தமிழ் இனி மெல்ல.. 6தொடர்கிறது
ஷிஃபாலியின் குடியிருப்பு, ஷெனாய்
பிரஜோற்பத்தி, ஆடி 1 - ஜூலை 15, 2411
“அப்படியே செய்யறேம்ப்பா, அம்மாவை நல்லா பார்த்துக்கங்கப்பா. இங்கே ஏகாம்பரம் நல்லா இருக்காம்ப்பா. அவனுக்கு இப்ப உடம்புக்கு முடியாம வர்றதே இல்லைப்பா. நிமிசாம்மாவும் அவனைத் தன்னோட தம்பி மாதிரித்தான் நடத்தறாங்கப்பா. நீங்க சொன்னபடி நிமிசாம்மாவை நல்லாப் பார்த்துப்பேன்ப்பா.” என்று உறுதியளிக்கிறாள் காமாட்சி.
ஷிஃபாலியின் குடியிருப்பு, ஷெனாய்
பிரஜோற்பத்தி, ஆடி 1 - ஜூலை 15, 2411
நினைவூட்டல்: சென்ற பதிவின் முடிவில்
ஆனால், அவனுடன் முகம் கொடுத்துப் பேசிய முதல்
மேல்தட்டுப் பெண் ஷிஃபாலிதான். “உன் அம்மாவுக்கும்,
அக்காவுக்கும் ஏதாவது வாங்கிக் கொடு!” என்றது அவன்
மனதைத் தொட்டு விடுகிறது.
ஆனால், அவனுடன் முகம் கொடுத்துப் பேசிய முதல்
மேல்தட்டுப் பெண் ஷிஃபாலிதான். “உன் அம்மாவுக்கும்,
அக்காவுக்கும் ஏதாவது வாங்கிக் கொடு!” என்றது அவன்
மனதைத் தொட்டு விடுகிறது.
நாம் ஒட்டு மொத்தமாக எல்லா உரிமைக்
குடிமக்களையும் பற்றித் தவறாக முடிவு எடுத்திருக்கிறோமோ
என்று தன்னைத்தானே கேட்டுக் கொள்கிறான்.எது எப்படி
இருந்தாலும் இவர்கள் நமக்குச் சம்பளம் கொடுக்கிறார்கள்,
இவர்களுக்கு நாம் உண்மையாக வேலை செய்ய வேண்டும்,
அதுதான் ஆத்தா நமக்குச் சொல்லிக் கொடுத்தது என்ற
முடிவுக்கு வருகிறான்.

“சரிங்கம்மா! நீ சொன்னாப்பலேயே செய்துப்புடறேங்க!”
என்று பதில் சொல்கிறான் அழகேசன். ஷிஃபாலி, மேஜையிலிருந்து
ஒரு உறையை அவனிடம் நீட்டுகிறாள். அதைப் பணிவுடன்
வாங்கிக் கொள்கிறான்.
என்று பதில் சொல்கிறான் அழகேசன். ஷிஃபாலி, மேஜையிலிருந்து
ஒரு உறையை அவனிடம் நீட்டுகிறாள். அதைப் பணிவுடன்
வாங்கிக் கொள்கிறான்.
“இதில் என் கடிதம், உன் வேலைக்கான ஆர்டர், பணம், தஞ்ஜு
வருவதற்கான டிக்கெட் இருக்கிறது. வேலைக்கான ஆர்டர்
காப்பி இன்னொன்னும் இருக்கு. அதை உன் கம்பெனிக்கு கொடுத்துடு
. தஞ்ஜுவில் சந்திக்கலாம்
வருவதற்கான டிக்கெட் இருக்கிறது. வேலைக்கான ஆர்டர்
காப்பி இன்னொன்னும் இருக்கு. அதை உன் கம்பெனிக்கு கொடுத்துடு
. தஞ்ஜுவில் சந்திக்கலாம்
காமாட்சி நிமிஷாவை சில கணம் உற்றுப் பார்க்கிறாள்.
