Wednesday 10 December 2014

இ.தே.எ 7 கொலையுண்டுகோணிப்பையில் கட்டி எறியப்பட்ட அதிகாரி

                                                    


             5.நாளை முதல் குடிக்க மாட்டேன் “சத்தியமடி” தங்கம்
இ.தே.எ 7

இராணுவத்தினர் பற்றிய பேச்சு வரும் பொழுதெல்லாம் அவர்கள் குடிகாரர்கள், முரட்டு மனிதர்கள் என்பதுதான் பொது மக்களிடையே சாதாரணமாக நிலவிவரும் அபிப்பிராயம். ஆனால் இது உண்மையல்ல. இராணுவம் என்ற அமைப்பும் நம்மைப் போன்ற மனிதர்களைக் கொண்டது தான். சமூகத்தில் நாம் அன்றாடம் சந்திக்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி, அடிதடி, குடிகாரர்களின் வெறியாட்டம் போன்ற சூழ்நிலைகளில் பிறந்து வளர்ந்த இளைஞர்களிலிருந்து தானே இராணுவத்திற்கு ஆள் சேர்க்கப்படுகிறது. பின், அதுபோன்ற குணநலன்கள் அங்@க அடி@யாடு இல்லாமல் எப்படி இருக்க முடியும்? நாட்டில் உள்ள மற்ற எல்லா அமைப்புகளை விட இராணுவம் ஒரு ஒழுக்கமுள்ள, கட்டுப்பாடான, நாட்டுப்பற்றுள்ள அமைப்பு. அந்தக் கட்டுப்பாட்டின் காரணமாக மேலே சொல்லிய குற்றம் குறைகள் இராணுவத்தில் குறைவு. அவ்வளவு தான். ஆனால், அவர்களைக்குடிகாரர்கள் அல்லது முரடர்கள் என்று ஒதுக்கி விட முடியாது.
இராணுவத்தில் மது அதாவது “சாராயம்” வழங்கப்படுவது உண்மைதான். ஒரு படைப்பிரிவு மிக அதிகக் குளிரானப் பகுதியில் பணியாற்றும் பொழுது சீதோஷ்ண நிலையைப் பொறுத்து தளபதி படைப்பிரிவினர்க்கு இலவசமது வழங்க உத்தரவிடுவார். இளைஞர்கள் தங்கள் நண்பர்கள் கூட்டத்துடன் பேசி மகிழும் போது மது அருந்தாத ஒருவனை கிண்டல் செய்வதுண்டு. அதற்குப் பயந்து கொண்டே எல்லாரும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுவார்கள். ஆனால், ஒரு நல்ல படைப்பிரிவு இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஆழ்ந்து கவனித்து மது வழங்கினாலும் அது ஓரளவு கட்டுப்பாட்டுடன் அளவுடன் தான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. எத்தனையோ இராணுவத்தினர் குடிப்பதில்லை. சிகரெட் பிடிப்பதில்லை. அசைவ உணவு உண்பதில்லை. ஆனால் இதை வெளி உலகில் பலர் கூர்ந்து கவனிப்பதில்லை. உளவியலில் ஒரு வெள்ளைத் தாளில் கருப்புப் புள்ளி வைத்து பார்வையாளர்களிடம் காட்டி என்ன பார்க்கிறீர்கள் என்று காண்பித்தால் முக்கால் வாசிப்பேர் ஒரு கருப்புப்புள்ளி என்பார்கள். ஆனால், ஓரிருவர் ஒரு வெள்ளைத்தாளில் கருப்புப்புள்ளி என்பார்கள். மனித மனம் பெரும்பகுதி வெள்ளையான தாளைப் பற்றி கவனம் கொள்ளாமல் ஒரு சிறு புள்ளியாக இருக்கும் கருப்பு நிறத்தில் தான் கவனம் கொள்கிறார்கள். அதுபோல் ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் சிறப்புடன் பணியாற்ற ஓரிரு இராணுவத்தினர் குடித்துவிட்டு வந்தால் “இராணுவத்தினர் எல்லோருமே குடிகாரர்கள்” என்று பட்டம் சூட்டப்பட்டு விடுகிறது.
