Friday, 12 October 2012

சமையல் ஸ்பெஷல்

ஆஹா என்ன ருசி!

புகழ் பெற்ற சன் டிவி சமையல் நிகழ்ச்சியில் வழக்கத்துக்கு மாறான இடங்களில் எல்லாம் சின்னஞ்சிறு பொடிசுகளை வைத்து சமையல் சாதனை நிகழ்த்தி வரும்  சமையல் நிபுணர் ஜாகப் சகாய குமார் சவால்களுக்குச் சளைக்காதவர். ஒவ்வொருவரும் செட் போட்டு சமையல் நிகழ்ச்சி நடத்தும் வழக்கத்துக்கு மாறாக தென்னை மர உச்சியில் ஏறி கோகனட் மட்டன் கறி சமைத்தார் . காமேராமேன் மற்றொரு மர  உச்சியில் இருந்து படம் எடுத்தார் 
அந்த மர உச்சிச் சமையலுக்கு பத்து லட்ச ரூபாய் கடன் வாங்கி சொந்தமாகப் படம் பிடித்திருக்கிறார் ஒளிபரப்பான முதல் மூன்று மாதங்களுக்கு யாருமே அதைக் கண்டு கொள்ளவில்லை. நிகழ்ச்சி படு தோல்வி என்று எல்லோரும் கருதியபோது ஜாகப் சகாய குமார் நம்பிக்கை இழக்கவில்லை. 
இன்று அவருக்கு உலகெங்கிலும் விசிறிகள். யு.எஸ். சிங்கப்பூர் , மலேசியா என்று எங்கெல்லாமோ விசிறிகள். தெருவில் நடந்தால் , சூப்பர் மார்கட்டுக்குப் போனால் ஏர்ப்போர்ட் போனால் தங்கள் சமையல் சந்தேகங்களால் அவரை மடக்கிகொல்கிரார்கள் மக்கள்! மெல்லிசாக தோசை செய்வது எப்படி .. அது இது என்று! 
2008ம்  ஆண்டில் இருந்து தொடர்ந்து ஒளி பரப்பாகும்'ஆஹா என்ன ருசி!' நிகழ்ச்சி ஒவ்வொரு முறையும் புத்தம் புதிய ஒவ்வோர் இடத்தில் புதுப் புது வகையான சமையல் பக்குவத்தோடு நடந்து வருவதை உலகம் கண்டு வருகிறது 
கடந்த மார்ச் 2010ல் ராடிசன் டெம்பிள் பே வில் 24 மணி நேரம் 5 நிமிடங்கள் ஒரு நீளமான மாரதான் சமையல் நிகழ்ச்சி நடத்தி கின்ன்ஸ் ரெகார்ட் ஏற்படுத்தியவர் ஜாகப் சகாய குமார்.தற்போது மற்றொரு கின்னஸ் சாதனைக்கு ஆயத்தமா கும் இவர் சாதனை என்னவென்று கூறாமல் சஸ்பென்ஸ் வைக்கிறார். 
வேலூர் சி.எம்.சி. மருத்தவமனையில் தாயும் தந்தையும் டாக்டர்கள்.  பையனை டாக்டோராக்கப் பார்த்தார்கள். அந்தக் கதையே நடக்காது என்று மறுத்த  ஜாகப் சகாய குமாரின் முகம் ஒரு நர்ஸ் ஒரு நோயாளிக்கு இன்சுலின் போடுவதைப்பார்த்துவிட்டு மாறிய மாற்றத்தைக் கண்டு இவரது  தாய் இவன் சரிப்பட்டு வரமாட்டான் என்று புரிந்து கொண்டு மதுரையில் பி .எஸ்சி பிசி க்ஸ் படிக்க அனுப்பியிருக்கிறார்கள். அங்கே போய் 
பி .எஸ்சி பிசி க்ஸ் முடித்துவிட்டு காடேரிங் படித்தார். 
ஆனால் தொழில் முறை சமையல் அறையில் நுழைவது பெரிய போட்டி யாக இருந்தது 
ஷெரட்டன் பார்க் ஹோட்டலி ல்  நுழைந்தார். செப் ஆக அல்ல. செர்வர் ஆகா. அங்கே தலைமை செப் மாலை நான்கு மணிக்கு ஒரு லெமன் ஜூஸ்  சாப்பிடுவார். அதை அவருக்குப் பரிமாறும் போது இடைவிடாது நச்சரித்து அவரிடம் சமையல் அறை அனுமதி வாங்கியிருக்கிறார். 
தக்ஷின் ஹோடலில் பணியாற்றும்போது பாரம்பரியச் சமையல் முறைகளின் மீது அவருக்கு ஆர்வம் திரும்பியிருக்கிறது .கொங்குநாட்டுச் சமையல் திருவிழாவில் இவரது கைபாகத்தை ருசி பார்த்த முன்னாள் பாரத ஜனாதிபதி அப்துல் கலாம் மே 2007ல் ஒரு தேநீர் விருந்திற்கு டெல்லிக்கு வருமாறு அழைப்பு விதுத்திருக்கிறார். 
அடுத்து தொடங்கியிருக்கிறது மதுரை முதல் கன்யாகுமரி வரையுள்ள நாடார்கள் சமையல் பக்குவம். அதில் பெரிய வெற்றி கண்ட ஜாகப்  3முதல்  16 ம் நூற்றாண்டுவரை நடைமுறையில் இருந்த தமிழ் நாட்டு சமையல் ஐட்டங்களில் மக்களின் உணவுப் பழக்கம் குறித்து  ஆய்வு நடத்துகிறார் 
தற்சமயம் சொந்தமாக ஜாகப் கிச்சன் என்ற உணவகம் நடத்தும் ஜாகப் கைவசத்தில் 175 இல்லத்தரசிகளின் ரெசிபி இருக்கிறது. 

ஆதாரம்:ஹிந்து நாளிதழ்  

கரண்டி பிடித்தும் சாதிக்கலாம் மாறாத உற்சாகம் முக்கியம் என்று நிரூபிக்கிறார் இவர்  






No comments:

Post a Comment