“என்ன, உங்க கூட நானும் ஏகாம்பரமும் தஞ்ஜுவுக்கு வரணுமா? நிமிசாம்மா, இதென்ன கூத்தா இருக்கு? நாங்க இந்த செந்நாய்ப் பட்டினத்தில உங்க வீடு இருக்கற இடத்துலேந்து பத்து கிலோமீட்டர் தொலைவுக்கு மேல போனதே கிடையாது. தவிரவும், எங்க அப்பா, அம்மாவைப் பாத்தே பத்து நாளைக்கு மேலாவுது. அவுங்க எவ்வளவு கவலையா இருப்பாங்க! அதெல்லாம் முடியாதும்மா!” என்று உறுதியாக மறுக்கிறாள்.
இதென்னடா, கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையா இருக்கிறதென்று திகைக்கிறாள் நிமிஷா.
ஜம்பமாக, “காம்ஸைச் சம்மதிக்க வைக்கிறேன்!” என்று அம்மாவிடம் சவால் வேறு விட்டுவிட்டோம், எப்படி அவளைச் சம்மதிக்க வைப்பது என்று குழம்புகிறாள்.
பத்து நாட்களுக்கு முன்னர்தான் அவளை ஒரு காட்டுமிராண்டி என்று திட்டினோம், அவளுடன் பத்து நாட்கள் பழகியவுடன் அந்த எண்ணம் எப்படி மாறிவிட்டது என்பதை நினைத்தால் அவனுக்கே வியப்பாக இருக்கிறது
.
ஏகாம்பரநாதனின் கள்ளமற்ற சிரிப்பும், அவன் அவளைச் சுற்றி சுற்றி வருவதும் அவளுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. சில சமயம் அவர்கள் எப்போதும் தன்னுடன் இருந்துவிட மாட்டார்களா என்றும் தோன்றிவருகிறது.
காரணம், அம்மா என்ற நிலையில் உடனிருந்தாலும் ஷிஃபாலி பெரும்பான்மையான நேரம் அவளை விட்டுவிட்டு அலுவலகம் சென்று விடுவாள்.
வேலை முடிந்து திரும்பி வரவும் நிறைய நேரம் ஆகிவிடும். ஆனால், காமாட்சியும், ஏகாம்பரநாதனும் பத்து நாள்களாக எப்பொழுதும் அவளுடனே இருக்கிறார்கள். கூப்பிட்ட குரலுக்கு உடனே பதில் கொடுக்கிறார்கள். பாசத்துடன் பழகுகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு சகோதரப் பிணைப்பை முதல்முதலாக இப்பொழுதுதான் உணர்கிறாள்.
“காம்ஸ், ப்ளீஸ், ப்ளீஸ், தயவுசெய்து எனக்கு துணையா தஞ்ஜூக்கு வா, காம்ஸ். நான் உங்க அப்பா, அம்மா கிட்ட பேசறேன். அம்மா மூணு மாசம் சீனா போகப் போறாங்க. நீதான் எனக்குத் துணையா இருக்கணும். நான் எப்படி காம்ஸ், தனியா இருப்பேன்? நீங்க ரெண்டு பேரும் என்கூட இருக்கறதுனாலதான் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.
“இந்த பத்து நாள்ல உன்னையும் ஏக்ஸையும் ரொம்ப ரொம்பப் பிடிச்சுப் போச்சு. எப்படி நீங்க இல்லாம இத்தனை நாள் இருந்தேன்னு என்னால நினைச்சுக்கூட பார்க்க முடியலை. என்கூட நீங்க இருந்தா நான் ரொம்ப சந்தோஷமா இருப்பேன். வேணும்னா, உங்க அம்மாவும் அப்பாவும்கூட இங்கேயே இருக்கலாம். சரின்னு சொல்லு காம்ஸ்” என்ற நிமிஷா காமாட்சியின் கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சுகிறாள்.
எப்படியாவது அவளைத் தன்னுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் மிகவும் குறியாக இருக்கிறாள்.
