
வையவன்
வையவன்
ஜி.ஜே.தமிழ்ச்செல்வியின் முதல் கவிதைத் தொகுப்பு “இது நிகழாதிருந்திருக்கலாம்” நூல் சமீபத்தில் வெளிவந்துள்ளது. விண்முகில் என்னும் தனது இணைய வலையிதழிலும், இணையவெளி வலையிதழிலும் எழுதி வரும்இவரது கவிதை, கட்டுரைகள் திண்ணை.காம் வலையில் வெளிவந்துள்ளன.
இளம் வயதிலேயே போலியோ எனப்படும் இளம் பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டு, படாத இன்னல்கள் பட்டு அதிகம் ஏதும் படிக்காமல் பிறவிக்கவிஞராகி எட்டு வயதிலிருந்தே கவிதை எழுத ஆரம்பித்த இவரது தமிழ்க் காதல் இலக்கணம் மீறியது. ஆர்ட்டீஷியன் நீரூற்றுபோல் பொங்கிப் பீய்ச்சிப் பெருகி வழிவது. மாற்றுத் திறனாளியான இவர் தாம் அனுபவித்த இன்னல்களுக்கு மாற்று காண மாற்றுத் திறனாளிகளுக்குக் கல்வி கற்பிக்கவும், கணினிப் பயிற்சிகள் அளிக்கவும் வாழ்வாதாரம் கற்பிக்கவும் “இதயத் துடிப்பு அறக்கட்டளை," Heartbeat Trust என்னும் நிறுவனத்தைத் தன் இல்லத்திலே அமைத்துள்ளார்.இதயத் துடிப்பு எனும் பத்திரிகையை நடத்தி வருகிறார்.
அவர் அனுதினமும் ஓட்டிச் செல்லும் தனது மூன்று சக்கர வாகனத்தைக் கையால் இயக்கித் தற்போது செங்கை வட்டாட்சியாளர் அலுவலகத்தில் 5000 ரூபாய் ஊதியத்தில் வேலை செய்து வருகிறார். அவருக்குக் கையால் ஓட்டிச் சிரமம் பொறுத்து மோட்டார் வாகனத்துக்குப் பன்முறை விண்ணப்பம் செய்தும் அரசு மறுத்துவிட்டது. அவரால் பிளஸ் 2 படிப்பை முடிக்க இயலவில்லை.
காரணம், தினம் பஸ்ஸில் ஏறிக் கல்விக் கூடத்துக்கோ, கல்லூரிக்கோ செல்ல முடியாது. படிகளில் ஏறித் தானாய்க் கல்லூரி செல்ல முடியாது.மழை பெய்யும் போது குடை பிடித்துக் கொள்ள முடியாது. பிளாஸ்டிக் மழை அங்கி இருந்தாலும் நனைந்து விடுகிறார்.இப்போது தானே வீட்டில் படித்து தமிழ் பி.ஏ. பட்டப் படிப்புக்குப் பணம் கட்டித் @தர்வு எழுத முயன்று வருகிறார்.
இவரது கவிதை யாத்திரையில் உடன் செல்வோர் இந்தத் தமிழ் உணர்த்தும் மௌனக் குறியீடு பிரபஞ்சத்தில் காதல் மட்டுமே வாழ்கிறது என்ற பே ருண்மையே .
மற்றவை வாழ்வதாகத் தென்படுவது காதலின் டைனமோ இயக்கித் தரும் மிச்ச மின்சாரமே.போரும் வாழ்வும் காதலின் விளைவே . ஆழ்ந்துணர்ந்தே சொன்னார் நமது மகாகவி
காதல் காதல் காதல் ...
காதல் போ யிற்
சாதல் .. சாதல். சாதல். நிரூபித்திருக்கிறார் தமிழ்ச்செல்வி
சொல் புதிது..சுவை புதிது.
காமமும் காதலும் புனலும் கனலுமாகப் பிணைந்த ஆற்றல் வெளிப்பாடு இத் தொகுதி
No comments:
Post a Comment