இராணுவத்தினர்க்கு வழங்கப்படும் பல சலுகைகளில் காண்டீன்  சலுகையும் உண்டு. அங்கே தனி மனிதர்க்கும் வீட்டிற்கும் தேவையான ஏராளமான பொருட்கள் வெளிச் சந்தையில் கிடைப்பதை விட குறைந்த விலையில் கிடைக்கிறது. கார், தொலைக்காட்சி பெட்டிகள் போன்றவைகளும் கிடைக்கின்றன. இவைகள் இராணுவத்தினர்களின் உபயோகத்திற்கு மட்டுமே வழங்கப்படுபவை. ஆனால் இராணுவத்தில் சேர விருப்பமில்லாமலும், இராணுவ வாழ்க்கை பற்றி உயர்வான எண்ணங்கள் இல்லாதவர்களும் கூட அதுபோன்ற பொருட்கள் தேவைப்படும் பொழுது யாராவது இராணுவத்தினர் மூலமாக குறைந்த விலையில் வாங்கலாமா என்று தேடி வருவார்கள்.
கர்னல் அவர்களின் மூத்த மகன் தேசீய இராணுவக் கல்லூரி மூலமாகப் பயின்று
அதிகாரியானவர். பொறியாளர் பிரிவு அதிகாரி என்பதால் முதலில் தேசீயப் பாதுகாப்புக் கல்லூரியில் பி.எஸ்ஸி  பட்டமும் பின்னர் இராணுவப் பொறி இயற்கல்லூரியில் பி.டெக்  பட்டமும் பெற்றவர். கணிப்பொறி கல்வியில் சிறப்புத் தகுதி பெற்றவர். அவருக்குத் திருமணம் செய்விக்க பலவிதமான முறையிலும் கர்னல் முயன்றார். செய்தித்தாள், விளம்பரம், தரகர் மூலமாக, திருமணத் தகவல் மையங்கள் போன்றவற்றின், மூலமாகவும் முயற்சித்தார். பையன் இராணுவ அதிகாரி என்று கேள்விப்படுபவர்களின் முதல் சந்தேகம். எவ்வளவுமது @காட்டா’ என்பதுதான். அதிகாரிகளுக்கும் அதிகாரிகளல்லா தோருக்கும் இராணுவத்தில் வழங்கப்படும் சலுகைகள் ஒரு வரைமுறைக்கு உட்பட்டதே. அந்த விதத்தில் வீட்டு சாமான்கள் மாதம் சுமார் ரூ.5000/- வரையும் மதுவகைகள் சுமார் 12 லிட்டர் வரையிலும் என்று கணக்கு உண்டு. வெளிச்சந்தையில் கிடைக்காத அல்லது விலை அதிகமான பொருட்களை யாராவது இராணுவத்தினர் வாங்கித் தருவார்களா என்று அலைபவர்களில் கல்யாண தரகர் விதிவிலக்காக இருக்க முடியுமா என்ன? ஒரு கல்யாணம் முடித்து வைத்தால் இவ்வளவு கமிஷன் என்று வியாபார ரீதியில் தானே எல்லாம் நடக்கிறது.
குடிப்பவர்கள் எல்லாம் மோசமானவர்கள் என்றோ, சாராயம் குடிப்பது ஒரு கெட்ட பழக்கம் என்றோ கொள்ள முடியாது. நாள் முழுவதுமான உடல் உழைப்பிற்கு பின் கொஞ்சம் மது அருந்தி, நல்ல உணவும் அருந்திவிட்டு உறங்குவது நல்லது தான். ஆனால், அந்த அளவை யார் நிர்ணயிப்பது? அங்குதான் பிரச்சினையே. சோக நிகழ்ச்சியை மறக்கக் குடிப்பதாகச் சொல்லுவார்கள். மது அருந்தினால் நாம் எதை மறக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த நிகழ்ச்சி மட்டுமே விஸ்வரூபம் எடுத்து மனதை ஆக்ரமித்து நிற்கும். அதுபோல் குடிகாரர்கள் எல்லாம் உளறிக் கொட்டி ஊரைக் கூட்டுவார்கள் என்பதும் தவறு. எத்தனையோ மொடாக் குடியர்கள் தங்களது எல்லைதாண்டிய பிறகு வாய் திறக்காமல் அவர்கள் இருப்பிடம் சென்று விடுவார்கள். எப்படி வீடுபோய்ச் சேர்ந்தார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது.