என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திக்குமுக்காடிப் பேசுகிறாள் காமாட்சி. இப்படி தன்னுடன் உரிமைக்குடி மக்களில் ஒருவர் அன்புடன் பேசக்கூடும் என்று இதுவரை கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை அவள். கடந்த பத்து நாட்களாக ஏகாம்பரநாதனின் உடல்நிலை எப்படித் தேறிவருகிறது என்பதைக் கண்கூடாகப் பார்த்துக் கொண்டுதானே வருகிறாள்! உரம் கட்டித் தண்ணீர் ஊற்றிய இளம் செடி தழைத்து வளருவது போலத்தானே அவன் வளர்ந்து வருகிறான்! அதற்கு நன்றியாக ஏதாவது செய்ய வேண்டாமா?
அவள் மனம் நிமிஷாவுக்காக இளகுகிறது.
“சரி நிமிசாம்மா. என் ஆத்தா, அப்பாகிட்டப் பேசிப் பாக்கறேன். அவுங்க சரீன்னு சொன்னா..” என்று இழுத்தவளை இடைமறித்து, “அவங்களை கனெக்ட் செய்யறது எப்படின்னு எனக்குச் சொன்னாப் போதும் காம்ஸ்! நான் எப்படியாவது அவங்களைக் கெஞ்சிக் கூத்தாடிச் சம்மதிக்க வைக்கிறேன்!” அவள் தாடையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சுகிறாள் நிமிஷா
.
தன் பெற்றோர்கள் வேலை செய்யும் வீட்டுத் தகவலைக் கொடுக்கிறாள் காமாட்சி.
சுவரில் இருக்கும் சில பொத்தான்களை நிமிஷா அமுக்கவே, “அமர்நாத் வீடு!” என்று பதில் வருகிறது.
“சார். என் பெயர் நிமிஷா. என் வீட்டுலே வேலை செய்யற பெண்ணோட அப்பாவும், அம்மாவும் உங்க வீட்ல வேலை செய்யறாங்க. உங்க அனுமதியோட அவ அப்பாகிட்ட பேசலாமா? கொஞ்சம் முக்கியமான விஷயம். தயவுசெய்து அனுமதி கொடுக்கறீங்களா?” என்று பதவிசாகக் கேட்கிறாள்” நிமிஷா.
சில விநாடிகளில் ஒரு வீட்டின் கூடமும், அதில் முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் உருவமும் முப்பரிமாணப் படமாக (டணிடூணிஞ்ணூச்ட்) அவர்களுக்குத் தெரிகிறது. அந்தப் பெண் கிராப் அடித்துக் கொண்டு ஆண்களின் உடுப்பை உடுத்திக் கொண்டு இருக்கிறாள். அவள் பெண் என்பதே அவளின் பெண்மையின் மூலம்தான் அவர்களுக்குப் புலப்படுகிறது.
“ஐ ஆம் ஸாரி மேடம், தெரியாம சார்னு சொல்லிட்டேன். மனசுலே வச்சுக்காதீங்க.” என்று சமாளிக்கிறாள் நிமிஷா.
“அதுனால பரவாயில்லே. என் குரல் கொஞ்சம் கட்டையா இருக்கறதுனால எல்லாரும் இந்தத் தப்பைச் செய்யறாங்க. சரி, நான் ‘அர்னை’க் கூப்பிடறேன். அர்ன், அர்ன்!” என்று காமாட்சியின் அப்பா
அருணாசலத்தைக் கூப்பிடுகிறாள் அப் பெண்.
“இதோ வந்துட்டேம்மா!” என்று ஒரு குரல் கேட்கிறது. சிறிது நேரத்தில் அருணாசலம் அங்கு வருகிறார். வயது நாற்பத்தைந்திலிருந்து ஐம்பதுவரை மதிக்கலாம், ஒல்லியான உடம்பு - ஏகாம்பரநாதனின் தந்தை என்று உடனே சொல்லி விடலாம். வாழ்வில் மிகவும் அடிபட்டு நொந்து போனவர் என்று முகம் காட்டுகிறது. முப்பரிமாணப் படத்தில் தன் மகளையும், மகனையும் பார்த்ததும் அவர் முகத்தில் ஒரு மகிழ்ச்சி மலருகிறது - அவர்களை நேரில் பார்த்து பத்து நாள்களுக்கு மேல் ஆகிவிட்டதல்லவா?
