Wednesday, 16 July 2014

தமிழ் இனி மெல்ல தொடர்கிறது -9 ஈஸ்வரன் மீது நிமிஷாவுக்கு ?

அன்பர்கள் ஒவ்வொருவருக்கும் 

ந்தியாவில் வசிப்பவர் ஆயின் அஞ்சல்  மூலம் அச்சுப்புத்தகம் ஒன்றும் வெளிநாட்டில் வசிப்பவர் ஆயின் அவர் கூறும் இந்திய முகவரிக்கு அச்சுப்புத்தகம் ஒன்றும் இந்த நாவலை வெளியிட  இருக்கும் தாரிணி பதிப்பகம் இலவசமாக அனுப்பி வைக்கும் .விவரமான அஞ்சல் முகவரி அவசியம் என்று நாம் முன் பதிவில் அறிவித்திருந்ததை நினைவூட்டுகிறோம் 
தற்போது கடல் கடந்து வசிப்பவர் எவராயினும் அவருக்கு ஒரு மின்னூல் அனுப்பும் திட்டம் அமுலுக்கு வருகிறது. தாங்கள் செய்ய வேண்டியது ஒன்றே. இந்தப் பதிவைப் படித்தேன். பிடித்தது. பிடிக்கவில்லை.ஒரே ஒரு சொல் போதும்.  அதுவும் இயலவில்லையா? உங்கள் ஈமெயில் முகவரி மட்டும் பொத்தும்./ஒரு நூல் உங்களைத் தேடிவரும்.
சென்ற பதிவு பற்றி  C.R.Rajashree has left a new comment on your post "தமிழ் இனி மெல்ல...": Congrats good work of Dave Mahadevan  என்றுஒரு பாராட்டு அனுப்பிய  அவர்களுக்கு நன்றி 
தமிழ் இனி மெல்ல தொடர்கிறது -9

அரிசோனா மகாதேவன் 

சென்றபதிவின் நினைவூட்டம் 

நிம்ஸ், என்னோட உதிரி டிரான்ஸ்லேட்டர் ஒண்ணு நம்ம ஃப்ளாட்லே இருக்கே, அதை ஏக்ஸுக்கு கொடுத்துடு. நான் சீனாலே வேறே வாங்கிக்கறேன். காம்ஸ், உன் தம்பி கிட்ட இந்த விஷயத்தைச் சொல்றியா?” என்று சொல்லிவிட்டு அழகேசன் பக்கம் திரும்புகிறாள் ஷிஃபாலி. அதற்கான வாய்ப்பே கிடைக்காமல் போய்விடும் என்று ஷிஃபாலிக்குத் தெரியவில்லை!
“கேஷ்! இன்னிக்கு சாயங்காலம் நிம்ஸுக்கு ஒரு விருந்து ஏற்பாடு செஞ்சுருக்கேன். அவளோட ஃப்ரன்ட்ஸ் எல்லாம் இங்கே வருவாங்க. அதுக்காக இந்த ஹோட்டல்லே ஒரு ஹாலை வாடகைகு எடுத்திருக்கேன். நீ அதைக் கொஞ்சம் மேற்பார்வை பார்த்துக்கோ. நிம்ஸ், காம்ஸ், ஏக்ஸ் மூணு பேரும் உன்னோட அந்த ஹாலுக்கு வருவாங்க. நிம்ஸுக்கு எப்படி வேணுமோ, அப்படி அந்த ஹாலை அலங்காரம் பண்ணச் சொல்லு. நாளை புறப்படறதுனால எனக்கு சாமான்கள்ளாம் எடுத்து வச்சுக்கணும். ஓகே?!”
“சரிங்கம்மா!” என்று அதே பணிவுடன் பதிலளித்த அழகேசன், “கண்ணுங்களா, போகலாமா?” என்று அவர்களைப் பார்த்துக் கேட்கிறான். உடனே ஓடிவந்து அவன் கையைப் பிடித்துக் கொள்கிறான் ஏகாம்பரநாதன்.

                                                         பெரிய கோவில், தஞ்ஜூ
                                            பிரஜோற்பத்தி, ஆடி 5 - ஜூலை 19, 2411
ன்னை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு, ஷிஃபாலி தன் பழைய வேலை மீண்டும் கிடைக்கும்படி செய்வாள் என்று ஈஸ்வரன் கனவில்கூட நம்பவில்லை.