இராணுவச் சட்டத்தில் (Army Act-1950) நான்காவது பகுதியில் (Chapter-IV)குற்றங்கள் பட்டியலிடப்படுகின்றன. பிரிவு 34 முதல் ((Section-34)) பிரிவு 70 வரை ((Section--70) பலவிதமான குற்றங்கள் பட்டியலிடப்பட்டு, அதற்குரிய அதிபட்ச தண்டனையும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் பிரிவு 48 “போதைக்கு உட்படுதல்” (Intoxication) என்று விளக்கமளிக்கப்பட்டு தண்டனை வேலையிலிருக்கும் போது, வேலையில் இல்லாதபோது, அதிகாரிகள் அதிகாரிகளல்லாதோர் போன்ற விபரங்களின் அடிப்படையில் விளக்கப்பட்டிருக்கிறது. அதிக பட்சமாக இரண்டு வருட சிறைத்தண்டனை என்பது சட்டம். சிறைத் தண்டனை விதிக்கப்படும் பொழுது, அது இராணுவச் சிறையில் நிறைவேற்றப்பட வேண்டுமா அல்லது பொதுமக்களுக்குரிய சிவில் சிறையில் நிறைவேற்றப்பட வேண்டுமா என்பது தண்டனை வழங்கும் அதிகாரி குறிப்பிட வேண்டும். இப்பொழுது இராணுவ சிறை உபயோகத்தில் இல்லை என்பது அனுமானம். சிவில் சிறைக்குப்போகும் குற்றவாளி மீண்டும் திரும்பி இராணுவத்தில் பணியாற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இராணுவ சட்டங்களுக்கு உட்பட்ட ஒருவர் ஒரு குற்றம் இழைக்கும்போது அவர் குடிபோதையில் இருக்கையில் அவரது குற்றம் குடிபோதையில் இருப்பதே தவிர குடிபோதையில் இருக்கையில் இழைத்த குற்றத்திற்காக இருக்காது. ஆகையினால் ஒருவர் குடி போதையில் இருந்தார் என்பது நிரூபிக்கப்பட வேண்டும். அது மருத்துவ ரீதியில் நிரூபிக்க முடியாது. ஏனெனில், குடித்திருக்கிறார் என்பது தான் மருத்துவப் பரிசோதனையில் நிரூபணம் ஆகுமே ஒழிய அவருடைய போதை நிலை நிரூபணம் ஆகாது. சாட்சியங்கள் அவருடைய வாயில் வீசிய துர்நாற்றம், போதையில் இருப்பவர்கள் செய்வது போன்ற ஸ்திரமற்ற செயல், கண்கள் நிலையற்று அலைதல் - தாழ்ந்து போதல், ஒழுங்கற்ற பேச்சு போன்றவைகளை எடுத்துச் சொல்ல வேண்டும். குடித்திருப்பவரைக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துவது Use of criminal Forceஎன்ற பிரிவின்கீழ் அவரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தும் நபரை குற்றவாளியாக்கி விடும். இதுபோன்று எந்த ஒரு குற்றமானாலும் அவை மிக மிக விளக்கமாக எடுத்துக் கூறப்பட்டு குற்றமிழைப்பதைக் குறைப்பதற்கான வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன.

1975-ம் ஆண்டு மேஜர் கணேசன் பெங்களூரில் உள்ள ஒரு படைப் பிரிவிற்குப் பயிற்சி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். சுமார் 11 வருட பணி அனுபவத்தில் இராணுவத்தில் அதிகாரிகளுக்கான உயர் பதவி தேர்வுகள் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றிருந்தார். மேலும், இராணுவத் தேர்வுகளில் நிர்வாகம் மற்றும் இராணுவச் சட்டம்  என்ற இரண்டு பிரிவுகளில் மிவும் சிறப்பான டிஸ்டிங்ஷன் பெற்றிருந்தார். இந்த இரண்டு பிரிவுகளும் இராணுவ அதிகாரிகளுக்கு மிக மிக அவசியமானப் பிரிவுகள். தேர்வுக்காக என்றில்லாமல் அன்றாட வாழ்க்கைக்கும் இவை அவசியம் என்பதால் அதில் தனிக் கவனம் செலுத்திப் படித்திருந்தார் மேஜர் கணேசன். பங்களூர் பயிற்சி தளத்தில் சுமார் 1500 இளம் பயிற்சியாளர்கள் பல நிலைகளில் பயிற்சியில் இருந்தார்கள். அவர்களுக்குப் பயிற்சி தரும் அதிகாரிகள் சுமார் 300 பேர் இருந்தார்கள். சிலர் குடும்பத்துடனும், சிலர் குடும்பம் இல்லாமல் இராணுவத் தங்குமிடங்களிலும் இருந்தார்கள்.
                 கொலையுண்டுகோணிப்பையில் 
                   கட்டி எறியப்பட்ட அதிகாரி