கூடவே ஒரு பயமும் அவரை ஆக்கிரமிக்கிறது. முக்கியமான விஷயம் இல்லாவிட்டால் இப்படி திடுதிப்பென்று அவர்கள் இப்படித் தன்முன் தெரிவானேன்? ஒரு வேளை ஏகாம்பரநாதனுக்கு ஏதாவது?
அவன் கீழே அமர்ந்து விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் பொழுது அவருக்குக் கொஞ்சம் நிம்மதி பிறக்கிறது.
அறிமுகங்களுக்குப் பிறகு விஷயத்தை அவரிடம் பக்குவமாகச் சொல்கிறாள் நிமிஷா. தன் அம்மா சீனா செல்வது பற்றியும், அதனால் தான் தனியாக விடப்பட வேண்டிய சூழ்நிலையையும், எனவே தனக்குத் துணையாக காமாட்சி இருக்கவேண்டும் என்றும், அவள் தன்னுடன் இருக்கும்போது ஏகாம்பரநாதனும், வேண்டுமென்றால் அவர்களும்கூட தங்கள் வீட்டிலேயே தங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கிறாள். அவர்கள் செய்யும் இந்த உதவியைத் தன் வாழ்நாள் முழுவதும் ஞாபகத்தில் வைத்திருப்பேன் என்றும் குழைகிறாள்.
ஒரு உரிமைக் குடிமக்கள் இனத்துப்பெண் இவ்வளவு குழைவாகப் பேசுவது அருணாசலத்திற்கு அவர் வாழ்விலேயே கிடைத்த முதல் அனுபவம். அந்த அதிர்ச்சியில் திக்கு முக்காடிப் போகிறார். பிறகு தன்னை ஒருவாறு சமாளித்துக் கொண்டு, தன் மனைவியையும் கலந்து கொண்டு பதில் சொல்வதாகச் சொல்கிறார்.
அவர்கள் எஜமானி அம்மாவும் நிமிஷாவுக்குப் பரிந்து பேசுகிறாள். அவர் மனைவியும் அவர்கள் நிமிஷாவுடன் இன்னும் மூன்று மாதங்கள் தங்கி இருந்தால் அது அவனுக்கு மிகவும் நல்லது என்று தன் கணவரின் காதைக் கடிக்கிறாள். கடைசியில் அவர் எல்லாவற்றுக்கும் சம்மதிக்கிறார்.
“காமாட்சிக் கண்ணு. அந்தப் பொண்ணு சொல்றமாதிரி அவ கூடவே இருந்துக்கம்மா. தம்பி ஒடம்பும் நல்லாத் தேறிடும். அதுதான் நல்லது. நாங்க அவங்க வீட்டில வந்து தங்க முடியாதும்மா. அது நல்லா இருக்காது. அடிக்கடி இப்படி எங்க்கூடப் பேசிடும்மா. அதுவே போதும். நாங்களும் ஒங்களைத் தனியா விட்டுட்டு மனசுல கவலையோட இருக்க வேண்டாம். அந்தப் பொண்ணைப் பாத்தா நல்ல மனுசி மாதிரித்தான் தோணுது.” என்று தன் சம்மதத்தைத் தெரிவித்தாள் காமாட்சியின் தாய்.
“காமு, உன் தம்பியை எப்படிப் பார்த்துப்பியோ, அப்பிடியே அந்தப் பொண்ணையும் நல்லபடியா பார்த்துக்கம்மா. என்ன ஆனாலும் அதோட பாதுகாப்பு ரொம்ப முக்கியம். நம்ம மேல ஒரு பழியும் வந்துடாம இருக்கறது உம் பொறுப்பும்மா.” என்று கம்மிய குரலில் கூறிவிட்டுத் தலையைத் திருப்பி தன் கண்களில் கோர்த்து நிற்கும் கண்ணீரை மறைக்கிறார் அருணாசலம்.