“கேவலம். இந்தியில் பேசினோம் என்பதற்காக இந்த அளவு உதவியா!? அப்படியானால் இந்தி கற்று கொண்டால் சம உரிமை உடனே கிடைத்து விடுமா?

“தமிழை விடாப்பிடியாக தங்கள் குடும்பம் பிடித்துக் கொண்டு வைத்திருப்பது எதனால்? தமிழ்க் கல்வெட்டுகளைப் படிக்க ஏன் தனது தந்தை தனக்குச் சொல்லிக் கொடுத்தார்? முடிந்தவரை தமிழ் பேசும் மற்றவர்களுக்கு எழுதப் படிக்கச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று விடாமல் ஏன் தன்னைக் கட்டாயப் படுத்துகிறார்? இந்தக் கேள்விக்குத் தன் தந்தையிடம் விடை கிடைக்குமா?
“இந்தி தெரிந்திருந்தும் தஞ்சைக் கோவில் மேலதிகாரி ஏன் தன்னை அப்படி அவமானப் படுத்தினார்? தமிழையும், சம்ஸ்கிருதத்தையும் ஒன்று படுத்திப் பேசியதாலா? சம்ஸ்கிரும் அப்படி என்ன உயர்த்தி, தமிழ் என்ன தாழ்த்தி? தக்கண்கண்டில் பல்லாயிரக் கணக்கானவர்கள் தமிழைப் பேசுகிறார்களே? சம்ஸ்கிருதத்தை யாரும் பேசுவதில்லையே! மேலதிகாரிக்கு சம்ஸ்கிருதம் தெரிந்திருக்க நியாயமில்லை, அப்படியிருக்க அவருக்கு சம்ஸ்கிருதத்தின் மேல் இருக்கும் பாசம் தமிழர்களுக்கு ஏன் தமிழ் மீது இல்லை? தமிழ் மக்கள் ஏன் தங்கள் உரிமையை விட்டுக் கொடுத்தார்கள்?

“இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இவ்வளவு பெரிய தஞ்சைக் கோவிலைக் கட்டி அரசாண்ட தமிழர்களின் வழித்தோன்றல்கள் இன்று ஏன் தங்கள் மொழியைக் கூட கல்லாமல் விட்டு விட்டார்கள்? அந்தக் காலத்திலேயே இவ்வளவு பெரிய கோவிலைக் கட்ட வேண்டும் என்றால் அதற்கு எவ்வளவு முயற்சி தேவைப்பட்டிருக்க வேண்டும்? அந்த ராஜராஜச் சக்கரவர்த்தி எவ்வளவு பெரிய தொலை நோக்காளராக (தீர்க்கதரிசி) இருந்திருக்க வேண்டும்? இரண்டாயிரம் ஆண்டுகள் ஆயினும், இந்தக் கோவில் அவர் புகழை இன்றும் சொல்லிக் கொண்டிருக்கிறதே! அதனால்தானே இந்தத் தஞ்ஜுவின் மிகப் பெரிய ஹோட்டலுக்கே அவர் பெயரைக் கொடுத்திருக்கிறார்கள்! அப்படி இருந்த தமிழர்களில் பெரும்பான்மையார் தங்கள் மொழியையே எப்படி மறந்தார்கள்?”

யோசிக்க யோசிக்க அவன் மூளை குழம்பியதுதான் மிச்சம், ஒரு நல்ல பதில் அவனுக்குக் கிடைக்கவில்லை, அவன் மனமும் சமாதானம் அடையவில்லை.

இதுவரை மனதில் ஏற்படாத இந்தக் குழப்பம், ஷிஃபாலி தனக்கு மீண்டும் வேலையை வாங்கிக் கொடுத்தபின்தான் ஏற்பட்டிருக்கிறது என்று உணர்கிறான் ஈஸ்வரன்.