இந்நிலையில் ஒரு நாள் மேஜர் கணேசன் தனது 3.5 புல்லட் t மோட்டார் சைக்கிளில் அல்சூர் ஏரிக்கரையோரம் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது பங்களூர் தமிழ்ச்சங்கம் உள்ள பகுதிக்கு அருகில் யாரோ ஒரு ஆளை கொலை செய்து கோணிப்பையில் கட்டி அந்த சாலையிலிருந்தபடி உருட்டி நீரில் போட்டிருக்கிறார்கள். அந்த மூட்டை நீரில் விழாமல் கரையோரம் மண்ணில் வீழ்ந்திருந்ததால் அதிகாலையில் கண்டுபிடிக்கப்பட்டு போலீஸ் ஆய்வில் ஈடுபட்டிருந்தது. இதைச் சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்த கணேசன் தனது படைப்பிரிவு வந்து சேர்ந்து அன்றாட வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அப்பொழுது அவருடைய அதிகாரத்திற்கு உட்பட்ட ஒரு பயிற்சி தரும் நான் கமிஷன்ட் ஆபீசர்  அன்று டூட்டிக்கு வரவில்லை என்றும் அவருடைய வீடு பூட்டி இருப்பதால் அவரைப் பற்றிய விபரங்கள் தெரியவில்லை என்பதும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இராணுவத்தில் இருப்பவர்கள் எந்த நிலையிலும் தங்களது இருக்குமிடம் தெரிவிக்காமல் இருப்பது ஒரு குற்றம். படைப்பிரிவின் தலைமையகம் தங்களது படைப் பிரிவைச் சேர்ந்தவர்களின் தங்குமிடம், சொந்த ஊர், போன்ற விபரங்களை எப்பொழுதும் சரியாகவும் தயாராகவும் வைத்திருக்க வேண்டும். அப்படி விபரம் தெரிவிக்காமல் ஒருவர் 48 மணி நேரத்திற்கு மேல் தலைமறைவாகி இருந்தால் அவரை “அனுமதியின்றி ஓடிப்போனவர்” என்ற பிரிவில் பதிவு செய்து இராணுவத் தலைமையகம், காவல் துறை போன்றவற்றிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கணேசன் அப்படிப்பட்ட வேலைகளை முடித்து அல்சூர் காவல்துறை இன்ஸ்பெக்டரை சந்தித்தார். அந்த காவல்துறை அதிகாரி அன்று காலையில் ஏரியில் கிடைத்த பிணம் ஒரு இராணுவ ஆள் போல் தெரிகிறது என்பதால் அவர் கணேசனை அழைத்துக் கொண்டு பிணப் பரிசோதனை (Post mortem) செய்யப்பட்டுள்ள செய்ண்ட்  ஜான்ஸ் ஆஸ்பத்திரிக்குச்  சென்றார். அங்கு வைத்துள்ள பிணத்தைப் பார்த்த மேஜர் கணேசன் அதிர்ச்சியடைந்தார். அந்தப் பிணம் அவரது படைப் பிரிவைச் சேர்ந்தவருடையதுதான். அவர்தான் அன்று காலையில் பணிக்கு வராதவர். திரும்பவும் “கொல்லப்பட்டு விட்டார்” என்று எல்லா இராணுவ தளங்களுக்கும் தகவல் அனுப்பிவிட்டு அவரைப் பற்றிய விபரங்களைப் பார்த்தார். [வளரும்]

No comments:

Post a Comment