Wednesday, 20 August 2014

பிரிவின் வலி :தமிழ்ச்செல்வி நிக்கோலஸ்

பிரிவின் வலி…


        பிரிவின் வலி…



காலெடுத்து உதைக்கையில் சட்டெனக் 
கிளம்பி வெட்டென மறையும் உன்
இருசக்கர வாகனத்தை உன் சேலை
சுற்றி  நீ என்கிறான் உன்னவன்....!

கூடிய காதல்......
அவன் கண்களில் பொழிகிறது..
தவிக்க விட்டுவிட்டாய்..!

தன்னிலை மறந்து தவிக்கும் தாயையும் 
என்னிலையிலும் உன் நினைவினில் கூடிய
காதலுடன் இருக்கும் கணவனை சேயுடன்
இ(ருக்)(று)கவைத்துவிட்டாய்..!

உயிர் தந்த வயிறும் பற்றி எரியுது
மனசு முழுதும் பொசுங்கித் தான் போகுது
தனிமையில் அந்த தாயின் மனம்  தவிக்கையில்
பதறித்தான் போகுது ...!

பிரிவு தந்த சோகமும் விழிக்  கிணற்றில் 
பொங்கிய ஊற்றாய் வழிய.... போதும்..! போதும் ..!
பார்வை மறைக்கிறது....! 


இது இயம்பும் உண்மை எனை இயல்பு நிலையிலிருந்து
ஒதுங்கச்செய்கிறது...!

அம்மா கிளம்புகிறேன் எனக்  கூறும் பிள்ளையிடம்
போய்வா ..!பத்திரமாய் ..!
என சொல்லும் சொல்லுக்கு முன்
அனிச்சையாய் ஆடாமல் நிற்கின்றன ..!
விசிறியாய் விரிந்த விரல்கள்...!

[கவிதை என்னென்னமோ சொல்கிறது.துயரத்திற்கும் பாசத்திற்கும் இடையே நடந்த போராட்டங்களின் பதிவுகளாக-வையவன் ]...


No comments:

Post a Comment