“இந்தி தெரிந்திருக்கிறது என்றதால் ஷிஃபாலி உதவி செய்தாள், ஆனால் இந்தி தெரிந்தும் கோவில் சுற்றுலா மேலதிகாரி உ
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நேயர் விருப்பம் : கறுப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு! இதெல்லாம் சினிமாப் பாட்டுக்கு சரி!
சினிமா நடிகைகளுக்கே கறுப்பா இருக்கப் பிடிக்கலே. மாத்திக்க ட்ரை பண்ணிட்டே 
இருக்காங்க! பிபாஷா பாசு மேக்கப் போட்டு லைட்டிங் போட்டோ எடிட்டிங் உதவியோட 
என்னென்னமோ பண்ணிப் பாத்துட்டுக்  கடைசிலே மெலானின் சர்ஜரி செஞ்சுட்டதா கேள்வி.

---------------------------------------------------------------------------------------------------------------------------
“மனிதர்கள் இரண்டு வகை, அவர்கள் வகைக்குத் தகுந்தபடி நடந்திருக்கிறார்கள் - இருந்தாலும் தனக்கு இந்தி தெரிந்ததுதான் மீண்டும் வேலையைத் தனக்குத் தந்திருக்கிறது என்ற உண்மை அவனுக்குக் கசப்பாகத்தான் இருந்தது. இல்லாவிட்டால் கடைநிலை ஊழியனாகத்தானே வாழ்நாள் முடியும்வரை இருந்திருக்க நேரிட்டிருக்கும்! தன்னை அப்படிப் பாதாளத்திற்குத் தள்ளி விட்ட மேலதிகாரி அதைப் பற்றி சற்றும் கவலைப் படாமல், கொசுவை அடித்தவன் தன் கைகளில் படிந்த ரத்தத் துளியைக் கழுவிக் கொண்டு போவது போலத்தானே போயிருப்பார்! அப்படியென்றால் இந்தி தெரியாதவர்கள் கொசுவுக்குச் சமமான வாழ்வுதானே வாழ்ந்து வருகிறோம்! இதற்கு விடிவுதான் எப்போது?” அவனுக்குக் குமுறிக் கொண்டு வந்தது.

“என்ன, எந்தக் கோட்டையைப் பிடிக்க இந்த யோசனை? உனக்கு மாற்றல் உத்தரவு வந்திருக்கிறது.” என்று அவன் சிந்தனையைக் கலைக்கிறாள் அவனது காப்பாளி.
“என்ன, எந்தக் கோட்டையைப் பிடிக்க இந்த யோசனை? உனக்கு மாற்றல் உத்தரவு வந்திருக்கிறது.” என்று அவன் சிந்தனையைக் கலைக்கிறாள் அவனது காப்பாளி.
“என்ன, மாற்றலா? எங்கே மாற்றியிருக்கிறார்கள்? ஏன் மாற்றி இருக்கிறார்கள்?” என்று பதறுகிறான் ஈஸ்வரன். அவனது பதட்டத்தை ரசிக்கிறாள் காப்பாளி.
----------------------------------------------------------------------------------------------------------------------
நேயர் விருப்பம் :
அப்போ? கஜோல்? ஆமாங்க ! அந்த டஸ்கி பியூட்டி கூட மெலானின் சர்ஜரி கேஸ் தான்.
 இதெல்லாம் இங்கே ரொம்ப முக்கியமா? கேப்பீங்க! படிப்பீங்க! கருப்பா இருக்கிற கவலை 
உலகை எவ்வளவு ஆட்டிப்படைக்குதுன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா? அதென்னப்பா  மெலானின் சர்ஜரி? 
கேக்கத்தோணுது இல்லே? வெயிட் அண்ட் சீ!







----------------------------------------------------------------------------------------------------------------------
“அவனும் நூறு ஆண்டுகளுக்கு முன்னால்வரை தமிழைப் பேசி வந்த குடும்பத்தில் வந்திருந்தாலும், இந்தி கற்று கொண்டு தமிழை உதறியதால் உரிமைக் குடிமக்களாக உயர்ந்த குடும்பமாகியது அவள் குடும்பம் என்று ஈஸ்வரனுக்கு நன்றாகத் தெரிகிறது. தனக்கு இருக்கும் 
அறிவில் கால் பங்குகூட இல்லாத அவள் “காப்பாளி”யாக இருக்கிறாள். தான் எடுபிடி ஊழியனாக இருக்கிறோம்!” என்பது இப்பொழுதுதான் அவனது எண்ணத்திற்கு வருகிறது. கூடவே அவள் மீது ஆத்திரமும் பொங்குகிறது. அதை அடக்கிக் கொண்டு அவளின் பதிலுக்குக் காத்திருக்கிறான் ஈஸ்வரன்.

