Thursday, 28 August 2014

என்னிடம் உள்ள கெட்ட பழக்கம்

பலர் தங்களிடம் உள்ள கெட்ட பழக்கங்கள் குறித்து வெளிப்படையாக அறிவித்து வழிகாட்டக் கூறும் புதிய அம்சம் இணையவெளி இதழில் இன்று முதல் வெளியாகிறது.ஒரு உறுத்தலை நம்மிடமிருந்து அகற்றிக் கொள்ளவும் ,வழிகாட்டுதல் பெறவும் இந்த அம்சம் துணை புரியக்கூடும் அந்தரங்கம் கருதி பெயர் மாற்றப்பட்டுள்ளது. வாசகர் அனைவரும் தங்கள் கேள்விகளையும் பதில்களையும் அறிவிக்கலாம் . அந்தரங்கம் பாதுகாக்கப்படும் 




            என்னிடம் உள்ள கெட்ட பழக்கம் 


* மாணிக்கராஜ், வெலகல் நத்தம் 
  நான் யாராவது யாருடனாவது  பேசிக்கொண்டிருக்கும்போது அவசியமில்லாமல் தலையிட்டு நான் பேசிவிடுவேன். எவ்வளவு மாற்றிக்கொள்ள முயன்றாலும் முடியவில்லை.யாராவது இணையவெளி மூலம் வழி காட்டினால் மிக்க நன்றி கூறுவேன்
* ஆதிராஜன்,ஹைதராபாத் 
யார் என்ன சொன்னாலும் அப்படியே குருடு செவிடுகள் போல் நம்பிவிடுவேன்! பின்னால் அந்த நம்பிக்கை பொய்த்தால் வருந்துவேனே தவிர திருந்தமாட்டேன் 
*ஆஞ்சலின் ப்ரிஸ்கில்லா,  கும்பகோணம் 
எப்போது பார்த்தாலும் இன்டர்நெட் பார்ப்பது. மீளவே முடியாத நோய் அது 
*ஜாஸ்மின்மேரி,சத்தியமங்கலம் 
என்னை அறியாமல் முடியை மெல்லுவேன் ; அல்லது நகம் கடிப்பேன் 
*காசிப்ரகாஷ் , அசோக் நகர் 
என்னிடம் பேசுபவர்கள் என்னைப்பற்றி என்ன நினைப்பார்களோ, அது நடந்துவிடுமோ, இது நடந்து விடுமோ என்று ஓயாமல் கவலைப்படுவது 
*சதானந்தம், சுப்பிரமணிய புரம் 
உறங்கும்போது ஓயாமல் குறட்டை விடுவது 

No comments:

Post a Comment