Wednesday, 20 August 2014

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி :ஒரு குட்டி மயிலிறகைத் தேடும் மனம்

ஒரு குட்டி மயிலிறகைத் தேடும் மனம்

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி 



பத்திரமாக வைத்துக்கொள்ள
மயில் இறகின் ஒரு இழை இருந்தது என்னிடத்தில்
நீளமான இழையை சரிபாதியாய்க்  கிள்ளி
ஒன்றை என் சிநேகிதி கொடுத்தது

புத்தகத்தின் நடுவிலே வைத்து
பென்சிலை திருவின தூளை அதற்கு உணவாக கொடுத்து
நாளையோ நாளை மறுநாளோ குட்டிப்போடும் என்று
தவிப்போடு காத்திருந்த நாட்கள்

புத்தகம் திறக்கப்படும் ஒவ்வொரு நாளும்
ஒரு குட்டி மயிலிறகை த் தேடும் மனம்
வருடப்படும் நட்புணர்வில் நட்பை தேடுகிறது
கடந்து போன நிகழ்வின் நினைவுத் துளிகளில்

என்றோ நடந்து முடிந்த பால்ய நிகழ்வு
பசுமை கோர்த்துச  சிரிக்கிறது
உறக்கம் வரா இராப்  பொழுதின் இறுக்கத்தில்
அணு அணுவாக பின்னோக்கிப்  பயணித்து.

No comments:

Post a Comment