“நானா இந்தக் கோவிலை நடத்தறேன்? உன்னை இங்கே வைச்சுக்க மேலதிகாரிக்கு இஷ்டமில்லை. அதுனால உடனே உன்னைத் தொலைச்சுக் கட்ட முடிவு செஞ்சுட்டாரு. நீ இப்பவே ஹோட்டல் சக்ரவர்த்தி ராஜ்ராஜுக்கு வேலைக்குப் போயிடணும். அங்கே ஏதோ விருந்து நடக்குதாம். உன் முதல் வேலை அதைப் போய் மேற்பார்வை பார்க்கறதுதான். அலங்காரம், சாப்பாடு, பாட்டு, கூத்து எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்ணனும். உடனே கிளம்பு. பாதி வேலை நடந்துக்கிட்டிருக்காம். நீ போய் மீதி வேலையைப் பாரு. இந்தா, வேலை மாற்ற உத்தரவு.” என்று அவனிடம் ஒரு உறையை நீட்டுகிறாள் காப்பாளி.

பதில் சொல்லாமல் அதை வாங்கிக் கொள்கிறான் ஈஸ்வரன். இராஜராஜ சோழச் சக்ரவர்த்தியே தன் பெயர்கொண்ட இடத்திற்கு தன்னை அழைக்கிறார் என்று அவனுள் ஏதோ ஓர் உணர்வு கூறுகிறது. அந்த மன்னாதி மன்னரைப் பற்றி இப்பொழுதுதான் நினைத்தோம், உடனே அவர் பெயர் விளங்கும் இடத்திற்கு தனக்கு அழைப்பு வருகிறதே என்று எண்ணி வியக்கிறான். அது ஒரு நல்ல சகுனமாகவே அவனுக்குப் படுகிறது. தன்னை அறியாக ஒரு மகிழ்வுடன் அந்த உறையைப் பெற்று கொண்டு, பிரகதீஸ்வரனைக் கைகூப்பி வணங்கி வெளியேறுகிறான்.

ஹோட்டல் சக்ரவர்த்தி ராஜ்ராஜை அடைந்த அவனுக்கு அங்கே ஒரு அதிசயம் காத்திருக்கிறது. அங்கே தனக்கு வேலையைத் திரும்ப வாங்கிக் கொடுத்த ஷிஃபாலியை மட்டுமல்லாமல், மேலும் மூன்று தமிழ் பேசுபவர்களையும் சந்திக்கிறான். அவனை அங்கே கண்ட ஷிஃபாலிக்கு ஒரே மகிழ்ச்சி.

“ஹலோ ஈஸ்வ், இங்கே எங்கே வந்திருக்கே?” என்று வியப்பும், மகிழ்ச்சியும் கலந்த குரலில் வினவுகிறாள்.

“வணக்கம்மா. என் மேலதிகாரி என்னை இந்த ஹோட்டலுக்கு மாத்திட்டார். அவருக்கு என்னைப் பிடிக்கலையாம். இங்கே விருந்து ஏற்பாடு செய்யறதுக்கு மேற்பார்வை பண்ணற வேலையைக் கொடுத்திருக்காங்க. யாரோ நிமிஷாவாம். அவங்களுக்கும், அவங்க நண்பர்களுக்குதான் விருந்தாம்.” என்று பதில் சொல்கிறான்.

“அப்படியா! ரொம்ப நல்லதாப் போச்சு ஈஸ்வ்! நிமிஷா என் மகள்தான். என் மகளோட விருந்து நல்லா நடக்கனும்னு நீதானே வாழ்த்தினே! கடைசிலே அதை இந்த ஹோட்டல்லே நீயே நடத்தறதும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.”

