திருமுருகன் திருவருளை அவனது சிறப்புக்களை எடுத்து ஓதும் புராணம் கந்த புராணம். புராணங்களின் காலம் கப்பலேறி விட்டது என்று கூறுவோரும் உண்டு. பகுத்தறிவிற்கு ஒவ்வாததை ஏற்கமாட்டோம் என்று கூறி மறுத்து எதிர்வாதம் செய்தோர் காலத்திலேயே திருத்தணிக்குக் கால்நடையாக தென்முனையிலிருந்து வந்தோரும் திருச்செந்தூருக்குக் கால்நடையாக வடதமிழ்நாட்டிலிருந்து வந்தோரும் உண்டு. ஏன்? ஈழத்தில் கதிர்காம முருகனுக்கு உலகெங்கிலும் இருந்து கோடானுகோடி தமிழ் மக்கள் யாத்திரை வந்ததும், பக்தியுடன் வழிபட்டதும் இன்றும் தமிழர் நினைவில் நிலைத்திருக்கின்றன
மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, கனடா,அமெ ரிக்கா என்று தமிழர்கள் காலடிகள் எங்கெங்கே படிந்துள்ளனவோ அங்கெல்லாம் முருகனுக்கான காவடிகள் அசைந்து அசைந்து அவன் புகழ் பரப்பி நகர்ந்து சென்றுகொண்டே இருக்கின்றன.
எங்கே தமிழன் இருக்கிறானோ அங்கெல்லாம் முருகன் இருக்கிறான். அவன் திருவடிகள் தமிழர் நெஞ்சில் இருக்கின்றன.முருகன் அல்லது அழகு என்று தமிழ்த்தென்றல் திரு. வி. க. முருகனை வருணித்துக் கூறினார். அதை இணையவெளி சிரமேற்கொண்டு கந்தபுராணத்தை சித்திரக்கதையாக இந்தப் பதிவு முதல் வெளியிடத் தொடங்கிறது.
அதோ கேட்கிறது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற அடியார் முழக்கம். ஆடி மாதமெல்லாம் அவனது மாதம்
பதிவு-1 |
பதிவு-2
[வளரும்]
மிகவும் நன்றாக இருக்கிறது. நமது குழந்தைகளுக்குத் தேவையான ஒன்று.
ReplyDelete