______________________________________________________________________________________________________
அவரைப்பற்றி
‘டீ விற்றவர்’ என்று மூர்க்கமாகவும் கேலியாகவும் உங்களைப் பற்றிச் சிலர் பேசியபோது எனக்குக் குமட்டிக் கொண்டுவந்தது. பிழைப்புக்காக டீ விற்ற ஒருவர் இந்திய அரசுக்குத் தலைமை தாங்க வருவது என்பது எவ்வளவு அற்புதமான விஷயம் என்று நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன். ஒருவருக்குக் கூஜா தூக்குவதைவிடப் பலருக்கும் டீ கூஜாவைத் தூக்கிச்செல்வது என்பது மேல் அல்லவா?
இவர் ;[காந்தியின் பேரன்]
இதையெல்லாம் தாண்டி, இந்தியாவின் தலைமைப் பொறுப்பில் நீங்கள் இருப்பது கோடிக் கணக்கான இந்தியர்களை ஏன் சங்கடப்படுத்துகிறது என்பது குறித்து நான் பேசியாக வேண்டும். 2014 தேர்தலில் வாக்காளர்கள் மோடிக்காகவோ அல்லது மோடிக்கு எதிராகவோ வாக்களித்திருக்கிறார்கள் என்பது வேறு யாரையும்விட உங்களுக்கு நன்றாகத் தெரியும். தேசத்தின் சிறந்த பாதுகாவலன், உண்மையில் அதன் ரட்சகன் என்று சொல்லி 31% மக்களை நீங்கள் கவர்ந்ததன் மூலம், பா.ஜ.க. இவ்வளவு இடங்களை வென்றிருக்கிறது.
அதே நேரத்தில் 69% மக்கள் உங்களை அவர்களின் பாதுகாவலராகக் கருதவில்லை என்பதையும் கவனித்தாக வேண்டும். இந்த தேசம் என்பது உண்மையில் என்ன என்பதில் உங்களுக்கு உள்ள கருத்துடன் மாறுபடும் கருத்தை அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தேசம் என்கிற இந்தக் கருத்தாக்கம் குறித்துப் பேசும்போதுதான் இந்திய அரசியலமைப்பு, அதாவது நீங்கள் பிரதமர் பதவியில் அமர்வதற்குக் காரணமான அந்த அதிகாரம், முக்கியத்துவம் பெறுகிறது திரு மோடி அவர்களே. இந்த நேரத்தில்தான் தேசம் என்னும் கருத்தாக்கத்தைத் திரும்பிப்பார்க்க வேண்டுமென்று உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
-
______________________________________________________________________________________________________
அவரைப்பற்றி
‘டீ விற்றவர்’ என்று மூர்க்கமாகவும் கேலியாகவும் உங்களைப் பற்றிச் சிலர் பேசியபோது எனக்குக் குமட்டிக் கொண்டுவந்தது. பிழைப்புக்காக டீ விற்ற ஒருவர் இந்திய அரசுக்குத் தலைமை தாங்க வருவது என்பது எவ்வளவு அற்புதமான விஷயம் என்று நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன். ஒருவருக்குக் கூஜா தூக்குவதைவிடப் பலருக்கும் டீ கூஜாவைத் தூக்கிச்செல்வது என்பது மேல் அல்லவா?
இவர் ;[காந்தியின் பேரன்]
இதையெல்லாம் தாண்டி, இந்தியாவின் தலைமைப் பொறுப்பில் நீங்கள் இருப்பது கோடிக் கணக்கான இந்தியர்களை ஏன் சங்கடப்படுத்துகிறது என்பது குறித்து நான் பேசியாக வேண்டும். 2014 தேர்தலில் வாக்காளர்கள் மோடிக்காகவோ அல்லது மோடிக்கு எதிராகவோ வாக்களித்திருக்கிறார்கள் என்பது வேறு யாரையும்விட உங்களுக்கு நன்றாகத் தெரியும். தேசத்தின் சிறந்த பாதுகாவலன், உண்மையில் அதன் ரட்சகன் என்று சொல்லி 31% மக்களை நீங்கள் கவர்ந்ததன் மூலம், பா.ஜ.க. இவ்வளவு இடங்களை வென்றிருக்கிறது.
