இவரைப்பற்றி
அவர்
“தான் யாரென்பதை நரேந்திரன்[விவேகானந்தர்] உணர்ந்து கொண்டு விட்டால், அதன் பின் அவனால் கொஞ்ச நேரம் கூட இந்த உடலில் ஒட்டிக் கொண்டிருக்க முடியாது!”
ஒருமுறை சீடர்களிடம் ராமகிருஷ்ணர் சொன்னது.
அந்தக் கூற்று பிற்காலத்தில் உண்மையானது. தான் யாரென்பதை உணர்ந்து கொண்டு விட்ட விவேகானந்தரின் ஆன்மா அந்தக் கூட்டை உதறி விட்டுச் செல்ல விரும்பியது. ஒருமுறை தன்னைக் காண வந்திருந்த ஜோஸபின் மெக்லியாடிடம் இது பற்றி விவேகானந்தர் கூறும்போது, “”நான் வெகு விரைவில் இறந்து போய் விடுவேன். நாற்பதாண்டுகள் வரை கூட நான் உயிரோடு இருக்க மாட்டேன்.”” என்றார். அது கேட்டு வருந்திய மெக்லியாட் அதற்கான காரணத்தைக் கேட்ட போது, “”ஒரு பெரிய மரத்தின் நிழலானது, தன் கீழ் உள்ள செடிகளை வளரவிடாது. ஆகவே நான் மற்றவர்களுக்கு வழிவிட்டுத் தான் ஆக வேண்டும்”” என்று கூறினார். அதாவது தான் மட்டுமே அல்லாது சக துறவிகளும் உயர்நிலைக்கு வர வேண்டும் என்றும் அதற்கு தான் வழிவிடுபவனாகவும், வழிகாட்டியாகவும் அவசியம் இருந்தாக வேண்டும் என்று அவர் தெரிவித்தார்..
நான் என்ன செய்யவேண்டும்?
உன் லட்சியத்தை அடைய ஓராயிரம் முறை முயற்சி செய்!
ஆயிரம் முறை தோல்வி வந்தாலும் ,மீண்டும் ஒரு முறைமுயற்சி செய்!
துருப்பிடித்துத் தேய்வதை விட உழைத்துத் தேய்வதே சிறந்தது.
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே
நல்லது; அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை.
நீ நினைத்தால், விண் மீனையும் விழுங்கிவிட முடியும்.
இதுவே உன் உண்மை பலம். மூட நம்பிக்கைகளை உதறித்
தள்ளிவிட்டுத் தைரியமாகச் செயல்படு!
கடுமையான உழைப்பின்றி மகத்தான காரியங்களைச் சாதிக்க
முடியாது. பயந்து பயந்து புழுவைப்போல் மடிவதை விட,
கடமை எனும் களத்திலே போரிட்டு உயிர் துறப்பது மேலானது.
உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உனக்கு முன்னால்
உள்ள எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல்
முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில்
நீ பயணிக்கிறாய் என்று அர்த்தம்.
எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று அஞ்சி
கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால்
எதையும் சாதிக்க முடியாது. முயன்று
செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.
பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால்
மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது. -விவேகானந்தர்
No comments:
Post a Comment