Tuesday, 12 August 2014

காதலின் காரணங்கள்…..தமிழ்ச்செல்வி நிக்கோலஸ்

காதலின் காரணங்கள்…..

                 தமிழ்ச்செல்வி நிக்கோலஸ்  
தமிழ்ச்செல்வி நிக்கோலஸ்
காரணங்கள் கிடைக்கின்றன காதலுக்கு

உருவாகிக்கொ(ல்)ள்கின்றன மனதை..!

காலங்காலமாய் கருவோடு உருவாய்
உருவாகிக்கொள்கிறது காதல்
தன் பாதையில் பயணிக்கிறது…!

விழிதேடும் முன் புலன் அறியும்
அவளி(னி)ன் அனைத்தும் ..!
                                                                                             
பிறக்கும் புது மொழியாய்…
பிஞ்சுப் பிள்ளையின் கால் பாதமாய்..
மெல்ல அழுத்துகிறது அது மனதை..!

சுகமான அழுத்தமாய் அவன(ள)றியாமுன்
உள் நுழைகிறது சுவாசமாய் ஓடத்துவங்குகிறது..!

சிறகில்லாப் பறவைக்கு சிறகு முளைத்தது போல
முற்றிலும் முழுதும் மகிழத்துடங்கும் மனது
புதியதாய் நிமிடங்களை உருவாக்குகிறது..!

விழி இமைக்கும் நேரம் கூட மறந்து போகிறது
கூடிய இமையின் கனவுப்பாதையில் வெளிச்ச பூவாய்..!

தன் பாதையில் நேற்றைய மழையின் காளானாய்
மென்மையாய் பிழிந்து கொல்(ள்)கிறது …காதல்..!


No comments:

Post a Comment