Friday, 29 August 2014

ஹரணி கவிதைகள்

ஹரணி 

அகதி

மாடியில் வசதியாக
நின்றுகொண்டு பறிக்கையில்
பறிக்கும் கையிலிருந்து விடுபட்டு
தரையில் விழும் ஒரு முல்லை
மொட்டின் யாருமறியா
ஓசையில் கேட்கிறது
ஓர் அகதியின் குரல்

00000000000000000000
கனப்பவை 

முன்பு பழைய சைக்கிள்
பின்பு டூவீலர்
அப்புறம் கியர் வண்டி
இப்போது கார்
எல்லாமும்
கனக்கிறது
முன்பெழுதிய ஒரு
சிறு கவிதையின்
மகிழ்வை அனுபவிக்க
முடியாமல்

-------------------------------------------------------------------------------------------------------------
முகவரி 
 ஹரணி,
31, பூக்குளம் புதுநகர்
கரந்தை,
தஞ்சாவூர்-2
9442398953

No comments:

Post a Comment