“நீங்க செஞ்ச உதவிக்கு ரொம்ப நன்றிம்மா! என் வாழ்க்கையையே கைதூக்கி விட்டிருக்கீங்க! அது சரிம்மா, நீங்க சீனாவுக்குப் போகப் போறேன்னு சொன்னீங்களே, எப்பப் போகப் போறீங்க?” என்று கேட்கிறான் ஈஸ்வரன். தனக்கு உதவி செய்த பெண்மணி அவன் முன் அம்பாளாகத்தான் தெரிகிறாள். நல்லவேளை, அவளை மீண்டும் சந்திக்க வாய்ப்புக் கிடைத்ததே! தன் பெயரைக்கூட ஞாபகம் வைத்திருக்கிறாளே!

அப்பொழுது அங்கே வரும் நிமிஷாவுக்கு அவனை அறிமுகம் செய்விக்கிறாள் ஷிஃபாலி. நிமிஷாவைப் பார்த்துப் புன்னகைத்தவாறே கைகூப்புகிறான் ஈஸ்வரன். அவனது பார்வை நிமிஷாவின் உடலில் ஒரு குறுகுறுப்பைத் தோற்றுவிக்கிறது. இதுவரை அவள் உணராத ஒரு உணர்ச்சி அது. அவளை வைத்த கண் வாங்காமல் பார்க்கிறாள் நிமிஷா. அதை ஷிஃபாலியின் பின்னால் நிற்கும் அழகேசனின் கண்கள் கவனிக்கின்றன. அவனது மனம் ஈஸ்வரனைப் பற்றி எடை போடுகிறது.

ஈஸ்வரன் தமிழ் பேசுவதைப் பற்றி ஏகாம்பரநாதன் அவனிடம் பெருமையுடன் கிசுகிசுக்கிறான். அதனால் ஈஸ்வரனிடம் ஒரு இனப் பாசம் ஏற்பட்டாலும் லேசான பொறாமை உணர்வு தோன்றுகிறது. அப்படிப்பட்ட உணர்வுக்கு ஏன் இடம் கொடுக்கவேண்டும் என்று தன்னைத் தானே அடக்கிக் கொள்கிறான். ஒருவேளை நிமிஷா அவனைப் பார்த்த விதமாக இருக்குமோ என்று அவனுக்குத் தோன்றுகிறது. இருந்தாலும் ஒரு எடுபிடியான ஈஸ்வரன் மீது உரிமைக்குடிமகளான நிமிஷாவுக்கு எந்த விதமான ஈர்ப்பும் வர நியாயமில்லை என்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொள்கிறான். ஏன் ஒரு உரிமைக் குடிப்பெண் ஒரு தமிழ் பேசும் எடுபிடி ஆண்பால் ஈர்க்கப்படக்கூடாது என்ற கேள்வியையும் தனக்குள்ளே கேட்டுக் கொள்கிறான்.

காமாட்சி, அழகேசன், ஏகாம்பரநாதன் இவர்களுக்கும் ஈஸ்வரனை அறிமுகம் செய்து வைத்துவிட்டு மறுநாள் காலைப் புறப்பாட்டிற்கு முன்னால், தன்னுடைய உதவியாளர்களிடம் கலந்துரையாடல் செல்ல வேண்டும் என்று ஷிஃபாலி புறப்படுகிறாள்.

“ஈஸ்வ், விருந்து முடிந்ததும் நீ உடனே கிளம்பி விடாதே. நான் உன்னிடம் பேச வேண்டும்” என்று சொல்லி விடை பெருகிறாள்.[வளரும்]
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வாசகர் கவனத்திற்கு : ஒரு ஹம்பிள் ரிக்வெஸ்ட்.பீட்பேக் கொடுப்பது நல்லது தான். அனாவசிய சிரமம் எதற்கு? வம்பில் ஏன் மாட்டிக்கொள்ளவேண்டும்? இந்த முன்னெச்சரிக்கையும் கூட நல்லது தான். ஆனால் ஒவ்வொரு வாசிப்பிற்கும் ஒரு பரிசை இழந்து விடுகிறீர்களே! பெயர் முகவரி, பாராட்டு, கருத்து எழுதக்கஷ்டமாக இருக்கும். ஜஸ்ட் ஒரு ஈமெயில் ஐடியை டைப் செய்யுங்கள்.போங்க சாமி அதெல்லாம் முடியாது என்றால் போன் நம்பராவது தரலாமே!மாட்டீங்களா? ஓகே!



No comments:

Post a Comment