அதே நேரத்தில் 69% மக்கள் உங்களை அவர்களின் பாதுகாவலராகக் கருதவில்லை என்பதையும் கவனித்தாக வேண்டும். இந்த தேசம் என்பது உண்மையில் என்ன என்பதில் உங்களுக்கு உள்ள கருத்துடன் மாறுபடும் கருத்தை அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தேசம் என்கிற இந்தக் கருத்தாக்கம் குறித்துப் பேசும்போதுதான் இந்திய அரசியலமைப்பு, அதாவது நீங்கள் பிரதமர் பதவியில் அமர்வதற்குக் காரணமான அந்த அதிகாரம், முக்கியத்துவம் பெறுகிறது திரு மோடி அவர்களே. இந்த நேரத்தில்தான் தேசம் என்னும் கருத்தாக்கத்தைத் திரும்பிப்பார்க்க வேண்டுமென்று உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
-
“அப்படியே செய்யறேம்ப்பா, அம்மாவை நல்லா பார்த்துக்கங்கப்பா. இங்கே ஏகாம்பரம் நல்லா இருக்காம்ப்பா. அவனுக்கு இப்ப உடம்புக்கு முடியாம வர்றதே இல்லைப்பா. நிமிசாம்மாவும் அவனைத் தன்னோட தம்பி மாதிரித்தான் நடத்தறாங்கப்பா. நீங்க சொன்னபடி நிமிசாம்மாவை நல்லாப் பார்த்துப்பேன்ப்பா.” என்று உறுதியளிக்கிறாள் காமாட்சி.
எல்லாம் நல்லபடியாக நடந்து முடியவே அப் பெண்மணிக்கு நன்றி தெரிவித்துவிட்டு, நிம்மதியாக முப்பரிமாணத் தொடர்பைத் துண்டிக்கிறாள் நிமிஷா. அவள் முகத்தில் ஒரு பெரிய காரியத்தைத் தானாகவே சாதித்துவிட்ட திருப்தி அவள் முகத்தில் சுடர் விடுகிறது.
தன்னை அறியாத ஒரு வேகத்துடன் அப்படியே காமாட்சியைக் கட்டிப் பிடித்துக் கொள்கிறாள்.
“காம்ஸ், காம்ஸ், ரொம்ப தாங்க்ஸ், காம்ஸ். எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு, காம்ஸ்!” மூச்சுக்கு முப்பத்திரண்டு தடவை “காம்ஸ், காம்ஸ்” என்று சொல்லிக் கொண்டு காமாட்சியின் கையைப் பிடித்துக் கொண்டு தட்டாமாலை சுற்றுகிறாள் நிமிஷா.
என்ன நடந்தது, என்ன சொல்கிறார்கள் என்று புரியாவிட்டாலும், எல்லோரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு தானும் அவர்கள் இருவரையும் கட்டிக் கொண்டு தட்டாமாலை சுற்றுகிறான் ஏகாம்பரநாதன்.
காமாட்சிக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. கடந்த பத்து நாள்களாக நடந்து வருவது ஒன்றுமே நனவு மாதிரி இல்லை. எல்லாம் கனவு மாதிரி இருக்கிறது. மேல்தட்டு மக்கள் வாழும் வாழ்வை பத்து நாள்களாக அனுபவிப்பது ஒருவிதமான சுகமாகத்தான் இருக்கிறது.
ஆனாலும் நடுநடுவே எத்தனை நாள் இது நீடிக்கப் போகிறது என்ற பயமும் அவளுக்கு ஏற்பட்டுக்கொண்டுதான் வருகிறது.[வளரும்]
No comments:
Post a Comment